கரூர்
மாவட்டம் கடவூர் ஒன்றிய ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலு வைத் தொகை
ஆகியவற்றை கடந்த ஆறு மாதங்களாக தாமதப்படுத்துவதை கண்டித்தும்,
ஆசிரியர்களுக்கு கட்ட வேண்டிய பணப்பயனை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் தானே
காசோலை மூலமாக பணம் எடுத்து செலவு செய்வதை கண்டித்தும் தமிழ்நாடு
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தரகம்பட்டியில் உள்ள உதவி தொடக்கக்
கல்வி அலுவலகம் முன்பு நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது.
ஒன்றிய தலைவர் பிச்சை ஆரோக்கியம் தலைமை வகித்தார். வட் டார செயலாளர் மாணிக்கம் முன்னிலை வகித்தார். மாவ ட்ட செயலாளர் பெரிய சாமி, மாவட்ட தலைவர் ஜெகதீஸ், மாவட்ட பொரு ளாளர் ரஞ்சித், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பீட்டர் ஆகியோர் பேசினர்.
வட்டார பொறுப்பாளர்கள் அருள் ரீத்தா கிரேஸி மற்றும் 80க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் உள்பட 150 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து நேற்றுமுன்தினம் இரவு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பொன்னம்மாள் ஆய்வு செய்தார். அப்போது உதவி தொடக்கக் கல்வி பணியா ளர் சுழற்சி முறையில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் பணிபுரிந்த மார்ட்டின் செல்லையா என்பவரை கடவூர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் இரவோடு இரவாக பணியில் அமர்த்தினார்.
இதனை கண்டித்து தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆசிரியர்கள் 80க்கு மேற்பட்டோர் நேற்று மீண்டும் பள்ளிக்கு செல்லாமல் கடவூர் ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.
இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலக அலுவலர் அழகேசன் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் கடவூர் தொடக்கக் கல்வி அலுவலத்திற்கு சென்று ஆசிரியர்களின் புகார் அடிப்படையில் பதிவேடுகளை ஆய்வு செய்தனர். பின்னர் மேல் நடவடிக்கைக் காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பரிந்துரை செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இதுபற்றி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலா ளர் பெரியசாமி, வட்டார செயலாளர் மாணிக்கம் ஆகியோர் கூறும்போது, கடவூர் ஒன்றிய தொடக்கக் அலுவலத்தில் பணியாற்றும் இளநிலை உதவியாளர்கள் ஜோகன்ஸ் மற்றும் மார்ட்டின் செல்லையா ஆகியோரை மாற்றும் வரை இப்போராட்டம் தொடரும். மேலும் பள்ளி க்கு செல்ல மாட்டோம் என்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக