பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

10/31/2014

மானாமதுரை உதவித் தொடக்கக்கல்வி அலுவலரின் ஆசிரியர் விரோதபோக்கை கண்டித்து இரண்டு கட்ட ஆர்ப்பாட்டம்



பாரதியார் பல்கலை: இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு!!

கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்புக்கான தேர்வுமுடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த ஜூலை மாதத்தில் இளங்கலையில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.
மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நவ.7ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு பின்பு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. விண்ணப்ப படிவங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

cps திட்டத்தில் உள்ளவர்கள் கல்வி ஆண்டு இடையில் ஓய்வு பெற்றால் நீட்டிப்பு செய்ய அரசாணை




10 மற்றும் 12 ம் வகுப்பிற்கு PTA வினாவங்கி கிடைக்கும் இடங்கள்


சிங்கம்புணரி வட்டாரத் தேர்தல் அழைப்பிதழ்


10/29/2014

தமிழகத்தில் 158 தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு!


தமிழகத்தில் உள்ள 158 தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு திட்டக்குழுவின் அனுமதி மறுக்கப்பட்டுள்ள பகீர் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 2011 ஆம் ஆண்டு, 2011-2012 ஆம் கல்வியாண்டில் 710 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என விதி எண் 110 ன் கீழ் அறிவித்தது. அதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா, டிசம்பர் 2011 ல் தரம் உயர்த்தப்பட்ட 710 பள்ளிகளின் பட்டியலை வெளியிட்டார்.
அவற்றில் 552 பள்ளிகள் மட்டுமே மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறையின் அனைத்து விதிமுறைகளையும் பூர்த்தி செய்துள்ளது. மற்ற 158 பள்ளிகள் அந்த விதிமுறைகளை மட்டும் மட்டுமல்லாமல், மாநில அரசின் சார்பில் தரம் உயர்த்துவதற்கான 1 லட்சம் பொது மக்கள் நிதி அளிக்கும் விதியையும் கூட பூர்த்தி செய்யவில்லை.

கடந்த திமுக ஆட்சியின்போது 2009-10 ம் கல்வியாண்டில் 200 பள்ளிகளும், 2010 -11 ம் ஆண்டில் 344 பள்ளிகளும் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறையின் அனுமதியுடன் உயர்நிலைப்பள்ளிகளாக துவக்கப்பட்டன. அவற்றில் 200 பள்ளிகளுக்கான கட்டுமானப் பணிகள் பள்ளி ஒன்றுக்கு தலா 58 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் துவக்கப்பட்டன. பெற்றோர் சங்கங்களின் தலைவர் மற்றும் பள்ளிகளின் தலைமையாசிரியர்களால் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இதுவரை 170 பள்ளிகளின் கட்டுமானப்பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது. 30 பள்ளிகளின் கட்டுமானப்பணிகள் நிறைவடையாமல் உள்ளது.

இது மட்டுமின்றி 344 பள்ளிகளின் கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு 300 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. ஆனால் பழைய கட்டுமான பணிகளுக்கான விலையிலேயே கட்ட வேண்டும் என கூறியுள்ளது. இதனால் மாநில அரசின் நிதியுதவியை பெற்று கட்டுமானப்பணிகளையும் துவக்க முடியாமல் இடியாப்ப சிக்கலில் தவிக்கிறது பள்ளிக்கல்வித்துறை.

கணிசமான எண்ணிக்கையில் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட உள்ளதை அறிந்த அரசியல்வாதிகள் தங்கள் பகுதியில் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என மட்டுமே அமைச்சரிடம் கோரிக்கை வைத்து பெற்று சென்றுள்ளனர். அதன் பிறகு அந்தப் பள்ளிக்கான இடத்தை தேர்வு செய்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு அளிக்கவில்லை. கல்வித்துறை அதிகாரிகளின் முயற்சியால் இதுவரை 160 முதல் 170 பள்ளிகளுக்கு மட்டுமே தேவையான இடம் கிடைத்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் 2011 ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக அரசு அமைந்த பின்னர் தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா 2011-12 ம் கல்வியாண்டில் 710 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார்.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியலில் தங்களின் தொகுதியில் உள்ள பள்ளிகளின் பெயர் இடம் பெற்று, தரம் உயர்த்துவதில் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் குறியாக இருந்தனர். பள்ளியை தரம் உயர்த்த தேவையான அனைத்து விதிமுறைகளும் சரியாக நிறைவு செய்யப்பட்டு உள்ளதா என்பதை யாரும் கண்டுக்கொள்ளவில்லை. பள்ளிகளுக்கான இடத்தை தேர்வு செய்து அளிப்பதிலும் கவனம் செலுத்தவில்லை.

பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கான மத்திய அரசின் விதிமுறைகளை மீறி, 158 பள்ளிகளை தரம் உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டது.

இருப்பினும் கடந்த மே மாதம் நடைபெற்ற மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அனுமதி அளிக்கும் கூட்டத்தில், மொத்த மாநிலங்களில் 1096 புதிய பள்ளிகளில் கட்டுமான பணிகள் துவக்கப்படாமல் உள்ளதனால், இந்தாண்டு புதிதாக கட்டுமானப்பணிகளுக்கான நிதி ஒதுக்க முடியாது என தெரிவித்து இந்த 158 பள்ளிகளின் தரம் உயர்த்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

TNPTF Notice


TNPTF மாவட்டச் செயற்குழு செய்தி - தினமலர் நாளிதழ்


10/26/2014

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழுக் கூட்டம் - Dinakaran



ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழுக் கூட்டம் - Dinamani

காரைக்குடியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்டத் தலைவர் முத்துப்பாண்டியன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் ஜோசப்ரோஸ் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆ.தாமஸ் அமலநாதன், மாவட்டப் பொருளாளர் வே. சிங்கராயர் மற்றும் மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.  கூட்டத்தின் போது,
மானாமதுரை உதவி தொடக்கக்கல்வி அலுவலரின் ஆசிரியர் விரோதப் போக்கைக் கண்டித்து இரண்டு கட்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், முதல் கட்டமாக
வட்டார அளவில் நவம்பர் 11-ஆம் தேதி மானாமதுரை உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பும், இரண்டாம் கட்டமாக டிசம்பர் 2-ஆம் தேதி மாவட்ட அளவில்,
சிவகங்கை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

10/24/2014

திரு.சு.ஈசுவரன் அவர்களுக்கு TNPTF இறுதி அஞ்சலி

திரு.ஈசுவரன் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் இரமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அருளொளி வளாகத்திற்கு 21.10.2014 அன்று மாலை நேரடியாக சென்று இறுதி மரியாதை செய்தனர். அப்பொழுது மாநிலப்பொருளாளர் திரு.மோசஸ் மற்றும் மாநிலத் துணைத்தலைவர் திரு.ஜோசப் ரோஸ், முன்னாள் மாநிலத் தலைவர் திரு.கே.ஏ.தேவராஜன், முன்னாள் மாநிலப் பொதுச் செயலாளர் திரு.செ.நடேசன், சிவகங்கை மாவட்டத் தலைவர் திரு.முத்துப்பாண்டியன், மாவட்ட செயலாளர் திரு.தாமஸ் அமலநாதன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் திரு.வேதராஜசேகரன், காளையார்கோவில் வட்டாரச் செயலாளர் திரு.சகாய தைனேஸ், இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் திரு. முத்துமுருகன், மாவட்டப் பொருளாளர் திருமதி.இராஜராஜேஸ்வரி உட்பட 50க்கும் மேற்பட்ட ஆசிரியர் - ஆசிரியைகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதன் பின் திரு.ஈசுவரன் புதல்வர் திரு. சரவணன் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.



ஆசிரியர் பயிற்சி படிப்பை +2க்கு இணையாக கருதும் அரசாணை



மானாமதுரை AEEO மீது நடவடிக்கை எடுக்க கோரி TNPTF வால்போஸ்டர் இயக்கம்



10/20/2014

சென்னை CEO சஸ்பெண்ட்

சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் - சி.இ.ஓ., ராஜேந்திரன், நேற்று திடீரென, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். ராஜேந்திரன், ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வருகிறார். சென்னைக்கு வருவதற்கு முன், கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றினார். அப்போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய, 135 டன் இலவச பாட புத்தகங்கள், 'கரையான் அரித்துவிட்டது' என, பழைய பேப்பர் கடைக்கு போட்டதாக கூறப்படுகிறது.

இதில், தமிழக அரசுக்கு, பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும், இதற்கு, அப்போது, முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த, ராஜேந்திரன் தான் பொறுப்பு என்றும் கூறி, நேற்று, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதாக, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.
கல்வித்துறை செயலர் சபிதா, ராஜேந்திரனை, 'சஸ்பெண்ட்' செய்து, உத்தரவு பிறப்பித்ததை, அதிகாரி ஒருவர் உறுதிபடுத்தினார். ஓரிரு நாளில், பக்கத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஒருவரிடம், சென்னை மாவட்ட பொறுப்பு, கூடுதலாக ஒப்படைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது

வருந்துகிறோம்

பொதுச் செயலாளர் திரு. ஈசுவரன் காலமானார். திரு. ஈசுவரன் மறைவுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டக் கிளை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. இறுதி சடங்கு இராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளியில் நாளை நடைபெறும். அவரை இழந்து வாடும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தோழர்களுக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

10/17/2014

பென்ஷனுக்கு வசூலித்த பணம் கருவூலத்தில் கணக்கு இல்லை ..அதிகாரிகள் அதிர்ச்சி


பணியில் சேராத ஆசிரியர்களின் நியமனத்தை ரத்து செய்ய உத்தரவு

பணி நியமன ஆணை பெற்றும் பணியில் சேராத ஆசிரியர்களின் பணி நியமனத்தை ரத்து செய்ய கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் (ந.க.எண்: 025400, நாள் 15-10-14) கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தொடக்க கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிட ஒதுக்கீடும், சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களால் பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பணி நியமன ஆணை பெற்ற பல இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் இதுவரை பணியில் சேரவில்லை. அப்படி பணியில் சேராதவர்களுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் காரணம் கேட்டு அறிவிக்கை அனுப்ப வேண்டும்.<
அதன்பின்பும் 27-10-14-க்குள் பணியில் சேராவிட்டால் அவர்களின் பணி நியமன ஆணையை ரத்து செய்ய வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

10/16/2014

அட்டஸ்டேஷன்’ விஷயத்தில் குழப்பும் ரயில்வே; ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தவிப்பு

சென்னை: அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கும் போது, இணைக்கப்படும் சான்றிதழ் நகல்களுக்கு, அரசு அதிகாரிகளின் ஒப்பம் (அட்டஸ்டேஷன்) பெற வேண்டும் என்ற விதி நீக்கப்பட்டு விட்டது. இருப்பினும், பழைய முறையில், சான்றிதழ் நகல்களில் அதிகாரிகள் ஒப்பம் இல்லை என, கூறி, பல ஆயிரம் விண்ணப்பங்களை, ரயில்வே தேர்வு வாரியம் நிராகரித்து உள்ளது.
இதனால், தெற்கு ரயில்வேயின், ’குரூப் டி’ பணியாளர் தேர்வை எழுத முடியாமல், தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தவித்து வருகின்றனர்.
தேர்வு:
தெற்கு ரயில்வேயில், காலியாக உள்ள, 5,450 ’குரூப் டி’ பணியாளர் பதவிகளுக்கு தேர்வு செய்ய, 2013 செப்., 21ம் தேதி, ரயில்வே தேர்வு வாரியம் விளம்பரம் வெளியிட்டது. இத்தேர்வு, நவ., 2ம் தேதி முதல், ஐந்து கட்டங்களாக நடக்கிறது. இதற்கிடையே, மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், ’வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் போது, இணைக்கும் சான்றிதழ் நகல்களுக்கு, அரசு அதிகாரிகளின் ஒப்பம் பெறும் (அட்டஸ்டேஷன்) விதி நீக்கப்படுகிறது. இனிமேல், சான்றிதழ் நகல்களுக்கு, அரசு அதிகாரிகளின் ஒப்பம் பெற வேண்டிய அவசியமில்லை’ என, தெரிவிக்கப்பட்டது.
நிராகரிப்பு:
ஆனால், ரயில்வே தேர்வு வாரியம், இந்த அறிவிப்பை ஏற்காமல், ’குரூப் டி’ தேர்வுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களில், அரசு அதிகாரி ஒப்பம் பெற்ற, சான்றிதழ் நகல்கள் இல்லை என கூறி, பல ஆயிரம் விண்ணப்பங்களை நிராகரித்து உள்ளது. குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள், ரயில்வே வாரியம் நடத்தும், ’குரூப் டி’ தேர்வை எழுத முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.
’குரூப் டி’ பணியில் காலியாக உள்ள, 5,450 இடங்களுக்கு, 11 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதில், பல ஆயிரம் விண்ணப்பங்கள், இந்த முறையில் நிராகரிக்கப்பட்டு உள்ளன எனவும், விண்ணப்பதாரர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, ரயில்வே வாரியத்தை, விண்ணப்பதாரர்கள் பலர் அணுகியபோது, ’குரூப் டி’ தேர்வு அறிவிக்கும் போது, மத்திய அரசு, இந்த அறிவிப்பை வெளியிடவில்லை. எனவே, அரசு அதிகாரிகள் ஒப்பம் பெறாமல், விண்ணப்பிக்கப்பட்ட சான்றிதழ்கள் நகலை ஏற்க முடியாது. எனவே, அவ்வாறு அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன’ என, கூறியுள்ளது.
குழப்பம்: 
இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கட்சியின் ராஜ்யசபா எம்.பி., ரங்கராஜன் கூறியதாவது: ரயில்வே தேர்வு வாரியம் ஆங்கிலத்தில் வெளியிட்ட, ’குரூப் டி’ தேர்வுக்கான விளம்பரங்களில், ’சான்றிதழ் நகல்களுக்கு, அரசு அதிகாரி ஒப்பம் வேண்டும்’ என உள்ளது. ஆனால், தமிழில் வெளியான விளம்பரங்களில், ’அரசு அதிகாரிகள் ஒப்பம் தேவை இல்லை. சுய ஒப்பமிட்டு, சான்றிழ் நகல்களை விண்ணப்பத்துடன் இணைக்கலாம்’ என, கூறப்பட்டு உள்ளது.
மேலும், இந்தத் தேர்வுக்கு ஆன் - லைனில் விண்ணப்பிக்கும் வசதியும் செய்து தரப்பட்டது. ’ஆன் - லைனில் விண்ணப்பிக்கும் போது, சான்றிதழ் நகல்களுக்கு, சுய ஒப்பம் போதும்’ என கூறப்பட்டு உள்ளது. ரயில்வே தேர்வு வாரியம், கடந்த ஆண்டு நடத்திய தேர்வின் போது, அரசு அதிகாரிகள் ஒப்பம் தேவையில்லை என்பதை ஏற்று விண்ணப்பங்களை அங்கீகரித்துள்ளது. ஆனால், இப்போது தெற்கு ரயில்வே நடத்தும் தேர்வில் இப்படி நடந்து கொள்வது ஏற்க முடியாது.
வன்முறை:
ரயில்வேயின் காலியிடங்களுக்கு நடந்த தேர்வை, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள வேறு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் எழுத முனைந்த போது வன்முறை வெடித்தது. தேர்வு எழுத வந்தவர்களை, அடித்து விரட்டிய சம்பவங்களும் நடந்துள்ளன. இதனால், அனைத்து மண்டலங்களுக்கும், ஒரே நேரத்தில் தேர்வு நடத்தும் முறை துவங்கப்பட்டது.
தற்போது, தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, தேர்வு நடக்கும் போது, தேவையற்ற காரணங்களை கூறி தமிழக இளைஞர்களின் விண்ணப்பங்களை நிராகரிப்பது, தமிழகத்தில் அசாதாரண நிலையை ஏற்படுத்தும். எனவே, ரயில்வே வாரியம், உடனடி நடவடிக்கை எடுத்து, தமிழக இளைஞர்களின் விண்ணப்பங்களை ஏற்று தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

ஆன்லைன் மூலம் சம்பள பில் அரசு ஆசிரியர்களுக்கு உத்தரவு.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியருக்கு, அடுத்த மாதம் முதல், இ-பே ரோல்எனும், ஆன்லைன் மூலம் பில் சமர்பிக்கும் முறையை கருவூல அலுவலர்கள் அமல்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு, கருவூலம் மூலம் சம்பளம் மற்றும் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, ஒவ்வொரு மாதமும், சம்பந்தப்பட்ட தலைமை அலுவலர், தமக்கு கீழ் உள்ள அரசு ஊழியருக்கான சம்பள பில் தயாரித்து, கருவூலத்தில் சமர்பிக்க வேண்டியிருந்தது.
கடந்த சில ஆண்டுகளாக, சம்பள பில் பெறுவதை, காகித கோப்புகளாகவும், சிடி வடிவிலும், பெறப்பட்டு வந்தது.இதன்மூலம், அரசு ஊழியர்களின் எண்ணிக்கை, அவர்கள் சம்பளம் பெறும் தலைப்பு, மொத்த செலவு உள்ளிட்டவற்றை துல்லியமாக கணக்கிட முடியாத நிலை இருந்து வந்தது. தற்போது கருவூலத்துறை கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. இதனால், அக்டோபர் மாத சம்பளம் முதல், ஆன்லைனில் பில் சமர்பிக்கும் முறையை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதாவது ஒவ்வொரு பள்ளிக்கும், அலுவலகத்துக்கும் தனித்தனியே, "யூசர் ஐடி',"பாஸ்வேர்டு' வழங்கப்படும். கருவூலத்துறை இணையதளத்தில் இ-பே ரோல் எனும் பகுதியில், இதை பயன்படுத்தி, அலுவலர்களின் பில்களை, ஆன்லைனில்சமர்பிக்கலாம்.

பின் வழக்கம் போல, வங்கிக்கணக்குகளில், "இ.சி.எஸ்' முறையில் சம்பளம்வழங்கப்பட்டுவிடும். ஆவணங்களாக தயாரித்து வழங்கி வந்த முறையை, ஒழித்துள்ள நிலை, தலைமை அலுவலர்களின் பணி பளுவை வெகுவாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு அக்டோபர் மாதத்துக்கான சம்பள பில்களை, "ரிகர்சல்' போல், ஆன்லைனிலும், பதிவு செய்துவிட்டு, ஆவணமாகவும் தரலாம் எனவும், அடுத்த மாதம் கண்டிப்பாக, ஆன்லைன் முறையில் மட்டுமே, பில் சமர்பிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பில் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் ஒரு ஆசிரியர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, நேற்று சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில், ஆன்லைனில் பில் சமர்பிப்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இதில் சேலம் கருவூல பணியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சியளித்தனர்.

TET தேர்வுகள் இல்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு


10/13/2014

உதவித் தொடக்கக்கல்வி அலுவலரை காணாமல் அல்லல் படும் மானாமதுரை

மானாமதுரை உதவித் தொடக்கக்கல்வி அலவலகத்தில் ஆசிரியர்கள் தங்களின் பிரச்சனைகள் சார்பாக முறையிட அலுவலரை தேடினால் அலுவலரின் இருக்கை மட்டுமே காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் வரவேண்டும் என எதிர்பார்க்கும் அல்லது ஆசிரியர்களிடம் குற்றம் கண்டுபிடிப்பதையே தன்னுடைய வாடிக்கையாக கொண்டுள்ள அலுவலர் முதலில் தான் ஒழுங்காக அலுவலகம் வருவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் மத்தியில் வேண்டதகாத பிளவுகளை ஏற்படுத்துவதில் முனைப்பு காட்டும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் அமர்ந்து ஆசிரியர் பிரச்சனைகளை களைவதில் தீவிரம் காட்டலாம். இனி மேலும் இந்நடிவடிக்கை தொடர்ந்தால் அலுவலர் தான் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றிய பள்ளிக்கே திருப்பி விடப்படும் சூழல் ஏற்படும். அலுவலராக இருப்பதற்கான நடத்தை விதிகளை கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்பதே நம் அவா.
இது குறித்து மானாமதுரை TNPTF வட்டாரச்செயலாளர் திரு.தங்கமாரியப்பன் நம்மை தொடர்பு கொண்டு கூறியதாவது:
மானாமதுரை உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் காண்பது என்பது இயலாத காரியமாகிவிட்டது. ஆசிரியர்களை மறைமுகமாக தூண்டிவிட்டு எதிர் விளைவுகள் ஏற்படுத்த முயல்வதாகவும், இது குறித்து விவாதிக்க அலுவலரிடம் நேரம் கேட்டால் சந்திக்க மறுப்பதாகவும் இது மிகவும் கண்டனத்துக்கு உரியது எனவும் நம்மிடம் தெரிவித்தார்.  TNPTFன் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதே நாம் இறுதியாக எச்சரிப்பதாகும்.

10/09/2014

மத்திய அரசு ஊழியர்களின் வருகை பதிவு இனையதளத்தில் பொது மக்கள் பார்க்கலாம்


மத்திய அரசு துறைகளில், துறை வாரியாக, அலுவலகம் வாரியாக ஒவ்வொரு ஊழியரும் எத்தனை மணிக்கு வருகிறார்கள், எத்தனை மணிக்கு செல்கிறார்கள், அவர்களின் இணைய முகவரி உட்பட அனைத்து விசயங்களும் இடம் பெற்றுள்ளன. அனைத்து ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்யப்பட்டு இணையத்தில் நேரடியாக வருகிறது. இது அரசாங்கம் வெளிப்படையான அனுகுமுறையை கையாளவும், அனைத்து அரசு ஊழியர்களும் சரியான நேரத்திற்கு வருவதை உறுதி செய்யவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. யார் வேண்டுமானாலும் இந்த தகவல்களை பார்க்கலாம் என்பது தான் இதன் சிறப்பம்சம்.

http://attendance.gov.in/

TNPTF மாநிலச் செயற்குழு கூட்டம் அழைப்பிதழ்


10/08/2014

கல்வி சுற்றுலாவின்போது மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்

ஆசிரியைக்கு எம்.எட்., படிப்பிற்கு, மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க ஐகோர்ட் உத்தரவு

எம்.ஏ., -எம்.எட்., முடித்த ஆசிரியைக்கு மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த அரசின் மேல்முறையீட்டு மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. கமுதி கே.என்., பெண்கள் மேல்நிலை பள்ளியில், 1966 ல் உடற்கல்வி ஆசிரியையாக பாலசவுந்தரி பணியில் சேர்ந்தார். பி.ஏ.,- பி.எட்., தேர்ச்சி பெற்றதால், பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். பின் எம்.ஏ.,- எம்.எட்., தேர்ச்சி பெற்றார். 2005 ஜூன் 30 ல் பாலசவுந்தரி ஓய்வு பெற்றார். அவர், ''பி.எட்., முடித்ததற்கு மேற்படிப்பிற்கான இரண்டு ஊக்க ஊதியம் வழங்கப்பட்டது. எம்.எட்., படிப்பிற்கு, மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க கோரி, பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலரிடம் விண்ணப்பித்தேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,'' என ஐகோர்ட் கிளையில் மனு செய்தார். தனி நீதிபதி, ''மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்,'' என அரசுக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் மேல்முறையீடு செய்தனர்.

நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், வி.எஸ்.ரவி பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. பாலசவுந்தரி சார்பில் வக்கீல் என்.சதீஷ்பாபு ஆஜரானார். நீதிபதிகள்: ஆசிரியர்களின் தகுதியை உயர்த்தும் வகையில், அரசு ஊக்க ஊதியம் வழங்குகிறது. தலைமை ஆசிரியர்களுக்கு மட்டுமே மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க முடியும் என்பதையும், பாலசவுந்தரி பணியின் போதே மூன்றாவது ஊக்க ஊதியம் கோரியிருக்க வேண்டும் என்ற அரசுத் தரப்பு விளக்கத்தை ஏற்க முடியாது. ஏற்கனவே ஐகோர்ட் உத்தரவுப்படி, பாலசவுந்தரிக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என்றனர்.

நடுநிலைப் பள்ளிகளிலும் சிந்தியா சாப்ட்வேர் திட்டம் வேண்டும்: ஆசிரியர்கள் கோரிக்கை

உடுமலை: "கல்வித்துறை தொடர்பான தகவல்களை விரைவில் அடைய, நடுநிலைப் பள்ளிகளிலும் சிந்தியா சாப்ட்வேர் திட்டம் செயல்படுத்த வேண்டும்" என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்வுகால அட்டவணை, விடுமுறை, நலத்திட்ட தேவைகள், மாணவர் எண்ணிக்கை, தேர்ச்சி விகிதம், தொடர்பான தகவல்கள் அனைத்துமே கல்வித்துறை அலுவலகங்களில் இருந்து பள்ளிகளுக்கு, இ-மெயில் மற்றும் தபாலில் அனுப்பப்படுகிறது. கல்வித்துறை சார்ந்த தகவல்கள் விரைவில் பள்ளிகளை சென்றடையவும், காகித பயன்பாட்டை தவிர்க்கும் பொருட்டும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், "சிந்தியா சாப்ட்வேர் திட்டம்" நடைமுறையில் உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் 890 துவக்க மற்றும் 293 நடுநிலைப் பள்ளிகளில், பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். சிறப்பு தினங்கள் மற்றும் மாணவர்களுக்கான உறுதிமொழி எடுப்பது, பேரணி நடத்துவது, மாணவர் விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை கல்வித் துறைக்கு அனுப்புவது மற்றும் பெறுவதில், நடுநிலை மற்றும் துவக்கப் பள்ளிகள், தபால் சேவை ஒன்றையே பயன்படுத்த வேண்டியுள்ளதால், தாமதம் ஏற்படுவதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், விழா கொண்டாட்டங்கள் மற்றும் பல்வேறு செயல்பாடுகளை, உரிய நேரத்தில் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிகளில் இருந்து தபால் மூலம் அனுப்பப்படும் தகவல்கள், கல்வித்துறைக்கு சென்றடைந்தனவா என்ற குழப்பமும் நிலவுகிறது. ஆசிரியர்கள் மட்டுமின்றி, திடீரென பெறப்படும் தகவல்களால் மாணவர்களும் அவதிக்குள்ளாகின்றனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திருப்பூர் உட்பட 10 மாவட்டங்களில் கல்வித்துறை தொடர்பான தகவல்களை பெற, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் "சிந்தியா சாப்ட்வேர்" முறை நடைமுறையில் உள்ளது. நடுநிலைப் பள்ளிகளுக்கும் இவ்வசதியை செய்துதர, ஆசிரியர்கள், கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தொழில்நுட்ப வசதிகள் வளர்ந்து வரும் நிலையில், அதை பயன்படுத்த, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு தொலைபேசி மூலமாக தகவல் தரப்படுகிறது. முக்கியமான தகவல்கள் தபால் மூலமாக அனுப்பப்படுவதால், அவை பள்ளிகளை வந்தடைய தாமதமாகிறது.
பெரும்பாலும், ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு நேரில் சென்று தகவல்களை பெற வேண்டியுள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்தி, அருகில் உள்ள துவக்கப் பள்ளிகளும் இத்திட்டத்தை பயன்படுத்தும்படி, இணைப்பு சேவை ஏற்படுத்தினால், தகவல்களை பெறவும் அனுப்பவும் வசதியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் எந்த வசதியுமில்லை; மாணவர்களை இழுக்க கல்வித்துறை மும்முரம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆறு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு ஆசிரியர்கள், ஆய்வகம், வகுப்பறை, மேஜை, நாற்காலி போன்ற எந்த வசதியையும் மாவட்ட கல்வித் துறை ஏற்படுத்தவில்லை.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆறு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு ஆசிரியர்கள், ஆய்வகம், வகுப்பறை, மேஜை, நாற்காலி போன்ற எந்த வசதியையும் மாவட்ட கல்வித் துறை ஏற்படுத்தவில்லை.
இந்த பள்ளிகளுக்கு மாணவர்களை பிடித்து தள்ளும் வேலையை அதிகாரிகள் துவக்கி உள்ளனர். மாநிலம் முழுவதும் 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு, கடந்த மாதம் 24ம் தேதி பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு வெளியிட்டது.
தரம் உயர்வு: காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடப்பாக்கம் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, பெருங்குடி உயர்நிலைப் பள்ளி, திருவஞ்சேரி உயர்நிலைப் பள்ளி, கொளப்பாக்கம் உயர்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு அறிஞர் அண்ணா ஆண்கள் உயர்நிலைப் பள்ளி, செம்மஞ்சேரி உயர்நிலைப் பள்ளி ஆகிய ஆறு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இந்த பள்ளிகளுக்கு அருகில், மேல்நிலைக் கல்வி படித்துவரும் மாணவர்களை, இந்த பள்ளிகளுக்கு மாற்றுவதற்கான பூர்வாங்க பணிகளை, மாவட்ட கல்வித் துறை செய்து வருகிறது. அதாவது, இந்த பள்ளிகளில் 10ம் வகுப்பு படித்த மாணவர்களை, பிளஸ் 2 வகுப்பில் மீண்டும் சேர்க்க, மாவட்ட கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான பணிகளில், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் மாவட்ட கல்வி அதிகாரிகள் பட்டியல் தயாரித்து வருகின்றனர். தற்போது, பிளஸ் 1 பயின்று வரும் மாணவர்களுக்கு மாற்றுச்சான்று வழங்குவதற்கு தயாராகி வருகின்றனர்.
இல்லை... இல்லை...
புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில்...
* ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக அறிவிப்பு இல்லை
* ஆய்வகங்கள் இல்லை
* தேவையான வகுப்பறை இல்லை
* மேஜை, இருக்கை வசதி இல்லை
தற்போதைய நிலவரப்படி, மேல்நிலைப் பள்ளிகளில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும்போது, தற்போது புதிதாக தரம் உயர்த்தப்பட்ட இந்த ஆறு பள்ளிகளிலும் எத்தனை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, நிரப்பப்படும் என்பதும் கேள்விக்குறி. அதோடு, இந்த பாடப்பிரிவுகளுக்கு தேவையான வகுப்பறைகள், கணினி அறிவியல், வேதியியல், இயற்பியல், தாவரவியல், உயிரியல் போன்ற ஆய்வகங்களை ஏற்படுத்த வேண்டும். காலாண்டு தேர்வு முடிந்துள்ள நிலையில், அரையாண்டு தேர்வுக்கும், ஆண்டு இறுதித் தேர்வுக்கும் மாணவர்கள் தயாராவதில் சிக்கல் ஏற்படும்.
தனியார் பள்ளிகளுடன் பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் போட்டியிட முடியாமல், அரசு பள்ளிகள் மிகவும் பின் தங்கியுள்ள இந்த காலகட்டத்தில், எந்த அடிப்படை வசதிகளும், ஆசிரியர்களும் ஆய்வகமும் இன்றி செயல்பட உள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்கு, மாணவர்களை மாற்றுவது என்பது, அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதாகவே அமையும்.
இந்த பள்ளிகளில், புதிதாக ஆய்வகங்கள் ஏற்படுத்த கல்வித்துறை எந்த நிதியையும் இதுவரை ஒதுக்கவில்லை. பின்னர் ஏற்படுத்தப்படும் என்று மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வீட்டிற்கு அருகில் பள்ளி இருக்கிறது என்று ஆசை வார்த்தை கூறி, அடிப்படை வசதி ஏற்படுத்தப்படாத அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியரை சேர்க்க பெற்றோருக்கு வலை விரிக்கும் வேலையை மாவட்ட கல்வி அதிகாரிகள் துவக்கி உள்ளனர்.
ஒரு வாரத்திற்குள் மாணவர்களை புதிய பள்ளியில் சேர்க்க மாவட்ட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. உண்மை நிலவரத்தை அறியாமல், இந்த பள்ளிகளில் சேர்ந்து தங்கள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்க வேண்டுமா? என மாணவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். பெரும்பாலான பெற்றோர், ஏற்கனவே படித்து வரும் பள்ளியிலேயே மேல்நிலைக் கல்வியை தொடர வேண்டும் என விரும்புவதாக கூறப்படுகிறது.
இருண்ட காலத்தில்...
இதுகுறித்து, கல்வியாளர்களிடம் கேட்டபோது, "பள்ளிகள் தரம் உயர்த்துவது குறித்த அறிவிப்பை ஆண்டு இறுதியில் வெளியிட்டு, அடுத்த கல்வி ஆண்டு துவக்குவதற்கு முன்பு, அந்த பள்ளிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்த பிறகுதான், மாணவர் சேர்க்கையை துவக்க, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து, இப்படி மாணவர்களின் எதிர்காலத்தில் விளையாடுவது, அவர்களின் மொத்த வாழ்க்கையையும் இருண்ட காலத்தில் தள்ளிவிடும்" என்றனர்.

IGNOU - B.Ed - TIME TABLE for Term End Examination December - 2014

Settlement of dues of the deceased Government employees covered under NPS


NPS.1

The CCS(P) Rules are applicable to govt. servants appointed on or before 31.12.2003.Are the employees who joined pensionable establishments of Govt. of India after 31/12/2003 eligible for any benefits under these rules?

In accordance with DoP&PW O.M. No. 38/41/06-P&PW(A) dated 5.5.2009 such employees who joined after 31/12/2003 and/or their families may be given the benefit of disability pension or family pension provisionally till the finalization of rules under the National Pension System (NPS) on death/injury.

What are the guidelines/orders in regard to settlement of dues of the deceased Government employees covered under NPS ?

As per the Department of Pension & PW O.M. No.38/41/06 –P&PW(A) dated 5.5.2009 (available on website) the benefits under the CCS(Pension) Rules has been provisionally extended to the families of deceased employees covered under NPS. Family Pension/gratuity in terms of O.M. dated 5.5.2009 shall be payable to the family of the deceased employee if the deceased employee was covered under NPS and fulfils the conditions. These payments are provisional and will be adjusted as per the final provisions. As per Para 7 of the O.M., the accumulations in pension wealth of deceased employee under NPS will not be paid during the period provisional benefits under the aforementioned O.M. are payable. The Head of Office will prepare the pension papers as per provisions of the relevant rules and proceed as per the procedure for making the provisional payments to eligible Government servants’ families explained in Ministry of Finance O.M. No.1(7)/DCPS(NPS)/2009/TA/221 dated 2.7.2009 read with corrigendum dated 29.9.2009.

10/07/2014

8-ம் வகுப்பு வரை கட்டாய பாஸ் இனி கிடையாது. RTE மூலம் மாற்ற திட்டம்


தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை கணிதத் திறன் மேம்படுத்துதல் பயிற்சி


அனைவருக்கும் கல்வி இயக்கம், மாநிலத் திட்ட இயக்குனர், சென்னை-6 அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/ அகஇ/2014. நாள். .08.2014 செயல்முறைகளின் படி 2014-15ஆம் கல்வியாண்டில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை கணிதத் திறன் மேம்படுத்துதல் பயிற்சி வட்டார வள மைய அளவில் 14.10.2014 முதல் 17.10.2014 வரை மற்றும் 27.10.2014 முதல் 30.10.2014 வரை இரண்டு கட்டங்களாக நான்கு நாட்கள் பயிற்சி

10/04/2014

வாழ்த்துகிறோம்!!!


Manilappotuc secretary-elect of the Council of State tamilaciriyar Off teammate progressive thinker Sivaganga Baronet Servo congratulate them. Tamil Nadu Elementary School teacher collaboration and consultation with the various struggles with his colleagues shared with us many wonderful messages. Mark the first time that's Sivaganga karuppuccattai lube portrays in a white dress. Teacher to teacher, integrating a variety of movements to create a movement to protect the rights of authors in Sivaganga arumpatupattavar. During a phone call, there will be a companion Baronet ennumalavirku together with our movement. Vice president of the state of Tamil Nadu Corporation for tamilaciriyar worked in the past as well as today, the state general secretary of the standard. We see that the process is a victory. Not only the media, friends and the friends of the author stretching his wings by his friendship with everyone adding easily capable of operating messages. In future Association of State tamilaciriyar me there is no doubt that gold enshrined. He, along with several teachers in Sivaganga district, the easy problems have a solution. Among the authorities that he would be the better approach. At the same time, none of the fighter சமரசப்படுத்திக்கொள்ளாத weaves itself is functioning. Elango Tamil Nadu Elementary School teacher, best friend, they run the task on behalf of the Coalition, I would like to congratulate my behalf.
Courteous and .......
முத்துப்பாண்டியன்
TNPTF Mavattattalaivar,
Civaknakai; District.

10/01/2014

பக்ரீத் விடுமுறை அக்டோபர் 6ம் தேதிக்கு மாற்றம் : அரசாணையில் தகவல்


பக்ரீத் பண்டிகை அக்டோபர் 5ம் தேதிக்கு பதிலாக 6ம் தேதியன்று கொண்டாடப்படுவதால், அன்றைய தினத்துக்கு அரசு பொது விடுமுறையை மாற்றி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
பக்ரீத் பண்டிகை அக்டோபர் 5ம் தேதிக்கு பதிலாக 6ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படும் என்றும், எனவே, தமிழக அரசு அன்றைய தினம் விடுமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் தலைமை காஜி விடுத்த வேண்டுகோளை ஏற்று, பக்ரீத் பண்டிகைக்கான விடுமுறை அக்டோபர் 6ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அக்டோபர் - 2014 டைரி

2014 அக்டோபர் மாத பள்ளி நாட்காட்டி
===================================
02-10-2014 காந்தி ஜெயந்தி/ஆயுத பூஜை
03-10-2014 விஜய தசமி
04-10-2014 குறைதீர் மனு சிறப்பு முகாம்/அராபத்(RL)
06-10-2014 பருவத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி மீண்டும் திறப்பு
17-10-2014 பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி
22-10-2014 தீபாவளி
26-10-2014 ஹிஜ்ரி புத்தாண்டு(RL)

மாவட்ட அளவில் ஒரு தனி ஆசிரியர் தின விழாவா? - புதிய சர்ச்சை

காஞ்சிபுரம்: மாநில அளவில், தமிழக அரசு, ஆசிரியர் தின விழாவை நடத்தி முடித்த நிலையில், மாவட்ட அளவில், விழா நடத்தப் போகிறோம் எனக் கூறி, 6 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,), சாந்தி வசூல் செய்திருப்பதாக புகார் எழுந்து உள்ளது.
விழாவும் நடத்தாமல், வசூலித்த பணத்தையும் கொடுக்காமல் இருப்பதால், ஆசிரியர்கள், கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
ராதாகிருஷ்ணன் விருது
ஒவ்வொரு ஆண்டும், பள்ளிக்கல்வித் துறை சார்பில், சென்னையில், செப்., 5ம் தேதி, ஆசிரியர் தின விழா கொண்டாடப்படுகிறது. மாநில அளவில், இந்த விழாவை நடத்தி, தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது.
மாவட்ட அளவில், தனியாக விழா நடத்தப்படுவது இல்லை. ஆனால், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,), சாந்தி, மாவட்ட அளவில், ஆசிரியர் தின விழாவை நடத்த, ஆக., மாதம், பள்ளிகளிடம் இருந்து, வசூல் நடத்தியதாகவும், ஆனால் இதுவரை, விழாவை நடத்தவில்லை எனவும், மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகி கள், பள்ளிக்கல்வித் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து, ஆசிரியர் சங்கத் தலைவர் ஒருவர் கூறியதாவது: கடந்த ஆக., 6ம் தேதியிட்ட ஒரு சுற்றறிக்கையை, அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கும், சாந்தி அனுப்பினார்.
அதில், அரசு உயர்நிலைப் பள்ளியாக இருந்தால், 900 ரூபாய், மேல்நிலைப் பள்ளி எனில் 1,300, அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளி 1,100, மேல்நிலைப் பள்ளி 1,500, மற்றும் சுயநிதி தனியார் உயர்நிலைப் பள்ளி 1,100, மேல்நிலைப் பள்ளி 1,500 ரூபாய் வீதம், விழாவிற்கு தர வேண்டும் என உத்தரவிட்டார்.
மாவட்டத்தில், 623 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஒரு பள்ளிக்கு சராசரியாக 1,000 ரூபாய் என்றாலும், வசூல் தொகை 6 லட்சம் ரூபாயை தாண்டுகிறது.
விழா நடத்தவில்லை
இதுவரை விழாவும் நடத்தவில்லை; வசூலித்த பணத்தையும், திருப்பித் தரவில்லை. மாநில அளவில் ஒரு விழா நடந்த பின், மாவட்ட அளவில், சி.இ.ஓ., விழா நடத்துவது ஏன்? இதற்கான பின்னணி காரணத்தை விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறையிடம் புகார் அளித்துள்ளோம். இவ்வாறு, அந்த தலைவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து, விசாரிப்பதாக பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உறுதி அளித்திருப்பதாவும், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
வசூலித்தது உண்மை தான்!
ஆசிரியர் புகார் குறித்து, முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி கூறியதாவது: பள்ளியின், பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து, பணம் வசூலித்தது உண்மைதான். ஆண்டு முழுவதும் கடுமையாக உழைத்து, நல்ல ரிசல்ட்டை காட்டிய ஆசிரியரை கவுர விப்பதற்காகவும், அவர்களுக்கு சான்றிதழ் கொடுப்பதற்காவும், விழா நடத்துவது தவறா?
விழாவிற்கு எதிராக புகார் கொடுப்பவர்கள், உண்மையான சங்க நிர்வாகிகளே கிடையாது. அவர்கள், ஆசிரியருக்கு எதிரானவர்கள். இவர்களின் புகார்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. மாவட்ட அமைச்சரை வைத்து விழா நடத்த உள்ளோம். அவரின் தேதி கிடைக்கவில்லை. அதனால் விழா தாமதம் ஆகிறது. அமைச்சர் தேதி கிடைத்ததும், கண்டிப்பாக விழா நடத்துவோம். இவ்வாறு சாந்தி கூறினார்.

உரிய காலத்திற்குள் பணியில் சேராவிட்டால் புதிய ஆசிரியர்களுக்கு சிக்கல்?

சிவகங்கை: உள்ளூரில் காலியிடமின்றி, பிற மாவட்ட அரசு பள்ளிகளை தேர்வு செய்து, நியமன ஆணை பெற்ற பிறகும், பணியில் சேர தாமதிக்கும் புதிய ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.
தமிழகத்தில் டி.இ.டி.,தேர்வு மூலம் தேர்வான இடைநிலை பட்டதாரிகளான 14,700 ஆசிரியர்களுக்கு நியமன உத்தரவு கடந்த வாரம் வழங்கப்பட்டு, உடனே பணியில் சேரும்படி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இவர்களில் 50 சதவீதம் பேர் சொந்த மாவட்டத்தில் பணி வாய்ப்பில்லாததால், வெளி மாவட்டத்திலுள்ள காலியிடங்களை தேர்வு செய்தனர்.
நியமன ஆணை பெற்ற 25 சதவீத ஆசிரியர்கள் பணியில் சேராமல் தாமதித்து வருகின்றனர். அரசியல், அதிகாரிகள் சிபாரிசில், நியமன உத்தரவை மாற்றி, சாதகமான இடங்களை பெற காத்திருக்கின்றனர். தமிழக முதல்வர் மாற்றத்தால் சாதக இடங்களுக்கான உத்தரவை பெறுவதில் புதிய ஆசிரியர்களுக்கு சிக்கல் உருவாகியுள்ளது. இவர்களுக்கான சிறப்பு பயிற்சியில் 25 முதல் 30 சதவீதம் பேர் வரவில்லை என பயிற்சியாளர்கள் கூறுகின்றனர்.
கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், “கலந்தாய்வு மூலம் நியமன ஆணை பெற்றவர்கள் பணியில் சேர்ந்ததற்கான ஆய்வு நடக்கிறது.
தேர்வுசெய்த பள்ளியில் பணியில் சேர்ந்தால், உடனே வேறு பள்ளிகளுக்கு மாற முடியாது என்பதால், சிலர் தாமதித்து வருகின்றனர். குறிப்பிட்ட நாள் வரை பணியில் சேராதவர்களுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது" என்றனர்.