இன்று சென்னையில் கூடிய டிட்டோ-ஜாக் கூட்டத்தில் அதன் உறுப்பைச் சார்ந்த 7 இயக்கங்களும் பங்கேற்றன. இக்கூட்டத்தில்
1. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றம்
2. தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் இரத்து ஆகிய இரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இயக்க நடவடிக்கை மேற்கொள்வதென முடிவாற்றப்பட்டது.
இது குறித்து 13.11.2013 அன்று தமிழக முதல்வரை சந்திப்பது எனவும் அதன் பின் அமைச்சர் மற்றும் கல்வித்துறையின் உயர் அலுவலர்களை சந்திப்பது எனவும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதன் மீளாய்வு கூட்டம் வருகிற 20.11.2013 அன்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தலைமையில் கூடுவதெனவும் அதில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது. சுழற்சி தலைமையின் ஒரு பகுதியாக அடுத்த கூட்டம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் அலுவலகத்தில் 20.11.2013 அன்று நடைபெறும். இதன் மூலம் தொடக்ககல்வித்துறையில் உள்ள ஆசிரியர் இயக்கங்களிடையே ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. இது எதிர் கால இயக்க நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்துச் செல்ல உதவும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டக்கிளை நம்புகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக