பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

4/27/2011

எமது பள்ளியின் ஆண்டு விழாவிற்கு அன்புடன் அழைக்கின்றோம்!!!
இடம்:ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி  பிரான்மலை 
நாள்: 27.04.2011 நேரம்: மாலை-5.30 
சிறப்புரை: தே.ஜோசப்ரோஸ் இமானுவேல்
 TNPTF -மாவட்டச்செயலாளர்

விழா ஒருங்கிணைப்பு
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
சிங்கம்புணரி வட்டாரம்

4/26/2011

எட்டாம் வகுப்பு தேர்வு அனைவரும் "பாஸ்''

தமிழகத்தில் எட்டாம் வகுப்பு தேர்வு எழுதிய அனைவரையும் "ஆல் பாஸ்'' செய்ய, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு, 14 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் கட்டாய கல்வி என்ற சட்டத்தை, கடந்த கல்வியாண்டு முதல் அமல்படுத்தியுள்ளது. இருப்பினும், கிராம நடுநிலைப்பள்ளிகளில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தால், உயர்நிலை கல்வி கற்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. இடை நிற்றல் அதிகமாக உள்ளது.

இதை தவிர்க்க, எட்டாம் வகுப்பு தேர்வு எழுதிய அனைவரையும் "ஆல் பாஸ்' செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இம்மாதம் எட்டாம் வகுப்பு இறுதி தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும், ஒன்பதாம் வகுப்பில் சேர்க்கப்பட உள்ளனர்.

இதேபோல், ஒன்பதாம் வகுப்பு இறுதி தேர்வு எழுதிய மாணவர்களில் 90 சதத்திற்கும் மேல் தேர்ச்சி பெற வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி:தினமலர்

4/21/2011

ஊதியக் குழு நிலுவைத் தொகை - மூன்றாவது தவணைக்கான அரசின் கடிதம்(ஆங்கிலம்)

ஆசிரியர்களின் சொத்து விவரம்: பள்ளிக்கல்வித்துறை சேகரிப்பு

தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சொத்து உட்பட, அனைத்து விவரங்களையும் பள்ளிக்கல்வித்துறை சேகரித்து வருகிறது.

பள்ளிக்கல்வித்துறை வழங்கிய விண்ணப்பத்தில்,

ஆசிரியர்களின் தனித்திறன் கவிதை, பேச்சு, நாடகம், விளையாட்டு, இசை, கற்பனை ஆற்றல்,
கம்ப்யூட்டர் பயிற்சி,
குடும்ப நிலவரம்,
ஓட்டுனர் உரிமம் உள்ளதா, அதனுடைய வரிசை எண், டூவீலர், கார் ஓட்ட தெரியுமா,
தற்செயல் விடுப்பு தவிர மற்ற அனைத்து விடுப்பு விவரம்,
ஒழுங்கு நடவடிக்கைகள்,
ஆசிரியர்களின் உயரம், எடையளவு,
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்டு, மார்க் பட்டியல்,
அசையும், அசையா சொத்துக்கள்,
கடன்

உட்பட, பல விவரங்களும் கேட்கப்பட்டுள்ளன.

இந்த விண்ணப்பங்களை நிரப்பி, இரண்டு நாட்களுக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர்

4/18/2011

அரசு, அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கு இலவச சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள்

நெல்லை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது


தமிழகப் பள்ளிகளில் ஸ்டேட் போர்டு, மெட்ரிக், ஓரியண்டல், ஆங்கிலோ இந்தியன் ஆகிய 4 வகை பாடத்திட்டங்கள் நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வி தரத்தில் ஏற்றத்தாழ்வு இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஒரே பாடத்திட்டத்தை கொண்டுவரக சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்த அரசு முடிவு செய்தது.

இதற்காக கல்வியாளர்களை கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டு பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டன. பாடத்திட்டங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு கருத்துகள் கேட்கப்பட்டன. கல்வி நிபுணர்களின் கருத்துக்களை அறிந்தபின் பாடத்திட்டங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. கடந்த கல்வியாண்டில் 1-ம் மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கல்வி ஆண்டு முதல் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படுகிறது. இதற்கான பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் சார்பில் அச்சிடப்பட்டு சென்னையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது ஆகிய மொழிகளில் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. மாவட்டம் வாரியாக புத்தகங்கள் அனுப்பும் பணி நடந்து வருகிறது. முதல்கட்டமாக 1-ம் வகுப்புகான அனைத்து பாடப்புத்தகங்களும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டன. மற்ற வகுப்புகளுக்கு இம்மாதத்திற்குள் அனுப்பி வைக்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் மாநிலம் முழுவதும் உள்ள கல்வி ஆர்வலர்கள் மூலம் வினியோகம் செய்யப்பட உள்ளது. ரூ.80 கோடி மதிப்பில் இலவச பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்படுகின்றன. ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ரூ.11 கோடி மதிப்பீல் நோட்டு, புத்தகம் வழங்கப்பட உள்ளது.

1-ம் வகுப்பு தமிழ், ஆங்கிலம், கணிதம், சுற்றுச்சூழல் அறிவியல் புத்தகங்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் செட் ஒன்றுக்கு ரூ.250 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு செட் புத்தகத்திற்கு 5 சதவீதம் கழிவு வழங்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு முதல் பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு

கல்வி உரிமை சட்டத்தின்கீழ், பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய அளவிலான தகுதி தேர்வுகளை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.


பள்ளிகளில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்காக இந்த தேர்வு திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் தகுதி தேர்வு(சி.டி.இ.டி) என்ற பெயரில், கே.வி.எஸ், நவோதயா வித்யாலயா, திபெத்திய பள்ளிகள் போன்ற மத்திய அரசின் பள்ளிகள் மற்றும் சண்டிகார் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களின் நிர்வாகத்தின் கீழ்வரும் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க இந்த தேர்வு வரும் சூன் மாதம் 26 ம் தேதி சி.பி.எஸ்.இ. அமைப்பால் நடத்தப்படுகிறது.

முதல்முறையாக நடத்தப்படும் இந்த தேர்வானது, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வழங்கிய வழிகாட்டுதலின் படியும், கல்வி உரிமை சட்டத்தின் படியும் நடைபெறுகிறது. இந்த தேர்வின்மூலம், வருடா வருடம் படித்து வெளிவரும் ஆயிரக்கணக்கான பி.எட். மாணவர்களின் தரத்தை மதிப்பிட முடியும். மேலும் விரும்பினால், அரசு உதவிபெறாத தனியார் பள்ளிகளும் இந்த தேர்வை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். அதேசமயத்தில், மாநில அளவிலான ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தாத மாநில அரசுகளும் இந்த தேர்வை பரிசீலனை செய்யலாம்.

இந்த தேர்வுக்கான வினாத்தாளில் ஆப்ஜெக்டிவ் முறையில் 150 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் எடுப்பவர்களே இதில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். அதேசமயம் தேர்ச்சி பெறாதவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த தேர்வை எழுதுவதற்கு எண்ணிக்கை வரம்புகள் எதுவும் இல்லை. ஒருவர் தேர்ச்சி பெறும் வரை, எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்.

இந்த தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் எடுத்து ஒருவர் தேர்ச்சி பெற்றுவிட்டாலும், தனது மதிப்பெண்களை அதிகப்படுத்திக்கொள்ள, மீண்டும் இத்தேர்வை எழுதலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: கல்வி மலர்

4/15/2011

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஜாதியும் மதமும் அற்று பிறக்கும் இனிய தமிழ் புத்தாண்டு
நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் , மகிழ்ச்சியையும்
நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும்
கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள் !
உலகின் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தமிழ் புத்தாண்டு நாம்
கொண்டாடும் நம் தமிழர்களின் பண்டிகை,  நாளும் நட்சத்திரமும்
தாண்டி நாம் அனைவரும் தமிழர்கள் என்பதில் பெருமிதம்
கொள்வோம் !
இந்த ”கர ” ஆண்டு நம் வாழ்வில் எல்லாவிதமான வெற்றியையும்
அன்பையும் சகோதரத்துவத்தையும் அள்ளி கொடுக்க இறைவனை
மனதார வேண்டுகிறோம்.

4/04/2011

மருத்துவ தகுதித் தேர்வு முறையை கைவிட வேண்டும்

சென்னை,ஏப். 3: மருத்துவக் கல்வியில் தகுதித் தேர்வு முறையை கைவிட வேண்டும் என டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய மருத்துவக் கவுன்சில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வியில் சீர்திருத்தம் என்ற பெயரில், அவசரப்பட்டு பல்வேறு மாற்றங்களை கொண்டுவர முயல்கிறது.
"விஷன்-2015' என்று பெயரிடப்பட்டுள்ள இத் திட்டத்தை உருவாக்கிட, இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தனித்தனி செயல் குழுக்களை கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்திய மருத்துவக் கவுன்சில் ஏற்படுத்தியது.
மார்ச் 29-ம் தேதி இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொள்வது பற்றி இறுதி முடிவு எடுக்கப் போவதாகவும் அறிவித்திருந்தது. இதன்மூலம் இந்திய மருத்துவக் கவுன்சில் கொண்டு வர முயலும் பல மாற்றங்கள் பாரபட்ச போக்குகளை உருவாக்கும். ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து வரும் மருத்துவர்களுக்கு எதிராகவும் அமையும்.
இந்தத் திட்டத்தின் மூலம் தகுதித் தேர்வு முறையை அறிமுகப்படுத்த இந்திய மருத்துவக் கவுன்சில் திட்டமிட்டுள்ளது.
இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளை முடித்தவுடன் இந்த தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால்தான், மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து, மருத்துவ சேவையில் ஈடுபட முடியும்.
இந்தத் தேர்வில் வெற்றி பெறவில்லையென்றால், பல்கலைக்கழகத் தேர்வில் வெற்றி பெற்றால் கூட மருத்துவ சேவை செய்ய முடியாது.
இந்திய மருத்துவக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளிலும், மருத்துவப் படிப்புகளிலும்தான் மாணவர்கள் மருத்துவக் கல்வியை பயில்கின்றனர். இந்த மருத்துவ நிறுவனங்களின் தரத்தையும் மருத்துவக் கவுன்சில்தான் கண்காணிக்கிறது.
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பல்கலைக்கழகங்கள் நடத்தும் தேர்வை எழுதித்தான் மருத்துவப் பட்டங்களை பெறுகின்றனர். எனவே மீண்டும் ஒரு தகுதித் தேர்வு என்பது தேவையற்றது.
இளநிலை மருத்துவப் படிப்பில் பெறும் மதிப்பெண் மற்றும் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில்தான் முதுநிலை மற்றும் இதர மேற்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை அமைய உள்ளதாகக் கூறுவதும் பல்வேறு குளறுபடிகளுக்கும், முறைகேடுகளுக்கும் வழிவகுக்கும்.
ஒரே ஒரு முறை எழுதும் தகுதித் தேர்வு மட்டுமே முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு அடிப்படையாக கொள்ளப்படும் என்பது மருத்துவர்களின் உரிமையைப் பறிப்பதாக உள்ளது.
எனவே, அவசர கோலத்தில் மருத்துவக் கல்வியில் மாற்றங்கள் செய்வதை இந்திய மருத்துவக் கவுன்சில் கைவிட வேண்டும். இது போன்ற செயல்பாடுகளுக்கு மத்திய அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில அரசுகள், கல்வியாளர்கள், டாக்டர்கள் சங்கப் பிரதிநிகள் போன்றோரிடம் கலந்து பேச வேண்டும்.
அதன் பிறகே, மருத்துவக் கல்வியில் அவசியமான மாற்றங்களை இந்திய மருத்துவக் கவுன்சில் கொண்டு வர வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4/03/2011

உமக்கே என் முதல் வணக்கம்!

நூறு ரூபாய் சந்தா கேட்டால் பரிகசிப்பார்கள்!     

என்ன செய்த்து சங்கம்? என்று எதிர் உரைப்பார்கள்!

கூட்டத்திற்கு வா என்றால் கும்பிடு போடுவார்கள்!

அலுவலகத்தில் குனியக் குனியக் குட்டுப்படுவார்கள்!

எதிர்ப்ப்டும் சங்கத்து காரனிடம் எல்லா அடக்குமுறைகளையும்
கொட்டித் தீர்ப்பார்கள்!

'எழுந்து வா' கேட்போம் என்றால் இருகை பற்றி தழுதழுப்பார்கள்!

  எங்கேயும் வர மாட்டார்கள் எதற்குமே இட மாட்டார்கள்!

உட்கார்ந்த இடத்திலிருந்தே உரிமை கேட்பார்கள்!

ஆகாத காரியங்களுக்கு அடித்து துவைப்பார்கள்!

பெற்றுத் தந்த உரிமைகளை அரசே வழங்கியதாக ஆர்ப்பரிப்பார்கள்!

இத்தனையும் இத்தனையும் இமை மூடிச்சகித்து

மீண்டும் அவர்கள் முன் மிளிரும் புன்னகையுடன்

 அடுத்த கட்ட போராட்ட அழைப்போடு

 போய் நிற்கும் என் இயக்க முன்ன்ணித் தோழர்களே!

 TNPTF பொறுப்பாள்ர்களே! உமக்கே என் முதல் வணக்கம்!!!

நன்றி: மநில அமைப்பு - TNPTF