மதுரை : ""தனியார், சிறுபான்மைப் பள்ளிகளில், சத்துணவு ஊழியர்களை நியமனம் செய்யும் உரிமை, அரசுக்கு உண்டு. தனியார் பள்ளி நிர்வாகங்கள், உரிமை கோர முடியாது'' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. பல்வேறு தனியார் பள்ளி நிர்வாகங்கள் சார்பில், விருதுநகரை சேர்ந்த அழகிரிசாமி உட்பட 10 பேர் தாக்கல் செய்த மனுவில், "சிறுபான்மை மற்றும் தனியார் பள்ளி சத்துணவு மையங்களில், ஊழியர்களை நியமிக்க, அவர்களுக்கு உரிமை இல்லை என்ற அரசு உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்' என கோரியிருந்தனர்.
மனு, நீதிபதி கே.சந்துரு முன்னிலையில், விசாரணைக்கு வந்தது. நீதிபதி பிறப்பித்த உத்தரவு: அரசு, ஏற்கனவே சத்துணவு மைய சமையல்காரர் மற்றும் உதவியாளர்களை இட ஒதுக்கீட்டின்படி நியமிக்க உத்தரவிட்டது. புதிய உத்தரவில், சிறுபான்மை, தனியார் பள்ளி நிர்வாகங்கள், அப்பகுதியை சேர்ந்த 5 பேரை, பரிந்துரை செய்ய வேண்டும். அதில், ஒருவரை கலெக்டரின் நேர்முக உதவியாளர், பணி நியமனம் செய்வார்.
சிறுபான்மை, தனியார் பள்ளிகளில், அரசின் 100 சதவீத நிதியில் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. எனவே, ஊழியர்களை பணி நியமனம் செய்யும் உரிமை அரசுக்கே உண்டு. தனியார் பள்ளி நிர்வாகங்கள் உரிமை கோர முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நன்றி: தினமலர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக