டெல்லி : இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு பணிபுரியச் செல்லும் டாக்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் 6.13 லட்சம் டாக்டர்கள் உள்ளனர். 13.30 லட்சம் டாக்டர்கள் உள்ளனர், இதனால் பற்றாக்கறை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. நம் நாட்டின் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் 10,000 பேருக்கு 6 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில், வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்லும் டாக்டர்கள் அதிகரித்து வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் 3,000 டாக்டர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 767 டாக்டர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டதாக இந்திய மருத்துவக் கவுன்சில் கூறியுள்ளது. ஆனால், இந்தக் கவுன்சிலின் கடிதம் பெறாமல் நேரடியாக வெளிநாடுகளுக்குச் சென்ற மருத்துவர்கள் எண்ணிக்கை இதை விட மிக மிக அதிகமாக இருக்கலாம் என்று தெரிகிறது.
அமெரிக்காவில் சுமார் 50,000 இந்திய டாக்டர்களும், இங்கிலாந்தில் 40,000 இந்திய டாக்டர்களும் பணியாற்றி வருகின்றனர். அமெரிக்காவில் 1,325 பேருக்கு ஒரு இந்திய டாக்டர் உள்ளார்.
நம் நாட்டில் ஆண்டுதோறும் 30,558 மருத்துவப் பட்டதாரிகள் உருவாக்கப்படுகின்றனர். ஆனால், முதுகலை மருத்துவக் கல்வியில் 12,346 இடங்கள் மட்டுமே உள்ளன. இதனால், உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதில் பெரும்பாலானவர்கள் அங்கேயே தங்கிவிடுகின்றனர்.
அதே நேரத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த மிகச் சிறந்த மருத்துவர்களை இந்தியாவின் மாபெரும் தனியார் மருத்துவமனைகள் ஈர்ப்பதும் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக