பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

12/05/2013

TET - சந்தேகங்களும் - விளக்கமும்

கேள்வி 1: சான்றிதழ் சரிபார்ப்பின் போது தற்காலிக பட்டச் சான்றிதழ் (Provisional Certificate) வைத்திருந்தால் போதுமா? அல்லது நிரந்தர பட்டச் சான்றிதழ் (Convacation Certificate) அவசியம் தேவையா?
பதில் - தற்காலிக பட்டச் சான்றிதழ் வழங்கப்பட்ட தேதி அந்த சான்றிதழிளேயே இருக்கும். அந்த தேதி முதல் அடுத்த 6 மாதங்களுக்கு தற்காலிக பட்டச் சான்றிதழ் போதுமானது. ஆனால் ஒரு சில பல்கலைகழகங்களில் 2 வருடங்கள் கழித்தே நிரந்தர பட்டச்சான்றிதழ் வழங்கப்படுகிறது. (உதாரணமாக இக்னோ பல்கலைக்கழகம்). இது போன்ற சூழ்நிலைகளில் சான்றிதழ் சரிபார்ப்பின் போது தற்காலிக பட்டச்சான்றிதழை சமர்பித்து, நிரந்தர பட்டச் சான்றிதழ் இதுவரை பல்கலைகழகத்தால் வழங்கப்படவில்லை என்பதால் Relaxation வழங்குமாறு உறுதிமொழி கடிதம் கொடுத்தால் ஏற்றுக்கொள்ளப்படும். 



கேள்வி 2 - சான்றிதழ் சரிபார்ப்பின் போது UG Degree Or PG Degree யின் Cumulative Mark Sheet (மொத்த மதிப்பெண் அட்டவணை) அவசியம் தேவைப்படுமா?
         பதில் - இல்லை. ஒவ்வொரு ஆண்டிற்கும் தனித்தனி சான்றிதழ்கள் வைந்திருந்தால் கூட போதுமானது. மொத்த மதிப்பெண் சான்றிதழ் இருந்தால் சராசரி மதிப்பெண் கண்டுபிடிக்க இலகுவாக இருக்கும் அவ்வளவு தான். எனவே Cumulative Mark Sheet இல்லாவிட்டாலும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம். ஆனால் ஒருசில பல்கலைகழங்களில் தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண்கள் கிரேடு முறைகளில் வழங்கப்படும் (உதாரணமாக இக்னோ பல்கலைக்கழகம்). இது போன்ற நிலையில் Cumulative Mark Sheet அவசியம் தேவை. மேலும் அதே சான்றிதழின் கீழோ அல்லது பின்புறத்திலோ எந்த கிரேடு எவ்வளவு மதிப்பெண்ணுக்கு இணையானது என அட்டவணையும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இது மிகவும் அவசியமான அட்டவணை ஆகும். இல்லையேல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க இயலாது.


கேள்வி 3 - சான்றிதழ் சரிபார்ப்பின் போது முன்னதாக அரசு பணியில் பணிபுரிபவர்கள் தங்கள் துறையின் தடையின்மை சான்றினை ( No Objection Certificate ) சமர்பிக்க வேண்டுமா?

          பதில் - முன்னதாக அரசு பணியில் இருப்பவர்கள் TET அல்லது PG TRB தேர்வில் வெற்றி பெற்று உயர் பதவியில் செல்வதற்கு தங்கள் துறையின் உயர் அதிகாரியிடம், குறிப்பாக Appointing Authority யிடம் [ S.G Asst என்றால் DEEO-விடமும், B.T Asst என்றால் Joint Director (பணியாளர் தொகுதி)-யிடமும்] தடையின்மை சான்று பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பெற்றிருந்தால் தான் தாங்கள் தங்களின் முந்தைய பணியிலிருந்து  "பணி விடுவிப்பு”  செய்யப்படுவீர்கள். இல்லையேல் தங்கள் முந்தைய பணியை "பணி துறப்பு” மட்டுமே செய்ய அனுமதிக்கப்படுவீர்கள். மேலும் தடையின்மை சான்றிதழ் பெறவில்லையெனில் முந்தைய பணியிலிருந்து விடுவிக்கப்படும் போது, உயர் அலுவலகத்தில் இதற்கான தங்கள் விளக்கத்தை சமர்பித்து விட்டு புதிய பணியில் சேருவதற்கு காலதாமதம் ஏற்படும். இதனால் புதிய பதவியில் தங்கள் மாநில அளவிலான பணி மூப்பு பாதிக்கப்படும். எனவே முறையாக துறை அனுமதியை பெற்று அவற்றை தங்கள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது சமர்பிப்பது தேவையற்ற அலைகழிப்பை தவிர்க்க இயலும்.


கேள்வி 4 - மதிப்பீடு சான்றிதழ் (Evaluation Certificate) என்றால் என்ன? அவை அவசியம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேவையா?
           பதில் - மற்ற மாநிலங்களில் படித்த பட்டங்கள், தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் பட்டங்களுக்கு இணையானது தான் என உயர் அலுவலர்களால் வழங்கப்படும் சான்றிதழே மதிப்பீடு சான்றிதழ் எனப்படும். DTEd சான்றிதழ்களை மதிப்பீடு செய்ய DEEO-விடமும், UG or BEd சான்றிதழ்களை மதிப்பீடு செய்ய DEO -விடமும் விண்ணப்பிக்க வேண்டும். இவற்றை சான்றிதழ் சரிபார்ப்பின் போதே வழங்க வேண்டும் என டி ஆர் பி இதுவரை நிர்பந்திக்கவில்லை. எனினும் உடனடியாக விண்ணப்பித்து மதிப்பீடு சான்றிதழை பெற்று வைத்திருப்பது சான்றிதழ் சரிபார்ப்பின் போது தேவையற்ற கால விரயத்தை தவிர்க்க இயலும்.
 
நன்றி : Rani TET Park

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக