பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

8/28/2014

தமிழ்நாடு STFI மாநிலக்குழு முடிவுகள்


10.9.2014 மாநிலந்தழுவிய மாலைநேர ஆர்ப்பாட்டம் மாதிரி நோட்டீஸ்


23.08.2014 - TNPTF மாநிலச் செயற்குழு முடிவுகள்




Restricted Holidays - 2014

Restricted Holidays

List of Restricted Holidays for the Year 2014
Sr. No.
Holidays
Date
Saka
Days of the week
1.
New Year Day
January, 01
Pausa, 11
Wednesday
2.
Makarsankranti
January, 14
Pausa, 24
Tuesday
3.
Guru Ravi Das Birthday
February, 14
Magha, 25
Friday
4.
Shivaji Jayanti
February, 19
Magha, 30
Wednesday
5.
Ram Navami
April, 08
Chaitra, 18
Tuesday
6.
Mahavir Jayanti
April, 13
Chaitra, 23
Sunday
7.
Vaisakhi
April, 14
Chaitra, 24
Monday
8.
Vishu
April, 14
Chaitra, 24
Monday
9.
Maundy Thursday
April, 17
Chaitra, 27
Thursday
10.
Budha Purnima
May, 14
Vaisakha, 24
Wednesday
11.
Feast of Sacred Heart of Jesus
June, 27
Ashadha, 06
Friday
12.
Raksha Bandhan
August, 10
Sravana, 19
Sunday
13.
Janmashtami
August, 17
Sravana, 26
Sunday
14.
Hartalika
August, 28
Bhadra, 06
Thursday
15.
Onam
September, 07
Bhadra, 16
Sunday
16.
Govardhan Puja
October, 24
Kartika, 02
Friday
17.
Bhaubij
October, 25
Kartika, 03
Saturday
18.
All Souls Day
November, 02
Kartika, 11
Sunday
19.
Muharam
November, 05
Kartika, 14
Wednesday
20.
Guru Nanak’s Birthday
November, 06
Kartika, 15
Thursday
21.
Guru Teg Bahadur Martydom Day
November, 24
Agrahayana, 03
Monday
22.
Feast of Immaculate Conception
December, 08
Agrahayana, 17
Monday
23.
Christmas Eve
December, 24
Pausa, 03
Wednesday
24.
New Year’s Eve
December, 31
Pausa, 10
Wednesday

logo

TNTET PAPER : 1 இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு

12 ஆயிரம் புதிய ஆசிரியர் பணி நியமனம்: முதல்வர் இன்று வழங்குகிறார்

பள்ளிக்கல்வித் துறையில், 12 ஆயிரம்புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் விதமாக, முதல்வர் ஜெயலலிதா, இன்று தலைமைச்செயலகத்தில், சில பேருக்கு, பணி நியமன உத்தரவை வழங்குகிறார்.
பட்டதாரி ஆசிரியரில் சிலருக்கும், முதுகலை ஆசிரியரில் சிலருக்கும், முதல்வர், பணி நியமன உத்தரவை வழங்குவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. பின் பள்ளிக்கல்வித் துறை, கலந்தாய்வு மூலம், 12 ஆயிரம் பேருக்கும், பணி நியமன உத்தரவை வழங்க உள்ளது. இதுகுறித்த கலந்தாய்வு அட்டவணையும், இன்று வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

8/26/2014

UDISE 2014-15-செயற்கைகோள் வழியில் ஒளிபரப்புதல்-தொடர்பான செயல்முறை



வேலைவாய்ப்பில் யாருக்கு முன்னுரிமை? - தி இந்து

வேலைவாய்ப்பில் யாருக்கு முன்னுரிமை? - தி இந்து

விரைவில் புதிய ஆசிரியர்கள் நியமிப்பதற்கான உத்தரவு, தகுதியானவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு

தமிழக அரசு பள்ளிகளில் புதிதாக முதுகலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான,முதல்கட்ட நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறை இறக்கியுள்ளது.அதன்படி பாடவாரியாக உள்ள காலி இடங்களின் எண்ணிக்கை குறித்த முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது. தொடர்ச்சியாக புதிய ஆசிரியர்கள் நியமிப்பதற்கான கலந்தாய்வு தேதியும் விரைவில் வெளியாக உள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் புதிதாக முதுகலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான,முதல்கட்ட நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறை இறக்கியுள்ளது.அதன்படி பாடவாரியாக உள்ள காலி இடங்களின் எண்ணிக்கை குறித்த முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது. தொடர்ச்சியாக புதிய ஆசிரியர்கள் நியமிப்பதற்கான கலந்தாய்வு தேதியும் விரைவில் வெளியாக  உள்ளது.

தமிழக அரசுப்பள்ளிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. காலாண்டுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் சில அரசுப்பள்ளிகளில் முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாததால் பாடம் நடத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் பொதுத்தேர்வை சந்திக்க உள்ள 10ம் வகுப்பு மற்றும் 12ம்வகுப்பு மாணவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். எனவே காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு சமீபத்தில் நடந்த டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்று இறுதி பட்டியலில் இடம் பிடித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதற்காக அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் பாடவாரியாக கணக்குகெடுக்கப்பட்டு இறுதி பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இது தொடர்பான ஆய்வு கூட்டம் பள்ளிக் கல்வி இயக்குனர் தலைமையில் சென்னையில் நாளை (26ம் தேதி) நடக்கிறது.முதன்மைக் கல்வி அதிகாரிகளின் நேர்முக உதவியாளர்கள், அலுவலக கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உடனடியாக நிரப்ப வேண்டிய பணியிடங்கள் குறித்துகணக்கெடுக்கப்படுகிறது. இந்த நியமன நடவடிக்கையின் போது துறை தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் ஆய்வுக்கு எடுக்கப்பட உள்ளது. மேலும் தரம் உயர்த்தப்படும் பள்ளிகள், இவற்றுக்கு தேவையான கூடுதல் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் குறித்த விவரங்களும் இக்கூட்டத்தில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது. எனவே விரைவில் புதிய ஆசிரியர்கள் நியமிப்பதற்கான உத்தரவு தகுதியானவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வின் தாள் இரண்டுக்கான இரண்டாம் கட்ட காலிபணியிட பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.





DIRECT RECRUITMENT OF B.T ASSISTANT 2012-2013

Dated: 25-08-2014

Member Secretary

TNPTF வெளியிட்ட "இது யாருடைய வகுப்பறை" - நூலாசிரியர் ஆயிஷா நடராஜனுக்கு பால சாகித்ய, யுவ புரஸ்கர் விருது


ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் செயல்படும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 27-ல் கலந்தாய்வு!


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு வரும் 27ஆம் தேதி நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆதிதிராவிடர் நல இயக்குனர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர், கணினி ஆசிரியர்,  உடற்கல்வி இயக்குநர் முதுகலை பட்டதாரி ஆசிரியர், கணினி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 2014-2015ஆம் கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் (கலந்தாய்வு) அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் On-line –ல் 27.08.2014 அன்று காலை 11.00 மணி முதல் காலை 11 மணி முதல் நடைபெறும்.

மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு On-line-ல் மாறுதல் கோரி பதிவு செய்து விண்ணப்பித்தவர்கள் மட்டும் On-line- கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

சென்னையில் 26.08.2014 மற்றும் 27.08.2014 அன்று நடைபெறவுள்ள 'கதை கலாட்டா' எனும் கதை சொல்லும் நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்க உத்தரவு


8/25/2014

ஆசிரியர் காலிப்பணியிட ஆய்வுக்கூட்டம் சென்னையில் ஆக.,26ல் நடக்கிறது

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பாடவாரியாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் ஆக., 26ல் நடக்கிறது. பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளின் நேர்முக உதவியாளர்கள், அலுவலக கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.<மாவட்டங்களில் அரசு, நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பாடவாரியாக ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை, துறை தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை, அதில் நிலுவையில் உள்ளவை போன்ற பல்வேறு விபரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

மாவட்ட கல்வித்துறை உயர்அதிகாரி ஒருவர் கூறுகையில்," மாவட்ட வாரியாக அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிட எண்ணிக்கை சேகரிக்கப்பட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை விரைவில் அதில் நியமிப்பது குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது,என்றார்.

நமது மாணவர்களுக்கு என்ன தேவை? - சிந்தனைகளைக் கொட்டும் கல்வியாளர்

கடலூர்: நமது பள்ளிகள், நவீன அடிமைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக மாறிவிட்டன என்று பிரபல குழந்தை இலக்கிய எழுத்தாளரும், கல்வியாளருமான ஆயிஷா நடராசன் வேதனை தெரிவித்துள்ளார்.

கடலுாரில் தனியார் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றும், இரா.நடராசன், ஆயிஷா நடராசன் என, இலக்கிய உலகில் எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுபவர். இவரது ஆயிஷா என்ற குறுநாவல், அரசுப் பள்ளிகளில் அறிவியல் ஆர்வமுள்ள மாணவர்களை எப்படி நடத்த வேண்டும் என காட்சிப்படுத்திய துயர காவியம்.
பல்வேறு இயக்கங்களாலும், தன்னார்வலர்களாலும், ஆயிஷா நாவல், நுாற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு பரிசாக வழங்கப்பட்டது. இவர் எழுதிய 72 புத்தகங்களில், அதிகமானவை குழந்தை இலக்கிய புத்தகங்கள்தான். இந்த ஆண்டுக்கான, பால சாகித்ய விருது இவரின், விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள் என்ற புத்தகத்திற்கு வழங்கப்பட்டது. அதை முன்னிட்டு அவருடன் உரையாடியதில் இருந்து...
வாசகர்களின் உயிரை உருக்கிய ஆயிஷா நாவல் வெறும் புனைக்கதைதானா?
பாம்புக் கடிக்கான மருந்து, பாம்பிலே உள்ளது, அதை கண்டுபிடிக்க வேண்டும் என முயற்சி செய்த மாணவன், தனது பாம்பை தன்னை கடிக்க விட்டான்; மருந்து வேலை செய்யவில்லை. இறந்து போனான். தோற்பவர்கள் யாரும் விஞ்ஞானிகள் இல்லையா? அந்த விஞ்ஞானி தோற்றுப் போனான்.
30 ஆண்டுகளுக்கு முன், இந்த செய்தியை நாளிதழில் படித்தபோது, ராத்திரி முழுக்க எனக்கு துாக்கம் வரவில்லை. அதை புனைக் கதையாக்கினேன். மற்ற அனைத்து சம்பவங்களும், வகுப்பறை கொடுத்தவை. ரோஸ் குறுநாவல், குழந்தைகளின் உரையாடலையே அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. அவர்களின் சொற்கள் மிக நுட்பமாக அதில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது எப்படி சாத்தியமானது?
நான் ஆசிரியனாக, பணிபுரிபவன் அல்ல; ஆசிரியனாகவே வாழ்பவன். இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. குழந்தைகளின் உலகத்தை, அவர்களின் உலகத்துக்குள் சென்று பார்த்தால் மட்டுமே உணர முடியும். அதற்கு அர்ப்பணிப்பு தேவை. இந்த 27 ஆண்டுகால ஆசிரியர் பணியில், மாணவர்களிடமிருந்து தினந்தோறும் புதிதாக எதையாவது கற்று வருகிறேன். உண்மையில் எங்கள் மாணவர்கள்தான், எனக்கு ஆசிரியர்கள்.
விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில், குழந்தைளுக்கான நுால்கள் எழுதுவோர் குறைந்து போனது ஏன்?
குழந்தைகள், காலம்தோறும் மாறக்கூடியவர்கள். பெரியவர்களுக்கான இலக்கியம், எப்போதும் ஒரே நேர்க்கோட்டில் நிற்கும். அதனால், குழந்தைகளை ஒவ்வொரு காலகட்டத்திலும் முழுமையாக புரிந்தால் மட்டுமே சாத்தியம். அவர்களின் இன்றைய காலகட்ட மொழி, பழக்க வழக்கங்கள் இதை எல்லாம் கூர்ந்து கவனித்தால், குழந்தை இலக்கியம் சாத்தியம். இதை கவனிக்காததால், குழந்தை இலக்கியம் எழுதும் ஆட்கள் குறைந்து விட்டனர். எடுத்துக்காட்டாக, ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான் என்று எழுதினால், அடுத்த வரி, அவனுக்கு இத்தனை மனைவிகள் என, பெரியவர்களுக்கு எழுத வேண்டும்.
அந்த மன்னன் மிகவும் ஒல்லியாக சோர்ந்து காணப்பட்டான் என, குழந்தைகளுக்கு எழுத வேண்டும். பள்ளி மாணவர்கள், ஜாதிக்கான கயிறுகள் கட்டி வரும் வகையில் கலாசாரம் மாறிவிட்டது. இந்த நிலையில், குழந்தை இலக்கியங்கள் எப்படி மாணவர்களை மாற்றும்? அடிப்படை கல்விக் கோட்பாட்டிலேயே சிக்கல் உள்ளது. நவீன அடிமைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக, பள்ளிகள் மாறிவிட்டன.
தேர்வுக்கான மதிப்பெண் அடிப்படையில், கல்வி முறை இருப்பதால், இயந்திரமாகவே மாணவன் மாறிவிடுகிறான். இதில், ஜாதியும், மதமும், அந்த கல்விமுறை என்ற இயந்திரத்தில் பிணைக்கப்பட்ட சிறுபாகங்கள். அடிப்படை மாறினால், அனைத்தும் மாறும்.
உலகத்தில், இரும்புக்கை மாயாவியும், துப்பறியும் சாம்புவும் எப்படி சாத்தியமாகும் என, நினைக்கிறீர்கள்?
ஏன் சாத்தியமாகாது? கார்ட்டூன் சேனல்கள், தமிழக குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் கொண்டவை இல்லை. அவை அமெரிக்க நிகழ்ச்சிகளின் மொழிபெயர்ப்புகள். அடிப்படையிலேயே சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, இன்றைய வணிக உலகில், குழந்தைகள் தனித்து விடப்பட்டுள்ள சூழ்நிலையில், காமிக்ஸ் புத்தகங்கள் வந்தால் குழந்தைகளிடம் பெரும் வரவேற்பை பெறும்.

885 ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளிக்கு மாற்றுவதற்கான ஒப்புதல் கோப்பு மாநில திட்ட இயக்குநருக்கு அனுப்பப்பட்டுள்ளது - RTI


பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டு தாள் ஒன்றிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பணி நாடுகளுக்கான அறிவிப்பு

இடைநிலை ஆசிரியர் நியமனம் 2012-13, அறிவிக்கை எண் 06/2014 நாள் 21.08.2014 க்கான தமிழ் நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஒன்றில் தேர்ச்சி பெற்ற தகுதியான பணிநாடுநர்களில் பட்டியலில் இருந்து தாள் இரண்டில் தேர்ச்சி பெற்று ஏற்கனவே 10.8.14 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள பட்டியலில், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட பணி நாடுநர்களை நீக்குவது என ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்து இவ்வறிக்கையினை வெளியிடுகிறது.

எனினும் ஏற்கனவே பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் தங்களது தெரிவினை ரத்து செய்து இடைநிலை ஆசிரியர் பணிக்கு மட்டுமே தங்களை தேர்ந்தெடுக்க விருப்பம் தெரிவிக்க விரும்பின் அவர்கள் மட்டும் 25.8.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு நேரில் வருகை புரிந்து அதற்குரிய எழுத்துப்பூர்வமாக விருப்பக் கடிதத்தினை சமர்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். எக்காரணம் கொண்டும் மற்றவர்கள் வருகை தர வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.<உறுப்பினர் செயலர்.

23.08.2014ல் திண்டுக்கல்லில் நடைபெற்ற TNPTF மாநில செயற்குழு கூட்டம்




சங்கங்களின் போராடும் உரிமையை தடை செய்யும் அரசாணையை இரத்து செய்யக் கோரி அனைத்து வட்டாரங்களிலும் 10.09.2014ல் கண்டண ஆரப்பாட்டம் நடத்த முடிவு

8/22/2014

TNPTFன் முன்னாள் மாநிலத்தலைவர் தோழர் மா.சா.முனுசாமியின் இயக்க வரலாற்றில் எனது நினைவலைகள் நூல் அறிமுக கூட்டம்





12-ஆம் வகுப்பு காலாண்டு தேர்வு அட்டவணை


12 ஆயிரம் புதிய ஆசிரியர் பட்டியல் ஒப்படைப்பு


10-ஆம் வகுப்பு காலாண்டு தேர்வு அட்டவணை


கல்வித்துறையில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் புதுமையான திட்டங்களோடு, ஆசியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கல்வித்தரம் உயரும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே . சி . வீரமணி

கல்வித்துறையில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் புதுமையான திட்டங்களோடு, ஆசியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கல்வித்தரம் உயரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே . சி . வீரமணி தெரிவித்தார். திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள மதுரை , திண்டுக்கல் , தேனி , சிவகங்கை , விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களின் கல்வி அலுவலர்கள் மற்றும் பொதுத்தேர்வில் 80 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சிப் பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .
திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே . சி . வீரமணி தலைமை வகித்தார் . பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் சபீதா , அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர் . கூட்டத்தில் அமைச்சர் கே . சி . வீரமணி பேசியது : தமிழக அரசு கல்வித்துறைக்கு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது . ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே , இந்த நிதி ஒதுக்கீடு செய்ததன் முழு பலனையும் பெற முடியும் . தமிழக மாணவர்கள் , கல்வியின் மூலம் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் , தமிழக முதல்வர் சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் . திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள 5 மாவட்டங்களில் , 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 70 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சிப் பெற்ற 234 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் ஆய்வுக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர் . பிளஸ் 2 தேர்வில் , இந்த 5 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சிப் பெறவில்லை . இவர்களின் எதிர்காலம் , தவறான வழியில் செல்வதற்கு வாய்ப்புள்ளது . இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்கும் வகையில் , தரத்தில் பின் தங்கிய மாணவர்களின் மீது கூடுதல் கவனம் செலுத்தி , அவர்களை சிறப்பாக உருவாக்க வேண்டும் . தொடர்ச்சியாக பல ஆண்டுகள் முதலிடத்தில் இருந்த விருதுநகர் மாவட்டம் , பின் தங்கியதற்கான காரணங்களை கண்டறியப்பட வேண்டும் . கல்வியில் பின்தங்கிய தருமபுரி , கிருஷ்ணகிரி , ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள் , தேர்ச்சி விகிதத்தில் முன்னேற்றம் பெற்றுள்ளன . தோல்வி நிலையானது இல்லை . இதனை புரிந்து கொண்டு , இழந்த பெருமையை மீட்டெடுக்கும் முயற்சியில் தலைமையாசிரியர்கள் ஈடுபட வேண்டும் . 2011 ஆம் ஆண்டு , 71 ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தது . கடந்த 3 ஆண்டுகளில் படிப்படியாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன . நிகழாண்டில் மேலும் 3459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார் அவர் . 2013-14 கல்வியாண்டில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற 13 மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் , 35 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் , திண்டுக்கல் , தேனி , மதுரை , விருதுநகர் , சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலிருந்து சிறந்த தொடக்கப் பள்ளிகளாக தேர்வு பெற்ற தலா 3 பள்ளிகளுக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன . முன்னதாக வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பழனி கல்வி மாவட்ட அளவிலான மாவட்ட சதுரங்கப் போட்டியை அமைச்சர் கே . சி . மணி தொடங்கி வைத்தார் . அதனைத் தொடர்ந்து 356 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் 331 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி ஆகியவற்றையும் வழங்கினார் . நிகழ்ச்சியில் மக்களைவை உறுப்பினர் எம் . உதயக்குமார் , வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் . பழனிச்சாமி , மேயர் வி . மருதராஜ் , பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் , தொடக்கக் கல்வித்துறை இணை இயக்குநர் லதா , மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் பிச்சை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

TRB-TNTET paper- 1 notification

DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS 2012-2013


2582 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

TET தாள் ஒன்றுக்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு காலி பணியிடங்கள், தற்சமய காலி பணியிடங்கள், ஆதி திராவிட மற்றும் நலத்துறை பள்ளிகளில் இருக்கும் காலி பணியிடங்கள், சிறுபான்மை மொழி காலி பணியிடங்கள் என்று மொத்தம் 2582 காலி பணியிடங்கள் இந்த அறிவிப்பு மூலம் நிரப்பப்படும்.
தாள் இரண்டுக்கு வெளியிடப்பட்டதை போல இல்லாமல் ஒரு முழுமையான அளவில் தாள் ஓன்றுக்கான அறிவிப்பு உள்ளது.விரைவில் தாள் ஒன்றுக்கு தேர்வானவர்கள் தேர்வு பட்டியல் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மூன்று பாடங்களுக்கான இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.
வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் அரசு பள்ளிகளுக்கு 2,582 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வில் (தாள்-1) தேர்ச்சி பெற்ற 31,500 இடைநிலை ஆசிரியர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண்ணை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 6-ந் தேதி இணையதளத்தில் வெளியிட்டது. ஆனால், காலியிடங்கள் பற்றிய விவரம் அறிவிக்கப்படவில்லை. இதனால், சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்த இடைநிலை ஆசிரியர்கள் எத்தனை காலியிடங்கள் அறிவிக்கப்பட போகிறதோ? என்ற எதிர்பார்ப்புடன் இருந்து வந்தனர். 4 ஆயிரம் இடங்கள் அளவுக்கு காலியிடங்கள் இருக்கும் என பல்வேறு யூகங்கள் எழுந்து வந்தன. 2,582 காலியிடங்கள் அறிவிப்பு இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர் காலியிடங்களின் எண்ணிக்கை பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) வியாழக்கிழமை இரவு வெளியிட்டது. காலியிடங்கள் விவரம் வருமாறு:- ஆதி திராவிடர் நலப்பள்ளிகள் - 669, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் - 64, சிறுபான்மை மொழி - 174, பொதுவான அரசு பள்ளிகள் - 1,675 ஆக மொத்தம் 2,582 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் நிரப்பப்பட உள்ளது. வெயிட்டேஜ் மார்க் என்பது பிளஸ்-2, இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு, ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகிய மதிப்பெண்களின் வெவ்வேறு விகிதாச்சாரத்திலான தொகுப்பு மதிப்பெண் ஆகும். தற்போது காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதால் விரைவில் இறுதி தேர்வுப் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 2,582 காலியிடங்களுக்கு 31,500 பேர் போட்டிபோடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பென்ஷன் திட்டத்தின்படி, குடும்ப ஓய்வூதியம் இல்லை

தஞ்சாவூரைச் சேர்ந்த ஆசிரியர் பி.ராஜா என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காளர் அலுவலகத்தில் கிராஜுவிட்டி தொடர்பாக தகவல் கேட்டிருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட விளக்கத்தில்,
தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978-க்கு உட்பட்ட அரசு ஊழியர்களின் ஓய்வூதிய பயன்கள் தொடர்பான வேலைகளை மட்டுமே தாங்கள் பார்த்து வருவதாகவும் மற்ற திட்டத்தின் (புதிய பென்ஷன் திட்டத்தில்) கீழ் உள்ள ஊழியர்கள் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வரமாட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, 2003 ஏப்ரலுக்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 பொருந்தாது என்று தமிழக அரசு கடந்த 6.8.2003 அன்று அரசாணை வெளியிட்டது. அதேபோல், அவர்களுக்கு பொது வருங்கால வைப்புநிதியும் (ஜிபிஎப்) பொருந்தாது என்று 27.5.2004 அன்று அரசாணை மூலம் தெரிவித்தது. தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 பொருந்தாது என்பதால் அதன்கீழ் வழங்கப்படும் கிராஜுவிட்டி மற்றும் குடும்ப ஓய்வூதியம் ரத்தாகிவிடும்.

வருந்துகிறோம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை நிர்மானம் செய்தவர்களில் ஒருவரும், முன்னாள் மாநிலச்செயலாளருமான தோழர் கே.நீலமேகம் 19.8.2014ல் இச்சமூகத்தில் இருந்து நிரந்தரமாக பிரிந்துவிட்டார். தோழரின் மறைவிற்கு சிவகங்கை மாவட்ட கிளை தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

8/21/2014

கிராஜுவிட்டி, குடும்ப ஓய்வூதியம் இல்லாத புதிய பென்ஷன் திட்டம்: 2 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பாதிப்பு

புதிய பென்ஷன் திட்டத்தில் கிராஜுவிட்டி, குடும்ப ஓய்வூதியம் இல்லாததால் தமிழகத்தில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் உள்பட 2 லட்சம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசுப் பணியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு பிறகும், தமிழக அரசுப் பணியில் 2003 ஏப்ரல் 1-க்கு பிறகும் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் புதிய ஓய்வூதிய திட்டத்தின் (என்.பி.எஸ்.) கீழ் சேர்க்கப்படுகின்றனர்.
புதிய பென்ஷன் திட்டத்தின்படி, அரசு ஊழியரின் அடிப்படைச் சம்பளம், தர ஊதியம், அக விலைப் படி ஆகியவற்றில் ஒவ்வொரு மாதமும் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு பங்களிப்பு ஓய்வூதிய நிதியில் (சி.பி.எப்.) சேர்க் கப்படுகிறது. அதே தொகைக்கு இணையான தொகையை அந்த ஊழியரின் கணக்கில் செலுத்து கிறது. இவ்வாறு சேரும் தொகை யில் 60 சதவீதம், அந்த ஊழியர் ஓய்வு பெறும்போது மொத்தமாக வழங் கப்படும். மீதமுள்ள 40 சத வீதத் தொகை, பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு மாதாமாதம் ஓய்வூதியமாக அவருக்கு அளிக்கப்படும்.
ராணுவத்தினருக்கு விதிவிலக்கு
இதில் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பதற்கு எந்த விதமான உத்தரவாதமும் அளிக்கப் படவில்லை. புதிய ஓய்வூதிய திட்டப்பணியை மத்திய அரசின் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டி.ஏ.) என்ற அமைப்பு கவனித்து வருகிறது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து ராணுவத்தினருக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கம், திரிபுரா ஆகிய 2 மாநிலங்கள் மட்டும் புதிய பென்ஷன் திட்டத்தைப் பின்பற்றவில்லை. நீண்டகாலமாக எதிர்ப்பு தெரிவித்து வந்த கேரள அரசுகூட கடந்த ஆண்டு முதல் புதிய பென்ஷன் திட்டத்தைப் பின்பற்றத் தொடங்கிவிட்டது.
கிராஜுவிட்டி ரத்து
அரசு ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வுபெறும்போது கிராஜுவிட்டி (பணிக்கொடை) கிடைக்கும். பணிபுரிந்த ஒவ்வோர் ஆண்டுக்கும் 15 நாள் சம்பளம் என்ற அடிப்படையில் கணக் கிடப்பட்டு அதிகபட்சம் 16.5 மாதங் களுக்கு இணையான சம்பளம் (உச்சவரம்பு ரூ.10 லட்சம்) பணிக்கொடையாக வழங்கப்படும்.
அதேபோல், 30 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் முழு ஓய்வூதியம் அதாவது கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக கிடைக்கும். ஓய்வூதியதாரர் மரணம் அடைந்தால் அவரது மனைவி அல்லது வாரிசுகளுக்கு 30 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். இந்நிலையில், பிஎப்ஆர்டிஏ அண்மையில் வெளியிட்ட ஒரு அறிவிப்பில் புதிய பென்ஷன் திட்டத்தில் உள்ளவர்களுக்கு கிராஜுவிட்டி கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.
குடும்ப ஓய்வூதியம் இல்லை
தஞ்சாவூரைச் சேர்ந்த ஆசிரியர் பி.ராஜா என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காளர் அலுவலகத்தில் கிராஜுவிட்டி தொடர்பாக தகவல் கேட்டிருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட விளக்கத்தில், தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978-க்கு உட்பட்ட அரசு ஊழியர்களின் ஓய்வூதிய பயன்கள் தொடர்பான வேலைகளை மட்டுமே தாங்கள் பார்த்து வருவதாகவும் மற்ற திட்டத்தின் (புதிய பென்ஷன் திட்டத்தில்) கீழ் உள்ள ஊழியர்கள் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வரமாட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 2003 ஏப்ரலுக்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 பொருந்தாது என்று தமிழக அரசு கடந்த 6.8.2003 அன்று அரசாணை வெளியிட்டது. அதேபோல், அவர்களுக்கு பொது வருங்கால வைப்புநிதியும் (ஜிபிஎப்) பொருந்தாது என்று 27.5.2004 அன்று அரசாணை மூலம் தெரிவித்தது. தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 பொருந்தாது என்பதால் அதன்கீழ் வழங்கப்படும் கிராஜுவிட்டி மற்றும் குடும்ப ஓய்வூதியம் ரத்தாகிவிடும்.
தமிழகத்தில் 2 லட்சம் பேர் பாதிப்பு
புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு தமிழகத்தில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் உள்பட 2 லட்சம் அரசு ஊழியர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். புதிய பென்ஷன் திட்டத்தில் கிராஜுவிட்டி, குடும்ப ஓய்வூதியம் இல்லாததால் இந்த 2 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, புதிதாக அரசுப் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கூறும்போது, ‘‘பணிப் பாதுகாப்பு, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் போன்ற பயன்கள் கிடைக்கும் என்பதால்தான் எல்லோரும் அரசு வேலையை விரும்புகின்றனர். நாங்களும் அப்படி நினைத்துதான் பணியில் சேர்ந்தோம். ஆனால், தற்போது அந்தப் பயன்கள் எதுவும் கிடைக்காது என்பதை நினைத்தால் ஏமாற்றமாகவும், வேதனையாகவும் உள்ளது. தமிழக அரசு முன்பு நடைமுறையில் இருந்த வந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தனர்.

தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் - தொடக்கக்கல்வி இயக்குநர்



டி.இ.ஓ., உத்தரவை மதிக்காததால், பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

உளுந்துார்பேட்டை: டி.இ.ஓ., உத்தரவை மதிக்காததால், பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா உளுந்தாண்டார்கோயில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக சிவானந்தராஜாவும், இளநிலை பட்டதாரி ஆசிரியராக விமலாவும் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுடைய வருகை பதிவேட்டில் விமலாவின் பெயர் முதலாகவும், சிவானந்தராஜாவின் பெயர் இரண்டாவதாகவும் இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், டி.இ.ஓ., மதிவாணன், கடந்த மாதம் 4ம் தேதி பள்ளி வந்து விசாரித்து, சீனியாரிட்டி அடிப்படையில் வருகை பதிவேடு எழுதும்படி தலைமை ஆசிரியர் அருள்மொழியிடம் கூறிவிட்டு சென்றார்.
ஆனால் டி.இ.ஓ., உத்தரவை மதித்து, சீனியாரிட்டி முறையை கடைபிடிக்காததால், தலைமை ஆசிரியர் அருள்மொழியை சஸ்பெண்ட் செய்து டி.இ.ஓ., மதிவாணன் உத்தரவிட்டார். தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அறிந்த பெற்றோர்கள், நேற்று பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடையே பிரச்னையை தீர்த்து கொள்ள வேண்டும், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், தலைமை ஆசிரியரின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறி, பள்ளியை முற்றுகையிட்டனர். அவர்களிடம் ஏ.இ.ஓ., செலின்மேரி பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார்.

டி.இ.டி. மதிப்பெண் சலுகை ரத்து கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

மதுரை: ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை வழங்கிய உத்தரவை ரத்து செய்யக்கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மதுரை, சொக்கிகுளம் ஜெயகிருஷ்ணா தாக்கல் செய்த மனு: ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.) வெற்றிபெற 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) நிர்ணயித்தது.
இதில் அந்தந்த மாநிலங்களில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்பட்டோருக்கு (ஓ.பி.சி.) மதிப்பெண் சலுகை வழங்கலாம் என உத்தரவிட்டது. 2011 ல் ஆதிதிராவிடர், பழங்குடியினர், ஓ.பி.சி., மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க என்.சி.டி.இ. உத்தரவிட்டது.
தமிழகத்தில், 2012 ஜூலை 12 ல் முதன்முதலில் நடந்த டி.இ.டி. தேர்வில் 0.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதனால் தமிழக அரசு மறு தேர்வு நடத்தியது. இட ஒதுக்கீடு அடிப்படையில் சலுகை பெற்ற பிரிவினருக்கு, 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கி 2014 பிப்.6 ல் தமிழக அரசு உத்தரவிட்டது.
தகுதியை நிர்ணயிப்பதற்கு மட்டுமே என்.சி.டி.இ.க்கு அதிகாரம் உள்ளது. மதிப்பெண் சலுகை வழங்க என்.சி.டி.இ. மற்றும் தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. மதிப்பெண் சலுகை வழங்கிய என்.சி.டி.இ. மற்றும் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
2013 ஆகஸ்டில் நடந்த டி.இ.டி. தேர்வு அடிப்படையில், பணி நியமனம் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, கற்பித்தல் அனுபவம் அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி கே.கே.சசிதரன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் எபனேசர் ஆஜரானார். நீதிபதி, "பணி நியமனம் இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பைப் பொறுத்து அமையும்" என்றதுடன், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர், என்.சி.டி.இ., ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர், தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இருபுறமும் சிக்கித் தவிக்கும் மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள்

மதுரை: மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், நிர்வாக ரீதியான மூவகை கட்டமைப்புக்கும், கவுன்சிலர்களின் உட்கட்சி அரசியலுக்கும், பதில் சொல்ல முடியாமல் தத்தளிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், 1.4.1990 முதல் அரசு ஆசிரியர்களாக அறிவிக்கப்பட்டனர். அப்போது முதல் இவ்வகை பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்கள், டி.ஆர்.பி. அல்லது பள்ளிக் கல்வித்துறை மூலமே நிரப்பப்பட்டு வருகின்றன.
மதுரையில் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை என 67 பள்ளிகளில், 950க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளனர். ஆனால், அரசு நலத்திட்டம் வழங்கல், விளையாட்டு விழா நடத்துவது, ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்துவது போன்ற பல்வேறு நிலைகளில், முதன்மை கல்வி அலுவலகம், மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் என மூன்று வகை கட்டமைப்புகளுக்கும் பதில் அளிக்க வேண்டியுள்ளது.
உதாரணமாக, அரசு வழங்கும் நலத்திட்ட விவரங்களை மூன்று வகையாக தயாரிக்க வேண்டியுள்ளது. ஆனால் அரசு பள்ளிகள் இவ்வகை விவரங்களை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு வழங்கினால் போதுமானது. அதேபோல், மூவகை நிர்வாகங்கள் கேட்கும் தகவல்களையும் தனித்தனியே வழங்க வேண்டியுள்ளது.
ஆனால், அதற்கு தகுந்த ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை வசதியும் இல்லை.மேலும் வார்டு கவுன்சிலர்கள் அவர்கள் இஷ்டத்திற்கு ஏற்ப நடத்தும் விழாக்களிலும், மாணவர்கள் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால், பல பள்ளிகளில் குறிப்பிட்ட காலத்திற்குள் பாடங்களை நடத்தி முடிக்கவில்லை. இதை வெளிப்படையாக தெரிவிக்க முடியவில்லை என ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.
மாநகராட்சி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகள், கல்வித் துறை உத்தரவுப்படி நடக்கின்றன. ஆனால் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், அரசு ஆசிரியர்களாக அறிவிக்கப்பட்ட பின்னரும், இந்த மூவகை கட்டமைப்புகளுக்குள் சிக்கித் தவிக்க வேண்டியுள்ளது. மூவகை நிர்வாகங்களும் பல்வேறு பணிகளுக்காக எங்களை பயன்படுத்தி கொள்கின்றனர்.
ஆனால் 24 ஆண்டுகளாக, சம்பளத்தில் பிடித்தம் செய்து, மாநகராட்சி பொது நிதியில் சேர்க்கப்படும் பொது சேமநல நிதிக்கான (ஜி.பி.எப்.) கணக்கு சிலிப் கேட்டு போராடுகிறோம். இதுவரை நடவடிக்கை இல்லை. ஒவ்வொரு ஆண்டும் கவுன்சிலிங் நடத்த கோரியும் போராட வேண்டியுள்ளது. மாநில அளவில் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றனர்.

தமிழகத்தில் விரைவில் 12,588 ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக்கல்வி செயலர் சபிதா

திண்டுக்கல்: தமிழகத்தில் இந்த ஆண்டில் 12,588 ஆசிரியர்கள், விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் என, பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் கல்வி அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் கல்வித்துறைக்கு 65 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட சரிந்துள்ளது; இதை சரிசெய்ய வேண்டும்.
நான்கு ஆண்டுகளில் காலியாக இருந்த 76,684 பணியிடங்களில் 53,288 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டு 1,267 முதுகலை ஆசிரியர்களும், 11,321 பட்டதாரி ஆசிரியர்களும் விரைவில் நியமிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் 2,000 மழலையர் பள்ளிகளுக்கு விரைவில் அங்கீகாரம்: தொடக்க கல்வித்துறை

சென்னை: மாநிலம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத 2,000 மழலையர் பள்ளிகளுக்கு, விரைவில் அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, வட்டாரம் தெரிவித்தது.
அங்கீகாரம் இல்லாத 1,400 மழலையர் பள்ளிகளை வரும் 2015 ஜனவரிக்குள் மூட நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் தமிழக அரசு தெரிவித்தது. அதன்படி, அங்கீகாரம் இல்லாத மழலையர் பள்ளிகளுக்கு தொடக்க கல்வித்துறை சார்பில் தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.
நோட்டீஸ் கிடைத்த மூன்று நாளுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்; இல்லை எனில் பள்ளியை மூட தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழலையர் பள்ளிகள் குறித்த முழு பட்டியல் தொடக்க கல்வித் துறையிடம் இல்லை. ஆனால் மாநிலம் முழுவதும் 2,000 மழலையர் பள்ளிகள் இருக்கலாம் என துறை வட்டாரம் தெரிவிக்கிறது.
ஒரு பக்கம் மழலையர் பள்ளிகளை மூட நோட்டீஸ் அனுப்பினாலும், அனைத்து பள்ளிகளும் கட்டட உறுதி சான்று, தீயணைப்பு துறை சான்று உள்ளிட்ட பல சான்றிதழ்களை சமர்பித்து அங்கீகாரம் கேட்டு முறையாக தொடக்க கல்வித் துறைக்கு விண்ணப்பித்தால் அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்க கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது.
இதுகுறித்து துறை வட்டாரம் கூறியதாவது: அங்கீகாரம் இல்லாத மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகளில், தலா 50 குழந்தைகளுக்கு குறையாமல் படித்து வருகின்றனர். அதன்படி இந்த பள்ளிகளில் (பிரீ கேஜி முதல் யு.கே.ஜி. வரை) ஒரு லட்சம் குழந்தைகள் படித்து வருவதாக அறிகிறோம். பட்டியலில் இடம் பெறாமல் விடுபட்ட மழலையர் பள்ளிகளை அடையாளம் காண, உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திடீரென 2,000 பள்ளிகளையும் மூடினால், இங்கு படிக்கும் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும். எனவே ஒரு பக்கம் மூடுவதற்கு நோட்டீஸ் அனுப்பினாலும், மறுபக்கம் முறையாக அங்கீகாரம் பெற சம்பந்தப்பட்ட பள்ளிகள் தொடக்க கல்வித்துறையிடம் விண்ணப்பிக்கலாம். உரிய சான்றிதழ்களை பெற்று விண்ணப்பித்ததும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் அனுமதி பெற்று அனைத்து பள்ளிகளுக்கும் அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு துறை வட்டாரம் தெரிவித்தது.
பணத்தை கொட்டும் பள்ளிகள்
மழலையர் பள்ளிகள் பணம் காய்க்கும் மரங்களாக விளங்கி வருகின்றன. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை நடத்துவதை விட, இந்த பள்ளிகளை நடத்துவதற்கு செலவு குறைவு; ஆனால் வருமானம் கொட்டும்.
சாதாரண வீடுகளை பிளே ஸ்கூல் என பெற்றோரை ஈர்க்கும் வகையில் மாற்றி, அதை குழந்தை காப்பகமாகவும், மழலையர் பள்ளிகளாகவும் ஒரே கட்டடத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இரண்டரை வயது குழந்தையை முறையான பள்ளிக்கு அனுப்ப, பிரீ கேஜி வகுப்பில் சேர்த்து ஆறு மாதம் பயிற்சி அளிக்கின்றனர். இதற்கு சுளையாக 20 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கின்றனர். இந்த கட்டணம் இடத்திற்கு தகுந்தார்போல் மாறுபடுகிறது.
இதனால் முறையாக சான்றிதழ்களை பெற்று தொடக்க கல்வித் துறையின் அங்கீகாரத்தை பெற்றுவிட வேண்டும் என பள்ளி நிர்வாகிகள் மும்முரமாக முயற்சி செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஏற்ப, அங்கீகாரம் வழங்க தொடக்க கல்வித்துறை கிரீன் சிக்னல் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு

சென்னை: பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, காலாண்டுத் தேர்வு அட்டவணையை, பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ளார்.
மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத்தேர்வை, மாணவர்கள், பயம் இல்லாமல் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக, பொதுத்தேர்வில் கடைபிடிக்கும் முறையைப் போலவே, காலாண்டு, அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது.
அதன்படி, "10ம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு, செப்., 17ம் தேதி துவங்கி 26ம் தேதி வரை நடைபெறுகிறது.
அதைப்போல, பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு செப்., 15ம் தேதி துவங்கி 26ம் தேதி வரை நடைபெறுகிறது" என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு, தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு செப்., 5ம் தேதி, டில்லி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருது வழங்க உள்ளார்.
சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாநில அரசுகளும், தேசிய அளவில், மத்திய அரசும், ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவிக்கின்றன.
ஆசிரியராக வாழ்க்கையை துவக்கி, ஜனாதிபதியாக உயர்ந்த, ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்து, தேசிய விருதுக்கு 22 ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஆரம்ப, நடுநிலைப் பள்ளி அளவில், 15 ஆசிரியரும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி அளவில், ஏழு ஆசிரியரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் மட்டும் இல்லாமல், அனைத்து மாநிலங்களிலும் இருந்தும், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு, செப்., 5ம் தேதி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி விருது வழங்க உள்ளார்.
விருதில், ரொக்கம் 25 ஆயிரம் ரூபாய், வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு மடல் ஆகியவை அடங்கும். விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் விவரம்:
1. ஆரோக்கியமேரி, தலைமை ஆசிரியை, செயின்ட் ஆன்ஸ் ஆரம்ப பள்ளி, ராயபுரம், சென்னை.
2. சம்பங்கி, தலைமை ஆசிரியை, அரசு நடுநிலைப்பள்ளி, கந்தனேரி, வேலூர் மாவட்டம்.
3. கந்தசாமி, தலைமை ஆசிரியர், அரசு நடுநிலைப்பள்ளி, கடப்பை, விழுப்புரம் மாவட்டம்.
4. செல்வராஜு, பட்டதாரி ஆசிரியர், ஆனந்தராஜு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி, மரைங்கநாயநல்லூர், நாகை மாவட்டம்.
5. நடராஜன், தலைமை ஆசிரியர், ஆதிதிராவிடர் நலத்துறை ஆரம்ப பள்ளி, சிக்கல்நாயக்கன்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.
6. ஆண்டிரூவ்ஸ், தலைமை ஆசிரியர், சி.எஸ்.ஐ., ஆரம்ப பள்ளி, உறையூர், திருச்சி மாவட்டம்.
7. தெரேன்ஸ், தலைமை ஆசிரியர், ஆர்.சி., அமலாராக்கினி நடுநிலைப்பள்ளி, குளித்தலை, கரூர் மாவட்டம்.
8. நளினி, தலைமை ஆசிரியை, அரசு நடுநிலைப்பள்ளி, தாரவைதோப்பு, பாம்பன், ராமநாதபுரம் மாவட்டம்.
9. முத்தையா, தலைமை ஆசிரியர், அரசு நடுநிலைப்பள்ளி, கே.செம்பட்டி, மதுரை மாவட்டம்.
10. உதயகுமார், தலைமை ஆசிரியர், அரசு ஆரம்ப பள்ளி, சின்னகொண்டாலம்பட்டி, சேலம் மாவட்டம்.
11. நசிருதீன், தலைமை ஆசிரியர், நகராட்சி உருது மகளிர் நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம்.
12. ராமகிருஷ்ணன், அரசு ஆரம்ப பள்ளி, வெள்ளாளபாளையம், கோவை மாவட்டம்.
13. தாமஸ், தலைமை ஆசிரியர், பாரத் மாதா உதவிபெறும் ஆரம்ப பள்ளி, உப்பாட்டி, நீலகிரி மாவட்டம்.
14. விநாயக சுந்தரி, தலைமை ஆசிரியை, சங்கரகுமார் ஆரம்ப பள்ளி, சங்கரலிங்கபுரம், கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்.
15. ராமசாமி, தலைமை ஆசிரியர், வேணுகோபால விலாச உதவிபெறும் ஆரம்ப பள்ளி, விஸ்நாம்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.
16. நீலகண்டன், தலைமை ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுபேட்டை, வேலூர் மாவட்டம்.
17. சாஷி ஸ்வரண்சிங், முதுகலை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம், சென்னை.
18. கஸ்தூரி, தலைமை ஆசிரியர், நகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஜமீன் பல்லாவரம், காஞ்சிபுரம் மாவட்டம்.
19. ஆதியப்பன், தலைமை ஆசிரியர், எம்.எப்.எஸ்.டி., மேல்நிலைப்பள்ளி, சவுகார்பேட்டை, சென்னை.
20. செல்வசேகரன், முதுகலை ஆசிரியர், கிரசன்ட் மேல்நிலைப்பள்ளி, அவனியாபுரம், தஞ்சாவூர் மாவட்டம்.
21. கஸ்தூரி, பட்டதாரி ஆசிரியர், மார்னிங் ஸ்டார் உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி, செங்குந்தபுரம், கரூர் மாவட்டம்.
22. பாலுசாமி, தலைமை ஆசிரியர், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, பீளமேடு, கோவை மாவட்டம்.

தேர்ச்சி விகிதம் 95 % உயர வேண்டும்: பள்ளி கல்வித் துறை முதன்மைச் செயலர்


அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 90-லிருந்து 95 சதவீதமாக உயர வேண்டும் என, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் டி. சபீதா அறிவுறுத்தியுள்ளார்.
திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களுக்கான கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பொதுத் தேர்வில் 80 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சிப் பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, இந்த ஆய்வுக் கூட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி தலைமை வகித்துப் பேசினார்
பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் டி. சபீதா, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் டி. சபீதா பேசியதாவது:
கல்வித் துறையின் வளர்ச்சிக்கு ரூ. 65 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து, திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
கடந்த 2012ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 358 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்றன. 2013இல் 453 பள்ளிகளாகவும், 2014இல் 887 பள்ளிகள் என 100 சதவீத தேர்ச்சிப் பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளன.
அதேபோல் பிளஸ் 2 தேர்வில், 2013ஆம் ஆண்டு 42ஆக இருந்த 100 சதவீத தேர்ச்சிப் பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை, 2014இல் 113 பள்ளிகளாக அதிகரித்துள்ளன. மேலும், மாநில அளவிலான முதல் 3 இடங்களில், அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சிப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தரமான கல்வி அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில், தமிழக அரசு 71,708 ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொண்டது. அதில், 53,788 இடங்களுக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்களுக்கு விளையாட்டு ஆர்வமும் தேவை என்பதைக் கருத்தில்கொண்டு, 2011-12 ஆம் கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் சதுரங்க விளையாட்டு தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற சதுரங்கப் போட்டியில், மாநிலம் முழுவதிலுமிருந்து 11.50 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டனர். அதில் சிறந்த 24 பேர் தேர்வு செய்யப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
அதேபோன்று, நிகழாண்டில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்க 15 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில், மாநிலத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 90 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள 5 மாவட்டங்கள், தர வரிசையில் பின்னடைவு பெற்றுள்ளன. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், கடந்த ஆண்டு 8ஆம் இடத்திலிருந்த மதுரை மாவட்டம் 16ஆவது இடத்துக்கும், 21ஆவது இடத்திலிருந்த திண்டுக்கல் 22ஆவது இடத்துக்கும், 17ஆவது இடத்திலிருந்த தேனி மாவட்டம் 25ஆவது இடத்துக்கும் பின்னோக்கிச் சென்றுள்ளன.
அதேபோன்று, பிளஸ் 2 தேர்வில் முதலிடத்திலிருந்த விருதுநகர் 3ஆம் இடத்துக்கும், 12ஆம் இடத்திலிருந்த சிவகங்கை 13ஆவது இடத்துக்கும், 8ஆம் இடத்திலிருந்த மதுரை 16ஆவது இடத்துக்கும், 17ஆவது இடத்திலிருந்த திண்டுக்கல் 19ஆம் இடத்துக்கும், 9ஆம் இடத்திலிருந்த தேனி 15ஆவது இடத்துக்கும் தரம் குறைந்துவிட்டன.
பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல், முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளிலும் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும். பொதுத் தேர்வில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 95 சதவீதமாக உயர்வதற்கு தலைமையாசிரியர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார் அவர்.
பிற்பகலில் நடைபெற்ற கூட்டத்தில், ஈரோடு மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் சிறந்த தேர்ச்சி விகிதத்தை உருவாக்க, ஆசிரியர்கள் மற்றும் 234 தலைமையாசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

8/19/2014

BRC, CRC, அளவில் நடக்க இருக்கும் உத்தேச பயிற்சி நாட்கள் விபரம்



பள்ளி மானியம்; ஆகஸ்ட் இறுதிக்குள் வழங்க உத்தரவு


கரும்பலகை, உலக உருண்டை, மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் வாங்க பள்ளி மானியம் இம் மாதம் இறுதிக்குள் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.
 தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 30 கோடியே 40 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பள்ளி மானியம்(ஸ்கூல் கிரான்ட்) நிதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள துவக்கப்பள்ளிகளுக்கு 5,000 ரூபாயும், நடுநிலை, உயர்நிலை பள்ளிகளுக்கு 7,000 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.
இந்நிதியில் பள்ளிக்கு தேவையான மைக், மின் அழைப்பான், உலக உருண்டை, மின்விசிறி, கரும்பலகை உள்ளிட்ட பொருட்களை வாங்க வேண்டும். இதுபோல், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மட்டும் 27 கோடியே 17 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பள்ளி பராமரிப்பு மானியமாக ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதில் மூன்று வகுப்பறை கட்டடம் உள்ள பள்ளிகளுக்கு 5,000 ரூபாயும், அதற்கு மேல் உள்ள வகுப்பறை கட்டடங்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் நிதி ஒதுக்கீடு வழங்கபட உள்ளது. இந்நிதியில் பள்ளி கதவு, கழிப்பறை, தண்ணீர் தொட்டி, கட்டடத்தின் மேற்கூரை உள்ளிட்டவைகளை பராமரிப்பு செய்ய வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட நிதியை இம் மாதம் இறுதிக்குள் பள்ளிகளில் உள்ள கிராம கல்விக் குழு பெயரில் வங்கியில் செலுத்தவேண்டும். டிசம்பர் மாதத்திற்குள் தேவையான பணிகளை முடித்திருக்க வேண்டும், என முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் சங்கங்களை கட்டுப்படுத்த தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு


ஆசிரியர் நியமனம் விரைவில் - பத்திரிக்கைகள் ஆரூடம்


சங்க கூட்டம்

சிங்கம்புணரி : பிரான்மலை துவக்கப்பள்ளியில் பெற்றோர் -ஆசிரியர் சங்க கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் கஸ்தூரி தலைமை வகித்தார்.செயலாளர் பொன்னழகு வரவேற்றார்.ஆசிரியர் முத்துப்பாண்டி,பெற்றோர் சார்பில் லெட்சுமி, ஆனந்த்,ராமன், அழகர்சாமி பேசினர். மூலிகை தோட்டம் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

அரசு ஆரம்பப் பள்ளியில் மூலிகை தோட்டம் அமைக்க முடிவு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் பிரான்மலை அரசு ஆரம்பப் பள்ளியில் மூலிகை தோட்டம் அமைக்க பெற்றோர்- ஆசிரியர் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரான்மலை அரசு ஆரம்பப் பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழகக் கூட்டம் தலைமையாசிரியர் கஸ்தூரி தலைமையில் நடைபெற்றது. செயலர் பொன்னழகு வரவேற்றுப் பேசினார்.

ஆசிரியர் முத்துப்பாண்டி தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பள்ளியில் மூலிகைத் தோட்டம் அமைப்பது எனமுடிவு செய்யப்பட்டது.
மேலும், மாணவர்களை அச்சுறுத்தி வரும் குரங்குகளை அரசு பிடித்து மாற்றிடத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பள்ளிக்கு பாதுகாவலர் மற்றும் உதவியாளர் நியமனம் செய்யப்பட வேண்டும்.
மாணவர்களின் கல்வி நலனை மேம்படுத்த பெற்றோர்கள் அடங்கிய குழு ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பெற்றோர் கலந்து கொண்டனர்.