3/31/2015
பத்தாம் வகுப்பை +2க்கு இணையாக கருதும் அரசாணை திருத்தம் வெளியீடு
லேபிள்கள்:
G.O.
3/30/2015
வருமான வரித் தொகையை மின்னணு பதிவேற்றம் செய்ய ஆசிரியர்கள் கோரிக்கை
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி,
SVG TNPTF
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் பிடித்தம்
செய்யப்படும் வருமான வரித்தொகையை உடனடியாக இ.டி.டி.எஸ். மூலம் மின்னணு
பதிவேற்றம் செய்ய வேண்டும் என சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி
ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: ஆசிரியர், அரசு ஊழியர் என மாத
சம்பளம் பெறுபவர்களிடம் வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது.
இத்தொகையானது சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களின் வரி விலக்கு சேகரிப்பு
கணக்கு எணணில் வரவு வைக்கப்படும். ஆனால் தற்பொழுது உள்ள நடைமுறைப்படி
அவர்கள் இ.டி.டி.எஸ் எனப்படும் மின்னணு முறையில் வரியினை ஒவ்வொரு
காலாண்டிலும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில் சரியான நடைமுறையை பணம்
பெற்று வழங்கும் அலுவலர்கள் பின்பற்றாததால் வருமானவரித் துறையால்
சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வரி செலுத்தவில்லையென எச்சரிக்கை நோட்டீஸ்
அனுப்பப்படுகிறது.
பிடித்தம் செய்யப்படும் வரித்தொகை ஒவ்வொரு மாதமும் அந்த
துறை சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களால் அவர்களுக்குரிய வரிவிலக்கு
சேகரிப்பு எண்ணை பயன்படுத்தி கருவூலகங்கள் மூலம் அலுவலர்களின் மொத்த
கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அப்படி வரவு வைக்கப்படும் தொகையானது
ஒவ்வொரு மாதமும் புத்தக சரிகட்டல் மூலம் சரி செய்யப்பட்டு மாவட்ட
கருவூலத்திற்கு அனுப்பப்படுவதால் சார்நிலை கருவூலத்திலும் கணக்கு இருப்பு
வைக்கப்படுவதில்லை. இதனால் வருமான வரித்துறை ஒவ்வொருவரின் தனிப்பட்ட வரித்
தொகையினை அறிய முடியாததால் ஆசிரியர்களுக்கு கடந்த காலங்களில் வரி
செலுத்தவில்லையென எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது. இதனால் பல ஆசிரியர்கள
மனக்குழப்பம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்தி வெளியீடு (30.3.2015)
3/28/2015
சிவகங்கை மாவட்டம் - மகளிர் தினக் கருத்தரங்கம் அழைப்பிதழ்
லேபிள்கள்:
SVG TNPTF
தினகரன் செய்தி வெளியீடு - 28.3.2015
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி,
SVG TNPTF
இயக்கத்தின் கோரிக்கையை ஏற்றது - சிவகங்கை கருவூலகத்துறை
லேபிள்கள்:
SVG TNPTF
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவிப்பொறும் பள்ளிகளும் உடனடியாக TAN எண் பெற்று இணையவழி சம்பளம் தாக்கல் செய்தால்தான் மார்ச் மாதம் சம்பளம் அனுமதிக்கப்படும் என சிவகங்கை மாவட்ட கருவூலகத்தால் அறிவுறுத்தப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கவனத்திற்கு வந்தவுடன் உடனடியாக நாம் மாவட்ட கருவூலக அலுவலரை அலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக இவ்விசயம் சாத்தியமில்லை. ஏப்ரல் மாதத்தில் தான் சாத்தியப்படும் என்று கூறினோம். மேலும் இந்த மாதம் பழைய முறையில் சம்பள் பட்டியல் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். நமது கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்த மாவட்ட கருவூலக அலுவலர் நமது கோரிக்கைக்கு சம்மதம் தெரிவித்ததோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவிக் கருவுலக அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிப்பதாக உறுதியளித்தார். கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை எடுத்த மாவட்ட கருவூலக அலுவலர் அவர்களுக்கு இயக்கத்தின் சார்பாக நன்றி.
உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!
உரிமையைப் போராடி பெறுவோம்!!!
தோழமையுடன்....
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டச் செயலாளர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
சிவகங்கை மாவட்டம்
உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!
உரிமையைப் போராடி பெறுவோம்!!!
தோழமையுடன்....
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டச் செயலாளர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
சிவகங்கை மாவட்டம்
3/27/2015
தினத்தந்தி செய்தி வெளியீடு - 27.3.15
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி,
SVG TNPTF
3/26/2015
3/19/2015
STFI சர்வதேச மகளிர் தினக் கருத்தரங்கம் நோட்டீஸ்
லேபிள்கள்:
STFI
3/17/2015
TNPTF கோரிக்கை ஏற்பு - குறுவள மைய பயிற்சிக்கு ஈடுசெய் விடுப்பு அனுமதி - அரசாணை வெளியீடு
லேபிள்கள்:
G.O.
மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலருக்கு மாவட்டச் செயலாளரின் கடிதம்
லேபிள்கள்:
SVG TNPTF
STFI மாவட்ட கூட்டம் - சிவகங்கை - தினமலர் செய்தி வெளியீடு
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி,
STFI
3/16/2015
மாவட்ட, வட்டாரப் பொறுப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்
லேபிள்கள்:
SVG TNPTF
தினத்தந்தி செய்தி வெளியீடு - 15.3.2015
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி,
SVG TNPTF
3/14/2015
பயிற்சி நாள்களை வேலை நாளாக கணக்கிட ஆசிரியர்கள் கோரிக்கை
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி,
SVG TNPTF
தமிழகத்தில் தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் தொடக்க மற்றும் உயர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு பணியிடைப் பயிற்சிகளை, வேலை நாள்களாகக் கணக்கிட அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன் கூறியதாவது: அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் ஆசிரியர்களுக்கு பல்வேறு பணியிடைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதில், குறுவள மைய அளவில் ஆண்டுக்கு 10 நாள்கள் பயிற்சி வழங்கப்படுகின்றன.
கடந்த ஆண்டுகளில் இப்பயிற்சி நாள்கள், பணி நாள்களாகக் கணக்கில்கொள்ளப்பட்டன. ஆனால், இந்தக் கல்வி ஆண்டில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருவதால், பணி நாள்களை கணக்கிடுவதில் தலைமையாசிரியர்கள் சிரமப்படுகின்றனர்.
மேலும், கடந்த கல்வி ஆண்டுகளில் பள்ளி வேலை நாள்களை, அந்தந்த மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களே தயாரித்து வந்தனர்.
இதில், ஆண்டுக்கு 210 பள்ளி வேலை நாள்களுடன், 10 குறு வளமையப் பயிற்சி நாள்களையும் சேர்த்து 220 பணி நாள்களாகக் கணக்கிடப்பட்டது. ஆனால், தற்போது மாநிலம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறை இயக்கங்கள் மூலம் பள்ளி வேலை நாள்கள் வெளியிடப்படுகின்றன.
இதில், பல்வேறு மாவட்டங்களில் குறுவள மையப் பயிற்சி நாள்கள், பணி நாள்களாகவோ அல்லது ஈடு செய்யும் தற்செயல் விடுப்பு நாள்களாகவோ கணக்கிடப்படுகின்றன.
சிவகங்கை மாவட்டத்திலும் ஒரு சில ஒன்றியங்களில ஈடுசெய்யும் சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதிக்கப்படுகிறது. பல ஒன்றியங்களில் இவ்விடுப்பு மறுக்கப்படுகிறது.
சில ஒன்றியங்களில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டு, மற்ற ஆசிரியர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறதாம். இது பள்ளியை நிர்வாகம் செய்யும் தலைமை ஆசிரியர்களை குழப்பமடையச் செய்கிறது.
எனவே, மற்ற மாவட்டங்களில் உள்ளதுபோல் ஈடுசெய்யும் தற்செயல் விடுப்போ அல்லது பணி நாளாகவோ அறிவிக்கவேண்டும். இல்லையெனில், வரும் 14.3.2015 இல் நடக்கவிருக்கும் குறுவள மையப் பயிற்சிக் கூடங்களின் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்தி வெளியீடு - 11.3.2015
3/13/2015
STFI 20ந் தேதி ஆர்ப்பாட்டம் நோட்டீஸ் மாதிரி - நகலெடுத்து அச்சடிக்கவும்
லேபிள்கள்:
STFI
சி.ஆர்.சி. பங்கேற்பிற்கு ஈடுசெய் தற்செயல் விடுப்பு அனுமதி. TNPTF கோரிக்கையை ஏற்றது மாவட்ட நிர்வாகம்
லேபிள்கள்:
SVG TNPTF
சிவகங்கை மாவட்டத்தில் குறுவளமைய பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு ஈடுசெய் தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை சமீப காலமாக அதிகரித்து வந்தது. இது குறித்து நாம் நமது மாநில மையத்தில் முறையிட்டோம். இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தொடக்கக்கல்வி இயக்குனர் உறுதியளித்துள்ளதாக மாநில மையம் நமக்கு பதில் தந்தது.
ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் ஒரு சில ஒன்றியங்களில் வாய் மொழியாக ஈடு செய் தற்செயல் விடுப்பு அனுமதித்தால் மற்ற ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர்கள் தங்களுக்கும் அனுமதி பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
நாம் உடனடியாக இது குறித்து மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலருக்கும், கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலருக்கும் தனித்தனியாக கோரிக்கை மனு அளித்தோம். அலைபேசியிலும் தொடர்பு கொண்டு நமது கேரிக்கையின் நியாயத்த உணர்தினோம்.
இது குறித்த விரிவான செய்தி தினகரன், தினமலர் நாளிதழ்களில் தமிழ்நாடு ஆரம்பபப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கை என்றே தலைப்பிட்டு வெளி வந்தது. உடனே சுறுசுறுப்பான மாவட்ட கல்வி நிர்வாகம் நமது நியாயமான கோரிக்கை குறித்து விவாதிக்க ஆரம்பித்தது. நாமும் மீண்டும் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோரிக்கையின் மீது நியாயமான முடிவு எட்டப்பட வேண்டும் இல்லையேல் கல்வித்துறையின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கருத்தாய்வு மைய கூட்டரங்கு முன்னிலையில் அனைத்து ஆசிரியர் இயக்கங்களையும் இணைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக முடிவாற்றப்பட்டுள்ளதை தெரிவித்தோம். சகோதர இயக்கங்களை சேர்ந்த பொறுப்பாளர்களும் இது குறித்து நம்மிடம் தொடர்பில் இருந்தனர்.
மேல்நிலை தேர்வு பணிக்காக சிவகங்கை மாவட்டம் வந்துள்ள எஸ்.எஸ்.ஏ. இணை இயக்குனர் மதிப்புமிகு குப்புச்சாமி அவர்கள் பத்திரிக்கைச் செய்தி அறிந்து உடனடியாக கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களை தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்கள். மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு கோரிக்கை நியாயமானது. உடனடியாக ஈடுசெய் தற்செயல் விடுப்பு அனுமதிப்பது குறித்து தெளிவான வழிகாட்டுதல்களை உதவி மற்றும் கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலருக்கு தெரிவியுங்கள் என கேட்டுக்கொண்டார்கள். நாமும் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரை தொடர்பு கொண்ட பொழுது மாலை நடக்கும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் கூட்டத்தில் தெளிவாக வழிகாட்டுதல் அளிப்பதாக நம்மிடம் உறுதியளித்தார்கள்.
சிறிது நேரத்திலேயே சிவகங்கை அனைவருக்கும் கல்வி இயக்கத்திலிருந்து உதவி திட்ட அலுவலர் நம்மை அலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களது நியாயமான கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இணை இயக்குனர் மற்றும் கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் ஆகியோர் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலருக்கு வழிகாட்டுதல்கள் கொடுத்துள்ளார்கள். அவர்கள் மூலம் உதவி மற்றும் கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்கள். நியாயமான கோரிக்கைகளுக்கு குரல் கொடுத்து வரும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயல்பாடுகளை பாராட்டியதோடடு வருகிற 14.3.2015 அன்று நடக்கவிருக்கும் கருத்தாய்வு கூட்டத்தில் ஆசிரியர்களை குறித்த நேரத்திற்குள் பங்கேற்கு அறிவுறுத்துமாறு நம்மிடம் கேட்டுக்கொண்டார். நாமும் நிச்சயமாக அக்கருத்தை ஏற்றுக்கொண்டோம். எனவே நமது கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதால் 14.3.2015 அன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த 'கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்' இரத்து செய்யப்படுகிறது. ஆசிரியர்கள் அனைவரும் குறித்த நேரத்திற்குள் பயிற்சியில் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இணை இயக்குனர், கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களுக்கும், எமது இயக்க செய்திகளை தொடர்ந்து வெளியட்டு வரும் ஊடகத்துறை நண்பர்களுக்கும் எமது இயக்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!
உரிமையைப் போராடி பெறுவோம்!!!!
தோழமையுடன்...
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டச்செயலாளர்
TNPTF

TNPTF கோரிக்கை - தினகரன் செய்தி வெளியீடு
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி,
SVG TNPTF
TNPTF கோரிக்கை - தினமலர் செய்தி வெளயீடு
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி,
SVG TNPTF
3/10/2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)