கோவை: மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட
64 நடுநிலைப் பள்ளிகளில் "கணிதம் கற்றல் திறனை மேம்படுத்துதல்" என்ற
திட்டத்தில் முதல் முறையாக கணித ஆய்வகம் அமைக்க 1.28 கோடி ரூபாய் நிதி
ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக
பள்ளி மாணவர்களின் அடிப்படை கணிதம் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில்,
கணித ஆய்வகங்கள் நடுநிலைப் பள்ளிகளில் அமைக்க தொடக்கக் கல்வித்துறை
திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்த, கடந்த ஐந்து மாதங்களுக்கு
முன்பே பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, தலைமை அதிகாரிகளுக்கு அனுப்பி
வைக்கப்பட்டது.
கணிதம் என்பது அனை வரது வாழ்விலும்,
ஒன்றிணைந்த பாடம். இதில், போதிய அடிப்படை புரிதல் இன்மையால், தேர்வுகளில்
கணித பாடத்தையும் பிற பாடங்களை போன்று மனப்பாடம் செய்து எழுதும்
அவலநிலைதான் தற்போது உள்ளது. இதனால், மாணவர்களின் அடிப்படை கணிதத்தை
மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு
நடுநிலைப்பள்ளிகள் வீதம் தமிழகத்தில் 64 பள்ளிகளில் கணித ஆய்வகம்
ஏற்படுத்தப்படும். பள்ளி ஒன்றுக்கு இரண்டு லட்சம் வீதம் 64 பள்ளிகளுக்கு
1.25 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்.
இது சார்ந்த, தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளின்
விபரம் முன்பே அனுப்பப்பட்டும், மீண்டும் பள்ளிகளின் பெயர் பட்டியல்,
மார்ச் ௫ம் தேதிக்குள் அனுப்ப மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு
உத்தரவிடப் பட்டுள்ளது. பள்ளிகளில் ஆர்வமுள்ள கணித பட்டதாரி ஆசிரியர்,
ஆய்வகம் அமைக்க வகுப்பறை வசதி, உபகரணங்களை பாதுகாப்பாக வைக்கும் வசதி,
மாணவர்களின் எண்ணிக்கை ஆய்வு செய்யும் பணி தற்போது துவங்கியுள்ளது.
ஆய்வுக்கு பின் பள்ளிகளின் பெயர் பட்டியல் அனுப்பப்படவுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு நிடுநலைப்
பள்ளிகள் வீதம் தமிழகத்தில் 64 பள்ளிகளில் கணித ஆய்வகம் ஏற்படுத்தப்படும்.
பள்ளி ஒன்றுக்கு இரண்டு லட்சம் வீதம் 64 பள்ளிகளுக்கு 128 லட்சம் ரூபாய்
நிதி வழங்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக