சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற தொடக்கப் பள்ளித்
தலைமையாசிரியர்களுக்கான கலந்தாய்வில் காலிப்பணியிடங்களை வெளிப்படையாக
வெளியிட வலியுறுத்தி கலந்தாய்வை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளியில்
தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான
கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சிவகங்கை ஒன்றியத்தில்
புதுப்பட்டி, காளையார்கோவில் ஒன்றியத்தில் சிலுக்கபட்டி, பெரிய
நரிக்கோட்டை, மானாமதுரை ஒன்றியத்தில் நவதாவு ஆகிய ஊர்களில் காலி
பணியிடங்களை மறைத்து கலந்தாய்வு நடப்பதாகக் கூறி தலைமையாசிரியர்கள்
எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
காலிப்பணியிடங்களை முறையாக வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தகவலின்பேரில் சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் மலைச்சாமி
தலைமையிலான போலீஸார், தலைமையாசிரியர்கள் மற்றும் சங்க நிர்வாகிகளுடன்
பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, கலந்தாய்வு தடைபட்டது. அதன் பின் அமைதியாக நடைபெற்றது.
Source:dinamani
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக