தூத்துக்குடி: தமிழ்நாடு முழுவதும் டி.இ.டி.
தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் வேலை கிடைக்குமா? என்ற கேள்வி
எழுந்துள்ள நிலையில், வெற்றி பெறாதவர்களையும் வெற்றி பெற வைக்கும்
முயற்சியில் தமிழ்நாடு முழுவதும் ஊழல் கும்பல் ஒன்று முழு முயற்சியில்
இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 17, 18ம் தேதியில் டி.ஆர்.பி. மூன்றாவது முறையாக டி.இ.டி. தேர்வை நடத்தியது. இதில் முதல் தாள் தேர்வை 2.62 லட்சம் பேரும், இரண்டாம் தாளை 4 லட்சம் பேரும் எழுதினர். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள் தயாராக இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
தேர்வு எழுதிய 6.6 லட்சம் பேரில் 27 ஆயிரத்து92 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்தம் 4.09 சதவீதம் தேர்ச்சியாகும். கடந்த ஆண்டை விட 1.1 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முதல் தாளில் 12 ஆயிரத்து 596 பேரும், இரண்டாம் தாளில் 14 ஆயிரத்து 496 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் அரசு பள்ளிகளில் 15 ஆயிரம் பணியிடங்கள் வரை காலிப்பணியிடங்கள் இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். பள்ளிக் கல்வித்துறையில் 10 ஆயிரத்து 500 இடங்கள் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது. தொடக்கல்வித்துறையில் ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
தேர்ச்சி பெற்றவர்களில் இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் இரண்டையும் சேர்த்து மொத்தம் 15 ஆயிரம் காலிப்பணியிடங்கள் வரை நிரப்பபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம். ஆனால் அரசு தரப்பிலும், கல்வித்துறை மற்றும் டி.ஆர்.பி. சார்பில் இதுவரை காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை திட்டவட்டமாக வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் டி.ஆர்.பி.யின் வெளிப்படைதன்மையின்மையை சாதகமாக்கி கொண்டு ஒரு சில ஊழல் கும்பல்கள் 1 அல்லது 4 மார்க் வித்தியாசத்தில் தோல்வியடைந்தவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்களை தேர்ச்சி பெற வைக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாக தமிழ்நாடு முழுவதும் ஒரு தகவல் பரவிக்கொண்டிருக்கிறது.
இதைப்போல் பட்டதாரி ஆசிரியர்களின் தேர்வுக்கு வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண்களிலும் குளறுபடி செய்து மதிப்பெண்களை கூட்டி போட செய்யமுடியும் என்று ஒரு கும்பல் களமிறங்கியுள்ளது. இதனால் முறையாக படித்து தேர்ச்சி பெற்று இருப்பவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
ஏற்கனவே காலிப்பணியிடங்களை விட கூடுதல் தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ள நிலையில் இப்படி ஒரு அதிர்ச்சி தகவல் மேலும் அவர்களை அச்சத்துக்குள்ளாக்கி இருக்கிறது. காரணம் டி.ஆர்.பி., இதுவரை 3 டி.இ.டி. தேர்வுகளை நடத்தி முடித்துள்ளது. இதில் 3 தேர்வுகளிலும் கேள்விகள் எடுப்பதில் குளறுபடி, தேர்ச்சியில் குளறுபடி, சரியான விடைகள் வழங்காததில் குளறுபடி என்று 20க்கும் மேற்பட்ட வழக்குகளை சந்தித்துள்ளது. இன்னும் ஒரு சில வழக்குகளுக்கு முடிவு எட்டவில்லை.
தற்போது வெளியிட்டுள்ள டி.இ.டி. தேர்விலும் சரியான கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்கவில்லை என்று ஏராளமானோர் புகார் தெரிவித்துவருகின்றனர். இப்படிபட்ட சூழ்நிலையில் ஊழல் கும்பலால் அரசும், டி.ஆர்.பி.யும் கெட்ட பெயர் எடுக்காமல் இருக்க தேர்வு முறையில் ஒரு வெளிப்படைதன்மை இருக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக