கோவை தொண்டாமுத்தூர் ஊரா ட்சி ஒன்றிய பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு கடந்த
மாதம் வர வேண்டிய சம்பளமும் தீபாவளி போனசும் கிடைக்கவில்லை என்று
ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
கோவை தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2828 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 2286 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கடந்த மாதத்திற்கான சம்பளம் மற்றும் தீபாவளி பண்டிகைக்கான போனஸ் ஆகியவை இதுவரை கிடைக்கவில்லை.
இதன் காரணமாக இப்பகுதி ஆசிரியர்கள் தீபாவளி பண்டிகையை சரியான முறையில் கொண் டாட முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில் ‘கடந்த ஆண்டு வரை எங்களுக்கு எந்தவித பிரச்சனையும் சம்பளம் சார்ந்து வந்தது கிடையாது. இந்த ஆண்டு தான் இப்படி நடந்துள்ளது. இது குறித்த சரியான பதிலை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவருகின்றனர். இப்பிரச்சனையின் காரணமாக இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாடமுடியாமல் போனது‘ என்றார்.
இது குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜெயராஜ் கூறுகையில் “தொண்டாமுத்தூர் பகுதியில் மட்டும் தான் இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது சரியான தகவல் தான்.
இது குறித்து ஏ.இ.இ.ஒவிடம் விளக்கம் கேட்டேன். பண்டிகையின் காரணமாக ‘பில்‘ செய்வதில் சில சிக்கல்கள் இருந்தது. இதன் காரணமாக தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள சில ஆசிரியர்களுக்கு மட்டும் சம்பளம் மற்றும் போனஸ் கிடைக்கவில்லை. அதுவும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் கவலைபட தேவையில்லை‘ என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக