தமிழக அரசு, அரசு ஊழியர்கள் மற்றும்
ஆசிரியர்களுக்கு அறிவித்த பொங்கல் போனஸ் பட்டியலில், பகுதி நேர ஆசிரியர்கள்
புறக்கணிக்கப்பட்டுள்ளதால், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அரசின் அறவிப்பின்படி கிரேடு அடிப்படையில்,
"சி', "டி' பிரிவை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கும், இடைநிலை ஆசிரியர்கள்,
சிறப்பாசிரியர்கள், ஊராட்சி ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள், அலுவலக
உதவியாளர்கள், காவலர்கள், காப்பாளர்கள், பகுதி நேர ஊழியர்கள், தொகுப்பு
ஊதிய பணியாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும், பட்டதாரி மற்றும் முதுகலை
பட்டதாரி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், கல்வி அதிகாரிகள் பிரிவுக்கு
ரூபாய் 1000 மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ரூபாய் 500ம் பொங்கல் பரிசாக
வழங்கப்பட உள்ளது.
இதற்காக, மாநில அரசு ரூபாய் 308 கோடி நிதி
ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பகுதி நேர
ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் குறித்து
எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. குறைந்த ஊதியத்தை பெற்றுக்கொண்டு அரசு
பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோம் என்ற கனவுடன்
காத்திருக்கும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு, போனஸ் பட்டியலில்
புறக்கணிக்கப்பட்டது, பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக அமைந்துள்ளது.
தமிழ்நாடு பகுதிநேர மற்றும் சிறப்பாசிரியர்கள்
சங்க மாநிலத்தலைவர் ராஜ்குமார் கூறுகையில், ""ஓய்வூதியதாரர்கள் உட்பட
அனைவருக்கும், அரசு பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது. ஆனால், இப்பட்டியலில்
பகுதி நேர ஆசிரியர்கள் இடம்பெறவில்லை.
குறைந்தபட்சம் 2012-13 நிதியாண்டில் 240 நாள்
பணியாற்றிய அனைவருக்கும் போனஸ் வழங்கும்போது, இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி
வருபவர்களுக்கு வழங்காதது ஏன் என்று புரியவில்லை. தலைமை அதிகாரிகளிடம்
கேட்டபோது, "இதற்கான எவ்வித
அறிவிப்பும் இல்லை; ஒன்றும் செய்ய
இயலாது' என்று தெரிவித்தனர். மாநிலம்
முழுவதும், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் மிகுந்த
ஏமாற்றம் அடைந்துள்ளனர்,'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக