3/26/2013
ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
லேபிள்கள்:
TNPTF NEWS
சிவகங்கையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
அலுவலகம் முன்பு அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக தமிழாசிரியர் கழக மாநில துணைத் தலைவர் இளங்கோ வரவேற்று ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார்.
தமிழினப் படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபட்சவைக் கண்டித்தும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியும், தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுத்திட வலியுறுத்தியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் சேதுசெல்வம் தலைமை வகித்தார்.
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் முத்துப்பாண்டி, மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் உதயசங்கர், உடற்கல்வி இயக்குநர், ஆசிரியர் சங்க மாநில உயர்நிலைக் குழு உறுப்பினர் சின்னையா அம்பலம், ஆங்கில மொழியாசிரியர் கழக மாநில பொதுச் செயலர் சேவியர், தமிழாசிரியர் கழக மாவட்டப் பொறுப்பாளர் நாகேந்திரன், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில துணைத் தலைவர் சங்கர், வரலாற்று ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலர் பழனியப்பன், பகுதி நேர ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் குமரேசன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.

G.O
லேபிள்கள்:
G.O.
- 246 பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் 50 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மொத்த 296 தலைமையரிசியர் பணியிடங்களின் பணிபுரியும் ஆசிரியர்களின் ஊதியம் அணைவருக்கும் கல்வி திட்டம் நிதிநிலையில் ஈடு செய்தல் குறித்தது
- உயர் நீதி மன்ற உத்திரவின் பேரில் தனியார் பள்ளிகளில் அடிப்படை வசதி செய்வதற்கான அறிவுரை கூறுதல் அரசானை
- சாஸ்திர பல்கலைக்கழகத்தில் வழங்கும் பி.எட் பட்டம் பிற பல்கலைக்கழகத்தில் கொடுக்கப்படும்பட்டத்திற்கு இணையாகக் கருதி ஊக்க உயர்வு அளித்தல் அரசாணை
- தமிழ்நாடு தொடக்கக்கல்வி - நீதிமன்ற தீர்பாணைக்குட்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு 01.06.1988 பணிக்காலத் தேர்வு-சிறப்புநிலை அரசாணை நடைமுறைப்படுத்துதல் - அரசு கூடுதல் விபரம் கோருதல்
3/25/2013
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 10+2+3 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர் களாக பணிபுரிபவர்களின் விவரம் சேகரிக்க உத்தரவு.
லேபிள்கள்:
Educational News
தொடக்கக் கல்வி துறையில் பணிபுரியும்
ஆசிரியர்களில் 10+2+3 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர்களாக
பணிபுரிபவர்களின் விவரங்களை உரிய படிவத்தில் அளிக்க
இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குனர்
உத்தரவில் கூறியிருப்பதாவது:
ஊராட்சி ஒன்றிய / நாகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்
பள்ளிகளில் 10+2+3 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது பணிபுரியும்
ஆசிரியர்களின் ஒன்றிய வாரியான எண்ணிக்கை விவரங்களை உரிய படிவங்களில்
26.03.2013 தேதியன்று தொடக்கக் கல்வி இயக்ககத்தில் நடைபெறும் ஆய்வுக்
கூட்டத்தில் அளித்திட அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கேட்டு
கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இது சார்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்களின் விவரங்களை
அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு தொடுத்து தீர்ப்பாணை பெற்றவர்களில்
தீர்ப்பாணையின் நகலினையும் கொண்டு வர அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி
அலுவலர்களும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளிகளில் ஜெராக்ஸ் இயந்திரங்களுக்கு சீல்: கல்வித்துறை நடவடிக்கை
தமிழகம் முழுவதும், எஸ்.எஸ்.எல்.சி.,
பொதுத்தேர்வுகள், நாளை மறுநாள் துவக்க உள்ளன. அதில், அதிக கவனத்தை கையாளும்
வகையில், தேர்வு மைய பள்ளிகளில் உள்ள, "ஜெராக்ஸ்" இயந்திரம் உள்ள அறைகளை
பூட்டி, சீல் வைக்க வேண்டும், என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வுகள், 27ம் தேதி
துவங்கி, ஏப்., 12ம் தேதி வரை நடக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 8
லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வெழுதுகின்றனர்.
பிளஸ் 2 தேர்வின் போது, திருவண்ணாமலை, நாமக்கல், திருச்சியில் உள்ள
பள்ளிகளில், தேர்வுக்கு அரைமணி நேரம் முன்னதாக, பள்ளியில் இருந்த ஜெராக்ஸ்
மிஷின் மூலம் வினாத்தாள், "ஜெராக்ஸ்" எடுத்து வினியோகிக்கப்பட்டதாக
புகார்கள் எழுந்தன. அப்பள்ளிகள் மீது பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை
எடுத்து வருகிறது.
'
நாளை மறுநாள், 10ம் வகுப்பு தேர்வுகள் துவக்கவுள்ள நிலையில், தேர்வு
மையங்கள் அமையவுள்ள பள்ளிகளுக்கு, பல்வேறு அதிரடி உத்தரவுகள்
பிறப்பிக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்கள் அமைக்கப்படும் பள்ளிகளில் உள்ள,
ஜெராக்ஸ் இயந்திரம் உள்ள அறைகள், தேர்வுக்கு முதல்நாளே பூட்டி, சீல் வைக்க
வேண்டும். தேர்வு நடத்தும் அலுவலர்கள், அதை உறுதி செய்யவேண்டும்.
மேலும், தேர்வு மைய பள்ளிகளின் பட்டியலை பெற்றுள்ள மின் வாரிய அதிகாரிகள்,
தடையில்லா மின்சாரம் வழங்க திட்டமிட்டு உள்ளனர். ஆனாலும், ஜெனரேட்டர்
தயார் நிலையில் வைக்குமாறு, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், தேர்வு மைய
பள்ளிகளுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.
3/23/2013
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதியமாக மொத்த பட்ஜெட்டில் 42 சதவீதம் ஒதுக்கீடு - நாளிதழ் செய்தி
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
அரசு
ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மாதச் சம்பளத்துக்காக மட்டும் தமிழக
அரசின் மொத்த பட்ஜெட்டில் இருந்து 42 சதவீதம் செலவிடப்படுவதாக நிதித் துறை
முதன்மைச் செயலாளர் க.சண்முகம் தெரிவித்துள்ளார்.
வரும்
நிதியாண்டுக்கான (2013-2014) வரவு- செலவு திட்ட மதிப்பீட்டில் சம்பளங்கள்
மற்றும் ஓய்வூதியங்களுக்காக ரூ.49 ஆயிரத்து 687 கோடி செலவாகும் என
மதிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலத்தில் 13 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர். மேலும், ஏழு லட்சம் பேர் ஓய்வூதியதாரர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கான சம்பளங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் ஓய்வூதியப் பலன்களாக மொத்த பட்ஜெட்டில் 42 சதவீதம் செலவிடப்படுகிறது.
சட்டப் பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையின் பிரதான அம்சங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அந்தத் துறையின் செயலாளர் க.சண்முகம் அளித்த பேட்டி:
பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வரும் நிதியாண்டுக்கான (2013-14) நிதிநிலை அறிக்கையின் மொத்த அளவு ஒரு லட்சத்து 41,518 கோடியாகும். இது, கடந்த ஆண்டைவிட ரூ.19,852 கோடி கூடுதலாகும்.
வருவாய் உபரி அதிகரிக்கும்: வரும் நிதியாண்டில் மாநில வரிகள் மூலமாக ரூ.86,065 கோடி வருவாயும், வரிகள் இல்லாத வகைகள் மூலம் ரூ.6,765 கோடியும், மத்திய அரசின் வரிகள் மூலம் ரூ.17,285 கோடியும், மானியங்களாக ரூ.8,463 கோடியும் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட நிலையிலேயே கடன் அளவு இருக்கும். அனுமதிக்கப்பட்ட ரூ.24,263 கோடியில், ரூ.21,142 கோடியை உத்தேசிக்கப்பட்ட கடன் அளவாகப் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மொத்த பட்ஜெட்டில், வரவுகளில் செலவுகளைக் கழித்தால் வருவாய்க் கணக்கில் உபரியாக ரூ.664.06 கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டின் அளவான ரூ.451.52 கோடியைக் காட்டிலும் அதிகமாகும்.
வருவாய் உபரி அதிகரிக்கும்போது நாம் கடன் வாங்கும் அளவு குறையும். அதன்படி, வருங்காலத்தில் தமிழகத்தில் வருவாய் உபரி அதிகரித்து கடனின் அளவு குறைக்கப்படும்.
டாஸ்மாக் மூலம் வருவாய்: தமிழகத்தில் வணிக வரிகள் மூலமாக நடப்பு நிதியாண்டில் ரூ.47 ஆயிரம் கோடி கிடைக்கும் என மதிப்பிட்டிருந்த நிலையில், கடந்த ஜனவரியுடன் முடிந்த காலத்தில் வரிகள் வழியாக ரூ.37,610 கோடி கிடைத்துள்ளது. டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் அரசுக்கு கலால் வரியாக நடப்பு நிதியாண்டில் ரூ.12,473 கோடி கிடைக்கும் என மதிப்பிட்டிருந்தபோதும் கடந்த ஜனவரி வரையிலான காலத்தில் ரூ.9,522 கோடி கிடைத்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட அளவை அடைவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் வரும் நிதியாண்டில் (2013-2014) ரூ.14,469 கோடி ஆயத்தீர்வை வரி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் முத்திரைத் தாள் விற்பனை உள்ளிட்டவற்றிலும் நிர்ணயித்த இலக்கு எட்டப்படும். தமிழகத்தில் வரிகளை வசூலிப்பதில் சிறப்பான முறை பின்பற்றப்படுவதால் எந்தத் தொய்வும் இல்லாமல் வரிகளை வசூலிக்க முடியும்.
சமூக நலத் திட்டங்களுக்கு நிதி: விலையில்லாத அரிசி, மடிக்கணினி உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு ரூ.43,449 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, மொத்த பட்ஜெட்டில் 31 சதவீதமாகும்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதியமாக மொத்த பட்ஜெட்டில் 42 சதவீதம் செலவிடப்படுகிறது. அதாவது, ரூ.49 ஆயிரம் கோடி அளவுக்கு ஊதியத்துக்காக அளிக்கப்படுகிறது. புதிய பணியிடங்களைத் தோற்றுவித்தது, பணியாளர்கள் தேர்வு போன்ற காரணங்களால் ஊதியம் வழங்குவதற்கான செலவு அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுகளில் ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அதற்கான செலவும் உயரும் என நிதித் துறை செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

தொடக்கக்கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிட விவரங்களை சமர்பிக்க 26.03.2013க்குள் தொடக்கக்கல்வித்துறை உத்தரவு
லேபிள்கள்:
Educational News
தொடக்கக்கல்வித்துறையில் 20.03.2013 அன்று உள்ளபடி ஊராட்சி ஒன்றியம்/
நகராட்சி/ மாநகராட்சி/ அரசு தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள
ஆசிரியர் பணியிட விவரங்களை குறிப்பிட்ட படிவத்தில் 26.03.2013 அன்று
தொடக்கக்கல்வி இயக்ககத்தில் நடைபெறும் கூட்டத்தில் சமர்பிக்க
தொடக்கக்கல்வித்துறை உத்தரவிட்
டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன . மேலும் இதேபோல் பள்ளிக்கல்விதுறையிலும் தகவல்
கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக பட்ஜெட் - கல்வித்துறைக்கான ஒதுக்கீடுகள் என்னென்ன?
லேபிள்கள்:
அறிவிப்பு
இந்த 2013-14 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித்துறைக்கென 16,965 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை
இந்த
2013-14ம் நிதியாண்டிற்கான, தமிழக பட்ஜெட், மார்ச் 21ம் தேதி, தமிழக
சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்
செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி
உள்ளிட்ட பல்வேறு கல்வித் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விபரங்கள்,
இந்த 2013-14 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித்துறைக்கென 16,965 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வரவிருக்கும் கல்வியாண்டில், 381 கோடி ரூபாய் வரையிலான பணப் பயனை 24.76 லட்சம் மாணவர்கள் பெறுவார்கள்.
பள்ளிகளுக்கான, கூடுதல் வகுப்பறைகள், குடிநீர் வசதிகள் போன்ற
பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை விரிவாக்கும் பணி, அனைவருக்கும்
கல்வித்திட்டம், தேசிய இடைநிலைக் கல்வித்திட்டம் மற்றும் நபார்டு வங்கி
நிதியுதவி ஆகியவற்றின் மூலம், தொடர்ந்து நடைபெறும்.
இந்த
2013-14ம் கல்வியாண்டில், அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு 700 கோடி
ரூபாயும், தேசிய இடைநிலைக் கல்வித் திட்டத்திற்கு 366.57 கோடி ரூபாயும்,
நபார்டு நிதியுதவி திட்டங்களுக்கு 293 கோடி ரூபாயும் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு, கூடுதல் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்த 50
கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 2013-14 கல்வியாண்டின்
இறுதிக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் 100% பாதுகாக்கப்பட்ட குடிநீர்
வசதியுடன் கழிப்பறை வசதிகளும் கிடைப்பதை உறுதிசெய்ய முடியும்.
விரிவான ஒதுக்கீட்டு விபரங்கள்
97.70 லட்சம் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க 217.22 கோடி ஒதுக்கீடு.
86.71 லட்சம் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்க 110.96 கோடி ஒதுக்கீடு.
14.02 லட்சம் மாணவர்களுக்கு இலவசப் பேருந்து பயணச் சலுகை வழங்க 323.70 கோடி ஒதுக்கீடு.
53.53 லட்சம் மாணவர்களுக்கு, நான்கு சீருடை தொகுப்புகள் வழங்க 353.22 கோடி ஒதுக்கீடு.
13 லட்சம் மாணவர்களுக்கு பள்ளிப் புத்தக பைகள் வழங்க 19.79 கோடி ஒதுக்கீடு.
6.1 லட்சம் மாணவர்களுக்கு காலணிகள் வழங்க 8.47 கோடி ஒதுக்கீடு
9.67 லட்சம் மாணவர்களுக்கு வடிவியல் பெட்டிகள், வரைபட புத்தகங்கள் போன்றவை வழங்க 6.65 கோடி ஒதுக்கீடு.
6.03 லட்சம் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க 200.98 கோடி ஒதுக்கீடு.
மலைப் பகுதிகளில் படிக்கும் 10.30 லட்சம் மாணவர்களுக்கு கம்பளி ஆடைகள் வழங்க 4.12 கோடி ஒதுக்கீடு.
32.79 லட்சம் மாணவர்களுக்கு சானிடரி நாப்கின்கள் வழங்க 54.63 கோடி ஒதுக்கீடு.
உயர்கல்வித் துறைக்கான ஒதுக்கீடு
புதிதாக 10 அரசு பல்தொழில்நுட்ப கல்லூரிகளையும், 2 புதிய அரசு பொறியியல் கல்லூரிகளையும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இக்கல்வியாண்டில்(2013-14),
இந்திய தகவல் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம், பாரதிதாசன் தொழில்நுட்ப நிறுவன
வளாகத்தில் செயல்படத் துவங்கும். ஏற்கனவே அறிவித்தபடி, கூடுதலாக,
மாநிலத்தில், 8 கலை-அறிவியல் கல்லூரிகள், இக்கல்வியாண்டு முதல் செயல்படத்
துவங்கும்.
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு, கல்வி கட்டணத்தை அளிக்கும் திட்டத்திற்கு, இக்கல்வியாண்டில், 673 கோடி ஒதுக்கீடு.
இக்கல்வியாண்டில், 5.65 இலவச மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வழங்கப்படும். இதற்காக, 1500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்காக, இக்கல்வியாண்டில், 112.50 கோடி ஒதுக்கீடு.
மதிய உணவுத்திட்டம்
இக்கல்வியாண்டில், பள்ளிக் குழந்தைகளுக்கான சத்துணவிற்கு, 1,492.86 கோடி ஒதுக்கீடு.
மேலும், 14,130 மதிய உணவு மையங்களில், 359.70 கோடி செலவில், சமையலறை, இருப்பு அறைக்கான கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கப்படும்.
அங்கன்வாடி
குழந்தைகளுக்கு வண்ண உடைகள் வழங்குவதற்கான திட்டம், இக்கல்வியாண்டில்,
விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம் மற்றும் திருநெல்வேலி
ஆகிய 5 மாவட்டங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்காக 4.30
கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், இக்கல்வியாண்டில், ஒருங்கிணைந்து குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்காக 1,320.52 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
3/21/2013
அரசு பள்ளிகளில் CCE செயல்திறன் பகுப்பு மென்பொருள் தமிழக அரசால் அறிமுகம்
லேபிள்கள்:
அறிவிப்பு,
Educational News
அரசு / ஊராட்சி
ஒன்றியப் பள்ளிகளில் CCE சார்பான பதிவேடுகள் மற்றும் மதிப்பெண் அட்டைகள்
ஆகியவற்றில் ஆசிரியர்களின் சுமையை குறைப்பது மற்றும் CCE செயல்திறன் பற்றி
அறிய "BEE EDUSYS" என்ற நிறுவனம் மூலம் முதற்கட்டமாக சோதனை அடிப்படையில்
ஒரு மாவட்டத்திற்கு 2 அரசு பள்ளிகள் வீதம் தேர்ந்தெடுத்து தமிழக முழுவதும்
64 பள்ளிகளுக்கு, இச்செயல்திறன் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இம்மென்பொருள் படிப்படியாக
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு / நகராட்சி / ஊராட்சி பள்ளிகளில்
நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மென்பொருள் மூலம்
FORMATIVE ASSESSMENT மற்றும் SUMMATIVE ASSESSMENT மதிப்பெண்கள் பதிவு மற்றும் தர மதிப்பீடு பிரித்தல் போன்ற பணிகள் செய்ய உதவியாக இருக்கும். மேலும் மென்பொருள் முழுமையாக
அனைத்து பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு ஆசிரியர்களுக்கு முப்பருவ
முறையில் உள்ள CCE சார்பான எழுத்து பணிகள் பெரும் பங்கு குறையும் என்று
எதிர்ப்பார்க்கப்படுகிறது.கற்பதை உங்கள் குழந்தை அனுபவிக்க வேண்டும்!...
லேபிள்கள்:
இணையச்செய்திகள்
நாம்
ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களை கற்கிறோம். கற்றல் செயல்பாடானது 24x7 என்ற
தொடர்ந்த செயல்பாடாக நம் வாழ்வில் இடம்பெற்ற ஒன்று என்பதை
புரிந்துகொள்பவரே புத்திசாலி.
ஒரு மனிதனுக்கு கற்றல் என்பது அவன் கருவறையில் இருக்கையிலேயே தொடங்கி விடுகிறது. அவனின் மரணம் வரையில் அது நீடிக்கிறது.
படித்தல்
என்பது புத்தகப் படிப்பில் மட்டுமே அடங்கியது என்று நாம் நினைத்தால்,
உண்மையிலேயே சோர்ந்து விடுவோம். ஆனால், கற்றல் என்பது பரந்த அளவிலானது
மற்றும் அது வெறும் புத்தகத்திற்குள் மட்டும் அடங்கியதன்று.
நாம்
ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களைப் பார்க்கிறோம். உதாரணமாக, புதிய
புத்தகம், புதிய திரைப்படம், புதிய பணி அனுபவம் மற்றும் புதிய பயணம் போன்ற
அனைத்துமே கற்றல் செயல்பாடுகள்தான். நாம் இதற்கு முன்பு அறிந்திராத ஒன்றை,
தற்போது புதிதாக அறிந்து கொள்வதே கற்றல் எனப்படும். ஆனால், விஷயம் எதுவாக
வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அந்த விஷயம் வாழ்வுக்கும்,
சிந்தனைக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
தங்கள்
குழந்தையின் கற்றல் செயல்பாட்டை எவ்வாறு மேம்படுத்தலாம் என்ற கவலை
அனைவருக்குமே இருக்கும். அதற்கான வழிமுறைகள் பல இருக்கின்றன. அவற்றுள்
சிலவற்றைப் பற்றி இங்கே காண்போம்.
கவலையின்றி படித்தல்
ஒரு
குழந்தை ஒரு புத்தகத்தைப் படிக்கிறதென்றால், அதை மனப்பாடம் செய்ய வேண்டுமே
என்ற கவலையின்றி படித்தல் வேண்டும். ஒரு விஷயத்தை புதிதாக
அறிந்துகொள்கிறோம் என்ற எண்ணம் மட்டுமே அந்தக் குழந்தைக்கு இருக்க
வேண்டும். மனப்பாடம் செய்ய வேண்டுமே என்ற நெருக்கடியானது, ஒரு குழந்தைக்கு
கவலையை உண்டாக்கி, அந்த விஷயத்தை அது அனுபவித்துப் படிப்பதை தடை
செய்துவிடும்.
மேலும்,
ஒரு விஷயத்தை அனுபவித்துப் படிக்கும்போது, இயல்பாகவே, அந்த விஷயத்தின்
பெரும்பகுதி நினைவில் பதிந்துவிடும். எனவே, மனப்பாடம் என்ற ஒரு செயல்பாட்டை
குழந்தையிடம் திணிக்கக்கூடாது.
சுந்திரமான மனம்
"கலங்கிய
நீரை தொடர்ந்து கலக்கிக்கொண்டே இருந்தால், அது எப்போதுமே தெளியாது. ஆனால்,
அதை அப்படியே தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டால், படிப்படியாக
தெளிந்துவிடும்" என்பது புகழ்பெற்ற தாவோயிச தத்துவம். அதுபோல்தான் நமது
மனமும். அதற்கு தொந்தரவும், நெருக்கடியும் தராதவரை, அது சிறப்பாக
செயல்படும். எனவே, உங்கள் குழந்தையை தொந்தரவு செய்யாமல், எந்த செயலையும்,
சுதந்திரமாக செய்யவிடுங்கள்.
அந்த
வகையில் உங்கள் குழந்தை ஒன்றை படித்துமுடித்தப் பிறகு, அதை திரும்பவும்
அதனிடம் கேட்கவும். அப்போது, தான் படித்த விஷயத்தை, அதனுடன் தொடர்புடைய
அம்சங்களுடன் இணைத்து சொல்லும் திறனை உங்கள் குழந்தைப் பெறும். உதாரணமாக,
ஒரு கதையைப் படித்திருந்தால், அதனோடு தொடர்புடைய கதாப்பாத்திரங்கள் மற்றும்
பிற கருத்தாக்கங்களுடன் இணைத்து சொல்லும். இதன்மூலம், அந்த கதையானது,
குழந்தையின் நினைவில் நீண்டகாலம் மறக்காமல் பசுமையாக நிலைத்திருக்கும்.
மூளையிலுள்ள
சைனாப்டிக் இணைப்புகள் தூண்டப்படுகையில் அல்லது இருக்கும் இணைப்புகள்
வலுப்படுத்தப்படுகையில், நினைவுகள் உருவாகின்றன. இந்த வகையில், ஒரு
குழந்தை, தான் படித்ததை ஒவ்வொரு முறை நினைவுகூறும்போதும், அந்த இணைப்புகள்
வலுவடைகின்றன.
எனவே,
அழுத்தமற்ற சூழலில், ஒரு விஷயத்தை ஆழமாக புரிந்து படிக்கையில், அது நல்ல
முறையில் நினைவில் நிற்கிறது. ஆனால், இந்த செயல்பாடானது, தேர்வு நெருங்கும்
சமயத்தில் பின்பற்றத்தக்கதல்ல. ஒரு புதிய கற்றல் செயல்பாட்டில்
மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை.
இலக்கு மதிப்பெண் அல்ல...
மூளையின்
இயல்பான செயல்பாட்டு அடிப்படையில் ஒரு விஷயத்தை கற்பதானது, மகிழ்ச்சியைத்
தரும். அந்த செயல்பாட்டின் அடிப்படையிலேயே, உங்கள் குழந்தைக்கு
பயிற்சியளிக்க வேண்டும். இதன்மூலம், வெறும் பள்ளி பாடப்புத்தகத்தோடு உங்கள்
குழந்தை முடங்கிவிடாது.
வெறும்
மதிப்பெண் அடிப்படையிலேயே பழக்கப்படுத்தப்பட்ட மற்றும் மதிப்பிடப்படும்
குழந்தைகள், தங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையில் பெரிதாக எதையும்
சாதித்ததில்லை. அவர்களால் சாதிக்கவும் முடியாது. ஆனால், அறிவின் உண்மையான
ஆழத்தைத் தேடி, படிப்பதற்கு பழக்கப்படுத்தப்பட்ட குழந்தைகள் எதிர்காலத்தில
அதிகமாக சாதிப்பார்கள்.
இதுபோன்ற
பயிற்சிகளால், ஒரு குழந்தை அதிகபட்ச மதிப்பெண்களைப் பெறாமலும் போகலாம்.
ஆனால், அவர்கள் வாழ்க்கையில் வெற்றியடைவார்கள். ஏனெனில், இந்திய
கல்வித்திட்டமானது, முழு அறிவுத்திறனை பரிசோதிக்கும் செயல்பாடாக இல்லை.
இயல்பான மற்றும் ஆர்வத்துடன் கூடிய கற்றலே, குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு
உகந்தது.
கற்பதை உங்கள் குழந்தை அனுபவிக்க வேண்டும்!...
கோடை விடுமுறைக்குப் பின் மீண்டும் 03.06.2013 அன்று பள்ளிகள் திறக்க உத்தரவு
லேபிள்கள்:
அறிவிப்பு,
இயக்குநரின் செயல்முறைகள்,
Educational News
இது
குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்
கூறியிருப்பதாவது : தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும்
மேல்நிலைப் பள்ளிகளிலும் கோடை விடுமுறை முடிந்து 2013-14ஆம் கல்வியாண்டில்
03.06.2013 திங்கட்கிழமையன்று பள்ளிகள் திறக்கப்பட
வேண்டுமென்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 2013-14ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி உரிய விவரங்களுடன் பின்னர் அனுப்பி வைக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேண்டுமென்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 2013-14ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி உரிய விவரங்களுடன் பின்னர் அனுப்பி வைக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம்
லேபிள்கள்:
அறிவிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து முற்போக்கு ஆசிரியர் சங்கங்கள் இணைந்து இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம். மாலை - 5மணி. சிவகங்கை
சத்துணவில் விதவிதமான உணவு விநியோகம்: மாணவர்கள் உற்சாகம்
லேபிள்கள்:
Educational News
சத்துணவில், விதவிதமான உணவு வகைகள்
வழங்கும் திட்டம், மாவட்டத்திற்கு ஒரு இடம் என, தமிழகம் முழுவதும், 32
இடங்களில் முன்னோடித் திட்டமாக தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு, அரசு உதவிபெறும், 43 ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த, 50.14
லட்சம் மாணவ, மாணவிகள், மதிய உணவுத் திட்டத்தில், சத்துணவு சாப்பிட்டு
வருகின்றனர். 30 ஆண்டுகளாக சாதம், சாம்பார் என, சாப்பிட்டு வருவதால்,
மாணவர்களிடையே சத்துணவு மீதான ஆர்வம் குறைந்து, சரியாக சாப்பிடுவதில்லை என,
கூறப்பட்டது.
இதையடுத்து, காலத்திற்கேற்பவும், குழந்தைகளின் விருப்பத்துக்கு ஏற்பவும்,
உணவு முறையில் மாற்றம் கொண்டு வரும் முயற்சியில் அரசு இறங்கியது.
நிபுணர்கள் ஆலோசனைப்படி, சத்துணவு திட்டத்தில், 13 வகையாக உணவு வழங்கும்
திட்டம் கொண்டு வரப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.
இதன்படி, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்
பள்ளியில், விதவிதமான உணவு வழங்கும் திட்டம், நேற்று தொடங்கியது.
திட்டத்தை, சமூகநலத் துறை அமைச்சர் வளர்மதி தொடங்கி வைத்தார். மேயர் சைதை
துரைசாமி, சமூகநலத்துறை செயலர் பஷீர்அகமது, மாநகராட்சி ஆணையர் விக்ரம்கபூர்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வழக்கமாக சாதம், சாம்பார் என, சாப்பிட்ட மாணவர்கள், நேற்று வழங்கிய
தக்காளி சாதம், மிளகுத்தூள் முட்டையை விரும்பி சாப்பிட்டனர். சத்துணவு
திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், "சத்துணவில் விதவிதமான உணவு வழங்கும்
திட்டம், மாவட்டத்திற்கு ஒரு மையம் என, 32 இடங்களில் முன்னோடியாக
தொடங்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகள் அறிந்தபின், எல்லா இடங்களிலும்
செயல்படுத்தப்படும்" என்றார்.
புதிய திட்டத்தின் படி முதல் வாரம், மூன்றாவது வாரத்தில் வழங்கப்படும் உணவு வகைகள்:
திங்கள்: காய்கறி பிரியாணி; மிளகுத்தூள் முட்டை
செவ்வாய்: கொண்டக்கடலை புலாவ், தக்காளி முட்டை மசாலா
புதன்: தக்காளிசாதம், மிளகுத்தூள் முட்டை
வியாழன்: சாதம், சாம்பார், வேகவைத்த முட்டை
வெள்ளி: கறுவேப்பிலை சாதம் (அ) கீரைசாதம்- முட்டை மசாலா, வறுத்த உருளைக்கிழங்கு.

இரண்டாவது, நான்காவது வாரத்தில் வழங்கப்படும் உணவு வகைகள்:
திங்கள்: சாம்பார் சாதம், வெங்காயம், தக்காளி முட்டை மசாலா
செவ்வாய்: மீல்மேக்கருடன், காய்கறி கலவை சாதம், மிளகுத்தூள் முட்டை
புதன்: புளிசாதம், தக்காளி முட்டை மசாலா
வியாழன்: எலுமிச்சை சாதம், தக்காளி முட்டை மசாலா, சுண்டல்
வெள்ளி: சாதம், சாம்பார், வேகவைத்த முட்டை, உருளைக்கிழங்கு பொறியல்

இதனிடையே,
தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு, புதிய வகை உணவுகள்
வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது. விரைவில், இது நடைமுறைக்கு வர
உள்ளது.
நாள் உணவு வகைகள்
திங்கள்: தக்காளி சாம், வேகவைத்த முட்டை
செவ்வாய்: கலவை சாதம், சுண்டல்
புதன்: காய்கறி புலாவ் சாதம், வேகவைத்த முட்டை
வியாழன்: எலுமிச்சை சாதம், வேகவைத்த முட்டை
வெள்ளி: கலவை சாதம்
செவ்வாய்: கலவை சாதம், சுண்டல்
புதன்: காய்கறி புலாவ் சாதம், வேகவைத்த முட்டை
வியாழன்: எலுமிச்சை சாதம், வேகவைத்த முட்டை
வெள்ளி: கலவை சாதம்
3/20/2013
ஆர்டிஐ பயிற்சி ஆன்லைனில் இலவசம்!
லேபிள்கள்:
RTI
தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த இலவசப் பயிற்சியை ஆன்லைன் வழியாக வழங்குகிறது மத்திய அரசு
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அனைத்து மக்களும் தெரிந்துகொள்ளும் வகையில், மத்திய அரசு, ஆன்லைனில் அந்தச் சட்டம் குறித்த சான்றிதழ் பயிற்சிகளை இலவசமாக வழங்குகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) ம்2005ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் அரசுடைய செயல்பாடுகளைப் பற்றியும், அரசு அதிகாரிகளின் அலுவல் பற்றிய தகவல்களையும், இச்சட்டத்தைப் பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம். மேலும் அரசின் சில துறைகளில் மட்டும் இச்சட்டத்தைப் பயன்படுத்த சில வரம்புகளும் விதிவிலக்கும் உள்ளன.
இந்த இலவச ஆன்லைன் பயிற்சி, 7 நாட்கள் மற்றும் 15 நாட்கள் என இரண்டு வகைகள் உள்ளன. 7 நாட்கள் கொண்ட பயிற்சியில் மொத்தம் 7 பிரிவுகள் இருக்கும். ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 கேள்விகள் கேட்கப்படும். அந்தக் கேள்விகளில் 3 கேள்விகளுக்கு சரியான விடையை அளித்தால் மட்டுமே அடுத்த பிரிவிற்குச் செல்ல முடியும். மேலும், இந்த 7 நாட்கள் கொண்ட பயிற்சியில் வெற்றி பெற்றால் மட்டுமே, 15 நாட்கள் கொண்ட பயிற்சியில் சேர முடியும்.
இந்தப் பயிற்சியில் சேர்வதற்காக சில தகுதிகள் இருக்கின்றன. பயிற்சியில் சேரும் ஆண்/பெண் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும். இந்தப் பயிற்சியின் முடிவில் நடத்தப்படும் தேர்வுகள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கும் என்பதால், அதனைப் படித்து புரிந்துகொள்ளும் அளவு, ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
தகவல் உரிமைச் சட்டத்தின் இலவச ஆன்லைன் பயிற்சியில் சேர விரும்புபவர்கள், அதனுடைய தளத்திற்குச் சென்று பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின்னர், பதிவு செய்தவர்களுக்கென கடவுச்சொல் (password) மற்றும் பயனாளர் ஐ.டி. (user id) குறித்த தகவல்கள் மெயிலில் தெரிவிக்கப்படும். அந்த விவரங்களைக் கொண்டு ஆன்லைன் பயிற்சித் தளத்தில் நுழைந்தால், பயிற்சியை தொடங்கலாம்.
மேலும் இந்தப் பயிற்சியைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் சென்று பார்க்கலாம். http://rtiocc. cgg.gov.in

மேலும் இந்தப் பயிற்சியைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் சென்று பார்க்கலாம். http://rtiocc.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)