சிவகங்கை: "மாவட்டத்தில், வயது 6 முதல் 14க்கு உட்பட்டவர்கள் கட்டாயம் அடிப்படை கல்வி பெறவேண்டும்" என அனைவருக்கும் கல்வி திட்ட சி.இ.ஓ.,கணேசமூர்த்தி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 பிரிவு 3(1) ன் படி வயது 6 முதல் 14க்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் ஆரம்ப கல்வி பெறவேண்டும். இது ஒவ்வொரு குடிமகனின் கடமை.
எஸ்.எஸ்.ஏ., மூலம், பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து, ஆண்டுதோறும், பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். எனவே, பொதுமக்கள், வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் , இந்த வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பள்ளிக்குசெல்லாமல் வேறு பணிகளில் ஈடுபட்டால், உடனே, எஸ். எஸ்.ஏ., அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், சி.இ.ஓ., மொபைல் எண்: 73730 02891, 97888 58968-ல் தொடர்பு கொள்ளலாம்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக