பள்ளிகளுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், குழு சார்பில் தனித்தனியே பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்கின் மீதான விசாரணை, 24ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு, ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையிலான குழு, கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்து அறிவித்தது. இந்தக் கட்டணத்தை ஏற்காத பள்ளிகள் சார்பில், ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதி குழு கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், கட்டணம் நிர்ணயம் தொடர்பாக எங்கள் ஆட்சேபனைகளை பரிசீலிக்க வேண்டும் என்றும், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இம்மனுக்களுக்கு, கட்டண நிர்ணய குழு சார்பில், அரசு பிளீடர் வெங்கடேஷ், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது: பள்ளிகள் தரப்பில் அளிக்கப்பட்ட தகவல்களை, கவனமுடன் பரிசீலித்து, சட்டப்படி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பள்ளிகளின் சாதக, பாதக அம்சங்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதி உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு முன், அனைத்து அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டன. பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், கல்வி அதிகாரிகளின் கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டன.
ஒவ்வொரு பள்ளிக்கும் போதிய அவகாசம் வழங்கப்பட்டது.
கல்வி கட்டண நிர்ணயம் தொடர்பான சட்டம் செல்லும் என, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சட்டத்துக்கு பள்ளிகள் கட்டுப்பட்டவை. சிறுபான்மை பள்ளிகள் என தற்போது பிரச்னை எழுப்புவது தேவையற்றது. கல்வி போதிக்கும் அனைத்துப் பள்ளிகளும் இந்தச் சட்டத்துக்கு கட்டுப்பட்டவை. மூன்று ஆண்டுகளுக்கு மேல் அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு, கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. அங்கீகாரம் புதுப்பிக்கப்பட்ட உடன், அந்தப் பள்ளிகள், கட்டண நிர்ணயக் குழுவை அணுகலாம். எனவே, பள்ளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு பதில் மனுக்களில் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் மீதான விசாரணையை, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி வாசுகி அடங்கிய முதல் பெஞ்ச் வரும் 24ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக