இன்றைய சூழலில் மாணவர் சமுதாயம் தன்னுடைய நிலையில் இருந்து தடம் மாறும் போக்கு அதிகரித்து வருகிறது. மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட பாதுகாப்பு அவர்களை தவறான விசயங்களுக்கு பயன்படுத்த ஊக்குவிக்கிறது. இதனால் ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பு என்பது கேள்வி குறியாகியுள்ளது. நேற்று மதுரை மாவட்டம் பொய்கைகாரன்பட்டி நடுநிலைப்பள்ளியில் 7 மாணவிகள் வாழைப்பழத்தில் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது என்பது அவற்களின் சகிப்பு தன்மையற்ற போக்கையே காட்டுகிறது. ஏன் படிக்கவில்லை? என்ற வினாவைக்கூட ஒரு ஆசிரியரால் எழுப்ப இயலவில்லையென்றால் அந்த மாணவர்களை எப்படி முன்னேற்றுவது. இங்கே யார் தப்பு செய்கிறார்கள் என்பதை ஆராய வேண்டும். ஆசிரியர்க்கு எந்த சுததந்திரத்தையும் கொடுக்காமல் தேர்வு முடிவு மட்டும் உயர்ந்த நிலையில் வேண்டும் என்பது எவ்விதத்தில் நியாயம். மாணவர்களின் நலனில் நாட்ட்ம் கொண்டு ஆசிரியர்கள் கண்டித்தால் அவர்களை பழி வாங்கும் நோக்கோடு மாணவர் சமுதாயம் களம் இறங்கி இருப்பதற்கு ஊடகங்கள் ஒரு பெரிய காரணமாகி விடுகின்றன. ஆசிரியர்களை பழி வாங்கும் நோக்கோடு சில நாளிதழ்கள் சிறிய செய்திகளை பூதாகரமாக வெளியிடுவதால் அதை படிக்கும் மாணவர் சமுதாயம் நாமும் ஆசிரியர்களை மிரட்டலாம் என்ற நினைப்பே மேலோங்கி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் ஒரு ஒன்றியத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் மாணவர் ஒருவர் என்னை கண்டித்தால் என் பிணம் இந்த மரத்தில் நாளை தொங்கும் என எச்சரித்ததாகவும் பின் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் அந்த மாணவனை சமாதனம் செய்ய கெஞ்சியதாகவும் நண்பர்கள் தெரிவித்தனர். மேற்கண்ட நிகழ்வுகளால் ஆசிரியர் சமுதாயம் மாணவர்களுக்கு அஞ்சியே வாழ வேண்டியுள்ளது. இது எதிர்காலத்தில் ஒரு கரடுமுரடான சமுதயாத்தை உருவாக்கி விடுமோ என்ற அச்சம் எமக்கு மேலோங்கி வருகிறது. தற்பொழுது தமிழக அரசு மாணவர்களுக்கு உளவியல் ஆலோசணை மையத்ததை நிறுவ உள்ளது. இது ஒரளவு பயன் கொடுக்கும் என்றாலும் ஊடகங்கள் மாணவர் சமுதாயத்ததை சீரழித்து வருவதை தடுக்க அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஊடகங்களும் மாணவர் சமுதாயத்தை நல்வழி படுத்த உறுதுணை செய்ய வேண்டும். எதிர்கால இந்தியவை உருவாக்கும் சிற்பிகள் சின்ன விசயங்களுக்கு உணர்ச்சிவயப்படாமல் பிரச்சனைகளை கையாள வேண்டும். வகுப்பறைகளில் நீதி போதனா கதைகளை அதிகம் எடுத்துரைக்க வேண்டும். மாணவர்களை மடைமாற்றம் செய்து வலிமையான இந்தியவை உருவாக்க அனைவரும் முயல வேண்டும்.
தோழமையுடன்.......
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டத்தலைவர் TNPTF
தோழமையுடன்.......
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டத்தலைவர் TNPTF
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக