பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

1/31/2015

வெற்றிகரமாக நடந்தேறிய சிவகங்கை த.மு.எ.க.ச.மாவட்ட மாநாடு

சிவகங்கை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட மாநாடு திருப்பத்தூர் பிரபா செல்வி மஹாலில் இன்று சிறப்பாக நடந்தேறியது. வாழ்த்துரை வழங்க மாவட்ட அமைப்பால் அழைக்கப்பட்டிருந்தேன். விழாவிற்கு தோழர்களுடன் பயணம் செய்கையில் வட்டாரத்தலைவர் திரு.பாலகிருஷ்ணன் அவர்களின் தந்தையார் மறைவு செய்தி எட்டியது. எனவே இயக்க தோழர்களை உடனடியாக இறுதி சடங்கு வேலைகளை கவனிக்க பாதி வழியிலேயே திருப்பி அனுப்பிவிட்டு வட்டாரச் செயலாளர் திரு.பால்துரை, கூட்டுறவு சங்கத் தலைவர் திரு.சுரேஷ் ஆகியோருடன் திருப்பத்தூர் பயணமானோம். மாவட்ட மாநாட்டில் சிறப்பு அழைப்பாளாராக அழைக்கப்பட்டிருந்த மதிப்புமிகு தோழர் இரா.தெ.முத்து அவர்களை ரேடியாக சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி. அதிலும் அவரே எனக்கு கைத்தறி ஆடை போர்த்தி கௌரவித்தது, எனது அருகிலே அமர்ந்து மதிய உணவு அருந்தியது என இரட்டிப்பு மகிழ்வு. மாநாட்டில் வாழ்த்துரை வழங்கிய நான் சிங்கம்புணரியில் விரைவில் த.மு.க.எ.ச. கிளையை அமைப்பது எனவும், வருகிற மே-2015ல் சிங்கம்புணரி கிளையின் சார்பாக கலை இரவு நடத்துவது எனவும் உறுதியளித்துள்ளேன். எனவே தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தோழர்கள், கலை ஆர்வம் மிக்க நண்பர்கள் ஆதரவு தர வேண்டுகிறேன். மேலும் த.மு.எ.க.ச. தெருமுனை பிரச்சாரங்கள் மேற்கொண்டு இச்சமுதாயத்தை நல்வழி படுத்த வேண்டும் என்ற எனது அவாவையும் வெளிப்படுத்தியுள்ளேன். மேலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் ஜீவானந்தம் அவர்களுடன் நீண்ட நேரம் கருத்து பரிமாற்றம் செய்தது மகிழ்ச்சி அளித்தது. மாநாட்டை சிறப்பாக நடத்திய திருப்பத்தூர் கிளைக்கும், குறிப்பாக எமது அமைப்பின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் தேழர் சிங்கராயருக்கும் பாராட்டுகள்.
மாவட்ட மாநாடு முடிவில்
மாவட்டத் தலைவராக ஜீவசிந்தன்,
செயலாளராக சங்கரசுப்பிரமணியன்,
பொருளாளராக செல்வக்குமார்,
துணைத்தலைவர்களாக குணசேகரன்,ராசேந்திரன்,செல்வகதிரவன்,
துனைச்செயலாளர்களாக ஜனநேசன்,தமிழ்கனல்,குமரேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

வருந்துகிறோம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டாரத் தலைவர் திரு.பாலகிருஷ்ணன் அவர்களின் தந்தையார் திரு.நாச்சிமுத்து அவர்கள் 31.1.2015 அன்று காலமானார். அன்னாரது மறைவிற்கு இயக்கம் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
வருத்தத்தை பகிர்ந்துகொள்ள : 9865352562

1/28/2015

நெடுநாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்ட TNPTF மாநிலத் துணைத் தலைவர்

ஜாதி, மதம் என்ற சிந்தனையின்றி முற்போக்கு எண்ணம் கொண்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் துணைத் தலைவர் அருமை சகோதரர் திரு.ஜோசப் ரோஸ் அவர்கள் நாம் வாழ்ந்ததற்கான அடையாளத்தை இம்மண்ணில் விட்டுச் செல்ல வேண்டும் என்றும், இந்த சமுதாயத்திற்கு பயன் அளிக்கும் வகையில் எதாவது செய்தாக வேண்டும் என்ற தன் உள்ள கிடக்கையை அடிக்கடி நம்மிடம் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். தன் சகாகக்களையும் இந்த வளையத்திற்குள் இழுப்பதற்கான முயற்சியையும் தொடர்ந்து மேற்கொண்டார். தன்னுடைய ஆசையை 66வது குடியரசு தினத்தில் தன்னுடைய உடலை மருத்துவ கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தானம் செய்து நிறைவேற்றிக் கொண்டார். தன்னுடைய குடும்பத்தாரின் முழு ஒத்துழைப்போடு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் உடனிருக்க தன்னுடைய உடலை முழு சம்மதத்துடன் சிவகங்கை மருத்துவக் கல்லூரி டீன் திரு. கார்த்திகேயனிடம் முறைப்படி ஒப்படைத்தார். ஒரு முற்போக்கு இயக்கத்தின் பொறுப்பாளர் என்பதை தன்னுடைய செயலின் மூலம் நிறைவேற்றிக் கொண்ட மதிப்புமிகு உடன்பிறவா சகோதரன் ஜோசப் ரோஸ் அவர்களை நினைத்து பெருமிதம் கொள்கிறோம். அவர் தொடங்கியுள்ள புள்ளியை முடிவில்லா கோடாக மாற்றுவதற்கு முயற்சிப்போம்.
வாழ்த்துக்கள் அண்ணா.
உண்மையயை உரக்கச் சொல்லுவோம்!!!
உரிமையப் போரடி பெறுவோம்!!!
தோழமையுடன்...
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டச் செயலாளர்
சிவகங்கை மாவட்டம்

1/23/2015

உயர்த்திப் பிடிக்கப்பட்ட உச்சபட்ச ஜனநாயகம். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, 11வது மாநிலத் தேர்தல்.

எந்த பெயரை உச்சரித்தால் எங்கள் நாடி நரம்புகள் எல்லாம் சூடேறி உற்சாகம் பிறக்கமோ! அந்த இயக்கத்தின் 11வது மாநிலத் தேர்தல் தியாக வேங்கை உழன்ற இடமாம் திருப்புரில் நடந்தேறியது.
ஒரு இயக்கத்தின் ஜனநாயகம் எவ்வாறு கட்டிக் காக்கப்படுகிறது என்பதை நான் நேரில் அனுபவித்த காட்சி.
மாநிலப் பொருளாளராக, மாநிலத் தலைவராக இந்த . இயக்கத்தை வழி நடத்திய அருமை தோழர் கண்ணன் அவர்கள் அடுத்த தலைமுறைக்கு தன் தலைமை பதவியை விட்டுக் கொடுத்து ஓதுங்கி நின்று மகிழ்வுடன் பதவியேற்பு காட்சியை இரசிக்கிறார். STFI துணைத் தலைவர் இளைய தலைமுறைக்கு வழிவிட்டு மாவட்ட கிளையின் வளர்ச்சிக்கு பாடுபட தயாராகிவிட்டார். சென்ற முறை மாநில மையத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் பலர் இந்த முறை அடுத்த மாவட்டத்திற்கு வழி கொடுத்து வாழ்த்துகிறார்கள்.
இரண்டு பொறுப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. அதுவும் ஒரே மாவட்டத்தை சார்ந்தவர்கள் போட்டியிடுகிறார்கள். முறையாக வாக்குப் பெட்டி வைக்கப்பட்டு தேர்தல் நடைபெறுகிறது. வேட்பாளர் அறிமுகத்தில் தன்னை எதிர்த்த நின்ற வேட்பாளரை கைபிடித்து மேடைக்கு அழைத்து அறிமுக நிகழ்வில் இருவரும் மேடையில் தோன்றும் காட்சி என்பது எந்த இயக்கத்திலும் காண முடியாதது.  வாக்கு எண்ணிக்கை முடிவில் குறைந்த வாக்குகள் பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்ற வேட்பாளரை ஓடி வந்து கை குலுக்கி வாழ்த்தியது என்பது இதுதான் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்பதை உணர்தியது.
 ஜனநாயத்தின் உச்சபட்ச காட்சிகள் அரங்கேறிய தெற்கு ரோட்டரி திருமணமண்டபத்தில் இருந்த எனக்கு இதை மற்றவர்களிடம் பகிராமல் இருக்க இயலவில்லை.
அதுவும் பதவியேற்றவுடன் புதிய பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசிய முன்னாள் மாநிலத் தலைவர் தோழர் கண்ணன் அவர்கள் ஒவ்வொரு பொறுப்பளரும் ஏன், எந்த சூழலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதை தனக்கே உரிய தலைமை பண்புடன் விளக்கியது என்பது மிகவும் இரசிக்க கூடியதாக இருந்தது. 
தோழர்களே நான் இந்த இயக்கத்தில் இருப்பதில் பெருமையாக கருதுகிறேன். இங்கு தலைமைக்கும், அடிமட்ட உறுப்பினருக்கும் இடைவெளி என்பது மயிரிழை அளவே என்பதுதான் அற்புதம். பொதுச் செயலாளர் தன்னுடைய உரையில் எங்களை நீங்கள் எந்த நேரத்திலும் தொந்தரவு செய்யலாம் என்ற தன்னுடைய அவாவை மன்றத்தில் வெளியிட்டு பொதுக்குழுவின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேன் என்று உறுதியளித்துள்ளார்கள்.
வாழ்க ஜனநாயகம்!!!
 வளர்க TNPTF
உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!
உரிமையைப் போராடி பெறுவோம்!!!
தோழமையுடன்.....
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டச் செயலாளர்


1/20/2015

இயக்க பணி சிறக்க வாழ்த்துகிறோம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அருமை சகோதரர் தே.ஜோசப் ரோஸ் அவர்களின் இயக்க பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

TNPTF மாநிலத்தேர்தல் செய்தி இன்றைய(20.1.15) தீக்கதிரில்


தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தேர்தல் முடிவுகள் - தினமலர் நாளிதழ் செய்தி


1/14/2015

தோழமைகளே ஆவலுடன் எதிர் நோக்கி

 வருகிற 18.1.2015 திருப்பூர் நகரில் தெற்கு ரோட்டரி திருமணமண்டபத்தில் நடைபெற  இருக்கும் ஒரு ஜனநாயகமிக்க இயக்கத்தின்(TNPTF) மாநிலத் தேர்தல். எதிர்கால சவால்களை தங்களுடைய கூரிய சிந்தனையால் எதிர் நோக்க இருக்கும் ஒரு சமரசமற்ற தலைமைகளை தேர்ந்தெடுக்க இருக்கிறோம். முகம் பாராமல் முக நூல் வழியே கருத்துக்களை பரிமாறிய நட்புகளை முகம் பார்த்து உரையாட இருக்கிறோம். ஒரு சமூக சிந்தனையுள்ள இயக்கத்தில் உறுப்பினர் என்ற தகுதியுடன் கல்வி நலன் மட்டுமல்லாது சமூகம் சார்ந்து சிந்திக்கின்ற ஒரு சமரசமற்ற போராளிகளே ! ஜனநாயகத்தை தாங்கி பிடிக்கும் தேர்தல் நாள் நெருங்க நெருங்க ஒரு இனம் புரியாத சந்தோசம் மேலோங்குவதை தடுக்க இயலவில்லை. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றம் மற்றும் தன் பங்கேற்பு ஓய்வுதியத்தை இந்த நாட்டை விட்டே துரத்த வேண்டிய மிகப்பெரிய சவாலும், அரசு பள்ளிகளை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் என சவால்கள் எதிரே அணி வகுத்து நிற்கின்றன. இந்த இயக்கத்தை கட்டமைத்த தலைவர்கள் நமக்கு காட்டிய வழியை தடம் மாறாமல் பின்பற்றி இந்த சமுதாயத்தை முன்னேற்றுகின்ற வழிகளை ஆராய வேண்டிய தருணம் இது. எனவே தோழர்களே உங்களைப் போலவே நானும் ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன். நான் மிகவும் மகிழ்வுடன் பங்கேற்கும் பொங்கல் விழா ஒரு புறம், என் வாழ்க்கையில் சமூக - முற்போக்கு சிந்தனைகளை வித்திட்ட இயக்கத்தின் ஜனநாயக திருவிழா மறுபுறம் என இரட்டிப்பு மகிழ்வில் தித்திக்கின்றேன். ஒரு விழாவில் என்னோட இரண்டற கலந்த பழைய நட்புகளை, இனிய உறவுகளை கிராமத்தில் சந்திக்க இருக்கின்றோம் என்ற அவா, மறுபுறம்   முற்போக்கு சிந்தனையாளர்கள் அனைவரும் ஒருங்கே சங்கமிக்கும் ஒரு விசித்திரமான வேகத்தில் இயங்கி கொண்டிருக்கும் நகரில் தன்னலமற்ற தோழர்களை சந்தித்து சிந்திக்க இருக்கிறோம் என்ற ஆசை என இந்த தமிழர் திருநாள் வாழ்க்கையில் மறக்க இயலாத திருநாள்.
மீண்டும் ஆவலுடன் உங்களை எதிர் நோக்கி தோழமைகளே...
தோழமையுடன்...
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டச்செயலாளர்
TNPTF
சிவகங்கை மாவட்டம்

பொங்கல் வாழ்த்துக்கள்


1/12/2015

TNPTF மாநிலத் தேர்தல்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மாநிலத் தேர்தல் வருகிற 18.1.2015 காலை 10.00 மணிக்கு திருப்பூர் நடராஜ் தியேட்டர் எதிரில் உள்ள   தெற்கு ரோட்டரி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. அனைத்து இயக்க உறுப்பினர்களும் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம்.


1/05/2015

TNPTF மாநிலத் தேர்தல் அறிவிப்பு



நமது இயக்கத்தின் ஜனநாயகத்தை தாங்கி பிடிக்கும் மாநிலத் தேர்தல் வருகிற 18.1.2015 அன்று திருப்பூர் நடராஜ் தியேட்டர் எதிர்புறம் உள்ள தெற்கு ரோட்டரி திருமணமண்டபத்தில் நடைபெற உள்ளது. அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம்.

AI CPI-IW for November release. Remains at 253 since Aug. DA from Jan to be 113%

The All-India CPI-IW (AI CPI-IW) for the month of November has been released by the Labour Bureau, Government of India. The index remained unchanged for the fourth consecutive month since August and remains at 253. The relaxing inflation and fuel prices contributed to the index value remaining static. With 11 of 12 indices required to calculate the dearness allowance from January 2015 available, Dearness Allowance from January'15 will be 113% by all likelihood, a DA hike of 6%.

ஆசிரியர் நியமனத்தில் தமிழ் வழிச் சான்று கேட்கக் கூடாது


NHIS - RTI


ஆன் லைன் சம்பளம் - கருவூலத்துறை திருப்தி


ஊதிய உர்வு நாளுக்கு முன்னால் ஓய்வு பெற்றாலும் ஊதிய உர்வு உண்டு


1/02/2015

ஆசிரியர் வருகை பதிவேடு கண்காணிப்பு திட்டம் முறைப்படுத்தப்படுமா?

கோவை: அரசு பள்ளிகளில், ஆசிரியர் வருகையை முறைப்படுத்த அறிவிக்கப்பட்ட, எஸ்.எம்.எஸ்., முறையில் ஆசிரியர் வருகை பதிவேடு கண்காணிப்பு திட்டம் முறைப்படுத்த, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த 2011ம் ஆண்டில், பள்ளி மேலாண்மை தகவல் மையத்தின் ஒரு பகுதியாக, எஸ்.எம்.எஸ்., முறையில் ஆசிரியர் வருகை பதிவு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் கட்டமாக, இரண்டு மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு, 2012 முதல் அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது.
இத்திட்டம், அனைத்து தரப்பினரிடையும் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திட்டத்தின்படி, தலைமையாசிரியர், ஒவ்வொரு நாளும் ஆசிரியர்கள் வருகை குறித்து, காலை 10:00 மணிக்குள் மாவட்ட கலெக்டர், கல்வி அதிகாரிகளுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்பப்படும். அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்துக் கொள்ள இயலும்.
தலைமையாசிரியர்களுக்கும், கல்வி அதிகாரிகளுக்கும் ஏற்பட்ட பணிச் சுமையை கருத்தில் கொண்டு, இத்திட்டம் அறிவிப்போடு, விரிவுப்படுத்தாமல் கைவிடப்பட்டுள்ளது. இதனால், பள்ளிகளுக்கு தாமதமாக வருதல், இடையில் அறிவிப்பு இன்றி வெளியிடங்களுக்கு செல்லுதல், அறிவிப்பு இல்லாமல், அட்ஜெஸ்மென்ட் என்ற பெயரில் விடுமுறை எடுத்தல் போன்றவை, பல்வேறு அரசு பள்ளிகளில் சாதாரணமாகியுள்ளது.
பள்ளி கண்ணாடி என்ற பெயரில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் வருகை எழுதும் பழக்கமும் தற்போது பெரும்பாலான பள்ளிகளில் செயல்படுத்தப்படுவது இல்லை.
மாணவர்களின் நலன் கருதி, இத்திட்டத்தை விரிவுபடுத்தி அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தவேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சில தனியார் பள்ளிகள் போன்று, வகுப்பு ஆசிரியர் மூலம் வாரத்துக்கு ஒரு முறையாவது, மாணவர்களின் வருகை குறித்து பெற்றோருக்கு போனில் தெரிவிக்க வேண்டும். பாதை மாறும் மாணவர்களை, இம்முறையில் எளிதாக அடையாளம் கண்டு, பயிற்சி அளிக்க இயலும்.
தொடக்கக் கல்வி அதிகாரி காந்திமதி கூறுகையில், "கோவை மாவட்டத்தில், உதவி தொடக்க கல்வி அலுவலர்களால், தினமும், ஆசிரியர்களின் வருகை பதிவேடுகள் ஆய்வு செய்யப்படுகின்றன. கல்வி அதிகாரிகள் குழு, திடீர் ஆய்வுகளும் மேற்கொண்டு வருகின்றனர்.
வருகை பதிவேடுகளில், முறைகேடுகள் நடப்பது ஆய்வுகளின்போது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மட்டுமின்றி, தலைமையாசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.