காளையார்கோவில் அரசு கிழக்கு தொடக்கப்பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்ட சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.புத்தகங்களை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மார்த்தாள் பிரபாவதி வழங்கினார்.
நிகழ்ச்சியில் காளையார்கோவில் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பெரியசாமி, கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் வாசுகி, தலைமையாசிரியர் தாமஸ் அமலநாதன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அழகாபுரி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் கொல்லங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவர்களுக்கும் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்ட சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக