இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய ஊதியம் வழங்கக்கோரி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநாடு பிரகடனம்
கோவில்பட்டி, பிப். 8 -
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 6வது மாநில மாநாடு கோவில்பட்டியில் பிப்ரவரி 5, 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டின் நிறைவு நாளன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ச.மோசஸ் தலைமை தாங்கினார். துணைப் பொதுச் செயலாளர் ச.மயில் வர வேற்புரையாற்றினார்.கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் துரைப் பாண்டியன், இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்தி யப் பொருளாளர் தி.கண்ணன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ சிறப் புரையாற்றினார். மாநாட்டுப் பிரகட னத்தைப் பொதுச் செயலாளர் செ. பாலசந்தர் வெளியிட்டுப் பேசினார்.அப்போது அவர் வெளியிட்ட மாநாட்டுப் பிரகடனம் வருமாறு:ஆசிரியர் இயக்க முன்னோடிகள், நமது இயக்கத் தோழர்கள் 40 ஆண்டுகாலம் மிகக்கடுமையாகப் போராடி, கண்ணீரும் செந்நீரும் சிந்திதங்கள் இன்னுயிரை ஈந்து 01.06.1988 முதல் பெற்றுத் தந்த மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் என்பது, ஆறாவது ஊதியக் குழுவை அமல்படுத்தியதன் மூலமாக01.01.2006 முதல் இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான இடை நிலை ஆசிரியர்கள் கடந்த 7 ஆண்டுகாலமாக குமுறலுடனும், கொந் தளிப்புடனும் உள்ளனர்.
தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்தியஊதியம் பெறுவதற்காக முதன் முதலாக போராட்டக்களம் கண்டதுநமது பேரியக்கம். அதற்காக வேறுஎந்த இயக்கத்தையும்விட தனிச்சங்க நடவடிக்கையாக அதிகப் போராட்டங்களை நடத்திய நமதுஇயக்கம், கூட்டுப் போராட்டங்களி லும் முழுமையாக ஈடுபட்டு இன்று வரை சமரசமின்றிப் போராடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள இப்பெரும் அநீதி உடனடியாகக் களைப்பட வேண்டும். தமிழக அரசு உடனடியாக இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்கிட வேண்டும்.ஆசிரியர்கள், அரசு ஊழியர் களின் எதிர்கால வாழ்வாதாரத்தைப் பறித்து, அவர்களது எதிர் காலத்தைக் கேள்விக்குறியாக்கி, அவர்களின் முதுமைக் காலத்தை இருண்டகாலமாக்கிவிட்ட தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்திடக்கோரி வேறு எந்த ஆசிரியர் அமைப்புகளையும் விட மிகக்கடுமையான போராட்ட நடவடிக்கைகளிலும், அகில இந்தியவேலைநிறுத்தப் போராட்டங்களி லும் தொடர்ந்து ஈடுபட்டு வரும்நமது இயக்கம் இம்மாநில மாநாட்டின் மூலமாக தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதி யத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகளை வலி யுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
மேற்கண்ட இரண்டு கோரிக்கை கள் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கை களை வலியுறுத்தி ஜேக்டோ பேரமைப்பின் சார்பில் பலகட்டப் போராட்டங்களை நடத்தியும் தமிழக அரசு கண்டுகொள்ளாத நிலையில் இன்றைய காலச்சூழ் நிலைகளையும், தமிழ்நாட்டு ஆசிரியர்களின் உணர்வுகளையும், அவர்களின் கொந்தளிப்பான மனநிலையையும் கருத்தில் கொண்டு ஜேக் டோ பேரமைப்பு உடனடியாகக் கூடிதமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்10.02.2016 முதல் நடைபெறுவதாக அறிவித்துள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துடன் இணைந்த போராட்ட நடவடிக் கைகளை அறிவித்திட வேண்டும் எனவும், அவ்வாறு ஜேக்டோ பேரமைப்பு முடிவெடுப்பதில் கால தாமதம் ஏற்படும் சூழலில், தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்திட மாநிலச் செயற்குழு தீர்மானித்துள்ளதை இம்மாநில மாநாடு அங்கீகரிக்கிறது. கூட்ட முடிவில் மாநிலப் பொருளாளர் ச.ஜீவானந்தம் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக