எஸ்.எஸ்.எல்.ஸி., படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஜாதி, இருப்பிடம், வருமானச்சான்றுகள் அந்தந்த பள்ளிகள் மூலம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு வெளியிட்டுள்ள கலெக்டர் காமராஜ் அறிக்கை: மாணவ, மாணவியர், செப்டம்பர் 30ம் தேதிக்குள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம், விண்ணப்பம் வழங்க வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்களை, ஆதாரங்களுடன் பள்ளி தலைமை ஆசிரியர், அக்டோபர் 15க்குள் உரிய தாசில்தாருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
உரிய விசாரணைக்குப்பின், தகுதியானவர்களுக்கு சான்றிதழை டிசம்பர் 31க்குள் தாசில்தார்கள், பள்ளி தலைமை ஆசிரியருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இச்சான்றிதழ்களை ஜனவரி மாதத்துக்குள், மாணவ, மாணவியருக்கு வழங்க வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் இயங்கும் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிக் பள்ளி, சுயநிதி பள்ளி மற்றும் சி.பி.எஸ்.சி., பள்ளிகள், அப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி., படிப்பவர்களில் இதுவரை இச்சான்றுகள் பெறாதவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் விண்ணப்பங்களை வழங்க வேண்டும்.
ஜாதி, இருப்பிடம், வருமான சான்று பெற தேவையான ஆவண நகல்களை, மாணவர்களிடம் விடுதல் இன்றி பெற்று வழங்க வேண்டும்.
எஸ்.எஸ்.எல்.ஸி., படிக்கும் அனைத்து மாணவ, மாணவியரும் விடுதல் இன்றி சான்றிதழ் பெற, முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி மெட்ரிக் ஆய்வாளர், பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், தாசில்தார்கள் மற்றும் சார் அலுவலர்கள் அனைவரும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு, இப்பணியில் மாவட்டம் 100 சதவீதம் முதன்மையாக, சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பொதுப்பள்ளிகள் அல்லது சிறப்பு பள்ளிகளில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வியில் ஆர்வமுள்ள எந்த ஒரு பட்டதாரியும் பி.எட். சிறப்புக்கல்வி பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
பட்டப்படிப்பை படித்துள்ள மாற்றுத்திறனாளிகளும் இப்படிப்பில் சேர்ந்து பயன் அடையலாம். பி.எட். சிறப்புக்கல்வி பட்டப்படிப்பு பயிலத்தேர்வு செய்யப்படும் 500 மாணவர்களும், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உள்ள 9 கல்வி மையங்களில் படிப்பு மற்றும் பயிற்சி பெற அனுமதிக்கப்படுவர்.
பி.எட். சிறப்பு படிப்பிற்கு மாணவர்கள் 9.10.2011 அன்று தமிழ்நாட்டின் பல இடங்களில் நடைபெறும் பொது நுழைவுத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழக வளாகம் மற்றும் கல்வி மையங்களில் இன்று (புதன்கிழமை) 19-ந்தேதி வரை வழங்கப்படும்.
பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியை அ.கல்யாணி பல்கலைக்கழக வளாகத்தில் பி.எட். சிறப்புக்கல்வி படிப்பிற்கான விண்ணப்ப படிவத்தை இன்று வெளியிடுகிறார்.
இது குறித்து ஈரோடு வெளியிட்டுள்ள கலெக்டர் காமராஜ் அறிக்கை: மாணவ, மாணவியர், செப்டம்பர் 30ம் தேதிக்குள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம், விண்ணப்பம் வழங்க வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்களை, ஆதாரங்களுடன் பள்ளி தலைமை ஆசிரியர், அக்டோபர் 15க்குள் உரிய தாசில்தாருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
உரிய விசாரணைக்குப்பின், தகுதியானவர்களுக்கு சான்றிதழை டிசம்பர் 31க்குள் தாசில்தார்கள், பள்ளி தலைமை ஆசிரியருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இச்சான்றிதழ்களை ஜனவரி மாதத்துக்குள், மாணவ, மாணவியருக்கு வழங்க வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் இயங்கும் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிக் பள்ளி, சுயநிதி பள்ளி மற்றும் சி.பி.எஸ்.சி., பள்ளிகள், அப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி., படிப்பவர்களில் இதுவரை இச்சான்றுகள் பெறாதவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் விண்ணப்பங்களை வழங்க வேண்டும்.
ஜாதி, இருப்பிடம், வருமான சான்று பெற தேவையான ஆவண நகல்களை, மாணவர்களிடம் விடுதல் இன்றி பெற்று வழங்க வேண்டும்.
எஸ்.எஸ்.எல்.ஸி., படிக்கும் அனைத்து மாணவ, மாணவியரும் விடுதல் இன்றி சான்றிதழ் பெற, முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி மெட்ரிக் ஆய்வாளர், பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், தாசில்தார்கள் மற்றும் சார் அலுவலர்கள் அனைவரும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு, இப்பணியில் மாவட்டம் 100 சதவீதம் முதன்மையாக, சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பி.எட்., சிறப்பு கல்வி விண்ணப்பப் படிவம்
தமிழ்நாடு திறந்த நிலைப்பல்கலைக்கழகம் கடந்த 2008-ம் ஆண்டு முதல் பி.எட். சிறப்புக்கல்வி பட்டப்படிப்பை நடத்தி வருகிறது.பொதுப்பள்ளிகள் அல்லது சிறப்பு பள்ளிகளில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வியில் ஆர்வமுள்ள எந்த ஒரு பட்டதாரியும் பி.எட். சிறப்புக்கல்வி பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
பட்டப்படிப்பை படித்துள்ள மாற்றுத்திறனாளிகளும் இப்படிப்பில் சேர்ந்து பயன் அடையலாம். பி.எட். சிறப்புக்கல்வி பட்டப்படிப்பு பயிலத்தேர்வு செய்யப்படும் 500 மாணவர்களும், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உள்ள 9 கல்வி மையங்களில் படிப்பு மற்றும் பயிற்சி பெற அனுமதிக்கப்படுவர்.
பி.எட். சிறப்பு படிப்பிற்கு மாணவர்கள் 9.10.2011 அன்று தமிழ்நாட்டின் பல இடங்களில் நடைபெறும் பொது நுழைவுத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழக வளாகம் மற்றும் கல்வி மையங்களில் இன்று (புதன்கிழமை) 19-ந்தேதி வரை வழங்கப்படும்.
பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியை அ.கல்யாணி பல்கலைக்கழக வளாகத்தில் பி.எட். சிறப்புக்கல்வி படிப்பிற்கான விண்ணப்ப படிவத்தை இன்று வெளியிடுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக