ஆசிரியரை தாக்கிய இரண்டு மாணவர்கள் மீது, பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பல்லடம் கண்ணம்மாள் நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சுப்ரமணியன், 33. வகுப்பிற்குள் தாமதமாக வந்த பிளஸ் 2 மாணவர்கள் இருவரை, சுப்ரமணியன் கண்டித்தார்.
இதனால், ஆத்திரமடைந்த இரண்டு மாணவர்களும் சேர்ந்து, ஆசிரியர் சுப்ரமணியனை, வகுப்பறைக்குள் வைத்து, சரமாரியாக தாக்கினர். காயம் அடைந்த ஆசிரியர், பல்லடம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட இரண்டு மாணவர்கள் மீதும், ஆபாசமாக பேசுதல், கைகளால் தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய மூன்று பிரிவின் கீழ், பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக