எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களை வெறுக்கும் சமூகம்தான் நம்முடையது. எய்ட்ஸ் தொற்று வியாதி அல்ல என்று எவ்வளவுதான் மருத்துவம் எடுத்துக் கூறினாலும், அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை அரவணைத்து கொள்ளும் மனம் நமது சமூகத்திற்கு இல்லை. எய்ட்ஸ் தாக்கிய குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்தில் தொடர்ந்து படிப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
இந்த நிகழ்வு தமிழகத்தில்தான் அரங்கேறியுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகளுக்கான `எய்ட்ஸ் ஹோம் ஆப் ஹோப்' என்ற இல்லத்தில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 29 குழந்தைகள் இருக்கின்றன. இந்த 29 குழந்தைகளும் சித்தாமூர் பெருங்கரணை கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலை பள்ளிக்கூடத்தில் பல்வேறு வகுப்புகளில் படித்து வந்தனர்.
அவர்களுக்கு எய்ட்ஸ் நோயுள்ள விவரம் தெரிந்ததும், பள்ளிக்குள் நுழைவதற்கு அனுமதி மறுத்துவிட்டது நிர்வாகம். இவர்கள் மூலம் மற்ற குழந்தைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் எய்ட்ஸ் நோய் பரவிவிடும் என்ற காரணத்தை கூறியது பள்ளி நிர்வாகம். அப்படி பரவாது என்று எடுத்துக் கூறிய பிறகும், அந்த குழந்தைகளை சேர்க்க மறுத்துவிட்டனர்.
எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 29 பேரையும் மீண்டும் பள்ளியில் சேர்க்கக்கூடாது என்று பெற்றோர், உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள் கூட்டத்திலும் முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. இது குறித்து உள்ளாட்சி அமைப்பு, மாவட்ட கல்வி அதிகாரிகள், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பாதிக்கப்பட்ட 29 குழந்தைகளும் தங்கள் படிப்பை தொடர முடியாமல் இல்லத்திலேயே முடங்கினர், தனிமையில் வாடினர். ஆனால் அரசியல் சாசனத்தின் 21(ஏ) பிரிவின்படி 6 வயதில் இருந்து 14 வயதுவரையான குழந்தைகளுக்கு கட்டாய இலவச கல்வி அளிக்கப்பட வேண்டும் என்றும் அதை யாரும் மறுக்கக்கூடாது என்றும் கூறியிருக்கிறது.
பாதிக்கப்பட்ட இந்த குழந்தைகளுக்கு நீதிமன்றம் சென்று நியாயம் கேட்டு போராடி வென்றுள்ளார் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை சேர்ந்த ராஜா. (பெயர் மாற்றம்) எச்.ஐ.வி. கிருமிகளால் பாதிக்கப்பட்ட ராஜா, காஞ்சிபுரம் மாவட்ட எச்.ஐ.வி. 'பாசிட்டிவ்' மக்களுக்கான இயக்கத்தில் இருக்கிறார். இந்த இயக்கத்தின் மூலம் எய்ட்ஸ் கிருமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கி, அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக பாடுபட்டு வருகிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக