அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பள்ளிகளுக்கு வழங்கப்படும் பள்ளி வளர்ச்சி மானியம் மற்றும் பராமரிப்பு தொகை போன்றவைகளை வங்கியிலிருந்து எடுத்து பயன்படுத்தும் தகல்வகளை எஸ்.எஸ்.ஏ தொடர்ந்து குழப்பி வரகிறது. காலையில் எடுக்கலாம் என்றும் மாலையில் எடுக்கக்கூடாது என்றும், வட்டி மட்டும் டி.டி. எடுக்க வேண்டும் என்றும், ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்து மீதத்தை எடுக்கலாம் என்றும் மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக தகவல் தெரிவித்து வருவது சர்வசாதரணமாகிவிட்டது. ஏற்கனவே கிரமாக்கல்விக் குழு தலைவர்கள் செக்கில் கையெழுத்து போட தலைமையாசிரியர்களை அலையவிடுவது போதாது என்று எஸ்எஸ்.ஏ. படுத்தும் பாடு சொல்லி மாளாது. ஏன் இந்த குழப்பம். ஒரு சிறந்த நிர்வாகி அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குநராக வந்துள்ள நிலையில் இந்த குழப்பங்கள் SSA மீது அவ நம்பிக்கையை ஏற்படுத்தி விடும். சிந்திப்பாரா மதிப்புமிகு பூஜா குல்கர்ணி அவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக