ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து இதுவரை அறிவிப்பு வெளியிடாததைக் கண்டித்து ஜூன் 10 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கழகம் முடிவு செய்துள்ளது.
தமிழக அரசு, ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை மே மாதம் கோடை விடுமுறையில் நடத்துவது வழக்கம். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருந்தது. ஆசிரியர்களும் தங்கள் குடும்பங்களை எளிதாக புதிய இடத்துக்கு இடம் பெயர்வு செய்வதற்கு வசதியாகவும் இருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு பள்ளி திறந்த பின்னர் மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதனால் ஆசிரியர்கள் புதிய இடங்களில் பணியேற்பதில் சிரமங்களுக்கு ஆளாகி தவித்தனர்.
இந்த கல்வி ஆண்டில் பள்ளிகள் தொடங்கி விட்ட நிலையில் இதுவரை காலிப்பணியிட விவரம், முன்னுரிமை பட்டியல் ஆகியவை வெளியிடப்பட வில்லை. அத்துடன் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான எவ்வித அறிவிப்பும் கல்வித் துறையால் வெளியிடப்பட வில்லை.
இது ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதை கண்டித்து ஜூன் 10ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கழக சிவகங்கை மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Dinamani 5.6.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக