9/30/2015
28.9.2015 ஜேக்டோ மாநில உயர்மட்டக்குழு கூட்டம் முடிவுகள்
லேபிள்கள்:
Teto-Jac
9/29/2015
அக்டோபர் 8 அடையாள வேலை நிறுத்தம். அரசாங்கத்தின் மன நிலையை மாற்றுமா?
9/28/2015
9/27/2015
9/26/2015
ஆட்சியாளர்களின் மனதை மாற்றுமா? அக்டோபர்-8
இனிய தோழமையே!!!
பல்வேறு போராட்டங்களில் பல வடிவங்களில் பங்குபெற்று பழக்கப்பட்ட உனக்கு அக்டோபர் 8 வேலை நிறுத்தத்திற்கு வா என அழைப்பு விடுப்பது என்பது தேவயைற்றது என்றே கருதுகிறேன். கிட்டதட்ட 15க்கும் மேற்பட்ட அகில இந்திய பொது வேலை நிறுதத்தில் கலந்துகொண்டு இந்த தேச முன்னேற்றத்திற்காக உன் ஊதியத்தை இழந்தவன் நீ. பொது கோரிக்கைக்கே போர் முரசு கொட்டும் நீ... உன் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்க போகும் 15 அம்ச கோரிக்கைகாக ஆரம்பப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரையுள்ள 28 ஆசிரியர் இயக்கங்கள் ஜேக்டோ என்ற பதாகைக்கு கீழ் ஒருமித்த குரலாய் ஓங்கி ஒழிக்கின்ற மகா சமுதரத்தில் நீயும் சங்கமிப்பாய் என்று எனக்கு நன்கு தெரியும்.
அதோடு மட்டும் உன் கடமை முடிந்துவிடவில்லை என்பதை நீ அறிவாய். உன் சக ஆசிரியர் தோழனையும் அக்டோபர் 8 என்ற வரலாற்று சிறப்புமிக்க வேலை நிறுத்தத்தில் பங்கெடுக்க வைக்க வேண்டிய தலையாய கடமை உனக்குண்டு. போராட்டத்தை நசுக்க நம்மிடமே உள்ள சில நச்சு பாம்புகள் பல்வேறு விஷம கருத்துக்களை உமிழ முயற்சிக்கும் என்பதை கடந்தகால போராட்டங்களில் நீ நன்கு உணர்ந்திருப்பாய். இங்கு போராடாமல் யாராட்டமும் செல்லாது என்ற பால பாடத்தை நீ படித்து வளர்ந்தவன் என்பதால் உனக்கு விரிவாக சொல்ல தேவையில்லை. ஆனால் களப் போராட்டம் என்பது பல்வேறு சிந்தைனயுள்ள இயக்கங்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டிய சூழல் இன்று ஜேக்டோவினால் ஏற்பட்டுள்ளது. எனவே களத்தை சூடு படுத்த வேண்டும். அனைவரையும் களப்போராளியாக மாற்ற வேண்டும். நம் உரிமையை மீட்டெடுக்க கடைசி வாய்ப்பு என்பதை உணரச் செய்யவேண்டும். மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த ஊதியக்குழுவின் பரிந்துரை நாளை எதிர்நோக்கியுள்ளபொழுது நாம் கடந்த ஊதியக்குழுவின் துரோகத்திற்கு கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் பெற முடியாமல் போனதற்கு கடந்தகாலத்தில் நம்மிடம் ஒற்றுமையின்மைதான் என்பதை உணர்த்துங்கள். ஒன்று கூடியவர்களும் ஓடிய வரலாற்றை மறந்து ஒன்றாக்கப்பட்டுள்ளார்கள். வட்டார அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் நம்முடைய பலத்தை இந்த அரசுக்கு உணர்த்தியாச்சு.
அப்படியிருந்தும் மௌனம் காக்கும் அரசின் மௌனம் கலைக்க கடைசி வாய்ப்பு அக்டோபர்-8 அனைத்து பள்ளிகளும் இயங்கவில்லை என்ற அதிரடிச் செய்தியகத்தான் இருக்கும். கல்வித்துறையின் இரும்பு கதவுகள் உடைக்கப்பட்டு ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்பட்டன எனவும், தமிழக அரசு அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றது என்ற செய்தியும் ஊடகங்டகள் வழியாக உனக்கு வந்தடையும் என்பதை பலமாக நம்பு. ஜேக்டோவில் இல்லாத ஆசிரியர் நண்பர்களையும் வேலை நிறுத்தத்திற்கு அழைக்க தவறாதே. ஜேக்டோவின் மாவட்ட வேலை நிறுத்த ஆயத்த கூட்டங்கள் நிறைவடைந்த நிலையில் வட்டார கூட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறாய் என்ற செய்தி மகிழ்வுதான். நடத்தாத வட்டாரங்களில் பொறுப்பாக்கப்பட்ட இயக்க பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு நடத்த திட்டமிடு. முதல் பருவதத்திற்கான விடுமுறையை வேலை நிறுத்த ஆயத்தத்திற்காக பயன்படுத்து.
நாளை மதுரையில் நடைபெற இருக்கும் நமது இயக்கத்தின் மாநிலச் செயற்குழுவில் அக்டோபர் - 8 வேலை நிறுத்தத்தை எப்படி வெற்றியாக்குவது என இறுதிக்கட்ட திட்டமிடல் நடைபெற இருக்கிறது. தோழனே உறக்கமின்றி செயலாற்று.
வெற்றி நமதே...
தொடர்ந்து உன்னோடு வருவேன்...
தோழமையுடன்...
முத்துப்பாண்டியன்.ஆ
TNPTF மாவட்டச்செயலாளர்
சிவகங்கை மாவட்டம்

9/18/2015
ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிப்பதை தவிர்க்க கோரிக்கை
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி,
Central Government Holidays,
SVG TNPTF
முதல் பருவத்தேர்வு தொடங்கும் நேரத்தில் ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிப்பதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், சிவகங்கை மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன், மாவட்ட கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலரிடம் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்திருப்பது: செப்.19 ஆம் தேதி முதல் தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு தொடங்க உள்ளது.
இந்நிலையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சியை 4 நாள்கள் வீதம் நான்கு கட்டங்களாக முடித்துள்ள நிலையில், கணித உபகரண பயிற்சி, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 10, 11, 14 தேதிகளில் முதல் கட்டமாக வழங்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக 15, 16, 18 தேதிகளிலும் நடக்க இருக்கிறது. நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு அறிவியல் பயிற்சி 15, 16, 18 தேதிகளிலும், ஆங்கிலப்பயிற்சி 14, 21, 28 தேதிகளிலும் நடத்தப்பட உள்ளது. இதனால் பயிற்சியில் கலந்துகொள்ள பெரும்பான்மையான ஆசிரியர்கள் சென்று விடுவதால், பள்ளியில் குறைவான ஆசிரியர்கள் உள்ளனர். பல பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே நீடிக்கும் நிலை உள்ளது.
எனவே மாணவர்களின் கல்வி நலன் கருதி ஒரே நேரத்தில் ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிப்பதை கல்வித்துறை தவிர்க்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
9/15/2015
நமது அறிக்கை இன்றைய தினமலர் (15.9.2015) நாளிதழில்
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி,
SVG TNPTF
9/14/2015
சிவகங்கை CEO(SSA) க்கு இயக்கத்தின் கடிதம்
லேபிள்கள்:
SVG TNPTF
நமது அறிக்கை நக்கீரன் இணையதளத்தில் வெளிவந்துள்ளது
லேபிள்கள்:
இணையச்செய்திகள்,
TNPTF NEWS
தேர்வு நேரத்தில் தொடர் பயிற்சி அளிப்பதை தவிர்க்க வேண்டும்; ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்
முதல் பருவத் தேர்வு தொடங்கும் நேரத்தில் ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிப்பதை தவிர்த்திருக்க வேண்டுமென கல்வி இயக்கத்திற்கு (SSA) தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
வருகிற 19ந் தேதி முதல் தொடக்க நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிப்பதால் பள்ளியில் ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ள நிலை உள்ளது. இதனால் தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு தேர்வு சார்ந்த பயிற்சி அளிப்பதில் ஆசிரியர்கள் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சியை 4 நாட்கள் வீதம் நான்கு கட்டங்களாக முடித்துள்ள நிலையில் கணித உபகரண பயிற்சி தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 10, 11, 14 தேதிகளில் முதல் கட்டமாக வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக 15, 16, 18 தேதிகளிலும் நடக்க இருக்கிறது. நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு அறிவியல் பயிற்சி 15, 16, 18 தேதிகளிலும், ஆங்கிலப்பயிற்சி 14, 21, 28 தேதிகளிலும் நடத்தப்பட உள்ளது. இதனால் பயிற்சியில் கலந்துகொள்ள பெரும்பான்மையான ஆசிரியர்கள் சென்று விடுவதால் பள்ளியில் சொற்ப எண்ணிக்கையிலேயே ஆசிரியர்கள் உள்ளனர். பல பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே நீடிக்கும் நிலை உள்ளது.
ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பது கற்றல் கற்பித்தலை வலுப்படுத்தும் என்றாலும், ஆண்டு முழுவதும் சீராக கொடுக்க வேண்டிய பயிற்சியை ஒரே நேரத்தில் கொடுப்பதால் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுவதோடு மடடுமல்லாமல் தேர்வு நேரத்தில் அவர்களை தேர்வுக்கு தயார் படுத்துவதில் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. மேலும் பள்ளியில் ஆசிரியர் இல்லாததால் கிராம மக்களின் அதிருப்திக்கும் ஆளாக வேண்டியுள்ளது.
எனவே மாணவர்களின் கல்வி நலன் கருதி ஒரே நேரத்தில் ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிப்பதை கல்வித்துறை தவிர்க்க வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- நா.ஆதித்யா.
9/10/2015
இன்று (10.9.2015) சிவகங்கையில் ஜேக்டோ மாவட்ட கூட்டம்
லேபிள்கள்:
tetojac
இன்று (10.9.2015) சிவகங்கையில் ஜேக்டோ மாவட்ட கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உட்பட ஜேக்டோவில் அங்கம் வகிக்கும் இயக்கங்களின் உயர் மட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். இதில் வருகிற அக்டோபர்-8 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவது எனவும், மாவட்ட வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டினை வருகிற 20.9.2015 அன்று காலை 10.00 மணிக்கு மன்னர் மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் நடத்துவது என முடிவாற்றப்பட்டது. வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டில் வட்டார நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, மாநில நிர்வாகிகள், முன்னனி உறுப்பினர்கள் பங்கேற்க தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தோழமையுடன்....
ஆ.முத்துப்பாண்டியன்
மாவட்டச் செயலாளர்
TNPTF
தோழமையுடன்....
ஆ.முத்துப்பாண்டியன்
மாவட்டச் செயலாளர்
TNPTF
9/07/2015
தொடக்கக்கல்வி இயக்கநருடன் மாநிலப் பொறுப்பாளர்கள் சந்திப்பு
லேபிள்கள்:
TNPTF NEWS
இன்று(7.9.15) தொடக்கக்கல்வி இயக்குனர் மதிப்புமிகு.இளங்கோவன் அவர்களை மாநிலப்பொதுச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் ஆகியோர் தொடக்கக்கல்வி இயக்ககத்தில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதித்தனர்.
1. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் உதவித் தொடக்கக்கல்வி அலுவலக கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. நமது கோரிக்கையின் சமூக நோக்கத்தை பாராட்டியதோடு உடனடியாக பிரிவு அலுவலரை வரவழைத்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
2. மாவட்ட மாறுதலுக்கு பின்னால் ஏற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியான ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் எஸ்.எஸ்.ஏ அல்லாத நடுநிலைப்பள்ளிகளுக்கு மூன்றாவது பட்டதாரி பணியிடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. டிசம்பருக்குள் மீண்டும் ஒரு பதவி உயர்வு அளிக்க உத்தரவிடுவதாக உறுதியளித்துள்ளார்கள்.
3. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஒன்றியம் உதவித் தொடக்கக்கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் கா.ஜான்சிராணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
4. கலந்தாய்வில் மாறுதல் பெற்று விடுவிக்கப்படாமல் இருக்கும் ஆசிரியர்களுக்கு உரிய வழி காட்டுதல் வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
5. உபரி பணியிட மாறுதல் பெற்றவர்களுக்கு மனமொத்த மாறுதலில் செல்ல ஓராண்டு நிபந்தனையிலிருந்து தளர்வு செய்து மாறுதல் அனுமதிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
6. தற்பொழுது நடந்த முடிந்த பொது மாறுதல் கலந்தாய்வில் நிர்வாக மாறுதல் பெற்றவர்களுக்கு முன்னுரிமை மறுக்கப்பட்டது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.
7. காஞசிபுரம் மாவட்டத்தில் இளநிலை பணியிலிருந்து இடைநிலை பதவி உயர்வு வழங்கியமைக்கு தேர்ச்சி பெற்ற நாளிலிருந்து ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டுகோள் வைக்கப்பட்டது.
8. மதுரை மாவட்டம், கள்ளிக்குடி ஒன்றியத்தில் கடந்தாண்டு பணி நிரவலில் சென்ற ஆசிரியைக்கு காலியாக உள்ள இடைநிலையாசிரியர் பணியிடத்தை வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
9. காஞ்சிபுரம் மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம், நெற்குணம் நடுநிலைப்பள்ளியில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு பதவி உயர்வு அளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
10. இந்தாண்டு பணி நிரவலில் மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதல் மறுக்கப்பட்டது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது. அதை சரி செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது
மேற்கண்ட கோரிக்கைகளை கவனமுடன் உள்வாங்கிய இயக்குனர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்கள்.
தகவல் பகிர்வு: முத்துப்பாண்டியன்.ஆ, சிவகங்கை மாவட்டச் செயலாளர்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)