பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

11/27/2013

அதிகாரிகள் அலட்சியம் மாறுமா?

நாடு முழுவதும் மூன்று கோடிக்கும் அதிகமான வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. தாமதிக்கப்படும் நீதி, மறுக்கப்படும் நீதி என்று முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் அனைவருமே உணர்ச்சிப்பூர்வமாக பேசுவார்கள். ஆனால், வழக்குகளை விரைவாக முடிக்க அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளில் அவ்வளவு வேகம் இருக்காது. இந்த சூழ்நிலையில், லோக் அதாலத் முறையில் வழக்குகள் பைசல் செய்யப்படுவது வரவேற்கத்தக்கது.

கடந்த 23ம் தேதியன்று, உச்ச நீதிமன்றம் தொடங்கி அனைத்து நீதிமன்றங்களிலும் லோக் அதாலத் நடத்தப்பட்டது. ஒரே நாளில் நாடு முழுவதும் 39 லட்சம் வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு, அவற்றில் பெரும்பான்மையான வழக்குகளில் தீர்வும் காணப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 13 லட்சத்து 77,252 வழக்குகள் பைசல் செய்யப்பட்டு, ரூ.1113 கோடியே 75 லட்சத்துக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இது மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிகம்.
இப்படி லோக் அதாலத் மூலம் விபத்து இழப்பீடு, வங்கிக் கடன் உள்ளிட்ட வழக்குகள் தீர்வு காணப்படுவதால், நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை குறையும். இதன் மூலம், நீதிமன்றங்களின் சுமை குறைந்து குற்ற வழக்குகளில் விரைவில் தீர்ப்பு கூறப்படும். எனவே, லோக் அதாலத் பணியில் நீதித்துறையின் சாதனையை பாராட்டலாம்.

இது ஒரு புறமிருக்க, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசின் கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு எதிராக 321 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. 2011 முதல் 2012ம் ஆண்டு வரை நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாததால், இவை தாக்கல் செய்யப்பட்டன. அரசு பள்ளிகளில் பணியாற்றும் 140 இடைநிலை ஆசிரியர்கள், 102 சிறப்பு ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் 51 பேர், சிறப்பு ஆசிரியர்கள் 28 பேர் என பலர் இவற்றை தாக்கல் செய்திருக்கின்றனர். இதே போல், மற்ற துறை அதிகாரிகள் மீது போடப்பட்டுள்ள அவமதிப்பு வழக்குகளை சேர்த்தால், அவை இன்னும் அதிகமாகும்.

  நீதித்துறையின் முயற்சியால் லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகள் குறைக்கப்பட்டாலும், அரசு உயர் அதிகாரிகளின் அலட்சியத்தால் இது போன்ற வழக்குகள் எண்ணிக்கை அதிகமாகி வருகின்றன. எனவே, நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும். அல்லது மேல்முறையீடு செய்ய வேண்டும். அதிகாரிகளின் அலட்சியம் நீதித்துறையின்  பணியில் குறுக்கிடுவது போல் இருக்கக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக