பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

7/31/2013

இரட்டைப்பட்டம் வழக்கு - பொறுமை காக்கும் மௌன சாமியார்கள்.

இரட்டைப்பட்டம் வழக்கு நீதிமன்றத்திற்கு வருவதற்குள் போதும் -போதும் என்றாகிவிடும்போல. நாளை வருவதாக இருந்த வழக்கு இன்னும் நீடித்து செல்வதாக வழக்கு வட்டாரங்க்ள தெரிவிக்கின்றன. இவ்வழக்கை ஒருங்கிணைக்கும் திரு.ஆரோக்கியராஜ், திரு.கலியமூர்த்தி, திரு.கருணாலயபாண்டியன் ஆகிய மூவர் கூட்டணி தொடர்ந்து மௌனம் காக்கும் சாமியாராகி விட்டார்கள். அவர்களது வழக்குரைஞர்  இது குறித்து வாய்ப்பூட்டுச்சட்டம் போட்டுள்ளதாக நம்மிடம் தெரிவித்தனர். எனவே இவ்வழக்கு விசாரணை இந்த வாரம் வராது என்பதே இன்றைய நிலை. பதவி உயர்வு பெறத்துடிக்கும் ஆசிரியர்களின் உணர்வுகளை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. போராட்ட களத்திற்கே வராமல் எங்கே பலன்க்ள என எமது நிர்வாகிகளைத் துளைத்தெடுக்கும்  இயக்க உறுப்பினர்களைப்போல வழக்கிற்கே செல்லாமல் பதவி உயர்வுக்காக காத்திருக்கும், தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் முகநூலில் கருத்து பரிமாறிக்கொள்ளும் அனைத்து தோழர்களுக்காகவும் இதனை பகிர்கிறேன். தொடர்ந்து நம் வலைத்தளத்துடன்  (www.mptnptf.blogspot.com ) தொடர்பில் இருக்கவும்.
என்றென்றும் தோழமையுடன்..........
ஆ.முத்துப்பாண்டியன்
மாவட்டத்தலைவர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
சிவகங்கை மாவட்டம்.
முகநூல்:
https://www.facebook.com/tnptfmuthupandian

E.Mail : tnptfmuthupandian@gmail.com

1 முதல் 4ஆம் வகுப்பில் 100க்கு மேல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் SABL அட்டைகள் வழங்க விவரம் கோரப்பட்டுள்ளது

அரசு / அரசு நிதியதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில், பல பள்ளிகள் 1 முதல் 4 வகுப்புகளில் 100க்கு மேல் மாணவர்கள் எண்ணிக்கை உள்ளதெனவும், அப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள 1Set கற்றல் அட்டைகள் கொண்டு கற்றல் நிகழ்வுகள் நேர்த்தியாக நடைபெற இயலவில்லை என்றும்,
எனவே அவ்வாறு கூடுதல் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் அட்டைகள் வழங்க விவரம் கோரி அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட விவரங்கள மாவட்ட வாரியாக 05.08.2013க்குள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர் விவரப்பதிவை இணையத்தில் பதிவேற்றாதவர்கள் தற்பொழுது பதிவேற்றலாம்

மாணவர் விவரப்பதிவை இணையத்தில் பதிவேற்றாதவர்கள் தற்பொழுது பதிவேற்றலாம். இந்த ஆண்டிற்கான பதிவு அடுத்த வாரம் மேற்கொள்ள வேண்டியிருப்பதால்  சென்ற ஆண்டு பதிவை நிறைவு செய்யும்படி கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
Web: http://emis.tnschools.gov.in Click Here

போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் தாசில்தார் சம்பளம் குறைப்பு

சென்னை: தமிழகத்தில், ஆறாவது ஊதியக்குழுவில் இருந்த, முரண்பாடுகளைக் களைந்து, அரசு ஊழியர்களுக்கு, சமீபத்தில் புதிய ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், லட்Œக்கணக்கான அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளனர். அதேநேரம், போலீஸ் இன்ஸ்பெக்டர், தாசில்தார், இளநிலைப் பொறியாளர் உட்பட பலரின் சம்பளம் குறைக்கப்பட்டிருப்பது, சம்பந்தப்பட்டவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசின், ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைத்தபடி, 2009ம் ஆண்டு, தமிழக அரசு ஊழியர்களுக்கு, புதிய சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது. இதில், பல குறைபாடு இருப்பதாகவும், அவற்றை சரி செய்ய வேண்டும் என்றும், அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.

குழு நியமனம்:

இது குறித்து விசாரிக்க, தி.மு.க., அரசு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜிவ் ரஞ்சன் தலைமையில், ஒரு நபர் கமிஷன் குழுவை நியமித்தது. இக்குழு அனைத்து வகையான, அரசு ஊழியர் சங்கங்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களை பெற்றது.அந்த மனுக்கள் அடிப்படையில், குழு, அரசுக்கு அறிக்கை சமர்பித்தது. இக்குழு பரிந்துரையை அடுத்து, பல அரசு ஆணைகள் வெளியிடப்பட்டன. அதிலும், முரண்பாடிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இச்சூழலில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முதல்வர் ஜெயலலிதா பொறுப்பேற்றதும், அரசு செலவினத்துறை முதன்மை செயலர் கிருஷ்ணன் தலைமையில், 2012, ஏப்ரலில் ஒரு குழுவை அமைத்தார். இக்குழுவினரும், பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்களிடம், கருத்து கேட்டனர். அவர்கள் கோரிக்கை அடிப்படையில், அரசுக்கு அறிக்கை சமர்பித்தனர்.

அரசாணை வெளியீடு:

அறிக்கையை பரிசீலித்த முதல்வர், குழு கூறியதன் அடிப்படையில், ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, புதிய ஊதிய உயர்வுக்கு, அரசாணை வெளியிட உத்தரவிட்டார். அதன்படி கடந்த, 22ம் தேதி, துறை வாரியாக, புதிய அரசாணை வெளியிடப்பட்டது.இதன் மூலம், அரசு ஊழியர்களில் பெரும்பாலானோருக்கு, 200 ரூபாயிலிருந்து, 3,000 ரூபாய் வரை, ஊதிய உயர்வு கிடைக்க உள்ளது. ஒரே பதவியில், 10 ஆண்டுகள் பணி முடித்து, தேர்வு நிலை ஊழியர்களாக உள்ளவர்களுக்கு, 6 சதவீதம், ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு அறிவித்த முதல்வருக்கு, அரசு ஊழியர் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.இச்சூழலில், புதிய அரசாணை மூலம், பலருக்கு ஏற்கனவே பெற்ற சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது, தற்போது தெரிய வந்துள்ளது. இது சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சம்பளம் குறைப்பு:

வேளாண் துறையில், வேளாண் அலுவலர், தோட்டக்கலைத் துறை அலுவலர்; வேளாண் பொறியியல் துறையில், உதவிப் பொறியாளர்; கால்நடைத் துறையில், உதவி இயக்குனர், ஆராய்ச்சி உதவி அலுவலர்; மீன் வளத்துறையில் ஆய்வாளர், ஆராய்ச்சி உதவியாளர்; நெடுஞ்சாலைத் துறையில், உதவிப் பொறியாளர், எலக்ட்ரானிக் பொறியாளர்; ஊரக வளர்ச்சித் துறையில், உதவிப் பொறியாளர். தொழில் துறையில், உதவிப் பொறியாளர்; தொழிற்சாலை ஆய்வுத் துறையில், தொழிற்சாலை உதவி ஆய்வாளர்; மாநில சுகாதார போக்குவரத்து துறையில், உதவிப் பொறியாளர், பணிமனை கண்காணிப்பாளர்.மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில், தொழில்நுட்ப உதவியாளர், ஜெனரல் போர்மேன்; பட்டு வளர்ச்சித்துறையில் நிர்வாக அலுவலர்; பொதுப்பணித்துறையில், இளநிலைப் பொறியாளர்; மாவட்ட மறுவாழ்வுத் துறை அலுவலர்; பேரூராட்சி உதவிப் பொறியாளர்; இளநிலை எலக்ட்ரிக்கல் ஆய்வாளர்; சென்னை மாநகராட்சி உதவிப் பொறியாளர்; வனக்காப்பாளர் ஆகியோருக்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது.இவர்கள், ஆறாவது ஊதிய உயர்வுக்கு முன், அடிப்படை சம்பளமாக, 6,500 ரூபாய் பெற்றனர். ஆறாவது ஊதிய உயர்வு அமல்படுத்தப்பட்டபோது, அடிப்படை சம்பளம், 9,300 ரூபாயாக உயர்ந்தது. முதலில் நியமிக்கப்பட்ட, ஒரு நபர் குழு பரிந்துரைப்படி, அடிப்படை சம்பளம், 15,600 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இது தவறு எனக் கூறி, தற்போது அடிப்படை சம்பளம், 9,300 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

இழப்பு:

இதனால், இவர்களுக்கு மாதம், 10 ஆயிரம் ரூபாய் வரை, வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், தாசில்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர், ஆகியோரின் அடிப்படை சம்பளம், ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைக்கு முன், 7,500 ரூபாயாக இருந்தது. ஊதிய உயர்வின்போது, 9,300 ரூபாயாக உயர்ந்தது. ஒரு நபர் குழு பரிந்துரைத்த பின், 15,600 ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும், 9,300 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அவர்களுக்கு சிறப்பு ஊதியமாக, 1,000 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.இது சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்டோர், ஏற்கனவே வழங்கிய சம்பளத்தை வழங்க வேண்டும் என, முதல்வரிடம் முறையிட முடிவு செய்துள்ளனர்.

கூடுதல் பணம் திரும்ப வசூலிக்கப்படாது:

புதிய அரசாணையின்படி, பலருடைய சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட கூடுதல் சம்பளம், திரும்ப வசூலிக்கப்படாது. அதேபோல், ஓய்வூதியர்களுக்கும் கூடுதலாக வழங்கப்பட்ட பணம் வசூலிக்கப்படாது. புதிய அரசாணையின்படி, ஆகஸ்ட் மாதத்திலிருந்து, புதிய தொகை வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது:கடந்த ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட, ஒரு நபர் குழு பரிந்துரை அடிப்படையில், அரசாணை வெளியிட்டபோது, இளநிலைப் பொறியாளர்களுக்கு, கூடுதல் சம்பள உயர்வு வழங்கப்பட்டது. அவர்கள் அந்தஸ்தில் இருந்தோர், தங்களுக்கும் அதேபோல், கூடுதல் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.இதை பரிசீலித்த புதிய ஒரு நபர் குழு, அவர்களுக்கும் ஊதியத்தை உயர்த்தினால், அரசுக்கு கூடுதல் செலவினம் ஏற்படும் என்பதால், தவறுதலாக வழங்கப்பட்ட சம்பள உயர்வை ரத்து செய்துள்ளது. உதாரணத்திற்கு, பொதுப்பணித்துறையில் டிப்ளமோ முடித்து இளநிலைப் பொறியாளர்களாக உள்ளோருக்கு, அடிப்படை ஊதியமாக, 9,300 ரூபாய்; பி.இ., முடித்தோருக்கு, 15,600 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது.டிப்ளமோ முடித்து, அதே பதவியில் இருந்தோர், பி.இ., முடித்தோருக்கு வழங்கும் சம்பளத்தை வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். ஆனால், அரசு, பி.இ., முடித்து, இளநிலைப் பொறியாளராக இருப்போரின் சம்பளத்தை குறைத்துள்ளது.இதுபோன்று, ஒவ்வொரு துறையிலும் அதிகமாக வழங்கப்பட்ட சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

ஏற்க முடியாது:

பொதுப்பணித் துறையில், பி.இ., முடித்து இளநிலைப் பொறியாளர்களாக இருப்போர் கூறுகையில், "எங்கள் சம்பளத்தை குறைக்க, அரசு கூறும் காரணங்கள் ஏற்கத்தக்கதல்ல. எங்களை பணியில் சேர்க்கும் போது, அடிப்படை சம்பளம், 15,600 ரூபாய் என, அறிவித்திருந்தனர். தற்போது, குறைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, முதல்வரிடம் எங்கள் தரப்பு வாதத்தை தெரிவிக்க உள்ளோம்' என்றனர்.

சென்னை மாநகராட்சியில் இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்ட பலர், போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்த அதிர்ச்சி தகவல்

சென்னை :சென்னை:சென்னை மாநகராட்சியில் இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்ட பலர், போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணை நடந்து வருவதால், சிக்குவோர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 122 துவக்க பள்ளிகள், 92 நடுநிலை பள்ளிகள், 36 உயர்நிலை பள்ளிகள், 32 மேல்நிலை பள்ளிகள், 30 மழலையர் பள்ளிகள், ஒரு உருது மேல்நிலை பள்ளி, ஒரு தெலுங்கு மேல்நிலை பள்ளி என, மொத்தம் 284 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மொத்தம் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரும், 5,000க்கும் அதிகமான ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர்.

1995 முதல் நியமனம்:

துவக்க பள்ளிகளில் மட்டும் 2,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் உள்ளனர். இதில் பெரும்பாலான இடைநிலை ஆசிரியர்கள், 1995ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை பல்வேறு கட்டங்களில் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நேரடியாக பணி நியமனம் செய்யப்பட்டவர்கள். இதற்கு இடைநிலை ஆசிரியர் பயிற்சி கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.ஆனால், அப்போது பணி நியமனம் பெற்ற பலர், முறையான ஆசிரியர் பயிற்சி பெறாமல், போலி சான்றிதழ்கள் மூலம் பணியில் சேர்ந்துஇருப்பதாக, சமீபத்தில் புகார் எழுந்தது.இதுகுறித்து மாநகராட்சி கல்வி துறை கவனத்திற்கு வந்ததும், விரிவான விசாரணை நடத்த 'விஜிலென்ஸ்' அலுவலகத்திற்கு உத்தரவிடப்பட்டது.

போலி நிறுவனம்:

விசாரணையில், ஆசிரியர்கள் பணி நியமனத்தில் போலி சான்றிதழ் மோசடி நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 பேர் மீதான மோசடி, ஆதாரங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.இந்த ஆசிரியர்கள் பயிற்சி பெற்றதாக கூறப்படும் பயிற்சி நிறுவனங்கள் தமிழகத்தில் இல்லை என்றும், சிலர் கொடுத்த சான்றிதழ்களில் பயிற்சி பெற்றோர் வெளி இடத்தில் பணிபுரிந்து வருவதும், பெயர் மாற்றம் செய்து மோசடி செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்து உள்ளது.ஆனால், எத்தனை பேர் இந்த மோசடியில் ஈடுபட்டனர் என்ற முழு விவரம் கிடைக்கவில்லை. அது குறித்து இன்னும் விசாரணை நடக்கிறது.இதுகுறித்து, கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'போலி சான்றிதழ் மோசடி குறித்து 'விஜிலென்ஸ்' அலுவலரின் விரிவான விசாரணை நடந்து வருகிறது. தற்போது விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது. ஆதாரங்களுடன் விசாரணை அறிக்கை மாநகராட்சி கமிஷனருக்கு தாக்கல் செய்யப்படும். அதன் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

400 பேர் மோசடி?

இந்த விவகாரம் குறித்து, பெயர் வெளியிட விரும்பாத தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:எங்களுக்கு தெரிந்த வரை 400 பேர் வரை போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பதாக தகவல் கிடைத்தது.ஏற்கனவே கமிஷனராக இருந்த விஜயகுமார், போலி சான்றிதழ் விவகாரம் தொடர்பாக சிலர் மீது நடவடிக்கை எடுத்தார். முழு விசாரணை நடப்பதற்குள் அவர் மாற்றம் செய்யப்பட்டார். தற்போது மாநகராட்சி இது தொடர்பாக விசாரணை நடத்துவதால், மீண்டும் போலி சான்றிதழ் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என, நினைக்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அனுமதி பெறாத பேருந்து நிழற்குடைகள் அமைத்து, பல கோடி ரூபாய் மோசடி நடந்த விவகாரம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. அடுத்தகட்டமாக ஆசிரியர்கள் போலி சான்றிதழ் கொடுத்து, பணியில் சேர்ந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்திருப்பதால், மாநகராட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுஉள்ளது.ஆசிரியர்கள் பயிற்சி பெற்றதாக கூறப்படும் பயிற்சி நிறுவனங்கள் தமிழகத்தில் இல்லை என்றும், சிலர் கொடுத்த சான்றிதழ்களில் பயிற்சி பெற்றோர் வெளி இடத்தில் பணிபுரிந்து வருவதும், பெயர் மாற்றம் செய்து மோசடி செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது

TNPTF பள்ளிப்பாளையம் ஆர்ப்பாட்டம் - தினகரன் செய்தி வெளியீடு

பள்ளிக்கல்வி இயக்குநர்கள் மாற்றம்

 புதிய பள்ளிக்கல்வி இயக்குநராக திரு. இராமேஸ்வர முருகன் நியமித்து உத்தரவு
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கட்டுபாட்டிலுள்ள துறைகளின் இயக்குநர்கள் மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக திரு. இராமேஸ்வர முருகன் அவர்களும், திரு. தேவராஜன் அவர்கள் அரசுத் தேர்வுகள் துறை இயக்குனராகவும், தொடக்கக் கல்வித் துறை இயக்குநராக திரு.இளங்கோவன் அவர்களையும், திரு.சங்கர் அவர்களை அனைவருக்கும்
இடைநிலைக் கல்வி திட்ட இயக்குனராகவும், திருமதி. வசுந்திரதேவி அவர்களை ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராகவும், திரு.கண்ணப்பன் அவர்களை ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வியியல் துறை இயக்குனராகவும், திரு. பிச்சை அவர்களை மெட்ரிக் பள்ளி இயக்குனராகவும், திரு.அன்பழகன் அவர்களை பாடநூல் கழக இயக்குநராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

7/30/2013

பள்ளிகளில் ஏற்படும் எதிர்பாரத நிகழ்வுகளை உடனுக்கு உடன் கல்வித் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்

பள்ளிகளில் ஏற்படும் எதிர்பாரத நிகழ்வுகளை அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் உடனுக்கு உடன் கல்வித் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் எதிர்பாரத நிகழ்வுகள் மற்றும் பல்வேறு சம்பவங்கள் குறித்து மாநில அளவில் உள்ள அதிகாரிகளுக்கு தாமதமாகவே தெரிய வருகிறது. இதனால் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதை நிவர்த்தி செய்யும் வகையில் உடனே அனைத்து துறை அலுவலர்களுக்கும் தகவல்களை தெரிவிக்க பள்ளிக் கல்வி துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு பள்ளியிலும் 14 அம்ச திட்டங்களை செயல்படுத்துதலில் உள்ள குறைபாடுகள், முக்கியமாக மாணவ, மாணவிகளை நேரடியாக பாதிக்கும் சத்துணவு செயல்படுத்துவதில் குறைபாடுகள், மாணவ, மாணவிகளை வழிநடத்துதல், பள்ளிகளில் இருந்து சுற்றுலா அழைத்துச் செல்லுதல், நாட்டு நலப்பணித்திட்டத்திற்கு அழைத்துச் செல்லுதல், இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி வகுப்பறைகள், கழிப்பறைகள், ஆசிரியை மற்றும் ஆசிரியர்களின் முரண்பாடன செயல்கள், ஒழுக்கக் கேடுகளை விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட எதிர்பாரத சம்பவங்கள் நிறைய ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இது குறித்த தகவல்கள் அனைத்தையும் உடனே மேல் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். முதல் கட்டமாக நிகழ்வுகளை கேள்விப்பட்டவுடன், அதை சரியா என உண்மைத் தன்மை குறித்து விசாரித்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தகவல்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். அதையடுத்து, அத் தகவலை பள்ளிக் கல்வி துறை இயக்குநர் அலுவலகத்திற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் தெரிவிக்கப்படும்

. பின்னர் அங்குள்ள அனைத்து துறை உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், முக்கியமான அசம்பாவிதத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக இருந்தால் உடனே தலைமையாசிரியர்களே நேரடியாக உயர் அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட தொலைபேசி எண்களான மாநில பள்ளிக் கல்வி இயக்குநர்-28278796, இணை இயக்குநர்(பணியாளர் நிர்வாகம்)-28276340, இணை இயக்குநர்(மேல்நிலைக் கல்வி)-28280186, இணை இயக்குநர்(நாட்டு நலப்பணி திட்டம்)-28204340, இணை இயக்குநர்(தொடக்க கல்வி)-28250523 ஆகியோருக்கு தெரிவிக்கவும் வேண்டும் என பள்ளிக் கல்வி துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

நல்லாசிரியர் விருது தேர்வில் புதுமை: பள்ளி கல்வி இயக்குனர் தகவல்

"மாநில நல்லாசிரியர் விருதுகளுக்கு ஆசிரியர்கள் தேர்வில், இந்தாண்டு புதிய நடைமுறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது" என பள்ளிக் கல்வி துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.

மதுரையில் தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி தலைமை வகித்தார். இயக்குனர் பேசியதாவது: மாநில நல்லாசிரியர் விருதுகளுக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவதில் இந்தாண்டு புதிய நடைமுறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சி.இ.ஓ., தலைமையில் டி.இ.ஓ.,க்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் மற்றும் இரண்டு தலைமை ஆசிரியர்கள் கொண்ட "தேர்வுக் குழு" அமைக்கப்படும். விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் குறித்து, அவர்கள் பணிபுரியும் பள்ளிகளுக்கு சென்று, அவரது விவரம், மாணவர் மற்றும் சமுதாய மேம்பாட்டிற்காக ஆற்றிய சேவை, செயல்படுத்திய திட்டங்கள், அவரது பணிக்கால பதிவேடுகள் விசாரிக்கப்பட்டு, அறிக்கை தயாரிக்கப்படும்.

இணை இயக்குனர் அளவிலான நேர்காணலும் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும். இதன்பின், தேர்வுக் குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில், விருதுகளுக்கான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நடப்பாண்டில் பள்ளிகளில் விளையாட்டிற்காக மட்டும் ரூ.10 கோடி அரசு ஒதுக்கியுள்ளது. கல்வி மாவட்ட, வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை ஆசிரியர்கள் நடத்த வேண்டும். அறிவியல் கண்காட்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.

மாணவர்களுடன் ஆசிரியர்கள் நல்லுறவை வளர்க்க வேண்டும், பாடம் தவிர்த்து மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஆசிரியர்கள் செயல்பாடு அமைய வேண்டும், என்றார்.

அரசு நலத்திட்டங்களை பள்ளிகளுக்கு நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தினர். "கல்வி அதிகாரிகளிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என இயக்குனர் பதிலளித்தார்.

2,000 கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு செய்ய அரசு திட்டம்?

பணி நீக்கம் செய்யப்பட்ட, 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் கூடுதலாகத் தேவைப்படும் பணியிடங்களை நிரப்ப, 2,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமனம் செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகலாம் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்த கம்ப்யூட்டர் ஆசிரியர்களில், 652 பேரை, பள்ளிக் கல்வித்துறை, பணி நீக்கம் செய்தது.

மாணவர் நலன் கருதி, புதிய ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் வரை, பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்ற கல்வித் துறையின் கோரிக்கையையும், சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது. 652 பேரையும், உடனடியாகப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என, உத்தரவிட்டதால், அனைவரையும் உடனடியாக, பணி நீக்கம் செய்து, கல்வித்துறை உத்தரவிட்டது.

இதனால், மாணவர்களுக்கு, கம்ப்யூட்டர் பாடம் எடுக்க, ஆசிரியர் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. மாற்று ஏற்பாடு குறித்து, ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்படும் என, கூறப்படுகிறது. புதிய ஆசிரியர்களைத் தேர்வு செய்து, 652 பணியிடங்களை நிரப்பவும், கூடுதலாகத் தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், 2,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்களைத் தேர்வு செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில், "அரசு உத்தரவிட்டால், கம்ப்யூட்டர் ஆசிரியர்களைத் தேர்வு செய்ய தயாராக உள்ளோம்; இதுவரை, உத்தரவு வரவில்லை" என, தெரிவித்தன.
 
பள்ளிகள் தரம் குறித்த ஆலோசனை கூட்டம்

7/29/2013

ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைந்த போராட்டமாக மாறுமா? இடைநிலை ஆசிரியர்கள் ஏக்கம்!...

6வது ஊதிய குழுவின் ஊதிய முரண்பாடுகளை நீக்க அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவும் அவ்வொரு நபர் குழுவின் குறைபாடுகளை நீக்க அமைக்கப்பட்ட மூன்று நபர் குழுவும் தங்களுக்கு எந்த பெரிய பலனை தராததோடு, இன்று வரை தங்கள் ஊதிய நோக்கான 9300-34800+4200 என்ற ஊதிய விகிதம் கனவாகவும், கானல் நீராகவுமே உள்ளது என்ற உணர்வு ஓங்கி அவர்களிடம் வெறுமை உணர்வையும் மனத்தளர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நோக்கை அடைய அனைத்து ஆசிரிய சங்கங்களும் முழுமூச்சாக போராட ஆயத்தமாவதும், போராட்டங்களை நடத்துவதும் தான் அவர்களுக்கு தற்போதைய அறுதல் உணர்வையும் நம்பிக்கையும் தந்து அசுவாசப்படுத்துகிறது. ஆனால் இவ்வாறு ஊதிய விகிதத்தால் பாதிக்கப்படும் ஆசிரியர்களே கூட அறியாமையாலோ அலட்சியத்தாலோ தாங்கள் சார்ந்த ஆசிரிய சங்கம் நடத்தம் ஆர்பாட்டங்களிலோ, போராட்டங்களிலோ பங்கேற்பதில்லை என்ற ஆசிரிய சங்கங்களின் வருத்தம் மிக உண்மையானது நியாயமானது. 

இந்த அலட்சியத்தையும் அறியாமையையும் போக்கும் பொறுப்பு யாருக்கு உள்ளது ? என்ற கேள்வி ஒவ்வொரு ஆசிரியர் மனங்களிலும் எழ வேண்டியது தற்காலத்தின் தற்சூழலின் வெகு அவசியமும் அத்தியாவசியமும் ஆகும். விழிப்புணர்வு உள்ள ஒவ்வொருவரும் பிறகுக்கு அறியாமையை போக்க வேண்டியதும் , உணர்வுகள் குறைந்துள்ள உள்ளங்களில் தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்தி அதை சீர் எழுச்சியடைய வைப்பது ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

ஆசிரிய சங்கங்களுக்கு தான் அனைத்து பொறுப்பும் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு, ஒதுங்கு மனப்பான்மையால் அவ்வாசிரிய சங்கங்களை பழித்து பேசுவதும் குறைக்கூரி பேசுவது என்பது அலட்சியம், அறியாமை மற்றும் உணர்ச்சிவய மனப்பான்மையாகும். உண்மையில் உங்களைப்போல் ஆசிரிய சங்க பொறுப்பாளர்களுக்கும் குடும்பம், வாழ்க்கை, அதன் பொறுப்புகள் உண்டு என்பதையும், அச்சங்கங்களாலேயே நாம் தற்போது பெறும் சிறு பலன்களையும் பெற்றுள்ளோம் என்பதை மறந்து நன்றியின்றி பேசுதல் பழித்தல் நியாயமா? என்பதை உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்.

நம் மூத்தோர் நம்மை கைவிடார் என்ற நம்பிக்கை தற்சூழலுக்கு வெகு அவசியம். என்றுமே நம் ஆசிரிய மூத்தோர் நம்மை கைவிட்டதில்லை என்பதையும் அதற்கு கடந்த கால வரலாறுகளை நினைவுப்படுத்திக் கொள்வதோடு அந்நம்பிக்கைகளை வலுவாக்குதல் தான் அதற்கான செயலூக்கத்திற்கு வழிகோலும். அவநம்பிக்கை எனும் வேண்டா உணர்வு வாழ்வின் இயற்கை நீதிக்கு முரணானதும் பலன் தராததும் என்ற தெளிவில் வலிவு பெறுவோம்.

மேலும் சிலர் ”புதிய கூட்டணி தொடங்கலாம், ’நமக்காக’ எதுவும் சரியில்லை” என்கின்றனர். ஒவ்வொரு கூட்டணியும் திடீரென தோன்றிடவில்லை, அதன் பின் வலுவான உழைப்பும், கொள்கையும் உண்டு என்பதை மறந்து செயல் கொள்வதும், எண்ணங்களை விதைப்பதும் அறியாமையின் உணர்ச்சிவயத்தின் வெளிப்பாடே. இருப்பதைக்கொண்டு சாதிக்க விழையாமல் தன்முனைப்பால் மேலும் மேலும் நம்மை நாமே பிளவுப்படுத்திக்கொள்வது என்பது நம் பலத்திற்கும் ஒற்றுமைக்கும் சீர்குலைவாய் இறங்குமுகமாய் அமையும்.  அதில் வெற்றிகள் கிட்டாது. பிரச்சனைகள் தான் வளரும்.

ஆசிரியர்களின் மன நோக்கை பிரதிபலிக்கும் கண்ணாடி தான் ஆசிரிய சங்கங்கள், நீங்கள் அறிந்தவற்றை அறியாதவற்றையும் அதையும் தாண்டி ஆசிரிய நலம் சார்ந்து சிந்திப்பவர்கள் தான் அதன் பொறுப்பாளர்கள். இந்த உண்மையை நம் அனுபத்தோடு ஒப்பிட்டு நம்பிக்கை பெறுவது அவசியம். ஆசிரிய சங்கங்களின், அதன் பொறுப்பாளர்களின் போராட்டம், தியாகம், இழப்புகளை மறந்து சோர்வு பெறக்கூடாது.

இந்த ஒட்டுமொத்த மனகுமுறலையும் ஆசிரிய சங்கங்கள் நன்கு அறிந்துள்ளனர். ஆசிரிய சங்கங்கள் ஆசிரிய நலனிற்காக எதற்கும் துணியும், அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்பதும். ஒருங்கிணைந்த போராட்டத்தின் பலம் என்ன என்பதையும் அதன் வெற்றிகளையும் முழுமையாக ஆசிரிய சங்கங்களை விட நன்கு வேறு யார் அறிவார்? 

அதனால் நம்பிக்கையும் பொறுமையும் காப்போம் உரிய நேரத்தில், உரிய காலத்தில், உரிய அழைப்பு உங்களுக்கு வரும் என்ற நம்பிக்கையால் ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள். வரும் அழைப்பிற்கு இணங்க அனைத்து ஆசிரியர்களையும் திரட்ட வல்ல திறனையும் , அதற்கான அடித்தளத்தையும் வளர்த்து வாருங்கள். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகித எதிர்பார்பான 9300-34800+4200 பெறும் வரை இந்த ஊக்கம் இடைவிடாது தொடர சூலுரைப்போம். 
 
5 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை அருகாமை பள்ளிகளுடன் இணைக்க கல்வித்துறை முடிவா?

உடனடியாக மாணவர் என்னிக்கை 5க்கும் குறைவாக உள்ள பள்ளிகளை அருகாமை பள்ளிகளுடன் இணைக்கவும்,  காலம் செல்லச் செல்ல 10 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகளை அருகாமை பள்ளிகளுடன் இணைக்கவும் முடிவெடுத்து இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கான பணியினை கல்வித்துறை முடுக்கிவிட்டிருப்பதாக அலுவலக வட்டாரங்க்ள தெரிவிக்கின்றன.

ஒரு வேளை இச்செய்தி உண்மையானால் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டக்கிளை தன்னுடைய அதிர்ப்தியை பதிவு செய்கிறது.
இதனால் பல ஆசிரியர்கள் இடம் மாறுவார்கள் என்பதைவிட் 1கி.மீ. சுற்றளவில் ஆரம்பப்பள்ளிக்ள அமைந்திட வேண்டும் என்ற அரசின் கொள்கை கேள்வி குறியாகி விடும். மாணவர்களை அருகாமை பள்ளிகளில் இணைப்பதால் மாணவர்கள் தொடர்ந்து அருகாமை பள்ளிகளுக்கு வருவார்களா? மேலும் இடைநிற்றலை அறவே ஒழிக்க வேண்டும் என போராடி வரும் மத்திய-மாநில அரசுகளின் முயற்சி விரயமாகிவிடும். பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதியில்லாமல் நகரங்களை நோக்கி இடம் பெயரும் மக்களை இது மேலும் ஊக்குவிக்கும் செயலாக அமைந்து விடும்.
பல ஊர்களில் புற்றீசல் போல அங்கீகாரம் இல்லாமல் எத்தனையோ ஆங்கிலவழிக்கல்வி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அப்பள்ளிகளை மூடுவதற்கு கல்வி அதிகாரிகள் முயற்சி மேற்கொள்ளாமல் அரசு பள்ளிகளை மூடுவதால் எதிர்மறை விளைவுகளைதான் ஏற்படுத்தும். பள்ளிகளுக்கு மூடுவிழா செய்யாமல் மாற்று வழி என்ன என்பதை அரசு யோசிக்க வேண்டும்.
காமராஜர் காலத்தில் பல கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டன என்பதை வரலாறு பேசுகிறது.
ஜெயலலிதா காலத்தில் பல் பள்ளிகள் மூடப்பட்டன என்ற அவப்பெயரை முதல்வருக்கு ஏற்படுத்தமாட்டார்கள் என்றே நம்புகிறேன்.
மாற்று வழி யோசிப்போம்! 
மகத்தான கல்வி புரட்சி காண்போம்.