இன்று (11.8.2015) சிவகங்கையில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் முத்துச்சாமி, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தவமணி செல்வம் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலத்துணைத்தலைவர் சங்கர் தீர்மானங்களை முன் மொழிந்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயற்குழு உறுப்பினர் மு.க.புரட்சித்தம்பி, மாவட்டப் பொருளாளர் குமரேசன், மாவட்டப்பொதுக்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜ், வட்டாரச்செயலாளர்கள் சகாயதைனேஸ், ஜெயக்குமார், சிவகங்கை வட்டாரத் தலைவர் டேவிட் ரொசாரியோ, பொருளாளர் பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. புதிய பென்சன் திட்டத்தை கைவிடக் கோரி செபடம்பர்-2ல் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்பது என முடிவாற்றப்பட்டது.
2. வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டினை வருகிற 23.8.2015ல் சிவகங்கையில் நடத்துவது எனவும், அதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து இயக்கங்களின் நிர்வாகிகளை பங்கேற்கச் செய்வது எனவும் முடிவாற்றப்பட்டது.
3. தற்பொழுது நடைபெற இருக்கும் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை எவ்வித ஊழலுக்கும் இடம் தராமல் வெளிப்படையாக நடத்த வேண்டும் என மாவட்ட கல்வித்துறையை .இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
4. மாறுதல் கலந்தாய்விற்கு முன்னால் முறைகேடாக நிர்வாக மாறுதலை வழங்குவதை தவிர்க்க மாவட்ட கல்வித் துறையை இக்கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக