சென்னையில் அனைத்து பள்ளிகளிலும் ஜனவரி 27-க்குள் கண்காணிப்பு கேமரா
பொருத்தவேண்டும் என்று காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.சென்னையில் உள்ள
பள்ளி நிர்வாகிகளுடன் பாதுகாப்பு
குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புதன்கிழமை நடந்தது.சுமார் 200 பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூடுதல் காவல் ஆணையர்கள் தாமரைக்கண்ணன், ராஜேஷ்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கினர்."சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஜனவரி 27-ம் தேதிக்குள் கண்காணிப்பு கேமராக்களை கட்டாயமாக பொருத்த வேண்டும்.மாணவர்களை ஏற்றி வரும் வாகன ஓட்டுநர்களின் முழுவிவரங்களை பள்ளி நிர்வாகம் வைத்திருக்க வேண்டும்" என்பன உட்பட பல பாதுகாப்பு ஆலோசனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் காவல் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக