தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டச் செயலாளர் திரு.தாமஸ் அமலநாதன் அவர்கள் விடுத்துள்ள அறிவிப்பில் வருகிற ஆகஸ்ட்-2 அன்று TNPTF இயக்க நாள் என்பதால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார, நகர கிளைகளின் தலைமையிடத்தில் இயக்க கொடிகளை ஏற்றி இயக்க முன்னோடிகளின் தியாகங்களை நினைவு கூர வேண்டும் எனவும், இயக்கம் கடந்து வந்த பாதையினையும், எதிர்காலத்தில் இயக்கம் சந்திக்க வேண்டிய சவால்கள் குறித்தும் விரிவாக இயக்க உறுப்பினர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை அனைத்து வட்டார மற்றும் நகரச் செயலாளர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இயக்க நாள் நிகழ்வுகளை புகைப்படம் எடுத்து மாவட்டத் தலைமையின் வழியில் மாநில மையத்திற்கு அனுப்பி வைக்கும்படியும் அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
7/31/2014
TNPTF வட்டாரச்செயலாளர்களுக்கு சிவகங்கை மாவட்டச்செயலாளர் வேண்டுகோள்
லேபிள்கள்:
SVG TNPTF
7/30/2014
1000 புதிய ஆசிரியர் பணி இடங்கள்-ரூ.72 கோடியில் கூடுதல் வகுப்பறைகள்: ஜெயலலிதா தகவல்
லேபிள்கள்:
Educational News
சென்னை, ஜூலை. 30–
சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:–
செல்வத்துள் பெரும் செல்வம் ஆகிய கல்வியை அனைவரும் கற்று, கல்லாதவர்களே இல்லாத மாநிலம் தமிழகம் என்ற குறிக்கோளை அடையும் வகையில் எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில், கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப் பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
1. கல்வியின் அடித்தளமாக விளங்குவது தொடக்கக் கல்வி என்பதைக் கருத்தில் கொண்டு, நடப்புக் கல்வியாண்டில், 25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ள 128 குடியிருப்புப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் குடியிருப்புப் பகுதிகளில், தலா ஒரு தொடக்கப் பள்ளி வீதம் 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஓர் இடைநிலை ஆசிரியர் என மொத்தம் 256 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இவ்வாறாக தொடங்கப்படும் தொடக்கப் பள்ளிகளில் மதிய உணவு சமைப்பதற்குத் தேவையான நவீன சமையலறை, குடிநீர் வசதியுடன் கூடிய கட்டடங்கள் மற்றும் கழிப்பிடங்கள் ஆகியவை ஏற்படுத்தித் தரப்படும். இதனால் ஆண்டொன்றுக்கு தோராயமாக 19 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
2. 2009 ஆம் ஆண்டைய குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 3 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஒரு நடுநிலைப் பள்ளி அமைக்கப்பட வேண்டும். அதன்படி கடந்த மூன்று ஆண்டுகளில் 65 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில் 19 மாவட்டங்களில் 42 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக, நிலை உயர்த்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நிலை உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும் 3 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 126 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுவதோடு, ஒவ்வொரு பள்ளிக்கும் 3 கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படும். இதனால் ஆண்டொன்றுக்கு 9 கோடியே 28 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.
3. கடந்த மூன்று ஆண்டுகளில், 760 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதன் காரணமாக, சுமார் 1 லட்சத்து 6 ஆயிரம் மாணவ, மாணவியர் பயன் அடைந்துள்ளனர். நடப்புக் கல்வியாண்டில், 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் என மொத்தம் 300 ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பப்படும். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
4. கடந்த மூன்று ஆண்டுகளில் 300 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டன. நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய 5 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையை மாற்றி, கூடுதலாக தமிழ், வரலாறு, பொருளாதாரம் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களுக்கும் சேர்த்து 9 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக, நடப்புக் கல்வியாண்டில் 100 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள், ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 1000 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்பதையும் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கென ஆண்டொன்றுக்கு 31 கோடியே 82 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.
5. வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, வருவாய் இன்மை காரணமாக பள்ளியில் கல்வி கற்கும் அவர்களது குழந்தைகள் கல்வியை தொடர்ந்து கற்க இயலாத நிலை ஏற்படும் சமயத்தில், அவர்களது குழந்தைகள் தங்களது கல்வியை தொடர்ந்து கல்வி கற்கும் வகையில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ, மாணவியர், ஒவ்வொருவருக்கும் 50,000 ரூபாய் நிதி வழங்கும் திட்டம் என்னால் 2005 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொகை இனி 75,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாகச் செலுத்தப்பட்டு அதில் இருந்து கிடைக்கின்ற வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ, மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் மற்றும் பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்படும். இத்திட்டத்தினால் அரசுக்கு 2 கோடியே 70 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவு ஏற்படும்.
6. அனைத்துப் பள்ளிகளிலும் 100 விழுக்காடு கழிவறை வசதி மற்றும் குடிநீர் வசதி இருக்க வேண்டும் என்பதற்காக கணக்கெடுப்பு பணி எனது தலைமையிலான அரசால் மேற்கொள்ளப்பட்டு, கழிவறை வசதிகள் இல்லாத 2,057 பள்ளிகளுக்குக் கழிவறை வசதிகள் உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்கப் பட்டன. கழிவறைகளை கட்டிக் கொடுத்தால் மட்டும் போதாது. குழந்தைகளின் சுகாதாரம் கருதி அக்கழிவறைகளை சுத்த மாகப் பராமரிப்பதும் மிகவும் இன்றியமையாத பணி என்பதால், முதன் முறையாக, கழிவறைகளை பராமரிப்பதற்காக 160 கோடியே 77 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், 56 லட்சத்து 55 ஆயிரம் மாணவ, மாணவியர் பயனடைவார்கள்.
7. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குத் தரமான கட்டணமில்லாக் கல்வி வழங்குவதோடு, விலையில்லா பாடப் புத்தகம், நோட்டுப் புத்தகம், புத்தகப் பை, கணித உபகரணப் பெட்டி, வண்ணப் பென்சில்கள், கிரையான்கள், வரைபடப் புத்தகம், மடிக்கணினி, மிதிவண்டி, பேருந்து பயண அட்டை, சீருடை, காலணி, ஆகியவை விலையின்றி வழங்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவியரிடையே அழகாக எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, 1 ஆம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை பயிலும் 45 லட்சத்து 76 ஆயிரம் மாணவர்களுக்கு முதன் முறையாக கையெழுத்து பயிற்சி ஏடுகள் வழங்கவும், 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் 63 லட்சத்து 18 ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்கு அவர்களது கலைத் திறன் மற்றும் கற்பனை வளத்தை ஊக்குவிக்கும் வகையில் ஓவியப் பயிற்சி ஏடுகள் வழங்கவும், 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் பயிலும் 10 லட்சம் மாணவ, மாணவியர்களுக்கு அறிவியல் பாடங்களுக்கான செயல்முறைப் பயிற்சி ஏடுகள் வழங்கவும் நான் ஆணையிட்டுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கென அரசுக்கு 5 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
8. தொலைதூர மற்றும் மலைப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த வகுப்பினைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், நடப்பாண்டில், 500 குழந்தைகள் பயன்பெறும் வகையில் 5 உண்டு உறைவிடப் பள்ளிகள் நீலகிரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பள்ளிகளுக்கு 5 முழு நேர ஆசிரியர்கள் மற்றும் 3 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இதற்கென ஆண்டொன்றுக்கு 3 கோடியே 74 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.
9. சமூக விழிப்புணர்வினை குழந்தைகளிடம் கொண்டு செல்லும் வகையில் பள்ளிக் கல்வித் துறையும், காவல் துறையும் இணைந்து பள்ளிகளில் போட்டிகள், விழிப்புணர்வு பேரணி, கிராம கல்வித் திருவிழா, ஊடகம் மற்றும் தொடர் குழு நடவடிக்கைகள் ஆகியவற்றை நடத்தி வருகின்றன. நடப்பு கல்வி ஆண்டிலும் இத்திட்டம் 9 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவில் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
10. குழந்தைகளுக்குத் தரமான கல்வி வழங்குவதோடு, கல்வி பயில்வதற்கேற்ற இனிய சூழல் தேவை என்பதை கருத்தில் கொண்டு தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 72 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில், 1,175 கூடுதல் வகுப்பறைகளும், பெண் குழந்தைகளுக்கென தனியே 270 கழிப்பறைகளும் கட்டித் தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
11. 2013-14 ஆம் ஆண்டு 46,737 பள்ளி செல்லாக் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 24,638 குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி தேவைப்படுகிறது என்பதை கண்டறிந்து, அதன் அடிப்படையில், 22 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் 9,641 குழந்தைகளுக்கு உறைவிட வசதியுடன் கூடிய சிறப்புப் பயிற்சியும், 14,997 குழந்தைகளுக்கு உறைவிட வசதியின்றி சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
12. சிறப்புக் கவனம் தேவைப்படும் 1,26,641 குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற உள்ளடக்கிய கல்வியின் தொடர்ச்சியாக, 31 கோடியே 66 லட்சம் ரூபாய் செலவில் சிறப்புப் பயிற்சிகள், உதவும் உபகரணங்கள், ஆகியவை வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
13. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள் போன்றவற்றை மாணவர்களும், பெற்றோர்களும் அறிந்து கொள்ளவும், ஆசிரியர்கள் வழங்கும் முக்கிய குறிப்புகளை குறித்து வைத்துக் கொள்ளவும் முதன் முறையாக பள்ளி நாட்காட்டியுடன் இணைந்த குறிப்பேடு, 3 கோடி ரூபாய் செலவில் நடப்புக் கல்வி ஆண்டு முதல் வழங்கப்படும்.
எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள், கல்லாதோர் இல்லாத மாநிலம் தமிழகம் என்ற இலக்கை அடைய வழி வகுக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதியதாக 900 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.... சட்டமன்றத்தில் அறிவித்தார் முதல்வர்
லேபிள்கள்:
இணையச்செய்திகள்,
Educational News
சற்றுமுன் சட்டமன்றத்தில் 110 இன் விதின்யின் கீழ் பள்ளிகல்விதுறைக்கான அறிவிப்புகளை அறிவித்தார்.
அதில் 128 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் என்றார். இதற்க்காக 256 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
42 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இதற்காக 126 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் .
50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இதற்காக 300 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இதற்காக 300 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
மொத்தம் 900 ஆசிரியர்கள் உட்பட 1000 பணிகள் நிரப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதில் 128 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் என்றார். இதற்க்காக 256 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
42 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இதற்காக 126 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் .
50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இதற்காக 300 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இதற்காக 300 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
மொத்தம் 900 ஆசிரியர்கள் உட்பட 1000 பணிகள் நிரப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 10 பேர் குற்றவாளிகள்; 11 பேர் விடுவிப்பு- தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 21 பேரில் ஸ்ரீகிருஷ்ணா பள்ளி நிறுவனர் பழனிச்சாமி உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதேவேளையில், இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி முகமது அலி, இந்த வழக்கில் இருந்து 8 அதிகாரிகள், 3 ஆசிரியைகள் உள்ளிட்ட 11 பேரை விடுவிக்கப்படுவதாக அறிவித்தார்.
இந்த வழக்கின் குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் அரை மணி நேரத்திற்குப் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.
பத்து வருடங்களுக்கு முன்னர் 94 குழந்தைகள் இறந்த கும்பகோணம் பள்ளித் தீ விபத்து வழக்கில், நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின்னர் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தீர்ப்பை எதிர்பார்த்து, தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்ற வளாகத்தில் காலை முதலே பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் குவிந்திருந்தனர்.
இந்த வழக்கில் இருந்து 11 பேர் விடுவிக்கப்பட்டதை அறிந்த பெற்றோர், மிகுந்த வேதனையையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினர்.
ஜூலை 16, 2004-ல் கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா நடுநிலைப்பள்ளி சத்துணவு சமையலறையில் தீப்பிடித்து, பள்ளியின் முதல் மாடிக்குப் பரவியதில், அங்கு கூரை வேயப்பட்ட நீண்ட வகுப்பறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 200 குழந்தைகளில் 94 பேர் உடல் கருகி இறந்தனர். 18 குழந்தைகள் கடும் தீக் காயமடைந்தனர். உலகையே உலுக்கிய இந்த கோர விபத்துதான் பள்ளிகளின் பாதுகாப்பு நிலை பற்றிய பல கேள்விகளை எழுப்பியது.
இங்கு, ஒரே சிறிய கட்டிடத்தில் 3 பள்ளிகள் இயங்கி வந்துள்ளன. விபத்துக்குப் பிந்தைய கடந்த 10 ஆண்டுகளில் இந்த வழக்கு ஒரு நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்துக்கு மாறி மாறிச் சென்று, எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.
குற்றம் சாட்டப்பட்டிருந்த 24 பேரில், அரசு அதிகாரிகள் 3 பேர் தமிழக அரசின் பரிந்துரையால் 2010-ல் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கின் 10-வது எதிரியான மாவட்டக் கல்வி அலுவலர் பாலகிருஷ்ணன் தன்னையும் விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன் றத்தில் மனு செய்தபோதுதான், இந்த வழக்கு இன்னும் முடிவடை யாமல் உள்ளது உச்ச நீதி மன்றத்தின் கவனத்துக்கு வந்தது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 2012, செப்.12 முதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் எதிரிகள் 21 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்து, 15 நாட்களுக்குப் பின்னர் விசாரணை தொடங்கப்பட்டு கடந்த ஒன்றரை ஆண்டு களுக்கும் மேலாக அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்த மற்ற அனைத்து நாட்களும் விசாரணை நடைபெற்றது.
ஒவ்வொரு நாளும் சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அப்போது அரசு வழக்கறிஞர் நூற்றுக்கணக்கான ஆவணங்கள் குறித்தும், சாட்சிகளிடமும் விசாரணை செய்தார்.
501 சாட்சியங்கள்
இந்த வழக்கில் போலீஸ் விசாரணையில் 15,000 பக்கங்களும், நீதிமன்ற வழக்கு விசாரணையில் 5,000 பக்கங் களும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
மொத்தமுள்ள 501 சாட்சியங்களில், இறந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உயிர் பிழைத்த குழந்தைகள் உள்ளிட்ட முக்கியமான 230 சாட்சியங்களிடம் நடைபெற்ற நீண்ட விசாரணைகள் மற்றும் ஆய்வுக்குப் பின்னட் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
10 பேர் குற்றவாளிகள்:
ஸ்ரீகிருஷ்ணா பள்ளி நிறுவனர் பழனிச்சாமி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாலாஜி, பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமியின் மனைவியும் தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி, பொறியாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலக உதவியாளர் சிவபிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன் ஆகிய 10 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
விடுதலையானோர் விபரம்:
தஞ்சை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பி.பழனிச்சாமி, அப்போதைய தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் நாராயணசாமி, நகரமைப்பு அலுவலர் முருகன், வகுப்பு ஆசிரியைகள் தேவி, மகாலெட்சுமி, அந்தோணியம்மாள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன். கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மாதவன் பாலகிருஷ்ணன், நகராட்சி ஆணையர் சத்தியமூர்த்தி ஆகிய 11 பேர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பட்டதாரி ஆசிரியர் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடு
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
பட்டதாரி ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஓரிரு நாளில் வெளியிடவுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப் படையில் நிரப்பப்பட உள்ளன.
ஆசிரியர் தகுதித் தேர்வில் (2-வது தாள்) தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த 43,243 பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) கடந்த 15-ம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பதா ரர்கள் தங்களது ஆசிரியர் தகுதித் தேர்வு பதிவு எண்ணை குறிப்பிட்டு வெயிட்டேஜ் மதிப்பெண்ணை உறுதிப்படுத்திக்கொண்டனர்.
வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் மாற்றம் வந்தவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதில் சுமார் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். 43 ஆயிரம் பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் வெளி யிடப்பட்டதை தொடர்ந்து, இறுதி தேர்வுப் பட்டியல் ஜூலை 30-ம் தேதி வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித் திருந்தது. 43 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களும் இதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
தேர்வுப் பட்டியல் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி கூறும்போது, ‘‘இறுதி தேர்வுப் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் வெளியிடப்பட லாம். ஒருவேளை புதன்கிழமை வெளியிடப்படாவிட்டால் மறுநாள் அல்லது ஆகஸ்ட் 1-ம் தேதி கட்டாயம் வெளியிடப்படும்’’ என்றார்.
இந்தியாவில் எப்போது?
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
உலகெங்கும் பெரும்பாலான அரசுகள் முதலாளிகள் நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும்போது, தொழிலாளர் நலனைக் கருத்தில் கொண்டு சமீபத்தில் ஒரு முடிவை எடுத்திருக்கிறது ஜெர்மனி. தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம், வரும் ஜனவரி 1 முதல் மணிக்கு 8.5 யூரோக்களாக (சுமார் ரூ.700) இருக்கும் என்று ஜெர்மனி அறிவித்துள்ளது. 8 மணி நேரம் வேலை செய்தால் சுமார் ரூ.5,600. ஒரு மாத ஊதியம் சுமார் ரூ.1.5 லட்சம்.
ஜெர்மனி நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியம் பிற ஐரோப்பிய நாடுகளிலும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த லட்சக் கணக்கான தொழிலாளர்களின் வறுமை நிலையைக் கணக்கில் கொண்டு, அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டதுதான் இந்த முடிவு.
பிரிட்டனிலும் 1998 முதல், குறைந்தபட்ச ஊதியச் சட்டம் அமலில் இருக்கிறது. தொழிலாளர் நலச் சட்டங்களிலும் சமூகநலத் திட்டங்களிலும் ஜனநாயக நாடுகளுக்கெல்லாம் முன்னோடியான பிரிட்டனும் குறைந்தபட்ச ஊதியத்தை மேலும் உயர்த்துவது அவசியம் என்று கருதுகிறது. பிரான்ஸும் ஐரோப்பா முழுமைக்கும் பொதுவான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. இதை இனியும் தள்ளிப்போட முடியாது என்பதை இத்தாலி, நார்வே, சுவீடன் உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகளும் உணர்ந்துள்ளன. அமெரிக்காவிலும் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த அதிபர் ஒபாமா முயற்சி மேற்கொண்டார். ஆனால், நாடாளுமன்றம் அதைத் தடுத்துவிட்டது.
வளர்ந்த நாடுகளிலாவது தொழிற்சங்கங்கள் வலிமையுடன் உள்ளன. அந்த நாடுகளிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் ஊதிய உயர்வின் அவசியத்தை உணர்ந்துள்ளன. வளரும் நாடுகளில் தொழிற்சங்கங்கள் வலிமையாக இல்லை. பெரும்பாலான தொழிலாளர்கள் அமைப்பு ரீதியாகத் திரட்டப்படாமல், வேலைக்கு உத்தரவாதம் இல்லாமல் வேலை செய்கின்றனர். சட்டங்கள் பல இருந்தும் அவற்றை முறையாக அமல்படுத்தி, தொழிலாளர் நலனைக் காப்பதில் வளரும் நாடுகளின் அரசுகள் முயற்சி எடுப்பதில்லை.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதால் வேலைவாய்ப்பு பெருகும், பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்பதை அரசுகளும், செல்வாக்குள்ள முதலாளிகளும் ஏற்றுக்கொள்வதேயில்லை. இதனால், உற்பத்திச் செலவு கூடும், லாபம் குறையும் என்றே வாதிடுகிறார்கள். அது உண்மையல்ல. தொழிலாளர்கள் வெறும் தொழிலாளர்கள் மட்டும் இல்லை, அவர்கள்தான் பிரதானமான நுகர்வோர்கள். தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் ஊதியம் முழுக்க மீண்டும் செலவிடப்பட்டு, பொருளாதாரத்தை வளர்ச்சியடையவே செய் கிறது. அவர்கள் செய்யக்கூடிய முதலீடும் சமூகத்துக்கே பயன்படுகிறது.
அரசுப் பணிகள், தகவல் தொழில்நுட்பத் துறை போன்ற துறைகளில் பணிபுரிபவர்களைவிட அமைப்புசாராத் தொழிலாளர்களின் எண் ணிக்கை மிகவும் அதிகம். அப்படிப்பட்ட தொழிலாளர்களை வெகு காலமாகப் புறக்கணித்துக்கொண்டிருக்க முடியாது; சமூகத்தில் இரண்டு தரப்புகளுக்கும் இடையே ஏற்கெனவே காணப்படும் பிளவு மேலும் மோசமாகிவிடும். ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதுதான் வளர்ச்சியின் முதல் படியாக இருக்குமே தவிர, சந்தையையும் பொருளாதாரத்தையும் வரம்பில்லாமல் பெருநிறுவனங்களுக்குத் திறந்துவிடுவதல்ல என்பதை உணர்ந்து அரசுகள் செயல்பட வேண்டும்.
திருவோணம் உதவித் தொடக்கக்கல்வி அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
லேபிள்கள்:
TNPTF NEWS
கும்பகோணம் பள்ளி தீவிபத்து: தமிழக அரசின் மனு தள்ளுபடி
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் கூடுதல் நிவாரணத்துக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் குழு அமைத்து கூடுதல் நிவாரணம் தர உத்தரவிடப்பட்டுள்ளது.
கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கு: 11 பேர் விடுதலை
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கில் 11 பேரை விடுதலை செய்து தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 21 பேரில் 11 பேரை விடுதலை செய்துள்ளது தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம். 2004 ஜூலை 16 ஆம் தேதி கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் பள்ளி நிறுவனர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தீவிபத்து வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என நீதிபதி முகமது அலி கூறியுள்ளார்.
7/28/2014
மாணவர்களின் இடைநிற்றலை குறைக்க 381 கோடி நிதி ஒதுக்கீடு
லேபிள்கள்:
Educational News
சென்னை: பள்ளி படிப்பில், மாணவர்களின் இடைநிற்றலை குறைக்க, நடப்பு கல்வி ஆண்டில் 381 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில், 20 லட்சம் மாணவ, மாணவியர் பயன் பெறுவர். சமூக, பொருளாதார பிரச்னையால் பள்ளி படிப்பை மாணவர்கள் பாதியில் கைவிடக்கூடாது என்பதற்காக, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை 2011 - 12ல் இருந்து, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 10 மற்றும் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, 1,500 ரூபாயும், பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு, 2,000 ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்தத் தொகை, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் (தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனம்) முதலீடு செய்யப்பட்டு, மாணவர்கள், மேல்நிலைக்கல்வி முடித்ததும், வழங்கப்படுகிறது.
2011 - 12ல், 313 கோடி; 2012 - 13ல், 353 கோடி; 2013 - 14ல், 381 கோடி ரூபாய், ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது. இதில் முறையே, 19 லட்சம், 21 லட்சம் மற்றும், 23 லட்சம் மாணவ, மாணவியர் பயனடைந்தனர்.
நடப்பு 2014 - 15ம் கல்வி ஆண்டில், 381 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கு, ஆகஸ்ட் இறுதி வரை கால அவகாசம் உள்ளது. எனவே, அடுத்த மாதம் இறுதியில் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, மேற்படி திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்கள் எண்ணிக்கை இறுதி செய்யப்படும்.
சிறந்த மாணவர்களை ஆண்டுதோறும் தேர்வுசெய்து விருது
லேபிள்கள்:
Educational News
மதுரை: மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் அறிவியல் ஆர்வமிக்க சிறந்த மாணவர்களை ஆண்டுதோறும் தேர்வுசெய்து விருது வழங்குகிறது.
இந்தாண்டிற்கு, மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் தலா 5 மாணவர்கள், நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் தலா 3 மாணவர்களை தலைமையாசிரியர்கள் தேர்வு செய்ய வேண்டும்.
ஜூலை 31க்குள் www.inspireawardsdst.gov.in என்ற இணையதளத்தில் அந்த மாணவர்கள் பெயர் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியாண்டியை 90253 81649ல் தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.
பி.எட்., படிப்புக்கு அனுமதி மறுப்பா? : இடைநிலை ஆசிரியர்கள் புகார்
லேபிள்கள்:
Educational News
மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், பி.எட்., படிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, 40 நாள் வகுப்பறை பயிற்சிக்கு செல்ல அனுமதியளிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற, பி.எட்., படிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக உள்ளவர்களுக்கு, பட்டப்படிப்பு முடித்த நிலையில், பி.எட்., படிப்பை தபால் வழியில் அண்ணாமலை பல்கலை உள்ளிட்ட பல்கலை வழங்குகின்றன. இதில், 40 நாள் வகுப்பறை பயிற்சியும் அவசியம். இதற்காக அரை நாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு, இடைநிலை ஆசிரியர் களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அனுமதி வழங்க வேண்டும். இக்கல்வியாண்டில், இதுவரை எந்த ஆசிரியருக்கும் அனுமதி வழங்காமல், மறுத்து வருவதாகவும், இதனால், தங்களது பதவி உயர்வுக்கான வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தொடக்கக்கல்வி அலுவலர் ஒருவர் கூறியதாவது: கல்வியாண்டு துவக்கத்தில் துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, மாணவர் சேர்க்கை உள்ளிட்ட முக்கிய பணி உள்ளன. அதுமட்டுமில்லாமல், ஈராசிரியர் பள்ளியில் உள்ள ஆசிரியர், 40 நாள் வரை விடுப்பில் செல்லும் பட்சத்தில், அங்கு கற்றல் பணி பாதிக்காமல் இருக்க மாற்றுப்பணி ஆசிரியர் நியமிக்க வேண்டும். கல்வியாண்டின் துவக்கத்தில் இதுபோன்ற சிக்கல் வரும் பட்சத்தில், மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க ஒரு சில அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் முதல், அனைத்து பி.எட்., படிக்கும் ஆசிரியர்களுக்கும் அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
2.8.2014 - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இயக்க நாள்
லேபிள்கள்:
Singai TNPTF NEWS
சிங்கம்புணரி AEEO அலுவலகச்செய்தி - தினமலர் (28.7.2014)
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
7/25/2014
TET விண்ணப்பிக்கும் முறையை மாற்றி TNPSC போல ONLINE முறையில் விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரம்
லேபிள்கள்:
TET
போட்டி தேர்வுகளுக்கு, விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் முறையை மாற்றி, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) போல், இணையதள வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) ஆலோசித்து வருகிறது.
அதிக வேலை பளு:
டி.ஆர்.பி., நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும், அச்சடிக்கப்பட்ட விண்ணப்பம் மூலம் விண்ணப்பிக்கும் முறை, தற்போது அமலில் உள்ளது. இந்த முறை, டி.ஆர்.பி.,க்கு அதிக வேலை பளுவை ஏற்படுத்துவதாக உள்ளது. ஒவ்வொரு தேர்வுக்கும், லட்சக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கின்றனர். இதனால், லட்சக்கணக்கான விண்ணப்பங்களை அச்சடித்து, மாநிலம் முழுவதும், முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டி உள்ளது.
இணையதளம்:
இந்நிலையை மாற்றி, எளிமையான முறையில், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, தற்போது, டி.ஆர்.பி., தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இணைய தளம் வழியாக, விண்ணப்பதாரர், எளிதில் விண்ணப்பிக்க முடியும். இதனால், கட்டணமும், வெகுமாக குறையும். விண்ணப்ப கட்டணம், 500 ரூபாயாக உள்ளது. இதுவே, இணையதள முறைக்கு மாறினால், பதிவு கட்டணமாக, மிக குறைந்த தொகையை வசூலிக்க, வாய்ப்பு ஏற்படும்.
கால அவகாசம்:
மேலும், விண்ணப்பதாரர்களுக்கு, போதிய கால அவகாசம் கொடுத்து, இணையதள பதிவில் உள்ள தவறுகளை சரி செய்யவும், டி.ஆர்.பி., வாய்ப்பு கொடுக்கும். இதுபோன்று, பல வசதிகள் இருப்பதால், அரசு பொறியியல் கல்லூரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, தற்போது ஆய்வு நடந்து வருகிறது. அரசு பொறியியல் கல்லூரிகளில், 139 உதவி பேராசிரியரை நியமனம் செய்ய, அக்டோபர், 26ம் தேதி, போட்டி தேர்வு நடக்கும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இதற்கு, ஆகஸ்ட், 20ம் தேதி முதல் செப்டம்பர், 5ம் தேதி வரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், விண்ணப்பம் வழங்கப்படும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
இம்மாத இறுதிக்குள்...:
இதற்கு, 80 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வரை விண்ணப்பிக்கலாம் என, டி.ஆர்.பி., எதிர்பார்க்கிறது. எனவே, இந்த தேர்வில் இருந்து, இணையதள பதிவு முறையை, டி.ஆர்.பி., அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்ப முறையா; இணையதள பதிவு முறையா என்பது, இம்மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று தெரிவித்தது.
துவக்கப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை:
லேபிள்கள்:
Educational News
தொடக்கப் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம், கடந்த 2009 - 10ம் ஆண்டின் நிலையான 9.11% இலிருந்து, 2013 - 14ம் ஆண்டில், 4.67% ஆக குறைந்துள்ளது என்று மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: தொடக்கப்பள்ளி அளவில், பழங்குடியின குழந்தைகளின் வருகை விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது கவலைத்தரும் விஷயமாக உள்ளது.
துவக்கப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்பொருட்டு, துவக்கப் பள்ளிகளில், சிறப்பான குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலுள்ள குறைபாடுகளை தெரிவிக்கும்படி, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும், பள்ளிப் பாடத்திட்டத்தில், பாலின விகிதாச்சாரத்தை சமன்படுத்தும் வகையிலான ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.<
அகஇ - 2014-15ம் ஆண்டிற்கான அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசின் அனுமதிகாக தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
லேபிள்கள்:
SSA
SSA - HIGHLIGHTS OF THE BUDGET & FISCAL ACTIVITIES - CHAPTER - IV CLICK HERE...
>2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 226 தொடக்கப்பள்ளிகள் துவங்க அனுமதி கோரியுள்ளது.
>2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 88 உயர்தொடக்கப்பள்ளிகள் துவங்க அனுமதி கோரியுள்ளது.
>2014-15ம் புதியதாக துவக்கப்படவுள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு 452 பணியிடங்களும், உயர்தொடக்கப்பள்ளிகளுக்கு 264 பணியிடங்களும் கோரியுள்ளது.
>பகுதி நேர ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை ரூ.5000/-ல் இருந்து ரூ.7000/-ஆக உயர்த்த கோரியுள்ளது. அதேபோல் இன்னும் நிரப்பப்பட வேண்டிய 1380 காலிப்பணியிடங்களும் நிரப்ப உள்ளது.
>2014-15ம் ஆண்டில் கீழ்காணும் அட்டவணையின் படி ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி வழங்க உத்தேசித்துள்ளது.
தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு
>வட்டார மைய அளவில் 13நாட்கள்
>குறுவள மைய அளவில் 7நாட்கள்
உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு
>வட்டார மைய அளவில் 11நாட்கள்
>குறுவள மைய அளவில் 7நாட்கள்
>தலைமையாசிரியர்களுக்கு - 5நாட்கள் பயிற்சி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் புதியதாக நியமன செய்யப்படும் ஆசிரியர்களுக்கு 5பணியிடை பயிற்சி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
7/24/2014
அங்கன்வாடி மையங்கள் 'மழலையர் பராமரிப்பகங்கள்' ஆக தரம் உயர்த்தப்படும்: முதல்வர்
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
பணிக்குச் செல்லும் தாய்மார்கள் சிரமங்களை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களை "மழலையர் பராமரிப்பகங்களாக" தரம் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
முதற்கட்டமாக பெரம்பலூர், கன்னியாகுமரி, சென்னை, புதுக்கோட்டை, திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, சேலம், வேலூர், விழுப்புரம் ஆகிய
13 மாவட்டங்களில் மொத்தம் 211 அங்கன்வாடி மையங்கள் 2 கோடியே 31 லட்சம் ரூபாய் செலவில் மழலையர் பராமரிப்பகங்களாக தரம் உயர்த்தப்படும் என அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக விதி எண் 110-ன் கீழ் அவர் இன்று வாசித்த அறிக்கையில்: "கர்ப்பிணித் தாய்மார்கள், வளரிளம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிறைவான ஊட்டச் சத்து, மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலை, சிசு இறப்பு விகிதம் குறைப்பு போன்ற குறிக்கோள்களை அடையும் வண்ணம், தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள 54,439 அங்கன்வாடி மையங்கள் மூலம் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர் உதவித் தொகை பெறுவோர் என மொத்தம் 35 லட்சத்து 36 ஆயிரத்து 705 பேர் பயன் அடைந்து வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையங்கள் மூலம் மேலும் பல சலுகைகளையும், வசதிகளையும் தாய்மார்களும், குழந்தைகளும், ஏழை, எளிய குடும்பங்களும் பெறும் வண்ணம் கீழ்க்காணும் அறிவிப்புகளை வெளியிடுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
1. இந்த அங்கன்வாடி மையங்கள் மூலம் பயனடைந்து வரும் 6 மாதம் முதல் 60 மாதம் வரையிலான குழந்தைகள் குதூகலமான சூழலில் வளர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, அங்கன்வாடி மையங்களை "எழுச்சிமிகு முன் பருவ குழந்தை வளர்ச்சி மற்றும் கற்றல் மையங்களாக", அதாவது Vibrant Early Childhood Development and Learning Centre ஆக தரம் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதற்கட்டமாக, மொத்தமுள்ள 54,439 அங்கன்வாடி மையங்களில், 5,565 அங்கன்வாடி மையங்கள் 55 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்படும். இதன் மூலம், 4 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பயனடைவார்கள். இவ்வாறு தரம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டு உள்ள அங்கன்வாடி மையங்களில் 100 சதுர அடி அளவில் கூடுதலாக ஓர் அறை கட்டுதல், குழந்தை நேய கழிப்பறைகளைக் கட்டுதல் மற்றும் சீரமைத்தல், தண்ணீர்த் தொட்டி அமைத்தல், கை கழுவும் தொட்டி, சமையலறைத் தொட்டி, காலணி அலமாரி, தண்ணீர் வடிகட்டி ஆகியவற்றை அமைத்தல், குழந்தைகளுக்கான வெளி விளையாட்டு சாதனங்கள், நாற்காலி மற்றும் மேசை, வாத்து மற்றும் குதிரை வடிவிலான ஆடும் நாற்காலி, புத்தகப் பை மற்றும் தண்ணீர் பாட்டில், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஆகியவற்றை வழங்குதல், அங்கன்வாடி மையங்களில் வெள்ளை அடித்து சுவர் ஓவியம் வரைதல் மற்றும் சிறிய பழுதுகளை நீக்குதல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
2. அங்கன்வாடி மையங்களில், அங்கன்வாடிப் பயனாளிகளுக்குத் தேவையான ஊட்டச் சத்து, சுகாதார சேவைகள், தடுப்பூசி உள்ளிட்ட மருத்துவ வசதிகள் ஆகியவை அளிக்கப்பட்டு வருகின்றன. காய்ச்சல் அறிகுறி உள்ள குழந்தைகளுக்கு காய்ச்சலின் அளவினை மின்னணு வெப்பமானி, அதாவது thermometre மூலம் அறிந்து, பதிவு செய்து, அதற்கேற்றாற் போல் மருந்துகளை வழங்கினால் நலம் பயக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, மின்னணு வெப்பமானி, காயத்திற்கு கட்டும் துணியை வெட்டும் கத்திரிக்கோல், சுத்தப்படுத்தப்பட்ட காயத்திற்கு கட்டும் துணி, நுண் துளையிடப்பட்ட ஒட்டும் துணி, அதாவது micropore, காயங்களுக்கான ஒட்டுப்பசைத் துணி, அதாவது handyplast மற்றும் முதலுதவி கையேடு ஆகியன அடங்கிய முதலுதவிப் பெட்டிகள் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 54,439 அங்கன்வாடி மையங்களுக்கும் வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
3. பணிக்குச் செல்லும் தாய்மார்கள், 5 வயது வரையுள்ள தங்கள் குழந்தைகளைப் பராமரிப்பதில் மிகுந்த சிரமங்களை எதிர் கொள்வதால், அக்குழந்தைகளுக்கு பராமரிப்பகங்களை அமைப்பது அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, தற்போதுள்ள அங்கன்வாடி மையங்களை "மழலையர் பராமரிப்பகங்களாக" தரம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதற்கட்டமாக பெரம்பலூர், கன்னியாகுமரி, சென்னை, புதுக்கோட்டை, திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, சேலம், வேலூர், விழுப்புரம் ஆகிய
13 மாவட்டங்களில் மொத்தம் 211 அங்கன்வாடி மையங்கள் 2 கோடியே 31 லட்சம் ரூபாய் செலவில் மழலையர் பராமரிப்பகங்களாக தரம் உயர்த்தப்படும். இந்த "மழலையர் பராமரிப்பகங்கள்" முதற்கட்டமாக தேவைப்படும் இடங்களில் வாடகைக் கட்டடங்களில் முதன்மை அங்கன்வாடி மையங்களுடன் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
இதன் மூலம், 211 அங்கன்வாடி மையங்களில் ஒரு மையத்திற்கு குறைந்த பட்சமாக 15 குழந்தைகள் என்ற எண்ணிக்கையில் மொத்தம் 3,165 குழந்தைகள் பயனடைவர். மேலும், இக்குழந்தைகளைக் கவனிக்கத் தேவைப்படும் விளையாட்டு பொருட்கள், பொம்மைகள், தொட்டில்கள், சுத்தம் செய்யத் தேவையான பொருட்கள், கூடுதலான படுக்கைகள், போர்வைகள், குழந்தைகளுக்கான அடையாள அட்டைகள் ஆகியன வழங்கப்படும். இது தவிர, மழலையர் பராமரிப்பகங்களுக்கு வரும் குழந்தைகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் இணை உணவு மற்றும் சத்துணவுடன், ஒரு நாளைக்கு, ஒரு குழந்தைக்கு 6 ரூபாய் செலவில் வருடத்தில் 300 நாட்களுக்கு, காலை உணவு, சிறு உணவு மற்றும் மாலை சிற்றுண்டி ஆகியவை வழங்கப்படும்.
4. நான் முதன் முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், பெண் கல்வியை மேம்படுத்தவும், பெண் சிசுக் கொலையை ஒழிக்கவும், சிறு குடும்ப முறையை ஊக்கப்படுத்தவும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் என்ற திட்டத்தை 1992 ஆம் ஆண்டு தொடங்கினேன். 1.8.2011-க்குப் பிறகு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்து, ஆண் குழந்தை இல்லாதிருப்பின், அப்பெண் குழந்தையின் பெயரில் ஆரம்ப வைப்பீடாக 50,000/-ரூபாயும், குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் இருந்து, ஆண் குழந்தை ஏதும் இல்லாதிருப்பின், ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் தலா 25,000/- ரூபாயும் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த வைப்புத் தொகை ஒவ்வொரு ஐந்தாண்டு முடிவிலும் புதுப்பிக்கப்பட்டு, பெண் குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்ததும் திரளான வட்டி விகிதத்துடன் கூடிய, நிலை வைப்புத் தொகையின் முதிர்வுத் தொகை இரு திட்டங்களின் கீழ் முறையே 3 லட்சத்து 232 ரூபாய் மற்றும் 1 லட்சத்து 50 ஆயிரத்து 117 ரூபாய் ஒவ்வொரு பயனாளிக்கும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டங்களின் கீழ், தொகை வைப்பீடு செய்யப்பட்ட ஆறாவது ஆண்டிலிருந்து கல்விச் செலவுக்காக ஆண்டுதோறும் ஊக்கத் தொகை 1,800 ரூபாய் வரை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பெண் கல்வி முன்னேற்றம் அடைந்துள்ளதற்கும், பெண் குழந்தைகளின் இடை நிறுத்தல் குறைந்துள்ளதற்கும், பெண் குழந்தை பாலின விகிதம் அதிகரித்துள்ளதற்கும் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் முக்கிய காரணியாக உள்ளது.
கூலித் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர், கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், தங்கும் விடுதிகளில் பணிபுரிவோர், உணவகம், பெட்டிக் கடை நடத்துபவர்கள், தெரு வியாபாரிகள், தனியார் மழலையர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் போன்றோர் மாத வருமானம் சுமார் 5000/- ரூபாய் வீதம், ஆண்டு வருமானம் 60,000/- ரூபாய் வரை ஈட்டும் சாதாரண பிரிவைச் சேர்ந்தவர்களாகவே
உள்ளனர். இவர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில், தற்போது நிர்ணயிக்கப்பட்ட திட்டம்-1-க்கான வருமான உச்ச வரம்பு 50,000/-ரூபாயையும், திட்டம்-2-க்கான வருமான உச்ச வரம்பு 24,000/- ரூபாயையும் அகற்றிவிட்டு, இரு திட்டங்களுக்கும் பொதுவாக 72,000/- ரூபாய் உச்ச வரம்பு நிர்ணயிக்கப்படும். இதற்காக 31 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மேற்காணும் எனது தலைமையிலான அரசின் நடவடிக்கைகள், பெண்கள், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தவும், அவர்கள் அனைத்து வசதிகளையும் பெற்று ஊட்டச் சத்து நிறைந்தவர்களாக திகழவும் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.
மாணவர்களுக்கு 2ம் தொகுதி புத்தகங்கள் பற்றாக்குறை
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி பயிலும் 3,975 மாணவர்களுக்கு முதல் பருவத்துக்கான இரண்டாம் தொகுதி புத்தகங்கள் கிடைக்கவில்லை. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 1ம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறையில் மாணவர்கள் பயின்று வருகின்றனர். எனவே முதல் பருவத்திற்கு ஜூன் மாதம் பள்ளி திறந்த நாளன்றே புத்தகங்கள் வழங்கப்படும். அதில் முதல் பருவத்துக்கான புத்தகங்கள் இரண்டு தொகுதிகளாக உள்ளது.
இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1ம் வகுப்பில் 2,500 புத்தகங்களும், இரண்டாம் வகுப்பில் 550 புத்தகங்களும், ஆறாம் வகுப்பில் 925 புத்தகங்களும் என 3,975 மாணவர்களுக்கு இரண்டாம் தொகுதி புத்தகங்கள் கிடைக்கவில்லை.
ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் தொகுதியில் கணிதம் மற்றும் சூழ்நிலையியல் பாடம் உள்ளது. இதேபோல் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடப்பிரிவுகள் இரண்டாம் தொகுதியில் உள்ளது. இந்த பாடப்பிரிவுகளை கடந்த 53 நாட்களாக இந்த பாடங்களை படிக்க முடியாமல் போயுள்ளது தெரிய வந்து உள்ளது.
இத்தனை நாட்களாக பாடம் நடத்தப்படாததால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் எழுந்துள்ளது.
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2013ல் நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்காதது குறித்து சட்டசபையில் நேற்று எம்.எல்.ஏ. பாலபாரதி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.
இதற்கு பதில் அளித்து பள்ளி கல்வி அமைச்சர் வீரமணி பேசியதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு தேர்ச்சிக்கான மதிப்பெண் 60 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இட ஒதுக்கீட்டை சேர்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீத மதிப்பெண்கள் குறைக்கப்பட்டது. இச்சலுகையால் 2013ல் நடந்த இரு தேர்வுகளை எழுதிய 43,183 பேர் கூடுதலாக வெற்றி பெற்றனர். மொத்தமாக ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 72,701 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்துள்ளன.
இதற்கிடையில் தகுதி தேர்வுக்கான கேள்விகள் தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டன. இதனால் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை. இப்போது இந்த வழக்குகளில் அரசுக்கு சாதகமாக தீர்ப்புகள் வந்துள்ளதால் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இன்னும் இரு வாரங்களில் 10 ஆயிரம் பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.
7/22/2014
தரமற்ற பள்ளிக்கட்டிடம் கட்டியதை சுட்டிக்காட்டும் தலைமையாசிரியரை பந்தாடும் அரசியல். உண்மை அறிய முயல்வாரா? மாவட்ட ஆட்சியர்.
லேபிள்கள்:
Singai TNPTF NEWS
சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஒன்றியம் தர்மபட்டி பள்ளியில் தலைமையாசிரியர் திரு.செலவமணி நேர்மைக்கு பெயர் பெற்றவர். தவறு நடக்கும் பக்கம் ஒரு மில்லி மீட்டர் அளவு கூட சாயமாட்டார். அப்பள்ளிக்கு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பாக கட்டப்பட்ட வகுப்பறை தரமற்றதாகவும், முறையான வவுச்சர் இன்றியும் இருந்துள்ளது. இது குறித்து கிரமக்கல்விக்குழு தலைவரிடம் நியாயம் கேட்டுள்ளார். இதனால் கோபமுற்ற கிரமக்கல்விக்குழு தலைவர் தலைமயாசிரியர் மீது அடுக்கடுக்கான புகார்களை பொய்யாக அனுப்பியுள்ளார். இது குறித்து கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டு எவ்வித முன்னேற்றமும் இல்லை. எவ்வளவு நெருக்கடி வந்தாலும் தன் நேர்மை எண்ணத்திலிருந்து தளராத தலைமையசிரியரை பழி வாங்க நினைத்த கிராமக்கல்விக்குழு தலைவர் தன் சொந்தபந்தங்களையும் அவர்களின் குழந்தைகளையும் தூண்டிவிட்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்துள்ளார். இதன் உண்மை நிலையை அறியாத மாவட்ட ஆட்சியர் தலைமையாசிரியரை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார். தன் சொந்த கிராமத்திற்கே தரமற்ற கட்டிடத்தை கட்டிய ஊராட்சி தலைவரை தட்டிக்கேட்ட தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுப்பது எவ்விதத்தில் நியாயம்?. அபபுறம் ஏன் தலைமையாசிரியருடன் கிரமக்கல்வி குழுவை இணைக்க வேண்டும். கொள்ளையடிக்கும் எண்ணத்துடன் கல்வி கூடங்களின் மீது தரமற்ற கட்டிடப் பணியினை மேற்கொண்டவர்கள் மற்றும் உறுதுணை புரிபவர்கள் நிச்சயம் பதில் கூறியே ஆக வேண்டும். மாவட்ட ஆட்சியரும் தீவிர விசாரனை மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது அவா.
தமிழக பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவு
லேபிள்கள்:
Educational News
தமிழக பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுபடி பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
* மழைக்காலங்களில் இடி, மின்னல் ஆகியவற்றின் போது மாணவர்களோ அல்லது ஆசிரியர்களோ மரத்தின் அடியில் நிற்கக்கூடாது என்று அறிவுரை வழங்க வேண்டும்.
* பள்ளி வளாகத்தில் உள்ள மதில் சுவர்கள் போதிய அளவுக்கு உயரமாக உள்ளதா என்பதை பார்த்து உயரம் இல்லாவிட்டால் உயரமான அளவுக்கு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பள்ளிகளில் கட்டிடங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இடிந்து விழும் நிலையில் இருந்தால் தகவல் தெரிவித்துவிட்டு அதை பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.
முதலுதவி பெட்டி
* பள்ளிகளில் மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் ஏதாவது கீழே விழுந்தாலோ அல்லது ஏதாவது காயம் ஏற்பட்டாலோ அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும். எனவே அனைத்து பள்ளிகளிலும் முதலுதவி செய்யும் வகையில் மருத்துவ பொருட்கள் அடங்கிய முதலுதவி பெட்டி இருக்க வேண்டும்.
* அதுபோல ஏதாவது தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு படையினர் வருமுன்னதாக உடனடியாக தீயை அணைக்க தீயணைப்பு சாதனங்கள் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும்.
* விளையாட்டு நேரத்தின்போது ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பொருட்களை கவனமாக பாதுகாப்பாக கையாள வேண்டும்.
* பள்ளிககளின் அருகில் வேகத்தடை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வேகத்தடை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.புதர்களை அகற்ற வேண்டும்
* பள்ளிகள் அல்லது பள்ளிக்கூடங்களின் அருகில் புதர்கள் ஏதாவது இருந்தால் அவற்றை அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.
* பள்ளி வளாகத்தை சுத்தமாகவும். பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
7/18/2014
விளையாட்டு நிதி வழங்காததால் அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள் புலம்பல்
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
மதுரை: குறு வட்ட, மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் துவங்குவதற்கு முன், விளையாட்டுக்கான நிதியை வழங்காததால், அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில், கடந்தாண்டு முதல் குறு வட்ட, மாவட்ட, மண்டல, மாநில தடகள மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்த அரசு நிதி வழங்குகிறது. குறு வட்ட போட்டிகள் ஜூலையில் துவங்கும் என்றாலும், கடந்தாண்டுக்கான ரூ.10 கோடி நிதி, இந்தாண்டு ஜனவரியில் கிடைத்தது.
தற்போது இந்த கல்வியாண்டுக்கான குறுவட்ட போட்டிகள் அந்தந்த மாவட்ட அளவில் சில நாட்களில் நடக்கவுள்ளன. அரசு நிதி வழங்குவதால் அரசுப் பள்ளிகளில்தான் போட்டிகள் நடக்க வேண்டும். அதுவும் அரசுப் பள்ளிகளே போட்டிகளை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.
அரசுப் பள்ளி மாணவர்கள் போட்டிகளை காண்பதன் மூலம், உற்சாகமடைந்து, போட்டிகளில் பங்கேற்பர் என்ற அரசின் நோக்கம் சரிதான். ஆனால் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை. மைதானம் இருக்கும் பள்ளிகளும், மற்ற பள்ளிகளை விட துாரத்தில் இருக்கின்றன. இதற்கு முன் போட்டிகளை முன்கூட்டியே பணம் செலவழித்து, தனியார் பள்ளிகளே நடத்தின. அரசுப் பள்ளிகளில் அரசின் நிதி வருவதற்கு முன், யார் பணம் தருவது என்ற குழப்பம் நிலவுகிறது.
குறுவட்ட போட்டிகள் துவங்கும் முன்பே, அந்தந்த மாவட்டத்திற்கான நிதியை அனுப்பினால், அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள் சிரமமின்றி போட்டிகளை நடத்துவர்.
தமிழ் கட்டாயம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை: பள்ளிக் கல்வி அமைச்சர்
லேபிள்கள்:
Educational News
சென்னை: பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை, தமிழ் பாடத்தை கட்டாயமாக படிக்க வேண்டுமென்ற சட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.
சட்டசபையில் ஒரு உறுப்பினரின் கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இதைக் குறிப்பிட்டார்.
ஜிவாஹிருல்லா என்ற உறுப்பினர் பேசும்போது, "மொழிவாரியான சிறுபான்மையின மாணவர்களுக்கு, தமிழ் மொழித் தாளை படிப்பதிலிருந்து விலக்கு அளிக்கலாமே?" என்ற வேண்டுகோளை வைத்தார். மேலும், "அந்த மாணவர்கள், functional தமிழை பார்ட் 1 மொழியாகவும், அவர்களின் தாய்மொழியை பார்ட் 2 என்பதாகவும் படிக்கலாம்" என்று ஆலோசனை கூறினார்.
இதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வி அமைச்சர், "தமிழ்நாட்டில் அனைத்து சமூகத்தை சேர்ந்த மாணவர்களும், தமிழை கட்டாயப் பாடமாக படிக்க வேண்டுமென்று தனியே சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, இதில் எந்த மாற்றமும் இல்லை.
இதர சிறுபான்மை மொழிகளான உருது, கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகியவற்றை, சம்பந்தப்பட்ட மாணவர்கள் விரும்பினால் கற்கும் வகையிலான வாய்ப்புகள் இங்கு உள்ளன" என்றார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய அவை முன்னவர், அமைச்சர் பன்னீர் செல்வம், "ஒவ்வொரு மொழிக்கும், ஒரு தனி தாள் இருக்கும்போது, தமிழின் இடத்தில் சிறுபான்மை மொழியை வைப்பதற்கு ஏன் முயல்கிறீர்கள்?
இந்த மாநிலத்தில் வாழும் சிறுபான்மையின மாணவர்கள், தமிழை படிக்க விரும்பாதது வருத்தம் தருவதாக உள்ளது. அவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடுகளெல்லாம் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அவர்கள் தமிழைப் படிக்க விரும்பாதது மிகவும் வருத்தமான ஒன்றே. எனவே, அத்தகைய மாணவர்களுக்கு தமிழைப் படிக்குமாறு சொல்லி அறிவுறுத்துங்கள்" என்றார்.
7/17/2014
மாறுதலில் அநீதி: நீதி கேட்டு கண்ணகி போல் நீதிமன்றத்தில் வாதாடி வென்றார் ஆசிரியை சங்கீதா
லேபிள்கள்:
court news
ஆசிரியர் இட மாறுதல் கவுன்சிலிங்கில், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் இனிமேல் அநீதி இழைக்க மாட்டார்கள் என நம்புவதாக, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மதுரை பீ.பீ.குளம் சங்கீதா தாக்கல் செய்தமனு:சிவகங்கை புழுதிப்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில், பட்டதாரி ஆசிரியராகபணிபுரிகிறேன். ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் மூலம், மதுரை திருப்பாலை அரசு உயர்நிலை பள்ளிக்கு மாறுதல் செய்து 2012 ஜூலை 24 ல் உத்தரவிடப்பட்டது. 2012 ஆக.,22 வரை அப்பள்ளியில் நான் பணியில் சேரவில்லை எனக்கூறி, ஆசிரியை கிரிஜாவை அங்கு கல்வித்துறை அதிகாரிகள் இடமாறுதல் செய்தனர். கவுன்சிலிங் முடிவை அதிகாரிகள் மதிக்கவில்லை. கவுன்சிலிங் முடிவின்படி, திருப்பாலை பள்ளிக்கு இடமாறுதல் செய்து,பணியாற்ற அனுமதிக்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார்.
நேற்று முன் தினம் நீதிபதி எஸ்.நாகமுத்து, "மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மனுதாரர்இடமாறுதல் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்," என்றார்.நீதிபதி எஸ்.நாகமுத்து முன்,நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டதால், மனுதாரரே ஆஜரானார். அவரை, திருப்பாலை அரசு உயர்நிலை பள்ளிக்கு மாறுதல் செய்து, அதற்கான உத்தரவை,முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி சமர்ப்பித்தார்.
இவ்வழக்கில், மனுதாரரான இப்பெண் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து, உரிய ஆதாரங்களுடன் மூத்தவக்கீல் போல் வாதிட்டார். இது, 'சிலப்பதிகார'த்தில் கண்ணகி கால்சிலம்புடன் மதுரையில் நீதி கேட்டு,வாதாடியதுபோல் இருந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனிமேல், இதுபோன்ற அநீதியை இழைக்க மாட்டார்கள் என நம்புகிறேன். மனு பைசல் செய்யப்படுகிறது, என்றார்.
கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பி அளித்த அரசுப் பள்ளி
லேபிள்கள்:
Educational News
மாணவர் சேர்க்கையின் போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, கூடுதலாக பெற்ற கட்டணங்களை அரசு பள்ளி பெற்றோரிடம் திரும்ப அளித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளிகளின் கல்விச் சூழலுக்கு ஏற்ப அரசுப் பள்ளிகளிலும் வசதிகளை பெருக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், பள்ளிகளுக்குத் தேவையான வசதிகள், கூடுதல் ஆசிரியர்கள் நியமனத்துக்கு பள்ளிக் கல்வித் துறையிலிருந்து போதிய உத்தரவுகள் வராததை அடுத்து பல அரசுப் பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் கழகம் சார்பில் பள்ளி வளர்ச்சி நிதி என்ற பெயரில் மாணவர் சேர்க்கையின் போது ஆயிரக்கணக்கான தொகை வசூலிக்கப்படுவது தெரிய வந்துள்ளது. அதன்படி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால் தலைமையாசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர் என பள்ளிக் கல்வித் துறை கடுமையாக எச்சரித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை சார்பில், அனைத்து அரசு உயர், மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையின் போது மாணவர்களிடம் கூடுதலாக கட்டணங்கள் ஏதும் வசூல் செய்யக்கூடாது.
மாணவர் சேர்க்கையின் போது, மாணவர்களிடம் பெற்றோர்-ஆசிரியர் கழக நிதியாக ரூ.50 மட்டுமே வசூலிக்க வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும், பெரும்பாலான பள்ளிகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
அவ்வாறு மாணவர்களிடம் கூடுதலாக தொகை பெற்றிருந்தால் அந்தத் தொகையை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக திருப்பியளிக்க வேண்டும்.
மேலும், மாணவர் சேர்க்கையின் போது கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரை தாற்காலிகப் பணிநீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, மாணவர்கள் சேர்க்கையின் போது எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் விதிகளை பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள ஆர். புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சில வகுப்பு மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அதிகப்படியான பள்ளிக் கட்டணம், பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் திரும்ப அளிக்கப்பட்டது.
வருமான வரி கணக்கு தாக்கல்... முழுமையான வழிகாட்டி!
லேபிள்கள்:
Income Tax News
மாதச் சம்பளக்காரர் கள் முடிந்த 2013-14-ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு (இன்கம் டாக்ஸ் ரிட்டர்ன்) விவரத்தை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31, 2014. இதற்கு இன்னும் 25 நாட்கள்தான் இருக்கின்றன. கடைசி வாரத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்துகொள்ளலாம் என்று இருந்துவிட்டு, அவசரமாக வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது தவறுகள் ஏற்படக்கூடும். இதைத் தவிர்க்க இப்போதே களமிறங்கிவிடுங்கள்.
வருமான வரிக் கணக்கை எப்படி தாக்கல் செய்ய வேண்டும், எந்த மாதிரியான விஷயங்களையெல்லாம் கவனிக்க வேண்டும் என சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் கோபால் கிருஷ்ண ராஜுவிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
''மாத சம்பளத்தில் பிடிக்கப்படும் பிஎஃப் தொகை மற்றும் லைஃப் இன்ஷூரன்ஸ் பிரீமியம், வீட்டுக் கடனுக்கான அசல் மற்றும் வட்டி, பிள்ளைகளின் கல்விச் செலவு உள்ளிட்ட வரிச் சலுகைகளைக் கழித்ததுபோக, மீதி உள்ள தொகைக்கு வரி கட்ட வேண்டும். இந்த முதலீடு, செலவு, வரிச் சலுகை பெற்ற விவரம், வரி கட்டிய விவரத்தை வருமான வரித் துறைக்கு தெரிவிப்பதுதான் வரிக் கணக்கு தாக்கல்' என்று அடிப்படை விளக்கம் சொன்னவர், யாரெல்லாம் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பதைப் பட்டியலிட்டுக் காட்டினார்.
யாரெல்லாம் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்?
நிதியாண்டில் வங்கிச் சேமிப்புக் கணக்கு மூலம் 10,000 ரூபாய்க்குமேல் வட்டி வருமானம் கிடைத்திருந்தால்.
ஒரு நிதியாண்டில் இரண்டு கம்பெனிகளில் பணிபுரிந்தவர்கள்.
சம்பளம் தவிர, இதர வருமானம் உள்ளவர்கள்.
நிதியாண்டில் ஒருவரின் ஆண்டு நிகர வருமானம் (மொத்த வருமானத்தில் வரிச் சலுகைகள் எல்லாம் கழித்தது போக உள்ள தொகை) ரூ.2 லட்சத்தைத் தாண்டும்போது.
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் ஆண்டு நிகர வருமானம் ரூ.2.5 லட்சத்தைத் தாண்டும்போது.
80 வயதுக்கு மேற்பட்ட மிகவும் மூத்த குடிமக்களின் ஆண்டு நிகர வருமானம் ரூ.5 லட்சத்தைத் தாண்டும் போது.
கூடுதலாக வருமான வரி பிடிக்கப்பட்டு ரீஃபண்ட் பெற வேண்டியிருந்தால்.
பங்குகள், மியூச்சுவல் யூனிட்கள், சொத்து விற்றது மூலம் மூலதன ஆதாயம் கிடைத்திருந்தால்.
மூலதன ஆதாய இழப்பு ஏற்பட்டு, அதனை அடுத்துவரும் ஆண்டுகளில் ஈடுகட்ட திட்டமிட்டிருந்தால்...
மேலே கூறப்பட்டுள்ள நிலையில் இருப்பவர்கள் அனைவருமே அவசியம் டாக்ஸ் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். அடுத்து, வரி தாக்கல் செய்வதற்காக யார், எந்தப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
யாருக்கு என்ன படிவம்..!
'நம்மில் பெரும்பாலானோருக்கு யார் எந்தப் படிவத்தில் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்கிற குழப்பம் இருக்கிறது. அதைத் தவிர்க்கும் விதமாக அதை விரிவாகத் தந்திருக்கிறோம்.
ஐடிஆர் 1 (சஹஜ்)
சம்பளம் அல்லது ஓய்வூதியம்.
ஒரு வீட்டிலிருந்து வாடகை வருமானம் வருதல்.
வட்டி வருமானம்.
வரி விலக்கு பெற்ற வருமானம் நிதியாண்டில் 5,000 ரூபாய்க்குமேல் இருக்கக் கூடாது.
வெளிநாட்டில் சொத்து இருக்கக் கூடாது.
குறிப்பு: ஐடிஆர் 1 - படிவத்தில் முதல்முறையாக வீட்டுக் கடன் வாங்குபவர் களுக்கு, 80இஇ பிரிவின் கீழ் வரிச் சலுகை பெற தனியாக இடம் விடப்பட்டிருக்கிறது. வீட்டுக் கடன் ஏப்ரல் 1, 2013 மற்றும் மார்ச் 31, 2014-க்கு இடையில் வாங்கப் பட்டிருக்கிறது எனில், பிரிவு 24-ன் கீழ் வழக்கமாகப் பெறும் வட்டிக்கான வரிச் சலுகை 1.5 லட்சம் ரூபாய் போக, கூடுதலாக 80இஇ-ன் கீழ் 1 லட்சம் ரூபாய் வரிச் சலுகை கிடைக்கும். இதைப் பெற வீட்டின் மதிப்பு 40 லட்சம் ரூபாய்க்குள்ளும், கடன் தொகை ரூ.25 லட்சத்துக்குள்ளும் இருக்க வேண்டும்.
ஐடிஆர் 2
சம்பளம் அல்லது ஓய்வூதியம்.
ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளிலிருந்து வாடகை வருமானம்.
மூலதன ஆதாயங்கள்.
மூலதன இழப்பை அடுத்த ஆண்டுகளுக்குக் கொண்டு செல்லுதல்.
வட்டி வருமானம்.
ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளிலிருந்து வாடகை வருமானம்.
மூலதன ஆதாயங்கள்.
மூலதன இழப்பை அடுத்த ஆண்டுகளுக்குக் கொண்டு செல்லுதல்.
வட்டி வருமானம்.
வெளிநாட்டில் சொத்து இருந்தால்.
பிசினஸ் வருமானம் இருக்கக் கூடாது.
பிசினஸ் வருமானம் இருக்கக் கூடாது.
குறிப்பு: பிரிவு 10-ன் கீழ் பெறும் வீட்டு வாடகை படி (ஹெச்ஆர்ஏ), விடுமுறை சுற்றுலா படி (எல்டிஏ) போன்றவற்றைத் தனித் தனியாகக் குறிப்பிட்டுக் காட்ட வேண்டும். இதேபோல், பங்கு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட் விற்பனை, சொத்து விற்பனை மூலமான மூலதன ஆதாயத்தையும் தனித் தனியாகக் குறிப்பிட வேண்டும். மேலும், மூலதன ஆதாய வரியைத் தவிர்க்க 80இசி-ன் கீழ் முதலீடு செய்யும் (என்ஹெச்ஏஐ/ஆர்இசி) மூலதன ஆதாய பாண்டுகள் விவரத்தையும் குறிப்பிட வேண்டும்.
ஐடிஆர் 3
கூட்டு நிறுவனத்தில் பங்குதாரர் களாக இருப்பவர்கள்.
வட்டி, சம்பளம், போனஸ், கமிஷன் / ஊக்கத்தொகை போன்ற வருமானம் உள்ளவர்கள்.
ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளிலிருந்து வாடகை வருதல்.
மூலதன இழப்பை அடுத்த ஆண்டுகளுக்குக் கொண்டு செல்லுதல்.
வட்டி, சம்பளம், போனஸ், கமிஷன் / ஊக்கத்தொகை போன்ற வருமானம் உள்ளவர்கள்.
ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளிலிருந்து வாடகை வருதல்.
மூலதன இழப்பை அடுத்த ஆண்டுகளுக்குக் கொண்டு செல்லுதல்.
ஐடிஆர் 4
தனி உரிமையாளர் பிசினஸ்.
வியாபாரம் அல்லது நிபுணத்துவம் (டாக்டர், வக்கீல், ஆடிட்டர் போன்றவர்கள்) மூலம் வருமானம் வருதல்.
இதர வருமானம்.
கமிஷன்.
வியாபாரம் அல்லது நிபுணத்துவம் (டாக்டர், வக்கீல், ஆடிட்டர் போன்றவர்கள்) மூலம் வருமானம் வருதல்.
இதர வருமானம்.
கமிஷன்.
ஐடிஆர் 4 எஸ் (சுகம்)
ஒப்பந்தக்காரர்கள், சரக்குப் போக்குவரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள், குறிப்பாக கணக்கு வழக்கு பராமரிக்காமல் லாபத்தில் 8% வரி கட்டி வருபவர்கள். இவர்களின் பிசினஸ் டேர்னோவர் ரூ.1 கோடிக்குள் இருக்க வேண்டும்.
வரி விலக்கு பெற்ற வருமானம் நிதியாண்டில் 5,000 ரூபாய்க்குமேல் இருக்கக் கூடாது.
ஊக வணிகம் (ஸ்பெக்குலேஷன்) மூலம் வருமானம் பெற்றிருக்கக் கூடாது.
ஐடிஆர் V (ITR- V Form)
இது வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதை உறுதி செய்யும் படிவம்.(Verification Form)
வருமான வரி அலுவலகத்தில் நேரில் சென்று வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும். அதில் அலுவலக முத்திரை பதித்துத் தருவார்கள்.வரிக் கணக்கு தாக்கலை உரிய காலத்தில் செய்துவிட்டால், உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது!
ஒருவரின் வரிக்கு உட்பட்ட வருமானம் 5 லட்சம் ரூபாய்க்குமேல் இருந்தால், அவர் வரிக் கணக்கை எலெக்ட்ரானிக் முறையில்
(இ-ஃபைலிங்) தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)