அனைவருக்கும் கல்வித்திட்ட, மாநில திட்ட அலுவலர் பூஜாகுல்கர்னி
செவ்வாய்க்கிழமை மதுரை வந்தார். மதுரையிலுள்ள அனைவருக்கும் கல்வித் திட்ட
அலுவலகத்தில், காலையில் விருதுநகர் மாவட்ட அனைவருக்கும் கல்வித்திட்ட
முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், அனைவருக்கும்
கல்வித்திட்ட மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
மாவட்டத்தில் திட்டத்தை தொய்வின்றி செயல்படுத்துமாறு அதிகாரிகளை கேட்டுக்
கொண்டார். மாலையில், மதுரை மாவட்ட அனைவருக்கும் கல்வித் திட்ட முதன்மைக்
கல்வி அலுவலர் கூ.பார்வதி, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
சி.அமுதவல்லி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், திட்ட
மேற்பார்வையாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக