அரியலூர்: அரியலூரில் தினை மாவு லட்டு வழங்கும் திட்ட தொடக்க விழா நடந்தது.
அரியலூர்
பஞ்., யூனியன் கிழக்கு தொடக்க பள்ளியில், எம்.ஜி.ஆர்., சத்துணவு
திட்டத்தின்கீழ், நேற்று நடந்த தினை மாவு லட்டு வழங்கும் திட்ட தொடக்க
விழாவுக்கு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு திட்டம்)
செந்தில்குமரன் தலைமை வகித்தார். அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன்
வரவேற்றார்.
எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ், அரியலூர்
மாவட்டத்தில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயிலும், 40ஆயிரத்து,
680 மாணவ, மாணவிகளுக்கு தினை மாவு லட்டு வழங்கும் திட்டத்தை, அரியலூர்
எம்.எல்.ஏ., துரை மணிவேல் தொடங்கி வைத்து பேசினார்.விழாவில், அரியலூர்
வட்டார வளர்ச்சி அலுவலர் கலையரசன், சத்துணவு திட்ட அலுவலர் செல்வம்,
பருக்கல் பஞ்சாயத்து தலைவர் புகழேந்தி, நகராட்சி கவுன்சிலர்கள் சிவஞானம்,
குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக