சிவகங்கை: அரசாணைகளின்படி தமிழாசிரியர்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும் என தமிழக தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தமிழாசிரியர் கழக மாநில துணைச் செயலாளர் இளங்கோ கூறியதாவது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் தமிழாசிரியர்களுக்கு அரசு பல்வேறு உரிமைகளை வழங்கி உள்ளது. அதாவது தமிழாசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், தலைமையாசிரியராக ஆக்குதல், வகுப்பு ஆசிரியராக நியமித்தல், உதவி தலைமையாசிரியராக நியமித்தல், பள்ளி துணை ஆய்வாளர் மற்றும் உதவி கல்வி அலுவலராக நியமித்தல் உள்ளிட்ட உரிமைகளை தமிழாசிரியர்களுக்கு வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. ஆனால் இந்த அரசாணையை சில அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கடைப்பிடிப்பதில்லை.மேலும் சில பள்ளிகளில் வருகைப் பதிவேட்டில் பட்டதாரி ஆசிரியர் இளையவர் ஆனாலும் அவரது பெயருக்கு பின்பே தமிழாசிரியர் பெயர் எழுதப்படுகிறது. தமிழாசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்கப்படுவதால் பணிமூப்பு அடிப்படையில் வருகை பதிவேட்டில் ஆசிரியர்களின் பெயரை எழுத அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக