பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

8/05/2012

கல்வி வணிகமயமாக்கலை ஒழிக்க நாடு தழுவிய பெருந்திரள் இயக்கம்...!!


சென்னை, ஆக.3-

நவீன தாராளமய பொருளா தாரக் கொள்கைகளுக்கு எதி ரான போராட்டத்தோடு இணைந் ததே கல்வியில் சம உரிமைக் கான போராட்டமும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கல்வி உரிமைக்கான போராட் டத்தை ஒத்த கருத்துள்ள அர சியல் கட்சிகள், வெகு மக்கள் அமைப்புகளோடு இணைந்து நாடு தழுவிய அளவில் மேற் கொள்ளவும் உறுதி எடுக்கப் பட்டுள்ளது.கல்வி வணிக மயமாக்கல் ஒழிப்பு மற்றும் பொதுப்பள்ளி முறையைக் கட்டுதலுக்கான அகில இந்திய மாநாட்டுப் பிர கடனம் சென்னையில் வெள்ளி யன்று (ஆக.3) வெளியிடப்பட் டது. பொதுப்பள்ளிக்கான மாநில மேடை, அகில இந்திய கல்வி உரிமை கூட்டமைப்பு இரண் டும் இணைந்து அந்த மாநாட்டை கடந்த ஜூன் 30, ஜூலை 1 தேதிகளில் நடத்தியது தெரிந் ததே.“சமுதாய நிலைமைகளை அப்படியே வைத்துக்கொள்வ தாக இல்லாமல், அதை ஆக்கப் பூர்வமாக மறுகட்டுமானம் செய் வதில் பங்களிக்கும் வகையில் குழந்தைகள் மற்றும் இளைஞர் களின் படைப்பாக்கத் திறனை யும் மனித ஆற்றலையும் வெளிப் படச் செய்கிற வரலாற்றுப்பூர்வ மான சமுதாயப் பங்கு கல் விக்கு உண்டு,” என்று சென் னைப் பிரகடம் தொடங்குகிறது

.இந்த லட்சியத்தைப் பொதுப் பள்ளி முறையால் மட்டுமே நிறைவேற்ற முடியும். தரமான கல்வியை அனைத்துக் குழந் தைகளுக்கும் சமமாக வழங்கு கிற கடமை அரசுக்கு உண்டு. ஊட்டச்சத்து, உடல் நலம், சமூக-உளவியல் பாதுகாப்பு, பண்பாட்டுப் பாதுகாப்புடன் இணைந்த கல்வியை இலவச மாக அரசாங்கம் வழங்க வேண் டும். மழலையர் பள்ளி முதல் 12ம் வகுப்பு வரையில் அனைத் துக் குழந்தைகளுக்கும் 18 வயது வரையில் அருகமைப் பள்ளி அடிப்படையில் முழுக்க முழுக்க அரசு நிதியுடனான பொதுப்பள்ளி முறை நிலை நாட்டப்பட வேண்டும் என்று அந்தப் பிரகடனம் வலியுறுத்து கிறது.இந்தியாவில் நீண்ட நெடுங் காலமாகவே, பாடுபடும் மக்க ளுக்கு சமூக நிலை அடிப்ப டையில் கல்வி உரிமை மறுக்கப் பட்டு வந்திருக்கிறது. அந்தப் பின்னணியில் இன்று நீர், காடு, நிலம் ஆகிய உரிமைகள் போல பொதுப்பள்ளி என்பது ஒரு அடிப்படை உரிமையாக உறுதிப் படுத்தப்பட வேண்டும். நவீன தாராளமய மூலதனத்தாலும், பேராசை பிடித்த நிதிச்சந்தை களாலும், உள்நாட்டு மதவெறி சக்திகளாலும், குறுகிய பிளவு சக்திகளாலும், இதர பிற் போக்கு சக்திகளாலும் கடுமை யான சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்தியா, உயர் தன்னாளுமை உரிமை உள்ள தேசம் என்ற தனது உரிமையைக் காக்க வேண்டு மானால், ஜனநாயகமும் சுதந்திர மும் உள்ள முற்போக்கான அமைதியான சமுதாயமாக நிலைத்திருக்க வேண்டுமா னால் கல்வியை உரிமையும் மக்களின் வாழ்வாhதார உரிமை களும் அடிப்படை உரிமைக ளாக உறுதிப்படுத்தப்பட வேண் டும் என்றும் பிரகடனம் கூறு கிறது.1990ம் ஆண்டுகளின் தொடக் கத்தில் உலக வங்கி - பன் னாட்டு நிதியம் ஆகியவற்றின் கட்டளைப்படி கல்வித்துறைக் கான அரசுச் செலவினங்கள் வெட்டப்பட்டன. மாவட்ட தொடக்கக் கல்வித் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களின் மூலமாக உலக வங்கிக் கட்ட ளைப்படி பல்வேறு எதிர்மறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன.

அதன்படி முறையான நிரந்தர ஆசிரியர்களுக்கு பதிலாக பயிற்சியற்ற ஒப்பந்த முறை ஆசிரியர்களை நியமிப்பது, இரண்டுக்கும் மேற்பட்ட வகுப்பு களுக்கு ஒரே ஆசிரியரே கற் பிப்பது, ஒரே அறையில் பல வகுப்புகள், பாகுபாடுகள் மிகுந்த பல அடுக்கு பள்ளி முறை, அரசு களின் நிதி ஒதுக்கீடு வெட்டு முதலிய நடவடிக்கைகளால் அனைவருக்கும் சமமான தரமான கல்வி என்ற லட்சியம் கைவிடப்பட்டது என்றும் அந்தப் பிரகடனம் கூறுகிறது.கல்வி வணிகமயமாக் கலை ஒழித்தல், அருகமைப் பள்ளி அடிப்படையில் முற்றி லும் அரசு நிதியுடனான பொதுப் பள்ளி முறையை நிலைநாட்டு தல், கல்வி முறை மாற்றத்திற் காக பெருந்திரள் மக்கள் இயக் கத்தைக் கட்டுதல் ஆகிய நோக்கங்களை முன்னெடுத் துச் செல்வது என்றும் பிரகட னத்தில் முன்வைக்கப்பட் டுள்ளது.தற்போதைய கல்வி உரி மைச் சட்டம் பல வகைகளி லும் மக்களின் அடிப்படைக் கல்வி உரிமையை நிராகரிப்ப தாக, அதனைத் தனியார் கை களில் ஒப்படைக்க வழிசெய்வ தாகவே இருக்கிறது என்று பிரகடனத்தை வெளியிட்ட கூட்டமைப்பின் தலைவரும், மாநாட்டு வழிநடத்து குழு தலைவருமான பேராசிரியர் அனில் சடகோபால் கூறினார்.சட்டத்தின் 51-ஏ பிரிவு குழந்தைகளுக்குக் கல்வி வழங்குவதைப் பெற்றோரின் பொறுப்பாக்குகிறது.

அரசின் கடமையாக சட்டத்தில் வரை யறுக்கப்படவில்லை. உலகின் வேறு எந்தவொரு நாட்டிலும் இவ்வாறு கல்விக்கடமை யைப் பெற்றோர் தலையில் தள்ளிவிடுகிற ஏற்பாடு இல்லை என்று மாநில மேடை பொதுச் செயலாளரும் வழிநடத்து குழு வின் செயலருமான பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறினார்.கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன், மக்கள் நல் வாழ்வு இயக்க பொதுச்செயலா ளர் மருத்துவர் சீ.ச. ரெக்ஸ் சற் குணம், பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன், மருத்துவர் பி. சந்திரா உள்ளிட்டோர் பங்கேற்ற னர். மாநில மேடை தலைவர் ஐ.பி. கனகசுந்தரம் தலைமை தாங்கினார், கவிஞர் செவ்வி யன் நன்றி கூறினார்.
நன்றி:  தீக்கதிர் நாளிதழ்.

8/04/2012

Pay Grievance Redressal Cell

Letter No. 28307
Dt : August 3, 2012
 Pay Grievance Redressal Cell constituted to examine anomalies, if any Personal Hearing with the Associations / Individuals – Postponement - Intimation-Regarding.

8/02/2012

இக்னோ நுழைவு தேர்வுகள்: பி.எட்., மற்றும் எம்.எட்., நுழைவு படிப்புக்கான தேர்வுகள் ஆக.,19ல் நடப்பதாக இருந்தது. இவை ஆக., 26 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இக்னோ நுழைவு தேர்வுகள் ஆக., 26 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன என, மதுரை மண்டல இயக்குனர் சண்முகம் தெரிவித்துள்ளார். எம்.பி.ஏ., பி.எஸ்சி., நர்சிங், பி.எட்., மற்றும் எம்.எட்., நுழைவு படிப்புக்கான தேர்வுகள் ஆக.,19ல் நடப்பதாக இருந்தது. இவை ஆக., 26 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. காலை 10 முதல் 1 மணி வரை எம்.பி.ஏ., பி.எஸ்சி., படிப்புக்கும், பிற்பகல் 2 முதல் 4 மணி வரை பி.எட்., எம்.எட்., படிப்புக்கும் தேர்வுகள் நடக்கும். நுழைவு தேர்வுக்கான அனுமதி சீட்டு ஆக., முதல் வாரத்தில் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று, மண்டல இயக்குனர் சண்முகம் தெரிவித்துள்ளார்

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு பதிவு

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு பதிவு, உயர்நீதிமன்றம் இந்த வழக்கை ஏற்று தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
வழக்கு எண்: MP(MD)No:2 of 2012 in W.P.(MP)No: 9218 / 2012 நாள்.11.07.2012
இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியம் தொடர்ந்து மறுக்கப்படுவதாகவும் இதனால் ஆசிரியர்கள் மனவேதனை அடைவதாகவும் மேலும் அமைச்சு பணியாளர்களோடு ஒப்பீட்டு ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தை குறைப்பது நியாமற்ற செயல் எனவும் ஏற்கெனவே 5வது ஊதிய குழுவில் ஆசிரியர்களை விட குறைவான ஊதியம் பெற்றவர்களுக்கு 6வது ஊதிய குழுவின் ஒரு நபர்
குழுவில் ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தை விட அதிகமாக பெறுவதை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும், அதேபோல் ஊதியம் நிர்ணயம் செய்யும் போது எண்ணிக்கை அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுமா அல்லது தகுதி அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுமா என்று வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என தெரிவித்தனர். இதை தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றம் இளையராஜா , மாரிதுரை ,சதீஷ் மற்றும் குசேலன் ஆகியோர்கள் தொடர்ந்த இந்த வழக்கை ஏற்று தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சமனில்லாத சமன்!

கடந்த ஆண்டு இதே காலத்தில் சமச்சீர் கல்வி பற்றி மிகப்பெரிய குழப்பம் ஆசிரியர்களிடையேயும் மாணவர்களிடையேயும் இருந்தது. இது தொடர்பாக போராட்டங்களும் ஆங்காங்கே நடந்தன. தில்லி உச்ச நீதிமன்றம்வரை சென்ற அந்தப் பிரச்னை ஒரு வழியாக சுமுகமாக்கப்பட்டது. கல்வி அனைவருக்கும் சமமாக்கப்பட வேண்டும் என்ற பெயரில் சமச்சீர் உருவாக்கப்பட்டது பாராட்டுக்குரியதுதான்.  ""ஒரு கட்டடத்தை இரு தூண்கள் தாங்கிக் கொண்டுள்ளன. அதில் ஒரு தூணின் மேற்பகுதி சிறிது உடைந்துவிட்டது. இப்போது மேல்தளம் சமனில்லாமல் ஒரு புறம் சரிந்துள்ளது. இதனை சமன்செய்வதற்கான பல வழிகள் தொடர்பாகக் கூறப்பட்ட ஒரு யோசனை செயல்படுத்தப்பட்டது. அது என்னவென்றால், நன்றாக உள்ள மற்றொரு தூணையும் உடைந்த தூணின் அளவுக்கு உடைப்பதென்பது. அது அவ்வாறே மேற்கொள்ளப்பட்டு மேல் தளத்தைச் சமன்படுத்தியாயிற்று''.  இதுபோன்று எளிதில் புரியக்கூடிய, அழகான எடுத்துக்காட்டுகளைக் கொண்டிருக்கும் சமச்சீர் புத்தகம் அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போதைக்குப் பிரச்னை அதுவல்ல.  8-ஆம் வகுப்பு வரை அமல்படுத்தப்பட்டுள்ள, மாணவர்களும் ஆசிரியர்களும் செயல்படுத்த வேண்டிய பல்வேறு செயல்பாடுகளைப் பற்றித்தான். செயல்வழிக்கற்றல், படைப்பாற்றல் கல்வி முறை மூலம் மாணவர்கள் பாடங்களைக் கற்கும் முறை இந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் தினமும் அதிகநேரம் படிப்பது என்பது மாறி அதிகநேரம் செயல்வழிக் கற்றல் என்றாகிறது. இது பாடங்களை எளிதில் புரிந்து கொள்வதற்குச் சிறந்த வாய்ப்பாக அமைந்திருக்கிறது.  இந்த செயல் வழிக்கற்றலுக்காக மாணவர்களுக்கு சில மூலப்பொருள்கள் (சார்ட், அதில் ஒட்டுவதற்குப் படங்கள்..,) தேவைப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு மாணவனுக்கும் தினமும் குறைந்தது 20 ரூபாய் தேவைப்படுகிறது. 20 ரூபாய் என்பது உயர் வருவாய் பிரிவினருக்கு பெரும் தொகையல்ல. அரசுப் பள்ளியில் குழந்தைகளை விட்டுவிட்டு டாஸ்மாக்கில் நாள்தோறும் வருகையைப் பதிவு செய்யும் தந்தைக்கும், இலவசமாக அளிக்கக்கூடிய அரிசியைக்கூட கிலோ ரூ.3-க்கு வாங்கும் தாய்க்கும் இது பெருந்தொகையே! இது மாணவர்களுடைய பிரச்னை.  இந்தமுறையில் ஆசிரியர்களுக்கு என்ன பிரச்னை? இங்குதான் ஆசிரியர்கள் ஆசிரியர்களாக அல்லாமல் மாணவர்களின் செயல்பாடுகளை ஆவணப்படுத்தும் அலுவலர்களாக மாறியிருக்கின்றனர்.  ஒவ்வொரு மாணவனுக்கும் 5 அல்லது 6 பக்கம் ஒதுக்கப்பட்டு, மாணவர்களைத் தனித்தனியே கவனித்து அவர்களைப் பற்றி வளர் மதிப்பீடு, தொகுப்பு மதிப்பீடு என்று ஆவணப்படுத்தும் வேலை ஆசிரியர்களுக்கு. இதனால் கற்றுத்தரும் நேரம் குறைவாகவும் ஆவணப்படுத்தும் நேரம் அதிகமாகவும் செலவிட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. உதாரணத்துக்கு மாணவனிடம் ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டால், மாணவனிடம் என்ன கேள்வியைக் கேட்டோம் என்று ஆவணப்படுத்த வேண்டும். மாணவன் புத்தகத்தை கையில் தொட்டால், அதற்கு தனி மதிப்பெண் என்று அதனையும் பதிவு செய்ய வேண்டும்.  இந்த வேலைகளையெல்லாம் செய்துதான் மாணவன் எந்த இடத்தில் தேங்குகிறான், தொய்வடைகிறான் என்று ஆசிரியர் அறிய வேண்டியதில்லை. மாணவர்களின் சில செயல்பாடுகளை வைத்தே அவனைப் பற்றி கணிக்கக் கூடிய திறமை ஆசிரியர்களிடத்தில் உண்டு. மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவாகவும் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் தகவல்களை ஆவணப்படுத்தும் முறை எப்படி சாத்தியமாகும்?  இந்நிலையில் இத்தனை வழிமுறைகளை அமல்படுத்தினால் மாணவர்களுக்குக் கல்வி சுமையாகின்றதோ இல்லையோ ஆசிரியர்களுக்கு சுமையாகிவிடாதா?  ஆசிரியர்களைப் பொருத்தவரையில் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களைக் காட்டிலும், தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் மேலானவர்கள். புதிதாகக் கொண்டு வந்துள்ள முறை தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தியுள்ளதா?  வண்டியில் சாட்டையைக் கையில் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பவர் பாரத்தை இழுக்கும் எருதின் கஷ்டத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை.  கல்வி முறைகளில் உள்ள குறைகளைக் கூறினால், ""சம்பளம் அதிகம்; அதனால் வேலை அதிகம்; இதைக் கூட அவர்கள் செய்ய முடியாதா?'' என்று கேள்விக்கணைகள். வேலை செய்ய ஆசிரியர்கள் தயார். ஆனால், ஓட்டைப் பானையை வைத்து செடிகளுக்கு எப்படி நீர் ஊற்றுவது? இங்கு மாற்ற வேண்டியது பானையையா, நீர் ஊற்றுபவர்களையா?  கால்குலேட்டர் வந்தவுடன் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் திறன் குறைந்தது; செல்போன் வந்தவுடன் நினைவுத்திறன் குறைந்தது; இவைகளை இழந்து நாம் எதைப்பெற்றோம் என்று தெரியவில்லை.  அதேபோல் தொழில்நுட்பம் வந்தபின் எழுதுவது குறைந்தது. அட்டை வழி, செயல்வழி கற்றல்கள் மூலம் மாணவனின் வாசிப்புத் திறன் மறைந்து கொண்டிருக்கிறது. எழுத்து, வாசிப்பு இவையிரண்டும் இல்லாமல் எப்படி ஒரு மொழியைக் காப்பாற்றுவது?  மாற்றங்கள் வரும்போது ஒன்றை நாம் இழக்கத்தான் வேண்டும். மாற்றத்தை மறுப்பவர்கள் பிற்போக்காளர்கள், இந்த காலத்துக்கு உதவ மாட்டார்கள் என்று மாற்றத்தை ஏற்பவர்கள் ஏளனம் செய்கிறார்கள்.  அசோகர் மரம் நட்ட வரலாற்றுக் கல்வியைத் தூக்கிப்போடுங்கள். இந்த காலத்துக்கு ஏற்ற கல்வியை உருவாக்குங்கள் என்று முற்போக்கு சிந்தனைவாதிகளின் (?) குரல்கள் முன்பு கேட்டன.  ஆனால் இன்றோ, உலக வெப்பமயமாதலைத் தடுக்க ஜி-20 மாநாட்டில் ஆலோசிக்கப்படுகிறது. மரத்தின் அருமை குறித்து அரசு பல விளம்பரங்களைச் செய்து வருகிறது. மரங்களை வளர்க்க பல இயக்கங்கள் தோன்றிவிட்டன.  இப்போதாவது புரிகிறதா, பழைய கல்வி முறை எவ்வளவு உகந்ததென்று? எந்தக் கல்வி முறையை மாற்ற வேண்டுமென்று யார் கூறுவது? மாற்றங்களை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டுமா? அவ்வாறாயின், உருவில் சிறியதாக இருந்து அறை முழுவதும் மணத்தை பரப்பக்கூடிய மல்லிகை போல்தானே அது இருக்க வேண்டும். அதைவிடுத்து காற்றிலே பட்டவுடன் சுருங்கி விடும் பஞ்சு மிட்டாய் போன்று இருந்து என்ன பயன்?  இந்த வகையான கற்றல் முறைகள் எல்லாம் சிபிஎஸ்இ-க்கு ஈடாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது அதிகாரிகளின் கருத்து. ஒருவேளை இந்த முறையும் அதற்கு ஈடாகவில்லையென்றால் என்ன செய்வது என்று ஆசிரியர்களிடம் கேள்வியெழுப்பினால், "நாம் என்ன செய்ய, அரசன் எவ்வழியோ நாம் அவ்வழி' என்ற பழமொழியை நினைவூட்டுகிறார்கள்.  நீரில் நனைந்த காகிதமோ, அட்டையோ ஈரம் காய்ந்தபின் முன்பைவிட விறைப்பாகத்தான் இருக்கும். அதற்காக அது உறுதியாகத்தான் உள்ளது என்று கூறிவிட முடியுமா?  முன்னர் பார்த்த கட்டட உதாரணத்தில், எதிர்கால சிந்தனையின்றி மேல்தளம் சமன்செய்யப்பட்டது. பாருங்கள், நாளைக்கு ஏற்கெனவே பாதிப்படைந்த தூண் பளு தாங்காமல் மேலும் பாதிப்படைந்தால் மேல்தளத்தை எப்படி சமன் செய்வது? மீண்டும் நன்றாக உள்ள தூணை வெட்டி சமன் செய்வதா? இதைத் தவிர்க்க முன்னரே என்ன செய்திருக்க வேண்டும்?
 

முதலமைச்சரின் தனிப்பிரிவு - இனி வரும் காலங்களிலும் மாணவர் எண்ணிக்கை காரணமாக ஏற்ப்படும் உபரி பணியிடங்களும் நிரவல் செய்யப்படும் என்று, முதன்மை கல்வி அலுவலர் மனுவிற்கு பதில் அளித்துள்ளார்

TNPTF Federation Day


8/01/2012

கணிதப்பிரிவில் 30 கேள்விகளுக்கு பதிலாக 20 கேள்விகளே கேட்கப்பட்டன ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்தவேண்டும் பட்டதாரிகள் கோரிக்கை

சென்னை, ஆக.1-

பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு முறைப்படி நடத்தாததால் அதை ரத்து செய்துவிட்டு மீண்டும் நடத்தவேண்டும் என்று பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியர் தகுதி தேர்வு

கடந்த ஆகஸ்டு 12-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு தாள்-1 என்றும், பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு தாள்-2 என்றும் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 61/2 லட்சம் பேர் எழுதினார்கள்.

இந்த தேர்வுகளில் விடைத்தாள் நகலை தேர்வு எழுதியவர்களே வீடுகளுக்கு எடுத்துச்சென்றனர்.

சரியான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடவேண்டும் என்று கல்வியாளர்கள், தேர்வு எழுதியவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் (கீ-ஆன்சர்) விடைகளை வெளியிட்டது. அதில் ஏதாவது சந்தேகம் இருந்தாலோ விடைகள் தவறாக தெரிந்தாலோ ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தவறான விடைகள்

அந்த விடைகளில் சில தவறாக இருந்ததாக ஆசிரியர்கள் புகார் செய்தனர்.

நிபுணர்களை அழைத்து சரியான பதிலை ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிந்து அதை இணையதளத்தில் வெளியிடுவதுதான் சரியானது என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் மேலப்பட்டியை சேர்ந்த உதவி பேராசிரியர் செல்வராசு தெரிவித்த புகாரில் கூறியிருப்பதாவது:-

கணிதத்தில் 20 கேள்விகள் மட்டுமே...

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்-2 தேர்வில் கணிதப்பிரிவில் 30 கேள்விகள் கேட்பதற்கு பதிலாக 20 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டுள்ளது. இதனால் கணிதம் படித்த பட்டதாரி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். என்.சி.டி.இ. தெரிவித்த விதிமுறைப்படி கணிதத்தில் 30 கேள்விகள் கேட்கப்படவேண்டும். ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் அதை கடைப்பிடிக்காமல் 20 கேள்விகளை மட்டுமே கேட்கப்பட்டுள்ளது.

எனவே கணித ஆசிரியர்களின் நலன் கருதி ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்துவிட்டு சரி சமமாக கேள்விகள் எடுத்து தேர்வை நடத்தவேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இது போல பல பட்டதாரிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். மேலும் தேர்ச்சி சதவீத மார்க்கை குறைக்கவேண்டும் என்றும் ஏராளமான ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மாணவர்களுக்கான சாதி / வருமான / இருப்பிட சான்றிதழ் வழங்க ஒருங்கிணைந்த விண்ணப்ப படிவம்.

தொடக்கக்கல்வி - பள்ளி வளாகங்களில் மாணவ-மாணவிகள் கைபேசி (செல்போன் ) கொண்டு வருவதை தடை செய்து ஆணை வெளிடப்பட்டது சார்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை வழங்குதல் -சார்பு

7/25/2012

வேலைவாய்ப்பு புதிவை புதுப்பிக்க மறந்தவர்களுக்கு அரசு சிறப்பு சலுகை

2008, 2009, 2010-ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்படி மூன்று மாதங்களுக்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாகவோ தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

   இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் மகேசன் காசிராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
2008, 2009 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு முறை புதுப்பித்து கொள்ள சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு வழங்கியுள்ளது. இச்சலுகையை பெற விரும்பும் மனுதாரர்கள் அரசாணை வெளியிடப்படும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாகவோ தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். 18.10.2012-க்குப்பின் பெறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும்.
   1.01.2008-க்கு முன் புதுப்பிக்க தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இணையதளம் மூலம் பதிவினை புதுப்பிக்க இயலாதவர்கள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு வேலைவாய்ப்பு அடையாள அட்டையின் நகலுடன் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமோ மனு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Elementary Dept. No Cost Foot Wear Online Entry

அரசு பள்ளிகளில் தமிழுக்கு கெட்அவுட், ஆங்கிலத்துக்கு கட்அவுட்டா?: தமிழக அறிஞர்களின் கூட்டமைப்பு

சென்னை: அரசு தொடக்கப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும் என்று தமிழக அறிஞர்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் குமரி அனந்தன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில்,
தனியார் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இந்நிலையில் மாநில அரசு நடத்தும் துவக்கப்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வியை புகுத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் ஆகும்.
அனைத்து பாடங்களையும் தாய்மொழியில் கற்பிக்க வேண்டும் என்பது சான்றோர்களின் எண்ணம். அவர்களின் எண்ணத்தைப் புறக்கணிக்கும் வகையில் உள்ள இந்த திட்டத்தால் தமிழ் நெஞ்சங்கள் கொதித்துள்ளன. தமிழகத்தில் தாய்மொழியாம் தமிழை புறக்கடையில் நிறுத்திவிட்டு ஆங்கில ஆதிக்கத்துக்கு முக்கியத்துவம் தரும் தமிழக அரசின் இந்த திட்டத்தை கண்டிக்கிறோம்.
தமி்ழ் மொழியைக் காத்து, குழந்தைகளின் வாழ்வு வளம் பெற தமிழ் வழிக்கல்வியையே தொடர வேண்டும் என்றும், ஆங்கில வழிக்கல்வித் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம் என்றனர்.
 Oneindia Tamil

இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் B.Ed.,&M.Ed.,பாடப்பிரிவுக்கான நுழைவுத் தேர்வு தேதி மாற்றம் 26.08.2012 அன்று நடைபெறும் என அறிவிப்பு.

7/24/2012

மாணவரை துன்புறுத்தினால் நடவடிக்கை: பள்ளிக் கல்விச் செயலர் சபிதா கடும் எச்சரிக்கை

"மாணவருக்கு, மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ ஆசிரியர் தண்டனை அளிக்கக் கூடாது. மீறினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா எச்சரித்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில், தனியார் பள்ளி மாணவர் ஒருவரை சிறுநீர் குடிக்கச் சொல்லி, அடித்து, துன்புறுத்திய ஆசிரியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சிறுநீர் கழிக்க ஆசிரியர் அனுமதிக்காத நிலையில், வகுப்பிலேயே மாணவர் சிறுநீர் கழித்தார். இதனால், ஆசிரியர் கொதிப்படைந்து, மாணவரை நையப் புடைத்தனர். இந்த விவகாரம், பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல தனியார் பள்ளிகளில், சிறிய மாணவ, மாணவியரைக் கூட, வகுப்பு நேரத்தில் சிறுநீர் கழிக்க, ஆசிரியர் அனுமதிக்காத கொடூரம் நடக்கிறது. சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைத்தால், நாளடைவில் பெரிய பிரச்னையை ஏற்படுத்தும்.

இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதாவிடம் கேட்டபோது, "மாணவருக்கு, உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தண்டனை அளிக்கக் கூடாது. அப்படியிருந்தும், சில தனியார் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து விடுகின்றன. இதை ஆசிரியரும், பள்ளி நிர்வாகமும் தவிர்க்க வேண்டும். மீறினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

நன்றி:
 

எஸ்.எஸ்.ஏ. கல்வி திட்டத்தில் பல லட்சம் சுருட்டல்?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில் நடந்த பள்ளி மேலாண்மை பயிற்சி வகுப்பு, வாழ்வியல் திறன் பயிற்சி முகாமிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில், முறைகேடு நடந்துள்ளதால், இதுகுறித்து விசாரிக்க தனி குழுவை கலெக்டர் அமைத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், வட்டார வளமையங்கள் மூலம் துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு, கடந்த மார்ச் மாதம் பள்ளி மேலாண்மை பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

அதே போல், ஒவ்வொரு ஒன்றியத்திலும், பள்ளி செல்லா குழந்தைகளுக்கான பகல் நேர சிறப்பு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கடந்த மார்ச் மாதம் வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்பு நடந்தது.மூன்று நாள் பயிற்சி இந்த இரு பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு, மாவட்டம் முழுவதும் பல லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.

பள்ளி மேலாண்மை குழு பயிற்சி வகுப்பில், பயிற்சி பெற்ற உறுப்பினர்கள், மூன்று நாள், குறுவள மையத்தில் தங்கி பயிற்சி பெற வேண்டும். ஆனால், எந்த உறுப்பினர்களும் பயிற்சி மையத்தில் தங்கி பயிற்சி பெறவில்லை. பலர் பயிற்சி வகுப்பிற்கு வரவே இல்லை.

பயிற்சி பெறும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் காலை சிற்றுண்டிக்கு 25 ரூபாயும், மதியம் சாப்பாட்டிற்கு 40 ரூபாயும், இரவு சாப்பாட்டிற்கு 40 ரூபாயும், காலை மற்றும் மாலையில் தேநீர் மற்றும் நொறுக்குத்தீனிக்காக 40 ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டது. விதிகள் மீறல் மேலும், பயிற்சி வகுப்பில் ஜெனரேட்டர் வசதி, சாமியானா, ஒலிபெருக்கி உள்ளிட்ட ஏற்பாடு செய்வதற்கும் நிதி ஒதுக்கப்பட்டது.

அதே போல், பள்ளி செல்லா குழந்தைகளுக்கு நடந்த வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்பிற்கும் ஒரு குழந்தைக்கு, 100 ரூபாய் வீதம் நான்கு நாள் பயிற்சி முகாமிற்கு, தலா 400 ரூபாய் வீதம் ஒதுக்கப்பட்டது. பயிற்சி முடித்த இந்த குழந்தைகளை, அவரவர் வயதிற்கு தகுந்தாற்போல், பள்ளிகளில் சேர்க்க வேண்டும். தொடர்ந்து ஒரு ஆண்டு, இந்த குழந்தைகளை ஆசிரியர் பயிற்றுநர்கள் கண்காணிக்க வேண்டும்.

ஆனால், அனைவருக்கும் கல்வி திட்ட உதவி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள், இந்த இரு பயிற்சி முகாம்களுடைய விதிமுறையை பின்பற்றவில்லை. முறைகேடு புகார் இதற்காக, அனைவருக்கும் கல்வி திட்டத்தில் ஒதுக்கீடு செய்த நிதியில், 60 சதவீதம் பணத்தை அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகள் கூட்டணி அமைத்து முறைகேடு செய்தனர்.

அனைவருக்கும் கல்வி திட்ட பயிற்சி முகாம் செலவினங்களை மேற்கொள்ள, உதவி தொடக்க கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பெயர்களில் வங்கியில் இணைப்பு கணக்கு உள்ளது.

ஓசூர் அருகே தளி ஒன்றியத்தில் நடந்த, பள்ளி மேலாண்மை குழு பயிற்சி வகுப்பு, வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்பு நடத்தியதில், பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. கலெக்டர் மகேஷ்வரன், முறைகேட்டை விசாரிக்க தனிக்குழு அமைத்துள்ளதால், அதிகாரிகள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.

நன்றி:
 

B.Ed.,Exam Application Form

Relaxation of condition relating to enhancement of age of superannuation of teachers in state institutions consequent of the implementation of the revised pay scales on the basis of 6lh Pay Commission recommendations

The Cabinet today approved the proposal to relax the condition of enhancement of age of superannuation of teachers to 65 in state institutions for the implementation of the revised pay scales on the basis of 6lh Pay Commission recommendations and become eligible for receiving Central share of 80% of the arrear payment.
It also decided that reimbursement of 80% of the Central share of the arrears be paid in 2-3 instalments to those States who have already made the payment and submitted their proposals for reimbursements to the Central Government.
The decision of Cabinet is expected to provide relief to teachers in State institutions with the payment of arrears. It will also benefit State Governments, who will be able to make the arrear payment in instalments and also claim reimbursements simultaneously.
Background:
Following the revision of pay scales of Central Government employees on the recommendation of the 6ifl Pay Commission, the pay scales of teachers and other equivalent cadres was revised and age of superannuation was enhanced to 65 in December 2008. The scheme of revised pay scales was essentially for teachers in Central Educational Institutions. However, provisions of the Scheme could be made applicable by State Governments, to Universities and Colleges coming under the purview of the State Governments, provided the State Governments adopt and implement the scheme as a composite scheme, including the enhanced age of superannuation.
The Central Government decided to provide financial assistance to the extent of 80% as reimbursement to those State Governments, which may opt for these revised pay scales for the period 1.1 2006 to 31.3.2010 The remaining 20% was to be met by the State Government from its own resources. The Central assistance was subject to the condition relating to the enhancement of the age of superannuation of university and college teachers to 65 years.
Many State Governments had requested the Central Government to waive the condition relating to enhancement of age of superannuation of teachers to 65 years as they were finding it difficult to accept the condition relating to enhancement of age of superannuation and the condition that the State Governments should first disburse the arrears and then seek reimbursement from Central Government to the extent of 80% of these arrears.

7/23/2012

பதவி உயர்வுக்கு முன்பே மாறுதல் கலந்தாய்வு: இடைநிலை ஆசிரியர்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கவுன்சலிங் வரும் 30ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்பே 23ம் தேதி பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை பள்ளிக் கல்வித் துறையில் 6, 7, 8ம் வகுப்புகளில் மட்டுமே இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த வகுப்புகளுக்கு புதிதாக இடைநிலை ஆசிரியர் பணியிடம் என்பது கிடையாது. இதனால் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெற்றாலோ, பதவி உயர்வு பெற்றாலோ மட்டுமே காலியிடம் உருவாகும் நிலை உள்ளது. தற்போது பணி நிரவலுக்காக பல இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் பள்ளிக் கல்வித் துறையில் தற்போதைய நிலையில் பல மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் இல்லாத நிலை உள்ளது.

வரும் 30, 31ம் தேதிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதற்கான கவுன்சலிங் நடக்கிறது. எனவே அதற்கு பின்னரே இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் தமிழக பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் (பணி மேலாண்மை) ராஜராஜேஸ்வரியிடம் கடந்த 11ம் தேதி கோரிக்கை விடுத்தது. அவரும் பதவி உயர்வுக்கு பின்னர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்துவதாக கூறியிருந்தார். இதனால் ஆகஸ்ட் முதல் வாரம் தான் இடைநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வு நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் வரும் 23ம் தேதி நடக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வின் போதே இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வும் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. காலியிடங்கள் இல்லாத நிலையில் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது இடைநிலை ஆசிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் இசக்கியப்பன் கூறுகையில், "இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற பின்னர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தினால் காலியிடங்கள் உருவாகும். ஆனால் பதவி உயர்வுக்கு முன்பே பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பள்ளிக் கல்வித் துறை மறு பரிசீலனை செய்ய வேண்டும்" என்றார்.

நன்றி: Dinakaran

கல்வி தகவல் மேலாண்மை முறை மற்றும் ஸ்மார்ட் கார்ட் திட்டம் -பள்ளிகளில் பூர்த்தி செய்து தயார் நிலையில் வைக்கவேண்டிய படிவங்கள்

நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச நாள்கள்கூட வகுப்புக்கு வராத மாணவர்கள் தேர்வு எழுத உரிமை கோர முடியாது என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது

செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியைச் சேர்ந்த பி. கீதா உள்ளிட்ட 9 மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். போதுமான நாள்கள் வகுப்புக்கு வரவில்லை என்று கூறி தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்று கல்லூரி நிர்வாகம் கூறுகிறது. எங்களை தேர்வு எழுத அனுமதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கோரினர். 
இந்த மனுக்கள் மீது கடந்த மே மாதம் விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்குமாறு உத்தரவிட்டது. எனினும் இந்த வழக்கின் முடிவு தெரியாமல் தேர்வு முடிவை வெளியிடக் கூடாது என்று கூறியிருந்தது. 
இந்நிலையில் இந்த வழக்கினை நீதிபதி கே.சந்துரு விசாரித்தார். அப்போது, கல்லூரி சார்பில் ஆஜரான அரசு கூடுதல் வழக்குரைஞர் பி.சஞ்சய்காந்தி, நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச நாள்கள் (75 சதவீத நாள்கள்) கண்டிப்பாக வகுப்புக்கு வர வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்றுக் கொண்டே மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்தனர். ஆனால் இந்த மாணவர்கள் போதிய நாள்கள் வகுப்புக்கு வரவில்லை. 
இத்தகைய சூழ்நிலையில் மாணவர்கள் வகுப்புக்கு வராததன் காரணத்தை பரிசீலித்து, நியாயமான காரணமாக இருந்தால் மாணவர்களை தேர்வுக்கு அனுமதிக்கும் அதிகாரம் கல்லூரி முதல்வருக்கு உள்ளது. எனினும் 9 சதவீத நாள்கள் மட்டுமே முதல்வரால் விதிவிலக்கு அளிக்க இயலும். 
ஆனால் முதல்வரின் இந்த விதிவிலக்கைப் பெறும் அளவுக்குக்கூட மனுதாரர்கள் வகுப்புக்கு வராததால் அவர்களை தேர்வுக்கு அனுமதிக்க இயலாது என்று அவர் வாதிட்டார். அவரது இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி கே. சந்துரு, மாணவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

7/17/2012

O Ms.No. 261
Dt : July 17, 2012
 Pay Grievance Redressal Cell – Extension of the tenure of Pay Grievance Redressal Cell and Appointment of a Member – Orders – Issued.
Letter No. 39664
Dt : July 12, 2012
  State Public Sector Undertakings/ Statutory Boards-Enhancement of Maternity Leave from 90 days to 180 days Extension of the facility to the Women Employees of State Public Sector Undertakings/ Statutory Boards-regarding
பள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்வி-முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்- நேரடி மற்றும் பதவி உயர்வு மூலம் நியமனம் - கல்வித்தகுதிகள் -இணையாக கருதுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
பள்ளிக் கல்வி - அனைத்து வகை அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கான பொதுவான சட்டம் மற்றும் விதிகளை வகுப்பதற்கு ஆலோசனை வழங்க வல்லுநர் குழு (Expert Committee) அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
  1. அனைவருக்கும் தரமான கல்வி வழக்க இயக்குநர்செயல்முறை
  2. விலையில்லா சீருடை வழங்கும் திட்டம் இயக்குநர் செயல்முறை
  3. தொடக்கக் கல்வி - அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 01.09.2011ல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கை யின்படி உபரி இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள் பணிநிரவல் மற்றும் பொது மாறுதல் விவரம் அளிக்க தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.
  4. இயக்குநர் சந்திப்பு(11.07.2012)
  5. RTI letter Regarding Aided school BT promotion

பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரம் கலந்தாய்வு

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரம் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் தொடக்க கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மே மாதம் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கலந்தாய்விற்கான விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் பெறப்பட்டது. பின்னர் விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டு கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது முதுநிலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு, பதவி உயர்வு ஆகியவை முடிந்துள்ளது. தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வும் முடிந்தது. பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு வருகிற 23, 24ம் தேதிகளில் நடக்கும் நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு எப்போது நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.

பள்ளிக் கல்வித் துறையை பொறுத்தவரை தற்போது 6, 7, 8ம் வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர் புதிய நியமனம் கிடையாது. பட்டதாரி ஆசிரியர்கள் தான் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே 6, 7, 8 வகுப்புகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களே தற்போது பணியிட மாறுதல் கலந்தாய்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கடந்த 31.05.2012 நிலவரப்படி காலியாக இருந்த இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவலுக்காக பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக மாற்றப்பட்டன.

இதனால் பள்ளிக் கல்வித் துறையில் தற்போதைய நிலவரப்படி இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இல்லாத நிலை உள்ளது. எனவே வரும் ஜூலை 30ம் தேதி இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதற்கான கலந்தாய்வு நடக்கிறது. இந்த கலந்தாய்வின் போது ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலியிடங்களின் அடிப்படையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் இசக்கியப்பன் கூறுகையில், தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் தற்போதைய நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் காலியிடங்கள் எதுவும் இல்லாத நிலையில் பதவி உயர்வால் ஏற்படும் காலியிடங்களின் அடிப்படையில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டுமென்று பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் (பணியாளர் நலன்) ராஜ ராஜேஸ்வரியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவுடன் ஏற்படும் காலியிடங்களின் அடிப்படையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி:

7/14/2012

ஆகஸ்ட் மாதம், 31ம் தேதிக்குள், புதிய காப்பீட்டு திட்டத்திற்கான அடையாள அட்டைகளை தயாரித்து, சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திற்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

"தி யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிட்' நிறுவனம், வரும் ஜூலை முதல் தேதி முதல், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமாக, தேர்வு செய்யப்பட்டுள்ளது..புதிய திட்டத்தின் கீழ் அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக, புதிய அரசாணை ஒன்றை நிதித்துறை பிறப்பித்துள்ளது.இதில், சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம், அட்டை வழங்குவதற்கான விண்ணப்பங்களை, அரசு அலுவலகங்களில் உள்ள, சம்பளக் கணக்கு அதிகாரிகளுக்கு, அனுப்பி வைக்க வேண்டும். அவர்கள், தங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு, அந்த விண்ணப்பத்தை அளித்து, பூர்த்தி செய்து, பெற்று, மீண்டும், காப்பீட்டு நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும்.

20ம் தேதிக்குள் விண்ணப்பம்: இதில், ஏற்கனவே பயன்பெறும் ஊழியர்கள், புதியதாக சேர்ந்துள்ள ஊழியர்கள், என அனைவரும், தங்கள் குடும்பத்தினர் பற்றிய தகவல்களுடன், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ,வரும் 20ம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அளிக்கவேண்டும். அந்த விண்ணப்பங்களை, இம்மாதம் 31ம் தேதிக்குள், காப்பீட்டு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பத்தை பெறும் காப்பீட்டு நிறுவனம், ஆகஸ்ட் மாதம், 31ம் தேதிக்குள், புதிய காப்பீட்டு திட்டத்திற்கான அடையாள அட்டைகளை தயாரித்து, சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.ஒரு வேளை புதிய அடையாள அட்டையை தொலைத்து விட்டால், 50 ரூபாய் செலவில், புதிய அட்டையை, ஊழியருக்கு, காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

தொடக்கக்கல்வி - தொடக்கக்கல்வி - முன்னாள் தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஞாயிற்றுகிழமையன்று விழா எடுத்து சிறப்பாக கொண்டாட இயக்குனர் உத்தரவு.


7/13/2012

ஜீலை 13 இராமுண்ணி பிறந்தநாள்


Today we are celebrating TNPTF Founder Master RAMUNNI Birthday. We are very proud to be in this association. www.mptnptf.blogspot.com

7/11/2012

குற்றம் சாட்டப்பட்ட அரசு ஊழியரை நீதிமன்றம் விடுவித்தாலும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் - அரசு விளக்கக் கடிதம் வெளியீடு

  1. இவலச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டம் 2009- ன்படி தொடக்கக் கல்வி இயக்கத்தில் கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய நகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் உபரிபாக உள்ள இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியடங்களை கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்திடல்- ஆணை வெளியிடப்படுகிறது.
  2. PAY CELL PETITION
  3. 2012-13 உபரிப்பணியிடமாறுதல் வெளியப்படையான செயல்முறைகள் வேண்டுதல் சார்பு
  4. G.O=264

7/10/2012

ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய கல்வித்துறை அதிகாரி கைது

திருநெல்வேலி: ஆசிரியரிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கல்வித்துறை அதிகாரி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் ரெட்டியார்புரத்தை சேர்ந்தவர் எபினேசர் ஜெபக்கனி. இவர் கடந்த 2001ம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்தார். இவருக்கு கடந்த 2007ம் வரையிலான ஆண்டிற்கு சம்பளம் கிடைக்கவில்லை. இது குறித்து அவர் மாவட்ட கல்வித்துறை அதிகாரியிடம் புகார் செய்தார்.

இவரது மனுவை பரிசீலனை செய்த கல்வித்துறை அலுவலகத்தில் பணிபுரியம் ஜெரால்டு வசீகரன்(45), 8 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க மறுத்த எபினேசர், லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., தங்கசாமியிடம் புகார் மனு அளித்தார். அவரது ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய 8 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்த போது ஜெரால்டு வசீகரனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெரால்டு விசாரணைக்கு பின்னர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். ஜெரால்டு முன்னர் நெல்லையில் பணிபுரிந்தபோது லஞ்ச புகார் காரணமாக நான்குநேரிக்கு மாற்றப்பட்டார். பின்னர் அவர் மீண்டும் நெல்லை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  1. Announcements - District Revenue Administration - Issue of Community, Nativityand Income certificates to all sixth standard students studying in all schoolsof Tamil Nadu - Implementation of the Scheme - Orders issued.
  2. பள்ளிக்கல்வி அமைச்சர், அரசு செயலர், இயக்குநர் அறிவுரைகள்
  3. உபரி பணியிடம் கணக்கிடுதல் விபரம்
  4. அனைத்து பள்ளிகள் உரிய நேரத்தில் தொடங்கவும், ஆசிரியர் மாணவர்கள் சுத்தமாகவும், பள்ளி வளகங்கத்தை சுத்தமாக வைத்திருக்க பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவு.
  5. GO.123 fin(paycell)dep.dated:10.04.2012 Grivence Redressal அமைப்பின் கடிதம்
  6. காமராஜர் பிறந்த நாளை(ஜீலை-15) கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடும் அரசாணை
  7. மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பள்ளிப் பாவையிடல் சார்பு
  8. Letter No. 35574/PGC/2011-3,  dated: 23.04.2012  
  9. New Health Insurance Scheme, 2012 
  10. CCE FORM
  11. 2012-13 SABL cards,Laders,Grop cards,in colur picture & complet method& instruction for Std  1-4
  12. இயக்குநருக்கு அமைப்பின் கடிதம்
  13. அதிகமாக காலியிடங்கள் உள்ள மாவட்டங்களில் பள்ளிகள்  பட்டியல் கோருதல் சார்பு
  14. Elementary Director Instruction about INSPIRE Award 2012-13
  15. தொடக்கக் கல்வி - ஊராட்சி. நகராட்சி.அரசு மற்றும் உதவிபெறும் தொடக்க-நடுநிலைப்பள்ளி- ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் ஆடை மற்றும் அணிகலன்கள் அணிந்து வருதல் -சார்பு

7/04/2012

THANKS



TNPTF



தொடக்க கல்வித்துறை கவுன்சிலிங் ஜூலை 21 ம் தேதி தொடங்குகிறது.

ஜூலை 21
முற்பகல்  பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் ஒன்றியத்திற்குள் மற்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம்
பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் இடம் மாறுதல் ஒன்றியத்திற்குள் மற்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம்
ஜூலை 22
பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் மற்றும்  இடம் மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்
ஜூலை 28
இ .நி .ஆசிரியர் பணி நிரவல் மற்றும்  இடம் மாறுதல் ஒன்றியத்திற்குள்
ஜூலை 29
இ .நி .ஆசிரியர் பணி நிரவல் மற்றும்  இடம் மாறுதல் ஒன்றியம் விட்டு ஒன்றியம்
ஜூலை 31
இ .நி .ஆசிரியர் பணி நிரவல் மற்றும்  இடம் மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம் 

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் முறை கேடாக வழங்கப்பட்ட மாறுதல் ஆணையை ரத்து செய்து மறு கலந்தாய்வு நடத்த வேண்டும் - ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் முறை கேடாக வழங்கப்பட்ட மாறுதல் ஆணையை ரத்து செய்ய வேண்டும். ஜூன் 5க்குள்  மறு கலந்தாய்வு நடத்த வேண்டும் என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கெடு விதித்துள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயற்குழு கூட் டம் மதுரையில் மாநில தலைவர் கண்ணன் தலை மையில் நடந்தது. மதுரை மாவட்ட செயலாளர் முருகன் வரவேற்றார். இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய துணைத்தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். மாநிலப் பொரு ளாளர் மோசஸ் வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.
தமிழ்நாடு தொடக்க கல்வித்துறையில் கடந்த மாதம் 27,28 மற்றும் 29ம் தேதிகளில் பட்டதாரி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோருக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடந்தது.
ஒளிவுமறைவற்ற கலந்தாய்வு நடத்தாமல் கட்சியினர் பெயரில், உயர் அலுவலர்களின் பரிந்துரை களின் அடிப்படையில் காலிப் பணியிடங்களை ஒளித்து வைத்து அத்துமீறல்கள் நடந்தன. இதை இக்கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது.
சட்டவிரோதமாக கலந்தாய்வு இல்லாமல் முறையின்றி வழங்கப்பட்டுள்ள இடமாறுதல் ஆணைகளை ரத்து செய்ய வேண்டும். வரும் 5ம் தேதிக்குள் பிரச்னைக்குரிய ஒன்றியங்களில் மறு கலந்தாய்வு நடத்த வேண்டும்.
வரும் 21ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடை பெறும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்ட தாரி ஆசிரியர் உபரி பணியிட மாறுதல் மற்றும் பணியிட இடமாறுதல் களை எவ்விதப் புகாருக்கும் இடமின்றி வெளிப்படையான, தூய்மையான முறையில், ஒளிவுமறைவின்றி நடத்த வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
கூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் முருக செல்வராசன், மாநில துணைத்தலைவர்கள் மலர்விழி, மயில், ஜோசப்ரோஸ், சந்திரமோகன், மாநிலச் செயலாளர்கள் மணிமேகலை, முருகேசன் கலந்துகொண்டனர்.

தொடக்கக்கல்வித்துறையின் கீழ் உள்ள தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் 01.07.2012 அன்றுள்ளப்படி ஆசிரியர்களின் காலிப்பணியிடம், கூடுதல் தேவையுள்ள பணியிடங்கள் மற்றும் உபரி பணியிடங்கள் விவரங்கள் கோரப்பட்டுள்ளது - திருத்தப்பட்டது.