சிவகங்கை:அரசு, உதவி பெறும் பள்ளிகளில், "பள்ளி சிறார் கண்ணொளி காப்போம்
திட்டம்', செயல்படுத்தப்பட உள்ளதாக, கலெக்டர் ராஜாராமன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
பள்ளி சிறுவர்களுக்கு, கண்பார்வை குறைபாடு நோய் அதிகரித்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதை சரிசெய்யாவிடில், கல்வித்திறன் பாதிப்பதோடு, வாழ்க்கை தரமும் குறையும். இதை தவிர்க்க, பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம் மூலம், அரசு, உதவி பெறும் பள்ளிகளில், செயல்பட உள்ளது.
இத்திட்டத்தின் மூலம், ஒவ்வொரு பள்ளியிலும், ஆசிரியருக்கு கண்பரிசோதனை செய்வது குறித்த பயிற்சி வழங்கி, பரிசோதனை உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, கண்பரிசோதனை செய்து, பார்வை குறைபாடு உள்ள மாணவர்களை, ஒவ்வொரு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள, கண் பரிசோதகர்கள் மூலம், தேவைப்படும் மாணவர்களுக்கு
கண்ணாடி இலவசமாக வழங்கப்படும்.
ஏழாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, மறு பரிசோதனை செய்யப்படும். பள்ளி மாணவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம், என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக