மத்திய அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் அறிவித்தாலும், அரசாணை கடந்த மார்ச் 27ம் தேதி தான் வெளியானது.
இதையடுத்து தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10% அகவிலைப்படி உயர்வு வழங்க முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து இன்னும் ஒரிரு நாட்களில் முறையான அரசாணை வெளியாகும் என்றும் அதிகபட்சம் ஏப்ரல் 10க்குள் அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி ஜனவரி 2014 முதல் 100% ஆக உயரவுள்ளது எனவும், ஜனவரி 2014 முதல் மார்ச் 2014 வரையிலான 3 மாத அகவிலைப்படி நிலுவை, ரொக்கமாக வழங்க உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக