பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

11/14/2013

வன்முறை செயல்களை தடுக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி

சமீப காலமாகபள்ளிகல்லூரி வளாகங்களில்மாணவர்கள்,வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதுகல்வி கற்பிக்கும் ஆசிரியர்களையே கொலை செய்வது போன்றபடுபயங்கரமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் இதை தடுத்து நிறுத்தும் வகையில்மாணவர்களைஉரிய முறையில் கையாளவும், அவர்களுக்குஉளவியல் ரீதியான கலந்தாய்வை அளிப்பதற்காகவும்பள்ளிகல்லூரி ஆசிரியர்களுக்குடிசம்பர் மாதத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
 பெங்களூரு தேசிய மன நலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (நிம்கன்ஸ்) இந்த பயிற்சியை அளிக்கிறது. கடந்த ஆண்டு,சென்னைபாரிமுனையில் உள்ள ஒரு பள்ளியில்ஒன்பதாம் வகுப்பு மாணவனால் ஆசிரியை ஒருவர்குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

                இந்நிலையில்சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம்,வல்லநாட்டில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி முதல்வரை,மூன்று மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவமும் தமிழகத்தை உலுக்கியது. தவறான வழியில் பயணிக்கும் மாணவர்களை ஒழுங்குபடுத்தி சரியான திசையில் செல்ல நடவடிக்கை எடுத்தாலோசரியாக படிக்காதது குறித்து பெற்றோரிடம் புகார் அளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் கல்வி நிறுவனங்கள் ஈடுபட்டாலோ மாணவர்களுக்கு கோபம் தலைக்கு ஏறி ஆசிரியர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

               மாணவர்களின் இத்தகைய போக்கால்ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கல்வி வளாகத்தில் தங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் குரல் கொடுத்து வருகின்றனர். இதுபோன்ற நிலையில் பள்ளிகல்லூரி மாணவர்களைசரியான முறையில் கையாள்வது குறித்தும்,அவர்களுக்குஉளவியல் ரீதியான கலந்தாய்வு அளிக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக முதலில் பள்ளிகல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சியை அளிக்க ஏற்பாடு செய்துள்ளது.


                    பெங்களூரு தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (நிம்கன்ஸ்) தமிழக பள்ளிகல்லூரி ஆசிரியர்களுக்கு,மனநலம் குறித்த கலந்தாய்வை நடத்துவது குறித்த பயிற்சியை அளிக்க உள்ளது. இந்த பயிற்சி அடுத்த மாதம் துவங்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக