பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

4/03/2014

இடை நின்ற மாணவர் தேடல்

காளையார்கோவில் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமையம் சார்பில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்கள் தேடும் பணி தொடங்கியுள்ளது.
இம்மாதம் முழுவதும் நடக்க உள்ள இப்பணி ஏப்.1ம் தேதி தொடங்கியது. இதில் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் ஆகியோர் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்கள், உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் ஈடுபட்டு வருகின்றனர். ஒன்றியம் முழுவதும் 43 ஊராட்சி, ஒரு பேரூராட்சியில் இப்பணி நடந்து வருகிறது. இதில் பல்வேறு சூழல் காரணமாக பள்ளி செல்லாத 14 வயதுவரையுள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளிக்கு அனுப்பவது, மாற்றுத்திறன் உள்ள குழந்தைகளை கண்டறிதல் உள்ளிட்ட பணிகள் செய்யப்படும்.
காளையார்கோவில் ஒன்றியத்தில் பள்ளி செல்லா மற்றும் மாற்றுத்திறன் குழந்தகைள் குறித்த தகவல்களை 9788858957 என்ற செல் எண்ணிலும், 04575&232995 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக