பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

மின்னஞ்சல் மூலம் பதிவுகளை பெறலாம்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

8/22/2014

TNPTFன் முன்னாள் மாநிலத்தலைவர் தோழர் மா.சா.முனுசாமியின் இயக்க வரலாற்றில் எனது நினைவலைகள் நூல் அறிமுக கூட்டம்

12-ஆம் வகுப்பு காலாண்டு தேர்வு அட்டவணை


12 ஆயிரம் புதிய ஆசிரியர் பட்டியல் ஒப்படைப்பு


10-ஆம் வகுப்பு காலாண்டு தேர்வு அட்டவணை


கல்வித்துறையில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் புதுமையான திட்டங்களோடு, ஆசியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கல்வித்தரம் உயரும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே . சி . வீரமணி

கல்வித்துறையில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் புதுமையான திட்டங்களோடு, ஆசியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கல்வித்தரம் உயரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே . சி . வீரமணி தெரிவித்தார். திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள மதுரை , திண்டுக்கல் , தேனி , சிவகங்கை , விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களின் கல்வி அலுவலர்கள் மற்றும் பொதுத்தேர்வில் 80 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சிப் பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .
திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே . சி . வீரமணி தலைமை வகித்தார் . பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் சபீதா , அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர் . கூட்டத்தில் அமைச்சர் கே . சி . வீரமணி பேசியது : தமிழக அரசு கல்வித்துறைக்கு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது . ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே , இந்த நிதி ஒதுக்கீடு செய்ததன் முழு பலனையும் பெற முடியும் . தமிழக மாணவர்கள் , கல்வியின் மூலம் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் , தமிழக முதல்வர் சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் . திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள 5 மாவட்டங்களில் , 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 70 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சிப் பெற்ற 234 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் ஆய்வுக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர் . பிளஸ் 2 தேர்வில் , இந்த 5 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சிப் பெறவில்லை . இவர்களின் எதிர்காலம் , தவறான வழியில் செல்வதற்கு வாய்ப்புள்ளது . இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்கும் வகையில் , தரத்தில் பின் தங்கிய மாணவர்களின் மீது கூடுதல் கவனம் செலுத்தி , அவர்களை சிறப்பாக உருவாக்க வேண்டும் . தொடர்ச்சியாக பல ஆண்டுகள் முதலிடத்தில் இருந்த விருதுநகர் மாவட்டம் , பின் தங்கியதற்கான காரணங்களை கண்டறியப்பட வேண்டும் . கல்வியில் பின்தங்கிய தருமபுரி , கிருஷ்ணகிரி , ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள் , தேர்ச்சி விகிதத்தில் முன்னேற்றம் பெற்றுள்ளன . தோல்வி நிலையானது இல்லை . இதனை புரிந்து கொண்டு , இழந்த பெருமையை மீட்டெடுக்கும் முயற்சியில் தலைமையாசிரியர்கள் ஈடுபட வேண்டும் . 2011 ஆம் ஆண்டு , 71 ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தது . கடந்த 3 ஆண்டுகளில் படிப்படியாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன . நிகழாண்டில் மேலும் 3459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார் அவர் . 2013-14 கல்வியாண்டில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற 13 மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் , 35 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் , திண்டுக்கல் , தேனி , மதுரை , விருதுநகர் , சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலிருந்து சிறந்த தொடக்கப் பள்ளிகளாக தேர்வு பெற்ற தலா 3 பள்ளிகளுக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன . முன்னதாக வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பழனி கல்வி மாவட்ட அளவிலான மாவட்ட சதுரங்கப் போட்டியை அமைச்சர் கே . சி . மணி தொடங்கி வைத்தார் . அதனைத் தொடர்ந்து 356 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் 331 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி ஆகியவற்றையும் வழங்கினார் . நிகழ்ச்சியில் மக்களைவை உறுப்பினர் எம் . உதயக்குமார் , வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் . பழனிச்சாமி , மேயர் வி . மருதராஜ் , பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் , தொடக்கக் கல்வித்துறை இணை இயக்குநர் லதா , மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் பிச்சை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

TRB-TNTET paper- 1 notification

DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS 2012-2013


2582 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

TET தாள் ஒன்றுக்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு காலி பணியிடங்கள், தற்சமய காலி பணியிடங்கள், ஆதி திராவிட மற்றும் நலத்துறை பள்ளிகளில் இருக்கும் காலி பணியிடங்கள், சிறுபான்மை மொழி காலி பணியிடங்கள் என்று மொத்தம் 2582 காலி பணியிடங்கள் இந்த அறிவிப்பு மூலம் நிரப்பப்படும்.
தாள் இரண்டுக்கு வெளியிடப்பட்டதை போல இல்லாமல் ஒரு முழுமையான அளவில் தாள் ஓன்றுக்கான அறிவிப்பு உள்ளது.விரைவில் தாள் ஒன்றுக்கு தேர்வானவர்கள் தேர்வு பட்டியல் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மூன்று பாடங்களுக்கான இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.
வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் அரசு பள்ளிகளுக்கு 2,582 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வில் (தாள்-1) தேர்ச்சி பெற்ற 31,500 இடைநிலை ஆசிரியர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண்ணை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 6-ந் தேதி இணையதளத்தில் வெளியிட்டது. ஆனால், காலியிடங்கள் பற்றிய விவரம் அறிவிக்கப்படவில்லை. இதனால், சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்த இடைநிலை ஆசிரியர்கள் எத்தனை காலியிடங்கள் அறிவிக்கப்பட போகிறதோ? என்ற எதிர்பார்ப்புடன் இருந்து வந்தனர். 4 ஆயிரம் இடங்கள் அளவுக்கு காலியிடங்கள் இருக்கும் என பல்வேறு யூகங்கள் எழுந்து வந்தன. 2,582 காலியிடங்கள் அறிவிப்பு இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர் காலியிடங்களின் எண்ணிக்கை பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) வியாழக்கிழமை இரவு வெளியிட்டது. காலியிடங்கள் விவரம் வருமாறு:- ஆதி திராவிடர் நலப்பள்ளிகள் - 669, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் - 64, சிறுபான்மை மொழி - 174, பொதுவான அரசு பள்ளிகள் - 1,675 ஆக மொத்தம் 2,582 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் நிரப்பப்பட உள்ளது. வெயிட்டேஜ் மார்க் என்பது பிளஸ்-2, இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு, ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகிய மதிப்பெண்களின் வெவ்வேறு விகிதாச்சாரத்திலான தொகுப்பு மதிப்பெண் ஆகும். தற்போது காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதால் விரைவில் இறுதி தேர்வுப் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 2,582 காலியிடங்களுக்கு 31,500 பேர் போட்டிபோடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பென்ஷன் திட்டத்தின்படி, குடும்ப ஓய்வூதியம் இல்லை

தஞ்சாவூரைச் சேர்ந்த ஆசிரியர் பி.ராஜா என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காளர் அலுவலகத்தில் கிராஜுவிட்டி தொடர்பாக தகவல் கேட்டிருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட விளக்கத்தில்,
தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978-க்கு உட்பட்ட அரசு ஊழியர்களின் ஓய்வூதிய பயன்கள் தொடர்பான வேலைகளை மட்டுமே தாங்கள் பார்த்து வருவதாகவும் மற்ற திட்டத்தின் (புதிய பென்ஷன் திட்டத்தில்) கீழ் உள்ள ஊழியர்கள் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வரமாட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, 2003 ஏப்ரலுக்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 பொருந்தாது என்று தமிழக அரசு கடந்த 6.8.2003 அன்று அரசாணை வெளியிட்டது. அதேபோல், அவர்களுக்கு பொது வருங்கால வைப்புநிதியும் (ஜிபிஎப்) பொருந்தாது என்று 27.5.2004 அன்று அரசாணை மூலம் தெரிவித்தது. தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 பொருந்தாது என்பதால் அதன்கீழ் வழங்கப்படும் கிராஜுவிட்டி மற்றும் குடும்ப ஓய்வூதியம் ரத்தாகிவிடும்.

வருந்துகிறோம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை நிர்மானம் செய்தவர்களில் ஒருவரும், முன்னாள் மாநிலச்செயலாளருமான தோழர் கே.நீலமேகம் 19.8.2014ல் இச்சமூகத்தில் இருந்து நிரந்தரமாக பிரிந்துவிட்டார். தோழரின் மறைவிற்கு சிவகங்கை மாவட்ட கிளை தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

8/21/2014

கிராஜுவிட்டி, குடும்ப ஓய்வூதியம் இல்லாத புதிய பென்ஷன் திட்டம்: 2 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பாதிப்பு

புதிய பென்ஷன் திட்டத்தில் கிராஜுவிட்டி, குடும்ப ஓய்வூதியம் இல்லாததால் தமிழகத்தில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் உள்பட 2 லட்சம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசுப் பணியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு பிறகும், தமிழக அரசுப் பணியில் 2003 ஏப்ரல் 1-க்கு பிறகும் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் புதிய ஓய்வூதிய திட்டத்தின் (என்.பி.எஸ்.) கீழ் சேர்க்கப்படுகின்றனர்.
புதிய பென்ஷன் திட்டத்தின்படி, அரசு ஊழியரின் அடிப்படைச் சம்பளம், தர ஊதியம், அக விலைப் படி ஆகியவற்றில் ஒவ்வொரு மாதமும் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு பங்களிப்பு ஓய்வூதிய நிதியில் (சி.பி.எப்.) சேர்க் கப்படுகிறது. அதே தொகைக்கு இணையான தொகையை அந்த ஊழியரின் கணக்கில் செலுத்து கிறது. இவ்வாறு சேரும் தொகை யில் 60 சதவீதம், அந்த ஊழியர் ஓய்வு பெறும்போது மொத்தமாக வழங் கப்படும். மீதமுள்ள 40 சத வீதத் தொகை, பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு மாதாமாதம் ஓய்வூதியமாக அவருக்கு அளிக்கப்படும்.
ராணுவத்தினருக்கு விதிவிலக்கு
இதில் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பதற்கு எந்த விதமான உத்தரவாதமும் அளிக்கப் படவில்லை. புதிய ஓய்வூதிய திட்டப்பணியை மத்திய அரசின் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டி.ஏ.) என்ற அமைப்பு கவனித்து வருகிறது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து ராணுவத்தினருக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கம், திரிபுரா ஆகிய 2 மாநிலங்கள் மட்டும் புதிய பென்ஷன் திட்டத்தைப் பின்பற்றவில்லை. நீண்டகாலமாக எதிர்ப்பு தெரிவித்து வந்த கேரள அரசுகூட கடந்த ஆண்டு முதல் புதிய பென்ஷன் திட்டத்தைப் பின்பற்றத் தொடங்கிவிட்டது.
கிராஜுவிட்டி ரத்து
அரசு ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வுபெறும்போது கிராஜுவிட்டி (பணிக்கொடை) கிடைக்கும். பணிபுரிந்த ஒவ்வோர் ஆண்டுக்கும் 15 நாள் சம்பளம் என்ற அடிப்படையில் கணக் கிடப்பட்டு அதிகபட்சம் 16.5 மாதங் களுக்கு இணையான சம்பளம் (உச்சவரம்பு ரூ.10 லட்சம்) பணிக்கொடையாக வழங்கப்படும்.
அதேபோல், 30 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் முழு ஓய்வூதியம் அதாவது கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக கிடைக்கும். ஓய்வூதியதாரர் மரணம் அடைந்தால் அவரது மனைவி அல்லது வாரிசுகளுக்கு 30 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். இந்நிலையில், பிஎப்ஆர்டிஏ அண்மையில் வெளியிட்ட ஒரு அறிவிப்பில் புதிய பென்ஷன் திட்டத்தில் உள்ளவர்களுக்கு கிராஜுவிட்டி கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.
குடும்ப ஓய்வூதியம் இல்லை
தஞ்சாவூரைச் சேர்ந்த ஆசிரியர் பி.ராஜா என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காளர் அலுவலகத்தில் கிராஜுவிட்டி தொடர்பாக தகவல் கேட்டிருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட விளக்கத்தில், தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978-க்கு உட்பட்ட அரசு ஊழியர்களின் ஓய்வூதிய பயன்கள் தொடர்பான வேலைகளை மட்டுமே தாங்கள் பார்த்து வருவதாகவும் மற்ற திட்டத்தின் (புதிய பென்ஷன் திட்டத்தில்) கீழ் உள்ள ஊழியர்கள் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வரமாட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 2003 ஏப்ரலுக்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 பொருந்தாது என்று தமிழக அரசு கடந்த 6.8.2003 அன்று அரசாணை வெளியிட்டது. அதேபோல், அவர்களுக்கு பொது வருங்கால வைப்புநிதியும் (ஜிபிஎப்) பொருந்தாது என்று 27.5.2004 அன்று அரசாணை மூலம் தெரிவித்தது. தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 பொருந்தாது என்பதால் அதன்கீழ் வழங்கப்படும் கிராஜுவிட்டி மற்றும் குடும்ப ஓய்வூதியம் ரத்தாகிவிடும்.
தமிழகத்தில் 2 லட்சம் பேர் பாதிப்பு
புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு தமிழகத்தில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் உள்பட 2 லட்சம் அரசு ஊழியர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். புதிய பென்ஷன் திட்டத்தில் கிராஜுவிட்டி, குடும்ப ஓய்வூதியம் இல்லாததால் இந்த 2 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, புதிதாக அரசுப் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கூறும்போது, ‘‘பணிப் பாதுகாப்பு, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் போன்ற பயன்கள் கிடைக்கும் என்பதால்தான் எல்லோரும் அரசு வேலையை விரும்புகின்றனர். நாங்களும் அப்படி நினைத்துதான் பணியில் சேர்ந்தோம். ஆனால், தற்போது அந்தப் பயன்கள் எதுவும் கிடைக்காது என்பதை நினைத்தால் ஏமாற்றமாகவும், வேதனையாகவும் உள்ளது. தமிழக அரசு முன்பு நடைமுறையில் இருந்த வந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தனர்.

தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் - தொடக்கக்கல்வி இயக்குநர்டி.இ.ஓ., உத்தரவை மதிக்காததால், பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

உளுந்துார்பேட்டை: டி.இ.ஓ., உத்தரவை மதிக்காததால், பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா உளுந்தாண்டார்கோயில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக சிவானந்தராஜாவும், இளநிலை பட்டதாரி ஆசிரியராக விமலாவும் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுடைய வருகை பதிவேட்டில் விமலாவின் பெயர் முதலாகவும், சிவானந்தராஜாவின் பெயர் இரண்டாவதாகவும் இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், டி.இ.ஓ., மதிவாணன், கடந்த மாதம் 4ம் தேதி பள்ளி வந்து விசாரித்து, சீனியாரிட்டி அடிப்படையில் வருகை பதிவேடு எழுதும்படி தலைமை ஆசிரியர் அருள்மொழியிடம் கூறிவிட்டு சென்றார்.
ஆனால் டி.இ.ஓ., உத்தரவை மதித்து, சீனியாரிட்டி முறையை கடைபிடிக்காததால், தலைமை ஆசிரியர் அருள்மொழியை சஸ்பெண்ட் செய்து டி.இ.ஓ., மதிவாணன் உத்தரவிட்டார். தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அறிந்த பெற்றோர்கள், நேற்று பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடையே பிரச்னையை தீர்த்து கொள்ள வேண்டும், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், தலைமை ஆசிரியரின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறி, பள்ளியை முற்றுகையிட்டனர். அவர்களிடம் ஏ.இ.ஓ., செலின்மேரி பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார்.

டி.இ.டி. மதிப்பெண் சலுகை ரத்து கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

மதுரை: ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை வழங்கிய உத்தரவை ரத்து செய்யக்கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மதுரை, சொக்கிகுளம் ஜெயகிருஷ்ணா தாக்கல் செய்த மனு: ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.) வெற்றிபெற 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) நிர்ணயித்தது.
இதில் அந்தந்த மாநிலங்களில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்பட்டோருக்கு (ஓ.பி.சி.) மதிப்பெண் சலுகை வழங்கலாம் என உத்தரவிட்டது. 2011 ல் ஆதிதிராவிடர், பழங்குடியினர், ஓ.பி.சி., மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க என்.சி.டி.இ. உத்தரவிட்டது.
தமிழகத்தில், 2012 ஜூலை 12 ல் முதன்முதலில் நடந்த டி.இ.டி. தேர்வில் 0.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதனால் தமிழக அரசு மறு தேர்வு நடத்தியது. இட ஒதுக்கீடு அடிப்படையில் சலுகை பெற்ற பிரிவினருக்கு, 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கி 2014 பிப்.6 ல் தமிழக அரசு உத்தரவிட்டது.
தகுதியை நிர்ணயிப்பதற்கு மட்டுமே என்.சி.டி.இ.க்கு அதிகாரம் உள்ளது. மதிப்பெண் சலுகை வழங்க என்.சி.டி.இ. மற்றும் தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. மதிப்பெண் சலுகை வழங்கிய என்.சி.டி.இ. மற்றும் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
2013 ஆகஸ்டில் நடந்த டி.இ.டி. தேர்வு அடிப்படையில், பணி நியமனம் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, கற்பித்தல் அனுபவம் அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி கே.கே.சசிதரன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் எபனேசர் ஆஜரானார். நீதிபதி, "பணி நியமனம் இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பைப் பொறுத்து அமையும்" என்றதுடன், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர், என்.சி.டி.இ., ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர், தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இருபுறமும் சிக்கித் தவிக்கும் மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள்

மதுரை: மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், நிர்வாக ரீதியான மூவகை கட்டமைப்புக்கும், கவுன்சிலர்களின் உட்கட்சி அரசியலுக்கும், பதில் சொல்ல முடியாமல் தத்தளிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், 1.4.1990 முதல் அரசு ஆசிரியர்களாக அறிவிக்கப்பட்டனர். அப்போது முதல் இவ்வகை பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்கள், டி.ஆர்.பி. அல்லது பள்ளிக் கல்வித்துறை மூலமே நிரப்பப்பட்டு வருகின்றன.
மதுரையில் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை என 67 பள்ளிகளில், 950க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளனர். ஆனால், அரசு நலத்திட்டம் வழங்கல், விளையாட்டு விழா நடத்துவது, ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்துவது போன்ற பல்வேறு நிலைகளில், முதன்மை கல்வி அலுவலகம், மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் என மூன்று வகை கட்டமைப்புகளுக்கும் பதில் அளிக்க வேண்டியுள்ளது.
உதாரணமாக, அரசு வழங்கும் நலத்திட்ட விவரங்களை மூன்று வகையாக தயாரிக்க வேண்டியுள்ளது. ஆனால் அரசு பள்ளிகள் இவ்வகை விவரங்களை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு வழங்கினால் போதுமானது. அதேபோல், மூவகை நிர்வாகங்கள் கேட்கும் தகவல்களையும் தனித்தனியே வழங்க வேண்டியுள்ளது.
ஆனால், அதற்கு தகுந்த ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை வசதியும் இல்லை.மேலும் வார்டு கவுன்சிலர்கள் அவர்கள் இஷ்டத்திற்கு ஏற்ப நடத்தும் விழாக்களிலும், மாணவர்கள் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால், பல பள்ளிகளில் குறிப்பிட்ட காலத்திற்குள் பாடங்களை நடத்தி முடிக்கவில்லை. இதை வெளிப்படையாக தெரிவிக்க முடியவில்லை என ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.
மாநகராட்சி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகள், கல்வித் துறை உத்தரவுப்படி நடக்கின்றன. ஆனால் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், அரசு ஆசிரியர்களாக அறிவிக்கப்பட்ட பின்னரும், இந்த மூவகை கட்டமைப்புகளுக்குள் சிக்கித் தவிக்க வேண்டியுள்ளது. மூவகை நிர்வாகங்களும் பல்வேறு பணிகளுக்காக எங்களை பயன்படுத்தி கொள்கின்றனர்.
ஆனால் 24 ஆண்டுகளாக, சம்பளத்தில் பிடித்தம் செய்து, மாநகராட்சி பொது நிதியில் சேர்க்கப்படும் பொது சேமநல நிதிக்கான (ஜி.பி.எப்.) கணக்கு சிலிப் கேட்டு போராடுகிறோம். இதுவரை நடவடிக்கை இல்லை. ஒவ்வொரு ஆண்டும் கவுன்சிலிங் நடத்த கோரியும் போராட வேண்டியுள்ளது. மாநில அளவில் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றனர்.

தமிழகத்தில் விரைவில் 12,588 ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக்கல்வி செயலர் சபிதா

திண்டுக்கல்: தமிழகத்தில் இந்த ஆண்டில் 12,588 ஆசிரியர்கள், விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் என, பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் கல்வி அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் கல்வித்துறைக்கு 65 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட சரிந்துள்ளது; இதை சரிசெய்ய வேண்டும்.
நான்கு ஆண்டுகளில் காலியாக இருந்த 76,684 பணியிடங்களில் 53,288 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டு 1,267 முதுகலை ஆசிரியர்களும், 11,321 பட்டதாரி ஆசிரியர்களும் விரைவில் நியமிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் 2,000 மழலையர் பள்ளிகளுக்கு விரைவில் அங்கீகாரம்: தொடக்க கல்வித்துறை

சென்னை: மாநிலம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத 2,000 மழலையர் பள்ளிகளுக்கு, விரைவில் அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, வட்டாரம் தெரிவித்தது.
அங்கீகாரம் இல்லாத 1,400 மழலையர் பள்ளிகளை வரும் 2015 ஜனவரிக்குள் மூட நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் தமிழக அரசு தெரிவித்தது. அதன்படி, அங்கீகாரம் இல்லாத மழலையர் பள்ளிகளுக்கு தொடக்க கல்வித்துறை சார்பில் தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.
நோட்டீஸ் கிடைத்த மூன்று நாளுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்; இல்லை எனில் பள்ளியை மூட தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழலையர் பள்ளிகள் குறித்த முழு பட்டியல் தொடக்க கல்வித் துறையிடம் இல்லை. ஆனால் மாநிலம் முழுவதும் 2,000 மழலையர் பள்ளிகள் இருக்கலாம் என துறை வட்டாரம் தெரிவிக்கிறது.
ஒரு பக்கம் மழலையர் பள்ளிகளை மூட நோட்டீஸ் அனுப்பினாலும், அனைத்து பள்ளிகளும் கட்டட உறுதி சான்று, தீயணைப்பு துறை சான்று உள்ளிட்ட பல சான்றிதழ்களை சமர்பித்து அங்கீகாரம் கேட்டு முறையாக தொடக்க கல்வித் துறைக்கு விண்ணப்பித்தால் அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்க கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது.
இதுகுறித்து துறை வட்டாரம் கூறியதாவது: அங்கீகாரம் இல்லாத மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகளில், தலா 50 குழந்தைகளுக்கு குறையாமல் படித்து வருகின்றனர். அதன்படி இந்த பள்ளிகளில் (பிரீ கேஜி முதல் யு.கே.ஜி. வரை) ஒரு லட்சம் குழந்தைகள் படித்து வருவதாக அறிகிறோம். பட்டியலில் இடம் பெறாமல் விடுபட்ட மழலையர் பள்ளிகளை அடையாளம் காண, உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திடீரென 2,000 பள்ளிகளையும் மூடினால், இங்கு படிக்கும் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும். எனவே ஒரு பக்கம் மூடுவதற்கு நோட்டீஸ் அனுப்பினாலும், மறுபக்கம் முறையாக அங்கீகாரம் பெற சம்பந்தப்பட்ட பள்ளிகள் தொடக்க கல்வித்துறையிடம் விண்ணப்பிக்கலாம். உரிய சான்றிதழ்களை பெற்று விண்ணப்பித்ததும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் அனுமதி பெற்று அனைத்து பள்ளிகளுக்கும் அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு துறை வட்டாரம் தெரிவித்தது.
பணத்தை கொட்டும் பள்ளிகள்
மழலையர் பள்ளிகள் பணம் காய்க்கும் மரங்களாக விளங்கி வருகின்றன. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை நடத்துவதை விட, இந்த பள்ளிகளை நடத்துவதற்கு செலவு குறைவு; ஆனால் வருமானம் கொட்டும்.
சாதாரண வீடுகளை பிளே ஸ்கூல் என பெற்றோரை ஈர்க்கும் வகையில் மாற்றி, அதை குழந்தை காப்பகமாகவும், மழலையர் பள்ளிகளாகவும் ஒரே கட்டடத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இரண்டரை வயது குழந்தையை முறையான பள்ளிக்கு அனுப்ப, பிரீ கேஜி வகுப்பில் சேர்த்து ஆறு மாதம் பயிற்சி அளிக்கின்றனர். இதற்கு சுளையாக 20 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கின்றனர். இந்த கட்டணம் இடத்திற்கு தகுந்தார்போல் மாறுபடுகிறது.
இதனால் முறையாக சான்றிதழ்களை பெற்று தொடக்க கல்வித் துறையின் அங்கீகாரத்தை பெற்றுவிட வேண்டும் என பள்ளி நிர்வாகிகள் மும்முரமாக முயற்சி செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஏற்ப, அங்கீகாரம் வழங்க தொடக்க கல்வித்துறை கிரீன் சிக்னல் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு

சென்னை: பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, காலாண்டுத் தேர்வு அட்டவணையை, பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ளார்.
மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத்தேர்வை, மாணவர்கள், பயம் இல்லாமல் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக, பொதுத்தேர்வில் கடைபிடிக்கும் முறையைப் போலவே, காலாண்டு, அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது.
அதன்படி, "10ம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு, செப்., 17ம் தேதி துவங்கி 26ம் தேதி வரை நடைபெறுகிறது.
அதைப்போல, பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு செப்., 15ம் தேதி துவங்கி 26ம் தேதி வரை நடைபெறுகிறது" என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு, தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு செப்., 5ம் தேதி, டில்லி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருது வழங்க உள்ளார்.
சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாநில அரசுகளும், தேசிய அளவில், மத்திய அரசும், ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவிக்கின்றன.
ஆசிரியராக வாழ்க்கையை துவக்கி, ஜனாதிபதியாக உயர்ந்த, ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்து, தேசிய விருதுக்கு 22 ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஆரம்ப, நடுநிலைப் பள்ளி அளவில், 15 ஆசிரியரும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி அளவில், ஏழு ஆசிரியரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் மட்டும் இல்லாமல், அனைத்து மாநிலங்களிலும் இருந்தும், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு, செப்., 5ம் தேதி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி விருது வழங்க உள்ளார்.
விருதில், ரொக்கம் 25 ஆயிரம் ரூபாய், வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு மடல் ஆகியவை அடங்கும். விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் விவரம்:
1. ஆரோக்கியமேரி, தலைமை ஆசிரியை, செயின்ட் ஆன்ஸ் ஆரம்ப பள்ளி, ராயபுரம், சென்னை.
2. சம்பங்கி, தலைமை ஆசிரியை, அரசு நடுநிலைப்பள்ளி, கந்தனேரி, வேலூர் மாவட்டம்.
3. கந்தசாமி, தலைமை ஆசிரியர், அரசு நடுநிலைப்பள்ளி, கடப்பை, விழுப்புரம் மாவட்டம்.
4. செல்வராஜு, பட்டதாரி ஆசிரியர், ஆனந்தராஜு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி, மரைங்கநாயநல்லூர், நாகை மாவட்டம்.
5. நடராஜன், தலைமை ஆசிரியர், ஆதிதிராவிடர் நலத்துறை ஆரம்ப பள்ளி, சிக்கல்நாயக்கன்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.
6. ஆண்டிரூவ்ஸ், தலைமை ஆசிரியர், சி.எஸ்.ஐ., ஆரம்ப பள்ளி, உறையூர், திருச்சி மாவட்டம்.
7. தெரேன்ஸ், தலைமை ஆசிரியர், ஆர்.சி., அமலாராக்கினி நடுநிலைப்பள்ளி, குளித்தலை, கரூர் மாவட்டம்.
8. நளினி, தலைமை ஆசிரியை, அரசு நடுநிலைப்பள்ளி, தாரவைதோப்பு, பாம்பன், ராமநாதபுரம் மாவட்டம்.
9. முத்தையா, தலைமை ஆசிரியர், அரசு நடுநிலைப்பள்ளி, கே.செம்பட்டி, மதுரை மாவட்டம்.
10. உதயகுமார், தலைமை ஆசிரியர், அரசு ஆரம்ப பள்ளி, சின்னகொண்டாலம்பட்டி, சேலம் மாவட்டம்.
11. நசிருதீன், தலைமை ஆசிரியர், நகராட்சி உருது மகளிர் நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம்.
12. ராமகிருஷ்ணன், அரசு ஆரம்ப பள்ளி, வெள்ளாளபாளையம், கோவை மாவட்டம்.
13. தாமஸ், தலைமை ஆசிரியர், பாரத் மாதா உதவிபெறும் ஆரம்ப பள்ளி, உப்பாட்டி, நீலகிரி மாவட்டம்.
14. விநாயக சுந்தரி, தலைமை ஆசிரியை, சங்கரகுமார் ஆரம்ப பள்ளி, சங்கரலிங்கபுரம், கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்.
15. ராமசாமி, தலைமை ஆசிரியர், வேணுகோபால விலாச உதவிபெறும் ஆரம்ப பள்ளி, விஸ்நாம்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.
16. நீலகண்டன், தலைமை ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுபேட்டை, வேலூர் மாவட்டம்.
17. சாஷி ஸ்வரண்சிங், முதுகலை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம், சென்னை.
18. கஸ்தூரி, தலைமை ஆசிரியர், நகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஜமீன் பல்லாவரம், காஞ்சிபுரம் மாவட்டம்.
19. ஆதியப்பன், தலைமை ஆசிரியர், எம்.எப்.எஸ்.டி., மேல்நிலைப்பள்ளி, சவுகார்பேட்டை, சென்னை.
20. செல்வசேகரன், முதுகலை ஆசிரியர், கிரசன்ட் மேல்நிலைப்பள்ளி, அவனியாபுரம், தஞ்சாவூர் மாவட்டம்.
21. கஸ்தூரி, பட்டதாரி ஆசிரியர், மார்னிங் ஸ்டார் உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி, செங்குந்தபுரம், கரூர் மாவட்டம்.
22. பாலுசாமி, தலைமை ஆசிரியர், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, பீளமேடு, கோவை மாவட்டம்.

தேர்ச்சி விகிதம் 95 % உயர வேண்டும்: பள்ளி கல்வித் துறை முதன்மைச் செயலர்


அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 90-லிருந்து 95 சதவீதமாக உயர வேண்டும் என, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் டி. சபீதா அறிவுறுத்தியுள்ளார்.
திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களுக்கான கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பொதுத் தேர்வில் 80 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சிப் பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, இந்த ஆய்வுக் கூட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி தலைமை வகித்துப் பேசினார்
பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் டி. சபீதா, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் டி. சபீதா பேசியதாவது:
கல்வித் துறையின் வளர்ச்சிக்கு ரூ. 65 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து, திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
கடந்த 2012ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 358 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்றன. 2013இல் 453 பள்ளிகளாகவும், 2014இல் 887 பள்ளிகள் என 100 சதவீத தேர்ச்சிப் பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளன.
அதேபோல் பிளஸ் 2 தேர்வில், 2013ஆம் ஆண்டு 42ஆக இருந்த 100 சதவீத தேர்ச்சிப் பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை, 2014இல் 113 பள்ளிகளாக அதிகரித்துள்ளன. மேலும், மாநில அளவிலான முதல் 3 இடங்களில், அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சிப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தரமான கல்வி அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில், தமிழக அரசு 71,708 ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொண்டது. அதில், 53,788 இடங்களுக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்களுக்கு விளையாட்டு ஆர்வமும் தேவை என்பதைக் கருத்தில்கொண்டு, 2011-12 ஆம் கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் சதுரங்க விளையாட்டு தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற சதுரங்கப் போட்டியில், மாநிலம் முழுவதிலுமிருந்து 11.50 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டனர். அதில் சிறந்த 24 பேர் தேர்வு செய்யப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
அதேபோன்று, நிகழாண்டில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்க 15 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில், மாநிலத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 90 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள 5 மாவட்டங்கள், தர வரிசையில் பின்னடைவு பெற்றுள்ளன. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், கடந்த ஆண்டு 8ஆம் இடத்திலிருந்த மதுரை மாவட்டம் 16ஆவது இடத்துக்கும், 21ஆவது இடத்திலிருந்த திண்டுக்கல் 22ஆவது இடத்துக்கும், 17ஆவது இடத்திலிருந்த தேனி மாவட்டம் 25ஆவது இடத்துக்கும் பின்னோக்கிச் சென்றுள்ளன.
அதேபோன்று, பிளஸ் 2 தேர்வில் முதலிடத்திலிருந்த விருதுநகர் 3ஆம் இடத்துக்கும், 12ஆம் இடத்திலிருந்த சிவகங்கை 13ஆவது இடத்துக்கும், 8ஆம் இடத்திலிருந்த மதுரை 16ஆவது இடத்துக்கும், 17ஆவது இடத்திலிருந்த திண்டுக்கல் 19ஆம் இடத்துக்கும், 9ஆம் இடத்திலிருந்த தேனி 15ஆவது இடத்துக்கும் தரம் குறைந்துவிட்டன.
பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல், முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளிலும் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும். பொதுத் தேர்வில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 95 சதவீதமாக உயர்வதற்கு தலைமையாசிரியர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார் அவர்.
பிற்பகலில் நடைபெற்ற கூட்டத்தில், ஈரோடு மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் சிறந்த தேர்ச்சி விகிதத்தை உருவாக்க, ஆசிரியர்கள் மற்றும் 234 தலைமையாசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

8/19/2014

BRC, CRC, அளவில் நடக்க இருக்கும் உத்தேச பயிற்சி நாட்கள் விபரம்பள்ளி மானியம்; ஆகஸ்ட் இறுதிக்குள் வழங்க உத்தரவு


கரும்பலகை, உலக உருண்டை, மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் வாங்க பள்ளி மானியம் இம் மாதம் இறுதிக்குள் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.
 தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 30 கோடியே 40 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பள்ளி மானியம்(ஸ்கூல் கிரான்ட்) நிதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள துவக்கப்பள்ளிகளுக்கு 5,000 ரூபாயும், நடுநிலை, உயர்நிலை பள்ளிகளுக்கு 7,000 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.
இந்நிதியில் பள்ளிக்கு தேவையான மைக், மின் அழைப்பான், உலக உருண்டை, மின்விசிறி, கரும்பலகை உள்ளிட்ட பொருட்களை வாங்க வேண்டும். இதுபோல், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மட்டும் 27 கோடியே 17 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பள்ளி பராமரிப்பு மானியமாக ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதில் மூன்று வகுப்பறை கட்டடம் உள்ள பள்ளிகளுக்கு 5,000 ரூபாயும், அதற்கு மேல் உள்ள வகுப்பறை கட்டடங்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் நிதி ஒதுக்கீடு வழங்கபட உள்ளது. இந்நிதியில் பள்ளி கதவு, கழிப்பறை, தண்ணீர் தொட்டி, கட்டடத்தின் மேற்கூரை உள்ளிட்டவைகளை பராமரிப்பு செய்ய வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட நிதியை இம் மாதம் இறுதிக்குள் பள்ளிகளில் உள்ள கிராம கல்விக் குழு பெயரில் வங்கியில் செலுத்தவேண்டும். டிசம்பர் மாதத்திற்குள் தேவையான பணிகளை முடித்திருக்க வேண்டும், என முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் சங்கங்களை கட்டுப்படுத்த தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு


ஆசிரியர் நியமனம் விரைவில் - பத்திரிக்கைகள் ஆரூடம்


சங்க கூட்டம்

சிங்கம்புணரி : பிரான்மலை துவக்கப்பள்ளியில் பெற்றோர் -ஆசிரியர் சங்க கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் கஸ்தூரி தலைமை வகித்தார்.செயலாளர் பொன்னழகு வரவேற்றார்.ஆசிரியர் முத்துப்பாண்டி,பெற்றோர் சார்பில் லெட்சுமி, ஆனந்த்,ராமன், அழகர்சாமி பேசினர். மூலிகை தோட்டம் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

அரசு ஆரம்பப் பள்ளியில் மூலிகை தோட்டம் அமைக்க முடிவு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் பிரான்மலை அரசு ஆரம்பப் பள்ளியில் மூலிகை தோட்டம் அமைக்க பெற்றோர்- ஆசிரியர் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரான்மலை அரசு ஆரம்பப் பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழகக் கூட்டம் தலைமையாசிரியர் கஸ்தூரி தலைமையில் நடைபெற்றது. செயலர் பொன்னழகு வரவேற்றுப் பேசினார்.

ஆசிரியர் முத்துப்பாண்டி தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பள்ளியில் மூலிகைத் தோட்டம் அமைப்பது எனமுடிவு செய்யப்பட்டது.
மேலும், மாணவர்களை அச்சுறுத்தி வரும் குரங்குகளை அரசு பிடித்து மாற்றிடத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பள்ளிக்கு பாதுகாவலர் மற்றும் உதவியாளர் நியமனம் செய்யப்பட வேண்டும்.
மாணவர்களின் கல்வி நலனை மேம்படுத்த பெற்றோர்கள் அடங்கிய குழு ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பெற்றோர் கலந்து கொண்டனர்.

8/18/2014

அங்கீகாரமற்ற மழலையர் பள்ளிகள்: நடவடிக்கை எப்போது?- உயர் நீதிமன்றத்தில் அரசு கால அட்டவணை தாக்கல்

உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் மழலையர் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான கால அட்டவணையை தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.பாலசுப்பிரமணியன் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
“தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின்படி, அரசு அங்கீகாரம் பெறாமல் எந்தத் தனியார்பள்ளியும் செயல்பட முடியாது. ஆனால், சென்னையில் 700-க்கும் மேற்பட்ட மழலையர் பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்படுகின்றன. அந்தப் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் பாதிப்புகளை அடைந்துள்ளனர்” என்று அந்த மனுவில் அவர் கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது: அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகளுக்கு செப்டம்பர் 14-ம் தேதிக்குள் நோட்டீஸ் அனுப்பப்படும். அது தொடர்பாக அக்டோபர் 15-ம் தேதிக்குள் பள்ளிகள் பதிலளிக்க வேண்டும். பள்ளியை அங்கீகரிக்கும்படி கோரும் விண்ணப்பதையும் பள்ளிகள் அளிக்கலாம். சம்பந்தப்பட்ட கல்வித் துறை அதிகாரிகள் நவம்பர் 30-ம் தேதிக்குள் பள்ளிகளில் ஆய்வு நடத்தி, ஜனவரி 31-ம் தேதிக்குள் இறுதி உத்தரவுகளைப் பிறப்பிப்பார்கள். ஆய்வின்போது பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கும்படி உரிய முறையில் பள்ளி நிர்வாகங்கள் விண்ணப்பித்தால், அங்கீகாரம் வழங்குவது பற்றி கல்வித் துறை அதிகாரிகள் பரிசீலிப்பார்கள். அங்கீகாரம் பெறவே தகுதியில்லாத பள்ளி என தெரிய வந்தால், பள்ளியை மூடுவதற்கான நோட்டீஸை உடனடியாக அதிகாரிகள் விநியோகிப்பார்கள். அத்தகைய பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அருகேயுள்ள அரசு அல்லது தனியார் பள்ளிகளில் உடனடியாக அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: அரசின் மனுவில் கூறியுள்ளவாறு நடவடிக்கை எடுத்தால் தங்களுக்கும் திருப்திதான் என மனுதாரர் தரப்பில் தெரிவித்துள்ளனர். ஆகவே, மனுவில் கூறியுள்ளவாறு கல்வித் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளிகள் தொடர்பாக அரசு பிறப்பிக்கும் அனைத்து சுற்றறிக்கைகளையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் ஹேமா சம்பத் கூறியுள்ளார். அதனை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம். அனைத்து சுற்றறிக்கைகளும் 2 வாரங்களுக்குள் பதிவேற்றம் செய்யப்படும் என அரசு தலைமை வழக்கறிஞரும் உறுதி அளித்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

கட்டாய இடமாறுதல் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று ஆசிரியர் பயிற்றுநர்கள் ‘தி இந்து - உங்கள் குரல்’ மூலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


கட்டாய இடமாறுதல் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று ஆசிரியர் பயிற்றுநர்கள் ‘தி இந்து - உங்கள் குரல்’ மூலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அனைவருக்கும் கல்வி திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.) கீழ் தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 4,600 ஆசிரியர் பயிற்றுநர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 21-ம் தேதி 3,500 ஆசிரியர் பயிற்றுநர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர். பொதுவாக, அரசு ஊழியர்கள் 3 ஆண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்ற முடியாது. 3ஆண்டுகள் ஆனதும் வேறு ஊருக்கு இடமாற்றம் செய்யப்படுவார்கள். ஆனால், ஆசிரியர் பணிக்கு மட்டும் இந்த இடமாறுதல் உத்தரவிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
3 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் அரசு ஊழியர் கட்டாய இடமாற்றல் உத்தரவு ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று கடந்த 9.6.2014 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், திடீரென 21.6.2014 அன்று சுமார் 3,500 ஆசிரியர் பயிற்றுநர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது அவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெண்கள் கடும் பாதிப்பு இடமாற்றத்துக்கு உள்ளான ஆசிரியர் பயிற்றுநர்களில் சுமார் 2 ஆயிரம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கள் வீட்டில் இருந்து மிகவும் தொலைவான வட்டாரங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் அவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்த திடீர் இடமாற்ற நடவடிக்கை தொடர்பாக தமிழகம் முழுவதும் ஏராளமான ஆசிரியர் பயிற்றுநர்கள் ‘தி இந்து’வின் ‘உங்கள் குரல்’ மூலம் புகார் தெரிவித்தனர். கட்டாய இடமாற்றம் உத்தரவினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் கூறியதாவது:- அலைச்சல் - பயணச்செலவு அனைவருக்கும் கல்வி திட்டத் தில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கடந்த 2005 முதல் ஆண்டுக்கு 500 பேர் வீதம் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக் கல்விக்கு மாற்றப்பட்டுவந்தனர். ஆனால், கடந்த 2 ஆண்டு களாக இந்த திட்டம் நடை முறைப்படுத்தப்படவில்லை. தற்போது செய்யப்பட்டுள்ள திடீர் இடமாற்றலில், ஆசிரியர் பயிற்றுநர்கள் மிகவும் தொலைவான மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தினசரி பஸ் செலவுக்கே ரூ.75 முதல் ரூ.100 வரை ஆகிறது. எனவே, மாதம் போக்குவரத்து செலவுக்கு ரூ.3 ஆயிரம் போய் விடும். அதேநேரத்தில் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு நிரந்தர பயணப் படியாக (எப்டிஏ) மாதத்துக்கு ரூ.600 மட்டுமே கொடுக்கிறார்கள். வேறு எந்தவிதமான படிகளும் கிடையாது. இதனால் கைக்குழந்தைகளை வைத்திருப்போர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ஏராளமான பெண் ஆசிரியர் பயிற்றுநர்கள் குழந்தைகளுக்குப் பால் கொடுக்க முடியாமல் தவிக்கிறார்கள். ஆசிரியர் பயிற்று னர்களை கட்டாய இடமாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். அதேபோல், முன்பு இருந்து வந்ததைப் போல ஆண்டுதோறும் 500 ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளிக்கல்வித் துறைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்

கிராமக்கல்விக்குழு கணக்காளர்?பணியிடத்துக்கு விண்ணப்பங்கள்?வரவேற்பு

சிவகங்கை, : சிவகங்கை மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமையங்களில், கிராமக்கல்விக்குழு கணக்காளர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கிவரும் 12 வட்டார வளமையங்களில், காலியாக உள்ள 24 தொகுப்பூதிய கிராமக்கல்விக்குழு கணக்காளர் பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வு, எழுத்துத்தேர்வு மற்றும் ‘டாலி’ செய்முறைத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பம் நாளை (ஆக.19) முதல் சிவகங்கை, அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலகத்தில் (அரசு மருதுபாண்டியர் நகர் பள்ளி வளாகம்) இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இப்பணியிடத்திற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி பி.காம் தேர்ச்சி மற்றும் ‘டாலி‘  தகுதி சான்று பெற்றிருக்க வேண்டும். எம்.காம், எம்பிஏ, சிஏ/ஐசிடபிள்யூ/சிஎஸ் (இண்டர்) ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருந்தால் கூடுதல் கல்வித்தகுதியாக கருதப்பட்டு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும். வயது வரம்பு, 2014, ஆக.1 அன்று 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாதம் தோறும் ரூ.9ஆயிரத்து 900 தொகுப்பூதியம் மற்றும் பயணப்படி வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நேரிலோ, அஞ்சல் மூலமோ வரும் செப்.1ம் தேதிக்குள் சிவகங்கை அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும். எழுத்துதேர்வு செப்.13ல் நடக்கிறது. எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு செப்.18 முதல் செப்.20 வரை செய்முறை தேர்வு நடக்கிறது.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி வகுப்பு துவங்கப்படுமா?

சென்னை: அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 14 லட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகள், தங்களுக்கு ஆங்கில வழிக்கல்வி வகுப்பு துவங்கப்படுமா? என்ற ஏக்கத்தில் உள்ளனர். இவர்களைப் போலவே, பள்ளிகளின் நிர்வாகிகளும், அரசின் அனுமதியை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.
தமிழகத்தில், கடந்த 2011ம் ஆண்டு முதல் ஒவ்வொரு யூனியன் எல்லையிலும், தலா ஐந்து தொடக்கப் பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்பு துவங்கப்பட்டது. இத்திட்டம் படிப்படியாக, கடந்த கல்வியாண்டு முதல், உயர்நிலைப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டில், சில அரசு பள்ளிகளில் ஆறு, ஒன்பது, பிளஸ் 1 (உயிரியல்) வகுப்பு, ஆங்கில வழிக் கல்வியில் துவங்கப்பட்டுள்ளது.
இதற்காக, அரசு பள்ளிகளுக்கு, அரசின் சார்பில் கட்டடம், ஆசிரியருக்கு சம்பளம், பிற நலத்திட்டங்கள் போன்றவை கிடைக்கின்றன. அரசு உதவிபெறும் பள்ளிகளில், தமிழ் வழிக்கல்வி முறை மட்டுமே அமலில் உள்ளது. அரசு பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி துவங்கப்பட்டு வருவதுபோல், அரசு உதவிபெறும் பள்ளியிலும், ஆங்கிலவழிக் கல்வி துவங்க அனுமதிக்க வேண்டும்.
ஆங்கிலவழிக் கல்வியை போதிக்கும் அரசு பள்ளிகளுக்கு வழங்கும் சலுகைகளை, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என, அரசு உதவி பெறும் பள்ளிகளின் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அரசு தரப்பில், அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கோ அல்லது தனியார் பள்ளிகளுக்கோ, புதியதாக எந்த சலுகையும் வழங்க முடியாது என, அரசு தெரிவித்துள்ளதாக கூறும் கல்வியாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: தமிழகத்தில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 5,071 தொடக்கப் பள்ளிகள், 1,608 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அதில் 40,748 ஆசிரியர்கள்; 14 லட்சத்து 23 ஆயிரத்து 615 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மட்டுமல்லாது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் செயல்படுகின்றன. அரசு பள்ளியை போலவே, அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கும் நலத்திட்டம், ஆசிரியருக்கு சம்பளம் உள்ளிட்டவை வழங்க, கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்படுகிறது.
ஆங்கில வழிக்கல்வி தேவை என அவர்கள் விருப்பப்பட்டால், சுயநிதி பள்ளியாக மாற்றிக் கொள்ள வேண்டியதுதான். கடந்த 1990 - 91ம் ஆண்டுக்கு முன், அரசு உதவி பெறும் பள்ளிகளில் என்ன நடைமுறை இருந்ததோ, அதே நடைமுறையைத்தான் பின்பற்ற வேண்டும் என, அன்றே உத்தரவிடப்பட்டது. தனியார் சார்ந்த கல்வி முறையை, அரசு ஊக்குவிக்க விரும்பவில்லை. மேலும், அரசு பள்ளிகளே, தற்போது தேவையான வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு - விண்ணப்பிக்க அழைப்பு

கடலூர்: தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து அரசு தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனரின் செயலர் ஆசிர்வாதம் செய்திக்குறிப்பு: ஊரகப் பகுதிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2013-14 கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு தேர்தவில் 50 சதவீதம் மொத்த மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்து தற்போது வரும் கல்வியாண்டில் படித்துக் கொண்டிருப்பவராக இருத்தல் வேண்டும்.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வரின் பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு மிகாமல் உள்ளது என்பதற்கு வருவாய் துறையினரிடமிருந்து வருமானச் சான்று பெற்று அளித்தல் வேண்டும்.
தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர்கள், தேர்வுக்கான கட்டணம் 5 ரூபாய், சேவைக் கட்டணம் 5 என மொத்தமாக 10 வீதம், ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பணமாக பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் உரிய முதன்மைக்கல்வி அலுவலரிடம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 22ம் தேதி ஆகும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 பேருக்கு 50 ஆண்கள், 50 பெண்கள். 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் காலத்திற்கு படிப்பு உதவித்தொகை, ஆண்டுதோறும் 1,000 ரூபாய் வீதம் வழங்கப்படும்.
நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவர்களும், ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் பயில்வோரும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க இயலாது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வெயிட்டேஜ் முறையால் பழைய பாடத்திட்ட மாணவர்கள் பாதிப்பு

சென்னை: முதுகலை ஆசிரியர் தேர்வில் (டி.ஆர்.பி.,) பின்பற்றும் முறையை, ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) பின்பற்றாததால், பழைய பாடத்திட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், தகுதித் தேர்வு எழுத வேண்டும் என 2012ல் புதிய நடைமுறையைக் கொண்டு வந்தது. அதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழை, ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க ஏழு ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் என அறிவித்தது.
அதன்படி, ஆசிரியர் தேர்வாணையம் 2012 ஜூலையில் நடத்திய டி.இ.டி., தேர்வில் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அப்போது 150 வினாக்களுக்கு ஒன்றரை மணி நேரம் மட்டுமே ஒதுக்கியதால் தேர்ச்சி சதவீதம் குறைந்தது. அதில் முதல் தாளில் 1,735 பேரும், 2ம் தாளில் 713 பேரும் தேர்ச்சி பெற்றனர்.
தேர்வுக்குக் கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்ததைத் தொடர்ந்து, அதே ஆண்டு அக்டோபரில் நடந்த தேர்வு, மூன்று மணி நேரமாக மாற்றப்பட்டது.
அதில் முதல் தாளில், 10 ஆயிரத்து 397 பேரும், இரண்டாம் தாளில் 8,849 பேரும் தேர்ச்சி பெற்றனர். அனைவரும் 2012 டிசம்பரில் பணி நியமனம் செய்யப்பட்டனர். 2013 ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்வில், 60 சதவீத மதிப்பெண்கள் அடிப்படையில் 32 ஆயிரம் பேர், இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு அறிவித்த 5 சதவீத மதிப்பெண் அடிப்படையில் 44 ஆயிரம் பேர் என மொத்தம் 76 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
ஆனால் இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பிளஸ் 2, டிகிரி, பி.எட்.,ல் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 40 மதிப்பெண்ணும், டி.இ.டி.,யில் 60 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் 100 மதிப்பெண்களுக்கு வெயிட்டேஜ் முறையை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதனால் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால், முதுகலை ஆசிரியர் தேர்வில், இதுபோன்று மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், டி.ஆர்.பி., தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நேரடியாக பணி நியமனம் செய்யப்படுகிறது.
2008-09ம் கல்வியாண்டில், கல்லூரிகளில் திறனறித் தேர்விற்கு 25 மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வுக்கு 75 மதிப்பெண்கள் என புதிய நடைமுறை வந்தது. அதன்பிறகு டிகிரி படித்த மாணவர்கள் சாதாரணமாக 70 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்கள் பெறுகின்றனர். பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதியவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள் பெறுவதே கடினமாக இருந்தது. இதனால், வெயிட்டேஜ் முறையைப் பின்பற்றுவதன் மூலம், பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதியவர்களுக்கு ஆசிரியர் பணி கிடைப்பது அரிதாகியுள்ளது.
2013ல் டி.இ.டி., தேர்வில் 82 மதிப்பெண்கள் பெற்றாலே தேர்ச்சி என்ற நிலையில், 101 மதிப்பெண் பெற்ற, விருத்தாசலம் பகுதியில் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதிய மாணவர் ஒருவர், வெயிட்டேஜ் முறையால் ஆசிரியர் பணிக்கு தேர்வாகவில்லை.
அவர் கூறுகையில்,  "2013ல் நடந்த டி.இ.டி., தேர்வில், இரண்டாம் தாளில் 101 மதிப்பெண்கள் பெற்றேன். ஆனால் புதிய வெயிட்டேஜ் முறைபடி 65.15 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றதால் ஆசிரியர் தேர்வு பட்டியலில் எனது பெயர் இடம் பெறவில்லை. புதிய வெயிட்டேஜ் முறையால் 90லிருந்து 100க்கும் மேல் மதிப்பெண்கள் எடுத்த பழைய பாடத்திட்ட மாணவர்கள் பலர் ஆசிரியர் பணிக்குத் தேர்வாகாமல் உள்ளனர்" என்றார்.

8/14/2014

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்


சென்னையில் மூடப்படும் நிலைக்கு வந்துள்ள 8 மாநகராட்சி பள்ளிகள்

சென்னை: மாணவர் சேர்க்கை குறைவால், சென்னையில் எட்டு மாநகராட்சி பள்ளிகள் மூடப்படும் நிலைக்கு வந்துள்ளன. இந்த பள்ளிகளை தனியார் மூலம் பராமரிக்க திட்டமிடப்பட்ட நிலையில், அதிலும் தற்போது குழப்பம் நிலவுவதாக தெரிகிறது.
சென்னை மாநகராட்சி பராமரிப்பில், பல்வேறு நிலைகளில், 284 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 88 ஆயிரம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை மாநகராட்சி பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது.
100க்கும் குறைவான...
இதற்கு, சென்னையில் தனியார் பள்ளிகள் ஆதிக்கம் அதிகரிப்பு, குடிசை பகுதிகளை காலி செய்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்கி வருவது ஆகிய காரணங்கள் கூறப்படுகின்றன. மாணவர் சேர்க்கை இல்லாததால், பல மாநகராட்சி பள்ளிகள் 100க்கும் குறைவான எண்ணிக்கை கொண்ட மாணவர்களுடன் இயங்கி வருகின்றன. இதில், எட்டு பள்ளிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
இந்த பள்ளிகளில், 8ம் வகுப்பு வரை சேர்த்து, மொத்தம் 20 முதல் 30 மாணவர்கள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பள்ளிகள் சேத்துப்பட்டு, சிவராஜபுரம், சாந்தோம், திருவல்லிக்கேணி, ராயபுரம் ஆகிய பகுதிகளில் இருப்பதாக கூறப்படுகிறது.
வாக்குறுதி என்னாச்சு?
இவ்வளவு குறைந்த மாணவர்களை கொண்டு, ஒரு பள்ளியை நடத்த முடியாது என்பதால், இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தனியாரிடம் பள்ளியை ஒப்படைக்கலாமா என்று மாநகராட்சி ஆலோசித்தது. இதற்காக சில தனியார் கல்வி அமைப்புகள், பள்ளியை தத்தெடுத்து நடத்த முன்வந்தன.
ஆனால், மாநகராட்சி விதித்த நிபந்தனைகள், தனியார் நிறுவனங்கள் கோரும் தொகை உட்பட பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்தபோது, தனியார் மூலம் பள்ளிகளை நடத்தும் திட்டத்திலும் குழப்பம் ஏற்பட்டதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால், குறைவான மாணவர்கள் படிக்கும், அந்த எட்டு மாநகராட்சி பள்ளிகளையும், ஒருவேளை மூட வேண்டிய நிலையும் ஏற்படலாம் என, அதிகாரிகள் கூறுகின்றனர். அந்த மாணவர்கள், அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. கடந்த தி.மு.க., ஆட்சியில், 30க்கும் மேற்பட்ட மாநகராட்சி பள்ளிகள் மூடப்பட்டன. தற்போதைய மேயர் சைதை துரைசாமி, எந்த மாநகராட்சி பள்ளியும் இனி மூடப்படாது; பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.
கண்காணிப்பு இல்லை: இதற்கிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்வரை, மாநகராட்சி ஆசிரியர்கள், குடிசை பகுதிகளுக்கு சென்று குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வருவர். ஆனால், தற்போது அதுபோன்று ஆசிரியர்கள் களத்திற்கு செல்வதில்லை. கல்வித்துறை அதிகாரிகளும் கண்காணிப்பதில்லை. இதுவும் மாணவர் சேர்க்கை குறைவுக்கு ஒரு காரணம் என்று விவரம் அறிந்த தலைமை ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

1,963 பள்ளிகளில் கழிவறை வசதியில்லை: மனிதவள அமைச்சக இணையதளம்

கோவை: கோவை மாவட்டத்தில், 1,963 பள்ளிகளில் கழிவறை வசதியில்லை என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சொற்ப எண்ணிக்கையிலான பள்ளிகளிலேயே, அடிப்படை கழிவறை கட்டமைப்பு வசதி, தற்காலிகமாக இல்லாமல் இருப்பதாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில், 1,090 துவக்கப்பள்ளிகள், 307 நடுநிலை, 185 உயர்நிலை மற்றும் 306 மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம் 1,888 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், 1.66 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பள்ளிகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, அரசு வாயிலாகவும், ஆர்.எம்.எஸ்.ஏ., (மத்திய இடை நிலைக் கல்வி திட்டம்) மற்றும் எஸ்.எஸ்.ஏ., (அனைவருக்கும் கல்வி திட்டம்) வாயிலாகவும், ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்படுகிறது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் 1,963 பள்ளிகளில் கழிவறை வசதியில்லை என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிட்டிருப்பது, பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இணையதள தகவலுக்கு மறுப்பு தெரிவித்ததோடு, கோவையில் சொற்ப எண்ணிக்கையிலான பள்ளிகளில் மட்டுமே கழிவறை கட்டமைப்பு இல்லாமல் இருப்பதாகவும், கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்புள்ளி விபரங்கள் குறித்து, கல்வியாளர்கள் சிலர் கூறுகையில், "மத்திய மனிதவள அமைச்சகத்தின் தகவல், சரியானதாக குறிப்பிடப்படவில்லை. ஏனெனில், 50 மாணவர்களுக்கு ஒரு கழிவறை, 20 மாணவர்களுக்கு ஒரு சிறுநீர் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பது விதிமுறை.
இவ்விதிகளின்படி பார்த்தால், தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் எந்த மாநிலத்திலுமே, கழிவறை வசதிகளை முழுமைப்படுத்தியிருக்க முடியாது. இதுபோன்ற விதிமுறைகளின்படி, பள்ளிக்கல்வித் துறையில் பெரும்பாலான சேவைகள் இருப்பதில்லை. அடிப்படை கழிவறை வசதிகூட இல்லாமல், பள்ளிகள் இயங்க வாய்ப்பில்லை. அப்படி இருப்பின், பள்ளிகளுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திகொள்ள, உரிய தலைமையாசிரியர் முயற்சி எடுத்திருக்க வேண்டியது அவசியம்" என்றனர்.
முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறுகையில், "சொற்ப எண்ணிக்கையிலான பள்ளிகளில் மட்டுமே, அடிப்படை கழிவறை வசதிகள் தற்காலிகமாக இல்லை. இதை சரிப்படுத்த, அரசின் நிதிக்காக காத்திருக்கிறோம். மற்றபடி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பொதுத்தேர்வு சமயங்களில், தேர்வெழுத வரும் பெண்களுக்காக தனிப்பட்ட கழிவறை வசதி இல்லை என்பது போன்ற குறைபாடுகளே உள்ளன.
ஆண்டுதோறும் அரசால் அளிக்கப்படும் நிதியில், கழிவறை, அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்காக மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே, இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள் ஆதாரமற்றவை" என்றார்.

முறையான சம்பள உயர்வின்றி கஷ்டப்படும் ஆர்.எம். எஸ்.ஏ.,கல்வித் திட்ட ஊழியர்கள்

சிவகங்கை: முறையான சம்பள உயர்வின்றி, குடும்பத்தை நடத்த வழியில்லாமல் தவிப்பதாக ஆர்.எம். எஸ்.ஏ.,கல்வித் திட்ட ஊழியர்கள் புலம்புகின்றனர்.
தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) என்ற மத்திய அரசு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் டேலி மேலாளர், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர், இன்ஜினியர் என்ற பிரிவுகளில் முறையே ரூ.7,500, 6000, 12,000 சம்பள விகிதாச்சாரத்தில் 750க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
முறையான சம்பள உயர்வின்றி குறைந்த சம்பளத்தில் பணியாற்றுகின்றனர். சம்பள உயர்வு கேட்டு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை என புகார் கூறுகின்றனர். இந்நிலையில், அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) திட்டத்தில் பணிபுரியும் இதே பிரிவு ஊழியர், இன்ஜினியர்களுக்கு சமீபத்தில் ரூ.3 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை சம்பளம் உயர்வு அளிக்கப்பட்டது.
இதேபோன்று சம்பள உயர்வு வழங்க வேண்டும் என, ஆர்.எம்.எஸ்.ஏ., கல்வி திட்ட ஊழியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊழியர்கள் சிலர் கூறுகையில், "எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம். எஸ்.ஏ., இரு திட்டமும் கல்வி, அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணியை செய்கிறது. இவற்றில் முதுகலை ஆசிரியர், பட்டதாரி, ஆசிரியர் பயிற்சி, பி.எச்.டி., இன்ஜினியர், கம்ப்யூட்டர் பயிற்சி, டைப் முடித்தவர்கள் என, பல்வேறு பிரிவுகளில் பணிபுரிகிறோம்.
குறைந்த மாத சம்பளத்தில் குடும்பத்தை நடத்த முடியாமல் தவிக்கிறோம். வாரத்தில் 3 நாள் மட்டுமே பணி என்ற நிலையில், 2010ல் பணியில் அமர்த்திய சிறப்பு ஆசிரியர்களுக்கு கூட, ரூ.2 ஆயிரம் வரை சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 2009ல் முதல் ஆர்.எம். எஸ்.ஏ., திட்டத்தில் பணிபுரியும் எங்களுக்கு சம்பள உயர்வு இன்றி வஞ்சிக்கப்படுகிறோம்" என்றனர்.

தப்பிக்க முயற்சிக்கும் போலி ஆசிரியர்கள் - உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் போலி சான்றிதழ் ஆசிரியர்களை, களையெடுக்கும் முயற்சியை மாநகராட்சி கைவிட்டுள்ளது. இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுப்பதற்குள், மாநகராட்சி பள்ளிகளை விட்டு, பணி மாறுதல் பெற, போலி ஆசிரியர்கள் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில், 122 துவக்க பள்ளிகள் உள்ளன. இதற்காக, 2,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.
2 பேர் நீக்கம்
இதில், பெரும்பாலான இடைநிலை ஆசிரியர்கள், கடந்த, 1995ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை பல்வேறு கட்டங்களில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நேரடியாக பணி நியமனம் செய்யப்பட்டவர்கள். அப்போது, இடைநிலை ஆசிரியர் பயிற்சி, கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அப்போது பணி நியமனம் பெற்ற பலர், முறையான ஆசிரியர் பயிற்சி பெறாமல் 8, 10ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் போலியாக சான்றிதழ் பெற்று, அதன்மூலம் பணியில் சேர்ந்திருப்பதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து, அடிக்கடி சர்ச்சை எழுவதும், மாநகராட்சி கல்வித்துறை அவ்வப்போது நடவடிக்கை எடுப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. ஐ.ஏ.எஸ்., அதிகாரி விஜயகுமார், மாநகராட்சி கமிஷனராக இருந்தபோது, இந்த விவகாரத்தில் இரண்டு பேரை பணிநீக்கம் செய்தார். அதன்பிறகு கடந்த ஆண்டு இப்பிரச்னை வெடித்தது.
தொடர்கிறது
அப்போது ஒன்பது பேர் மீது புகார் நிரூபிக்கப்பட்டு, எட்டு பேரை, தற்போதைய மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர் பணிநீக்கம் செய்தார். ஒருவரின் சான்றிதழ் உண்மையானது என்று கூறி, அந்த ஆசிரியர் மட்டும் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், 2,000 ஆசிரியர்களின் சான்றிதழ்களையும் ஆய்வுசெய்து, போலி ஆசிரியர்களை முழுமையாக களையெடுக்க, மேயர் சைதை துரைசாமி உத்தரவிட்டார்.
இதற்காக 2,000 ஆசிரியர்களின் சான்றிதழ் நகல்களை, மாநகராட்சி கல்வித்துறை பெற்றது. ஆய்வின் அடிப்படையில், தற்போது பணிபுரியும் ஆசிரியர்களில் யாரும் போலி சான்றிதழ் பெற்றவர்கள் இல்லை என்ற முடிவுக்கு மாநகராட்சி வந்துள்ளது. ஆனால், தற்போதும் 50க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ் ஆசிரியர்கள் பணியில் இருப்பதாக விவரம் அறிந்த மாநகராட்சி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த போலி சான்றிதழ் ஆசிரியர்கள், தங்கள் பணியை காப்பாற்றிக்கொள்ள, மேலிடங்களுக்கு பணம் கொடுத்து சரிக்கட்ட, ஆட்களை பிடிக்கும் வேலையில் இறங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தனி குழு தேவை
சமீபத்தில் புதுச்சேரி அரசு பள்ளியில், போலி சான்றிதழ் ஆசிரியர்கள் சிக்கியதைத் தொடர்ந்து, மாநகராட்சி இந்த விஷயத்தை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் கையில் எடுக்கலாம் என்று கருதப்படுவதால், சில ஆசிரியர்கள், மாநகராட்சி பள்ளியில் இருந்து வெளி இடத்திற்கு பணி மாறுதல் பெற முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக தடையில்லா சான்று கேட்டு சில ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், மாநகராட்சி கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த விஷயத்தில் மாநகராட்சி விஜிலென்ஸ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் விசாரணையை மட்டும் நம்பாமல், போலி ஆசிரியர்களை களையெடுக்க, அரசு தனி குழுவை அமைக்க வேண்டும் என்றும், இதற்கு மேயர் சைதை துரைசாமி ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு அதிகாரம் உண்டு: உயர்நீதிமன்றம்

மதுரை: ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க, கலெக்டருக்கு அதிகாரம் உள்ளது என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், கன்னியாகுமரி பேச்சிப்பாறையில் அரசு பழங்குடியினர் உறைவிட மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு ஆசிரியராக பணிபுரிந்தவர் ரசாலம். இவர், நாகர்கோவில் பஸ் ஸ்டாண்டில் இருந்த பிளஸ் 2 மாணவர்களை, கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, போராட்டத்தை தூண்டினார் எனக்கூறி, கன்னியாகுமரி கலெக்டர் 2013 ல் சஸ்பெண்ட் செய்தார்.
இதை எதிர்த்து ரசாலம், என் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு அதிகாரம் இல்லை. ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிதான் நடவடிக்கை எடுக்க முடியும். விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்கவில்லை. கலெக்டர் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என, ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி கே.கே.சசிதரன் முன், மனு விசாரணைக்கு வந்தது. கலெக்டர் தரப்பில், தேர்வு  சமயத்தில் மாணவர்களை படிக்கவிடாமல், கலெக்டர் அலுவலகம் அழைத்து வந்தார். இது நன்னடத்தையை மீறிய செயல் என வலியுறுத்தப்பட்டது.
நீதிபதி: கலெக்டர்தான் மாவட்டத்திற்கு தலைவர். அனைத்துத் துறைகளுக்கும் பொறுப்பானவர். பொதுத் தேர்வு துவங்க 5 நாட்களுக்கு முன்பு, மாணவர்களை கலெக்டர் அலுவலகத்திற்கு, மனுதாரர் அழைத்து வந்தது நன்னடத்தையை மீறிய செயல். இது பற்றி, குழந்தைகள் நலக்குழு, நேசமணி நகர் போலீசில் புகார் செய்துள்ளது.
மனுதாரர் மீது கலெக்டர் முதலில் நடவடிக்கை எடுத்தாலும், பின் ஆதிதிராவிடர் நலத்துறையின் ஒப்புதல் பெற்றுள்ளார். இதில் தவறு காண முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.

செப்டம்பர் 25ம் தேதி பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள்

சென்னை: "பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள், செப்டம்பர் 25ம் தேதி துவங்கும்" என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
செப்டம்பர் மற்றும் அக்டோபரில், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு துணைத் தேர்வுகள், செப்டம்பர் 25ம் தேதி துவங்குகின்றன. பிளஸ் 2 துணைத் தேர்வுகள் செப்டம்பர் 25ம் தேதி துவங்கி, அக்டோபர் 9ம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு தேர்வுகள்  அக்டோபர்  4ம் தேதி வரையும் நடக்கின்றன.
விண்ணப்பிக்க அவகாசம்
ராமநாதபுரம்: பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு, தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க 2 நாள் அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு சேவை மையங்கள் (நோடல் சென்டர்கள்) மூலம் விண்ணப்பிக்க, இன்று (ஆகஸ்ட் 14) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஆக., 19 வரை அவகாசம் (3 நாள் விடுமுறை தவிர) நீட்டிக்கப்பட்டுள்ளது.
"அந்தந்த கல்வி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் மூலம் www.tndge.in என்ற இணையதள முகவரியில், தேர்வு சேவை மைய விவரத்தை தெரிந்து கொண்டு, தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்" என அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

அரசு பள்ளிகளின் தரம் தமிழகம் முழுவதும் இன்று முதல் ஆய்வுப் பணி

தமிழகத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளின் கல்வித் தரம் குறித்த ஆய்வு 3 இயக்குநர், 12 இணை இயக்குநர்கள் தலைமையில் இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் தொடக்ககல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறை ஆகியவற்றின் கீழ் இயங்கும் பள்ளிகளில் கல்வித் தரம், ஆசிரியர்கள் செயல்பாடு, பள்ளி நிர்வாகம் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதன்படி இன்று முதல், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆய்வுப் பணி நடக்கிறது. இதில், 32 மாவட்டங்கள் 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 7 நாட்கள் இந்த ஆய்வு நடக்கிறது. பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்க கல்வி இயக்குநர், ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர் ஆகியோர் தலைமையில் 12 இணை இயக்குநர்கள் இந்த ஆய்வுப் பணியில் ஈடுபட உள்ளனர். ஆய்வுப் பணி இரண்டு பிரிவுகளாக நடக்கிறது. தொடக்க கல்வித் துறையின் கீழ் இயங்கும் நடுநிலைப் பள்ளிகளில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்படுவார்கள். பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலை மேனிலைப் பள்ளிகளில் நடக்கும் ஆய்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.கல்வி சார்ந்த ஆய்வில் பாட வாரியாக ஆசிரியர்கள் எப்படி பாடம் நடத்துகின்றனர். மாணவர்களின் கற்றல் திறன் எப்படி உள்ளது என்பது உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்படும். முடிவில் 100 சதவீதம் தேர்ச்சி காட்டிய பள்ளிகளுக்கு ஷீல்டுகள் கிடைக்கும். ஆனால், 75 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி காட்டிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பாட ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்படும். தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். மேலும், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பதற்கு வசதியாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி கையேடுகள் வழங்கவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதில் சுமார் 15 லட்சம் மாணவ மாணவியர் இந்த பயிற்சி கையேடுகளை பெறுவார்கள்.

ஆசிரியர் இயக்க வரலற்றில் எனது நினைவலைகள் நூல் அறிமுக கூட்டம்


8/13/2014

நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் வினாடி-வினா போட்டி

காளையார்கோவில்: காளையார்கோவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், அறிவியல் வினாடி-வினா போட்டி நடைபெற்றது.
முதல்வர் ரஞ்சனி துவக்கி வைத்தார். பேராசிரியர் ஆனந்தி போட்டியை நடத்தினார். மரக்காத்தூர் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடமும், மேலமருங்கூர் பள்ளி இரண்டாவது இடமும், கவுரிபட்டி பள்ளி மூன்றாவது இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரோட்டரி கிளப் சுப்ரீம் பட்டயத்தலைவர் ஆரோக்கியசாமி , தலைவர் ஞனாபிரகாசம், செயலாளர் அருள்சாமி, மாவட்டதுணைத்தலைவர் ரகுபதி பரிசு வழங்கினார்.

ஆக.17ல் இக்னோ நுழைவுத் தேர்வு

மதுரை இக்னோ மண்டல மைய இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளதாவது: இக்னோவின் 2015ம் ஆண்டு எம்.பி.ஏ., எம்.எட்., மற்றும் பி.எட்., சேர்க்கைக்கான நுழைவு தேர்வு ஆக.,17 ல் நடக்கிறது.மதுரை மண்டலத்தில் மதுரை, கோவை, ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், தஞ்சை, சாத்துார், தேவகோட்டை, உத்தமபாளையம், ராமநாதபுரம் ஆகிய 10 மையங்களில் 4,800 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
 இதற்கான நுழைவு சீட்டு மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இக்னோவின் இணையதளம் மூலம் மாணவர் பெயர் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 0452- 238 0733 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்

ஆண்டுக்கு 500 ஆசிரியர் பயிற்றுநர்களை மட்டுமே பள்ளிக்கு ஈர்த்துக்கொள்ள முடியும் - பள்ளிக்கல்வி இயக்குநர்ஆசிரியர் இயக்கங்களின் நியாயமான போராட்டத்தை தடுக்க கல்வித்துறை தீவிரம்


வரும் பொது தேர்வில் 20 இலட்சம் மாணவர்கள் பங்கேற்பார்கள் - கல்வித்துறை எதிர்பார்ப்பு


தேர்ச்சி குறைவிற்கு ஆசிரியர்களை குறை கூற முடியாது. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


தமிழகத்தில் 17 ஆயிரம் தொடக்கபள்ளிகள், ஈராசிரியர் பள்ளிகளாக இயங்குகின்றன: ஆய்வுத் தகவல்

தமிழகத்தில் 17 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளில் 2 ஆசிரியர்களே பணியாற்றுவதாக அரசு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் 6 முதல் 14 வயதுக் குட்பட்ட குழந்தைகளின் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதில் பல்வேறு சலுகைகளை அறிவித்து அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் தொடக்கப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்பது குறித்து பள்ளிக் கல்வி மேலாண்மை தகவல் (எஸ். இ.எம்.அய்.எஸ்) மையம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் சில பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகவும், 17 ஆயிரம் பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகவும் இயங்குவது தெரியவந்துள்ளது.
கடந்த 2011 -2012ஆம் ஆண்டு கணக்குப்படி தமிழகத்தில் 34871 தொடக்கப் பள்ளிகள் இயங்கின. அவற்றில் 60986 ஆசிரியர்களும், நிதியுதவி பெறும் பள்ளிகளில் 24338 ஆசிரியர்களும் பணியாற்றினர். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 33000 தொடக்கப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் சுமார் 30 லட்சம் குழந்தைகள் பயிலுகின்றனர். தொடக்கப் பள்ளிகள் குறித்து எஸ்.இ.எம்.அய்.எஸ் எடுத்த புள்ளிவிவரப்படி மேற்கண்ட தகவல் பெறப்பட்டுள்ளது.
மேலும் மலைப்பிரதேசம், எல்லை யோரம் போன்ற பகுதிகளில் இயங்கும் பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே உள்ளதாக அந்த புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. இது தவிர 5 குழந்தைகள் மட்டுமே படிக்கும் பள்ளிகள் 500 என்பதும் தெரியவந்துள்ளது. 5 முதல் 25 குழந்தைகள் இருந்தாலும் அந்த பள்ளிக்கு 2 ஆசிரியர்தான் நியமிக்க முடியும் என்பதால் இரண்டு ஆசிரியர்களை கொண்டே இவை இயங்குகின்றன. இந்த விவரம் தற்போது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கூறியது: தமிழகத்தில் ஓராசிரியர் பள்ளிகள் என்பது கிடையாது. ஆனால் 2 ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளில் ஒருவர் மாறுதலாகியோ, மாற்றுப்பணிக்கோ சென்று விட்டால், ஒரு ஆசிரியர்தான் கவனிக்க வேண்டும். தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை புள்ளி விவரம் எடுப்பது, மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்துவதால் ஒரு ஆசிரியர்தான் பள்ளிகளில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆசிரியர் மாணவர் விகிதாசாரப்படி, குறைந்த மாணவர் உள்ள பள்ளிக்கு 2 ஆசிரி யருக்கு மேல் நியமிக்க முடியாது என்று விதி உள்ளதே இதற்கு காரணம். இது போன்ற பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்த்து தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

8/09/2014

ஆசிரியர் இயக்க வரலாற்றில் தோழர் மா.ச.முனுசாமியின் நினைவலைகள் - நூல் அறிமுக கூட்டம்

நாள்: 15.08.2014 வெள்ளிக்கிழமை, மாலை - 3.00 மணி
இடம்: கோட்டை மூலை ஆரம்பப்பள்ளி, சிவகங்கை

தலைமை: திரு.ஆ.முத்துப்பாண்டியன், TNPTF மாவட்டத்தலைவர்

முன்னிலை: திரு.தே.ஜோசப்ரோஸ், TNPTF மாநிலத்துணைத்தலைவர்

வரவேற்புரை: திரு.ஆ.தாமஸ் அமலநாதன், TNPTF மாவட்டச்செயலாளர்

அறிமுக உரை:
திரு.ந.பர்வதராஜன், TNPTF முன்னாள் மாநிலப் பொதுச்செயலாளர்

வாழ்த்துரை:
திரு.செ.நீலமேகம், TNPTF முன்னாள் மாநிலத் துணைத்தலைவர்
திரு.எம்.செபஸ்தியான், TNPTF முன்னாள் மாவட்டத்தலைவர்
திரு.என்.முத்துச்சாமி, TNPTF முன்னாள் மாவட்டச்செயலாளர்
திரு.ந.காத்தமுத்து, TNPTF முன்னாள் மாவட்டத்தலைவர்

ஏற்புரை: திரு.மா.சா.முனுசாமி, அவர்கள் நூலாசிரியர்

நன்றியுரை: திரு.வி.சிங்கராயர் , TNPTF மாவட்டப்பொருளாளர்

அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம்.