சென்னை: தமிழகத்தில், கடந்த ஒரு ஆண்டில்
மட்டும், சுமார் 80 புதிய பள்ளிகள், சி.பி.எஸ்.இ., அமைப்புடன் இணைந்துள்ளன.
இதன்மூலம், சி.பி.எஸ்.இ., வாரிய பள்ளிகளின் நாடு முழுவதுமான மொத்த
எண்ணிக்கை 14,841 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, பல பெற்றோர்கள்,
தங்களின் பிள்ளைகள் மாநில வாரியத்தில் படிப்பதை விட, சி.பி.எஸ்.இ.,
வாரியத்தில் படிப்பதையே விரும்புகின்றனர். எனவே, மாநிலத்தின் பல பள்ளிக்
குழுமங்கள், தங்களின் சில பள்ளிகளை மாநில கல்வி வாரிய அடிப்படையிலும், சில
பள்ளிகளை சி.பி.எஸ்.இ., கல்வி வாரிய அடிப்படையிலும் நடத்துகின்றன.
மாநில வாரியத்தில் படிக்கும்
மாணவர்களுக்கென்று சில குறிப்பிட்ட நன்மைகள் கிடைக்கின்றன. சி.பி.எஸ்.இ.,
கல்வியோடு ஒப்பிடும்போது அதிக மதிப்பெண்களை சற்று எளிதாகப் பெறுதல், மாநில
உயர்கல்வி நிறுவனங்களில் சேர முயற்சிக்கும்போது முன்னுரிமை பெறுதல்
உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கின்றன.
அதேசமயம், சி.பி.எஸ்.இ., கல்வியிலும் சில
சலுகைகள் உண்டு. தமிழகத்தைப் பொறுத்த வரையில், 2013 - 2014ம் கல்வியாண்டில்
499 பள்ளிகள் சி.பி.எஸ்.இ., இணைப்பு பெற்றவையாக உள்ளன. சென்னையில் மட்டும்
122 பள்ளிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக