காரைக் குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா முடிந்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை தொலைநிலைக்கல்வி வாயிலாக படித்த மாணவர்களுக்கு பட்டம் வரவில்லை என மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கடந்த 2012ம் ஆண்டு அக்டோபரில் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது. அதன்பிறகு பட்டமளிப்பு விழா நடத்தாமல் நீண்டநாள் கிடப்பில் போடப்பட்டது. இதுகுறித்து நாளிதழ்களில் பட்டம் பெற முடியாமல் மாணவர்கள் தவித்து வருக்கின்றனர் என செய்தி வெளியிடப்பட்டது. அதன்பின்பு கடந்த பிப்ரவரி மாதம் தமிழக கவர்னர் தலைமையில் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது. இதில் ஆய்வு மாணவர்கள், மற்ற பிரிவுகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு கவர்னர் நேரடியாக பட்டங்களை வழங்கினார். மீதம் பட்டம் பெற தகுதியான மாணவர்களுக்கு பட்டம் வழங்க ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை தொலை நிலைக்கல்வி வாயிலாக படித்து பட்டம் பெற தகுதியாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்கள் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் அனுப்பப்படாமல் உள்ளது.
இதனால் மாணவர்கள் தங்கள் மேற்படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தவிர வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல வேண்டிய மாணவர்கள் ஒரிஜினல் சான்று இல்லாததால் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து மாணவர்கள் சிலர் கூறுகையில், பல்கலைக்கழக தேர்வு பிரிவில் இதுகுறித்து கேட்க்கும் போது அவரசத் தேவையென்றால் தக்கல் முறையில் விண்ணப்பித்து வாங்கிக்கொள்ளுமாறு சொல்கின்றனர். பல்வேறு மாநிலங்களில் உள்ள மாணவர்கள் தொலைநிலைக்கல்வி வாயிலாக படித்துள்ள நிலையில், அவர்கள் பட்டங்கள் பெற பல ஆயிரம் செலவு செய்து காரைக்குடியில் 2 நாட்கள் தங்கி பட்டம் பெற்று செல்கின்றனர். எனவே துணைவேந்தர் பொறுப்பு குழு இவ் விவசயத்தில் தலையிட்டு மாணவர்களின் அடிப்படை பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து பதிவாளர் மாணிக்கவாசகம் கூறுகையில், கடந்த பிப்ரவரி 18ம் தேதி பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது. ஸ்பீடு போஸ்ட் மூலம் பட்டங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவிர இந்த புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக