தாம்பரம் : பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கழிவறை மற்றும் குடிநீர் குழாய்களை சிலர் உடைத்துள்ளனர். அனகாபுத்தூரில் பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு அப்பகுதியை சேர்ந்த ஏழை மாணவ, மாணவிகள் 450 பேர் படிக்கின்றனர். இந்த பள்ளியில் கழிவறை இல்லாததால், மாணவர்கள் சாலையில் உள்ள கால்வாய், அருகில் உள்ள புதர்கள் ஆகியவற்றையே கழிவறையாக பயன்படுத்தினர். இதனால் சுகாதாரகேடு ஏற்பட்டு, மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதை அறிந்த தனியார் கம்ப்யூட்டர் நிறுவனம் இரண்டை லட்சம் ரூபாய் செலவில் கழிவறை, குடிநீர் தொட்டி மற்றும் குழாய்கள் அமைத்துக் கொடுத்தது.
பள்ளி காவலாளி மதியழகன் நேற்று காலை பள்ளியை திறந்தார். அப்போது மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறை, குடிநீர் குழாய் உடைந்து கிடந்தன. தலைமை ஆசிரியர் விஜய பாரதிக்கு தகவல் கொடுத்தார். அவர் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த பள்ளிக்கு இரவு காவலாளி இல்லை. எனவே இரவு நேரங்களில் பள்ளிக்குள் நுழைந்து சிலர் மது அருந்துவது, பான்பராக் போடுவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே இதுகுறித்து போலீசார், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக