திருவள்ளூரில் அமைந்துள்ள டி.டி. மருத்துவக்
கல்லூரியை அரசு ஏற்று நடத்த தயாராக இருப்பதாகவும், நீதிமன்றம்
உத்தரவிட்டால், அதை ஏற்பதாகவும் அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பதில்
அளிக்கப்பட்டுள்ளது.
டி.டி. மருத்துவக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதியை ரத்து செய்ததால், அதில் படித்து வந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.
அவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞர் சோமையாஜி, டி.டி. மருத்துவக் கல்லூரியை அரசு ஏற்று நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், நீதிமன்றம் உத்தரவிட்டால் அதனை ஏற்க தயார் என்றும் கூறினார்.
இதையடுத்து நீதிபதி வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக