அரசாணை (நிலை) எண்.249, பக(எஸ்.எஸ்.ஏ2) துறை,நாள் 09.12.2013.
அரசாணையின்படி, அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும்
வட்டார வளமையங்களில் முதுகலை ஆசிரியர் பணிநிலையில் பணிபுரிந்து வரும்
மேற்பார்வையாளர்கள் மற்றும்முதுகலை ஆசிரியர் பணிநிலையில் பணிபுரிந்துவரும்
ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு முதுகலை
ஆசிரியர்களாக மாறுதல் ஆணை வழங்கப்பட வேண்டியுள்ளது. இதன்படி முதுகலை
ஆசிரியர் பணி நிலையில் பணிபுரிந்து வரும்44 மேற்பார்வையாளர்கள் மற்றும்19
ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மட்டும்
முதுகலை ஆசிரியர் பணிக்கு மாறுதல் ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 28.12.2013
அன்று காலை 9.00 மணிக்கு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆன்லைன்
மூலம் நடத்தப்படவுள்ளது.இதனைத்தொடர்ந்து 28.12.2013 அன்றே
01.01.2013நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு வெளியிடப்பட்டுள்ள
தகுதி வாய்ந்தோர் பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு கீழ்க்கண்ட
விவரப்படி முதுகலை ஆசிரியர் பணிக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வு
நடத்தப்பட்டு ஆணைகள் வழங்கப்பட உள்ளது.
1. தமிழ் வரிசை எண் 1 முதல் 153வரை
2. ஆங்கிலம் வரிசை எண் 1 முதல் 102 வரை
3. கணிதம் வரிசை எண் 1 முதல் 102 வரை
4. இயற்பியல் வரிசை எண் 1 முதல் 86 வரை
5. வேதியியல் வரிசை எண் 1 முதல் 105 வரை
6. தாவரவியல் வரிசை எண் 1 முதல் 37d வரை
7. விலங்கியல் வரிசை எண் 1 முதல் 41 வரை
8. வரலாறு வரிசை எண் 1 முதல் 116 வரை
9. பொருளியல் வரிசை எண் 1 முதல் 95 வரை
10. வணிகவியல் வரிசை எண் 1 முதல் 56 வரை
11. புவியியல் வரிசை எண் 1 முதல் 02
12. அரசியல் அறிவியல் வரிசை எண் 1 முதல் 12வரை
13. உ.க.இ.நிலை-வரிசை எண் 1 1 முதல் 23 வரை
கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9.00மணிக்குத் தொடங்கி முதலில் முதுகலை ஆசிரியர் நிலையில் உள்ள வட்டார வளமைய மேற்பார்வையாளர்/ஆசிரியர் பயிற்றுநர் பணியிலிருந்து அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியராக மாவட்டத்திற்குள் மாறுதலும், அதனைத் தொடர்ந்து மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலும்,அதனைத் தொடர்ந்து முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு 01.01.2013 நிலவரப்படியான முன்னுரிமைப் பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமைப்படி பணிமாறுதல் மூலம் பதவி உயர்வும் வழங்கப்படவுள்ளது.முதுகலை ஆசிரியர் பணி நிலையில் பணிபுரியும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்/ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் மேற்படி முன்னுரிமைப் பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் இக்கலந்தாய்வில் கலந்துகொள்ள பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்குள் நடைபெறும் கலந்தாய்வு முடிக்கப்பட்ட பின்னரே மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வுத் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக