அரசு ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தம். மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் சிக்கல்.
சத்துணவு பணிகளை ஏற்க மாட்டோம் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திட்டவட்டம்.
சிவகங்கை: தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உள்ளிட்ட 68 சங்கங்களை சார்ந்த 4 இலட்ச அரசு ஊழியர்கள் நாளை முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதில் சத்துணவு ஊழியர்களும் முழுமையாக ஈடுபட உள்ளனர். இதனால் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க தலைமையாசிரியர்கள் சத்தணவு வழங்கும் பொறுப்பை ஏற்று மாணவர்களுக்கு தரமான சத்துணவை தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவிற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இது குறித்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ஆ.முத்துப்பாண்டியன், மாவட்டத் தலைவர் ஆ.தாமஸ் அமலநாதன், மாவட்டப் பொருளாளர் மு.குமரேசன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகள் குறித்து பல்வேறு கட்டங்களாக கடந்த நான்கரை ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அவர்களது நியாயத்தை உணர்ந்து அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து தீர்வு காண அரசு முயற்சிக்க வேண்டும். அதை விடுத்து அவர்களது போராட்டத்தை நசுக்கும் விதமாக சத்துணவு பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடு வைக்க முயற்சிப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எங்கள் ஆசிரியர்கள் சத்துணவு பணிகளை ஏற்க மாட்டார்கள் என மாவட்ட நிர்வாகத்திற்கு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டோம். மேலும் அரசு ஊழியர் சங்கங்களின் தொடர் வேலை நிறுத்தத்தை ஆதரிக்கும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு முன்னாள் நாளை மாலை 5.00 மணிக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம். எனவே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு அரசு தீர்வு கான வேண்டும் இல்லையேல் ஆசிரியர்களும் அவர்களுடன் இணைந்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக