பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

7/24/2013

ஆசிரியர் அல்லாத பள்ளிகள் - சர்வேயில் அதிர்ச்சி தகவல்கள்

சென்னை: தமிழத்தின் 16 பள்ளிகளில் சுத்தமாக ஆசிரியர்களே இல்லை என்றும், பல பள்ளிகளில் 1 அல்லது 2 ஆசிரியர்களே உள்ளனர் என்றும், ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் சர்வே, அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
ஆர்.எம்.எஸ்.ஏ., என்று சுருக்கமாக அழைக்கப்படும் அந்த சர்வே(2012-13) தெரிவிக்கும் பல அதிர்ச்சி தகவல்கள் பின்வருமாறு;
தமிழகத்திலுள்ள 16 பள்ளிகளில், சுத்தமாக, ஆசிரியர்களே இல்லை. அத்தகையப் பள்ளிகள், விழுப்புரம், சென்னை, வேலூர், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளன.
இதைத்தவிர, மாநிலத்தின் 2,253 பள்ளிகளில், ஒரே ஒரே ஆசிரியர்தான் உள்ளார். இதுபோன்ற பள்ளிகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் அதிகளவில் உள்ளன. அம்மாவட்டத்தின் 195 பள்ளிகளில் இந்த நிலை. மற்றபடி, ஒற்றை ஆசிரியர் பள்ளிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் 159ம், சிவகங்கை மாவட்டத்தில் 134ம், வேலூர் மாவட்டத்தில் 127ம், விழுப்புரம் மாவட்டத்தில் 113ம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் 131ம் உள்ளன.
இதில், ஒரு பெரிய கொடுமை என்னவெனில், மேல்நிலைப் பள்ளிப் படிப்பை மேற்கொள்ளும் 765 மாணவர்கள் உள்பட, மொத்தம் 83,641 மாணவர்கள், இந்த ஒற்றை ஆசிரியர்கள் பள்ளிகளை சேர்ந்தவர்கள். தமிழகத்தின் 16,421 பள்ளிகள், வெறும் இரண்டு ஆசிரியர்களை மட்டுமே கொண்டவை.
உண்மையை சொல்ல வேண்டுமெனில், தமிழகத்திலுள்ள மாநில அரசு நடத்தும், மத்திய அரசு நடத்தும் மற்றும் தனியார் நடத்தும், ஆகிய வகைப்பாடுகளைச் சேர்ந்த பள்ளிகளில், மூன்றில் ஒரு பங்கிற்கும் கூடுதலான பள்ளிகளில், 3க்கும் குறைவான ஆசிரியர்களே பணியாற்றுகிறார்கள்.
பல வகுப்புகளில், பலவிதமான பாடங்களை நடத்த, 1 அல்லது 2 ஆசிரியர்களே, பல அரசுப் பள்ளிகளில் இருக்கிறார்கள் என்று, கல்வித்துறை நிபுணர்கள், பல்வேறு சமயங்களில் சுட்டிக்காட்டியே வந்துள்ளனர். இதனாலேயே, பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை, தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்.
தமிழகத்தில், நிரப்புவதற்கு அனுமதியளிக்கப்பட்ட 21,931 ஆசிரியப் பணியிடங்கள், இன்னும் காலியாகவே உள்ளன. வேலூர் மாவட்டத்தில் மட்டும், நிரப்பப்பட வேண்டிய, அனுமதியளிக்கப்பட்ட ஆசிரிய பணியிடங்கள் 3,000 உள்ளன.
சேலம், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள், அனுமதியளிக்கப்பட்ட அதிக ஆசிரியப் பணியிடங்களை நிரம்பாமல் இருக்கும் இதர மாவட்டங்கள். அதேசமயம், சென்னை போன்ற மாவட்டங்களில், அனுமதியளிக்கப்பட்ட இடங்களுக்கும் அதிகமாகவே, ஆசிரியர்கள் கிடைக்கின்றனர். மேற்கூறிய பிரச்சினைகளால், ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரத்தில் பெரும் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இதுபோன்ற விகிதாச்சார சிக்கல்கள் நிறைந்ததாக, மொத்தம் 55 பள்ளிகள் வேலூர் மாவட்டத்தில் உள்ளன. இதுதவிர, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 49ம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 36ம், கடலூர் மாவட்டத்தில் 27ம், சென்னை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் 25ம் உள்ளன.

சுகாதாரமான முறையில் சத்துணவு தயாரிக்கப்படுகிறதா?

சென்னை: பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் இறப்பு, நெய்வேலியில் குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கத்தையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, அங்கன்வாடி சத்துணவு மையங்களை, உணவு பாதுகாப்புத் துறை மூலம் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது; ஆய்வுப் பணி இன்று தொடங்குகிறது.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சமையல் அறைகள் சுத்தமாக உள்ளதா, சமையலுக்கு பயன்படும் எண்ணெய், உணவுப் பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா, சுத்தமான தண்ணீரில் சமையல் செய்யப்படுகிறதா என, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்வர்.
சுகாதாரமாக இல்லாவிட்டால், அதுகுறித்து ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்படும். உணவின் தரம் மோசமாக இருக்கும் பட்சத்தில், உணவின் மாதிரிகளை எடுத்து பரிசோதிக்கவும், திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகள், உடனடியாக தொடங்கும்.
சென்னையில், அனைத்து பகுதிகளிலும் இன்று ஆய்வு தொடங்குகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

KVS Online application 2013 for PGT TGT Teacher Posts

Kendriya Vidyalaya Sangathan (KVS) Teacher Posts Recruitment Online application Registration from 29th July 2013 ...

Kendriya Vidyalaya Sangathan was issues a Notification for filling 4043 teaching posts in PGT, TGT, Primary teachers and miscellaneous teaching posts in this year of 2013 . The Online application Registration available at the KVS Recruitment official Website link of jobapply.in/kvs . interested and Eligible Candidates will apply through online from 29th July to 28th August 2013.
Once follow the Kendriya Vidyalaya Sangathan Teacher Posts Recruitment 2013 Number of vacancies .
  • in the KVS Teacher Posts Recruitment PGT of Graduate teacher in Group B Posts had 793 vacancies in various subjects.
  • The TGT of Trained Graduate Teacher Posts in Group B had 1059 vacancies in various subjects.
  • Miscellaneous Teaching Post Group B Post – Librarians -112
  • Primary Teacher vacancies -1979
  • PRT Music vacancies – 100.
  • Total Number of KVS Recruitment Teacher posts is 4043.

Educational Qualifications for KVS Teacher Posts Recruitment 2013 .
Who are applied to the KVS Teacher Posts Recruitment for PGT, TGT, Primary teachers and miscellaneous teaching posts the Candidates will had Two years Integrated Post Graduate M.Sc / Master Degree / B.E / B.Tech / M.Sc /MCA / BCA / B.Sc / Four years Integrated Degree / Bachelor's Degree / Three Years Diploma / Five years Diploma in relevant subjects for the above posts . For essential Qualification and Desirable Qualification and for more other Details about the KVS Recruitment 2013 Download the Official Detailed Notification at http://www.kvsangathan.nic.in/.

Fee of KVS Teacher Recruitment 2013 for Online apply ..
Who are applied to the KVS Recruitment Online the Candidates are required to pay a non-refundable application fee of 750/- (Rs. Seven Hundred and Fifty only). The fee once paid will not be refunded on any account nor would this fee be held in reserve for future exam/selection. In case of payment through Bank Challan; Indian Bank will charge 30/- (Rupees Thirty only) as “service charge” in addition to the fees. in case of payment through Credit/Debit Card (Master or Visa approved); Indian Bank will charge 30/- (Rupees Thirty only) as “service charge” in addition to the fees.

KVS Teacher Posts Recruitment 2013
How to Submit the KVS Teacher posts Online application 2013 .
The Government of India , Kendriya Vidyalaya Sangathan (KVS) is an autonomous organization under the Ministry of Human Resource Development will given the KVS Teacher Posts Online application Registration at jobapply.in/kvs . the KVS Recruitment applied Candidates will fill the Online application with Required Details and take Print out of completed online application along with KVS bank challan and self-attested copies of testimonials need to send to Post Box No. 3076, Lodi Road, New Delhi-110003 on or before 12 September 2013.

Once follow the Important Dates for KVS Teacher Posts Recruitment 2013 .
  • KVS Online application Submission Registration Start from 29th July 2013
  • KVS Online Registration Service Closed on 28th August 2013 up to 11.59 p.m.
  • Last Date for Receipt of print out of completed application - 12.09.2013
Apply KVS Teacher Posts Online at http://jobapply.in/kvs/

இரட்டைப்பட்டம் வழக்கு இன்றைய (24.7.2013) நிலை

இன்று வழக்கு விசாரணைக்கு வரவில்லை. விரைவில் வருவதற்கு முயற்சி நடைபெறுகிறது



மேல்தகவல்கள் உடனுக்குடன் பதிவேற்றப்படும்.
தொடர்ந்து தொடர்பில் இருக்கவும்.

என்றும் தோழமையுடன்...........
ஆ.முத்துப்பாண்டியன்.
TNPTF  மாவட்டத்தலைவர், 
சிவகங்கை.
E-Mail: tnptfmuthupandian@gmail.com

7/23/2013

அஞ்சல் வழி எம்.பில்., பிஎச்.டி. பட்டம் வேலைவாய்ப்புக்கு செல்லாது என்ற அரசாணை சரியே: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தொலை நிலைக் கல்வி மற்றும் திறந்த வெளிக் கல்வி முறைகளில் பெற்ற எம்.பில்., பிஎச்.டி. பட்டங்கள் வேலைவாய்ப்பு பெற தகுதியில்லாதவை என்ற தமிழக அரசின் அரசாணை சரியே என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பாக வேலூர் திருநகரைச் சேர்ந்த பேராசிரியர் ஐ.இளங்கோவன் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.
3.4.2009 அன்று தமிழக அரசின் உயர் கல்வித் துறை சார்பில் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் இனி எம்.பில்., மற்றும் பிஎச்.டி. படிப்புகளை அஞ்சல் வழிக் கல்வி முறையில் நடத்தக் கூடாது. அவ்வாறு தொலை நிலைக் கல்வி மற்றும் திறந்த வெளிக் கல்வி முறைகளில் பெறப்பட்ட எம்.பில்., மற்றும் பிஎச்.டி. பட்டங்கள் இனி அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் பல்கலைக்கழக, கல்லூரி விரிவுரையாளர் பணி நியமனங்களுக்கு தகுதியுடையவை அல்ல என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1093 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.  2009-ஆம் ஆண்டின் அரசாணைப்படி அஞ்சல் வழிக் கல்வி முறையில் பெற்ற எம்.பில். மற்றும் பிஎச்.டி. பட்டங்கள் இந்தப் பணி நியமனத்துக்கு செல்லாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அரசாணை காரணமாக ஏராளமானோரின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அந்த அரசாணையை செல்லாது என்று கூறி நீதிமன்றம் அதனை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் ஆர்.பானுமதி, டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் தமிழக அரசின் அரசாணை செல்லும் என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தனர்.
கல்வித் துறை நிபுணர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில், உயர் கல்வியின் தரத்தை பராமரிக்கும் நோக்கில் அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட இயலாது. யு.ஜி.சி. உள்ளிட்ட அமைப்புகளின் விதிமுறைகளுக்கு முரணாக அரசாணையில் எதுவும் இல்லை. ஆகவே, அரசாணையை ரத்து செய்ய இயலாது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
Dinamani

முதுகலை ஆசிரியர் தேர்வில் குளறுபடி: தேர்வர்களுக்கு பாதிப்பின்றி நடவடிக்கை

சென்னை: "முதுகலை ஆசிரியர் தேர்வில், தமிழ் மற்றும் வணிகவியல் பாட கேள்வித்தாளில் ஏற்பட்ட பிரச்னையால், தேர்வர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். கீ-ஆன்சர் வெளியிடுவதற்கு முன், கேள்வித்தாளில் ஏற்பட்ட பிழைகள் குறித்து, பாட வல்லுனர்களின் ஆலோசனையை பெற்று, உரிய முடிவு எடுக்கப்படும்" என டி.ஆர்.பி., வட்டாரங்கள், நேற்று தெரிவித்தன.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, நேற்று முன்தினம், முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு நடந்தது. 1.59 லட்சம் பேர், தேர்வை எழுதினர். இதில், தமிழ்ப் பாட தேர்வர்களுக்கு தரப்பட்ட கேள்வித்தாளில், பல்வேறு கேள்விகளில், எழுத்துப் பிழைகள் இருந்தன. மேலும், வணிகவியல் பாட கேள்வித்தாளில், ஆங்கிலத்தில் இருந்து, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கேள்வியில், பிழை ஏற்பட்டது. இந்த இரு பிரச்னைகள் குறித்தும், டி.ஆர்.பி.,யின் கவனத்திற்கு, உடனடியாக தெரிய வந்தது.
இந்த விவகாரம் குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள், நேற்று கூறியதாவது: தமிழ்ப் பாடத்திற்கான கேள்வித்தாளில், எழுத்துப்பிழைகள் அதிகம் ஏற்பட்டிருப்பது உண்மை தான். அச்சக நிறுவனம், கேள்வித்தாளில், பிழை இருக்கிறதா என்பதை சரிபார்த்து, செயல்பட்டிருக்க வேண்டும்.
அச்சகங்களில், பாட வாரியாக, நிபுணர்கள் இருக்கின்றனர். அவர்கள், கேள்வியை படித்துப் பார்த்து, ஏதாவது பிழைகள் இருக்கிறதா என்று சரிபார்ப்பர். தமிழ்ப் பாடத்தில், சரிபார்ப்பு நடந்ததா என, தெரியவில்லை. இது குறித்து, விசாரிக்கப்படும். வணிகவியலில், ஒரே ஒரு கேள்வி, தமிழில், சரியாக மொழிபெயர்க்கப்படவில்லை.
இந்த பிரச்னைகள் குறித்து, கீ-ஆன்சர் வெளியிடுவதற்கு முன், பாட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, தேர்வர்கள் பாதிக்காத வகையில், உரிய முடிவு எடுக்கப்படும்.
ஒரு வாரத்திற்குள் கீ-ஆன்சர் வெளியிடப்படும். அதன்பின், விடையில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால், சம்பந்தப்பட்ட தேர்வர்கள், டி.ஆர்.பி.,யின் கவனத்திற்கு கொண்டு வரலாம். அதுகுறித்தும், பாட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, முடிவை எடுப்போம். இதன்பிறகே, விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி நடக்கும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
மாவட்டங்களில் இருந்து, சீலிடப்பட்ட விடைத்தாள் கட்டுகள், நேற்று, சென்னைக்கு, போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன. விரைவில், விடைத்தாள்களை, ஸ்கேன் செய்து, 20 நாட்களுக்குள், தேர்வு முடிவை வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.

பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம்: ஐ.ஐ.டி., தரத்திற்கு மாற்றப்படுமா?

சென்னை: ஐ.ஐ.டி., பாடத் திட்ட தரத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. தயார் செய்யப்பட்டுள்ள வரைவு பாடத் திட்டம், வரும், 24ம் தேதி நடக்கும் அதிகாரிகள் கூட்டத்தில், இறுதி செய்யப்படுகிறது.
தற்போதுள்ள பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, ஆறு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. எனவே, தற்போதைய காலத்திற்கு ஏற்றார் போல், புதிய பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டது.
இதற்காக, சென்னை, ஐ.ஐ.டி.,யின் ஓய்வு பெற்ற பேராசிரியர் நாகபூஷணம் தலைமையில், பாட வாரியாக, நிபுணர் குழு அமைக்கப்பட்டு, வரைவு பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டது. ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை இயக்குனரகத்தின் மேற்பார்வையில், பாடத் திட்டம் தயாரிக்கும் பணி, நடந்து வருகிறது.
பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய, இரு வகுப்புகளுக்கும், தலா, 24 பாடத் தலைப்புகளில், வரைவு பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, சமீபத்தில், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
வரைவு பாடத் திட்டம் குறித்து, 500க்கும் மேற்பட்டோர், பல்வேறு கருத்துகளை தெரிவித்திருப்பதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த கருத்துகள் ஆய்வு செய்யப்பட்டு, தரமான கருத்துகள், பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும், துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 மாணவர்கள், ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வை எழுதி, வெற்றி பெறும் வகையில், தரமான பாடத் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளன என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "ஐ.ஐ.டி., கணித பாடத் திட்டங்களை பின்பற்றி, இவர்களின் பாடத்தை உருவாக்கி உள்ளோம். பிளஸ் 2 மாணவர்கள், புதிய கணிதத்தை படிக்கும் போது, ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான தகுதியை பெற முடியும்" என, தெரிவித்தார்.
வரைவு பாடத் திட்டம், தற்போது இறுதி செய்யப்பட்டு உள்ளது. வரும், 24ம் தேதி காலை, 10:00 மணிக்கு, பாடநூல் கழக அலுவலகத்தில் நடக்கும், அரசு உயர்மட்ட கூட்டத்தில், வரைவு பாடத் திட்டம் இறுதி செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது. அரசின் ஒப்புதல், மிக விரைவில் கிடைத்துவிடும் என, கல்வித் துறை எதிர்பார்க்கிறது.
அரசின் அனுமதி கிடைத்ததும், பாடப் புத்தகம் எழுதும் பணி துவங்கும். புத்தகம் எழுதுவதற்கு, ஒரு ஆண்டு வரை ஆகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வரும் கல்வி ஆண்டில் (2014-15), பிளஸ் 1 வகுப்பிற்கு அறிமுகப்படுத்த இருந்த, புதிய பாடத் திட்டம், அதற்கு அடுத்த கல்வி ஆண்டில் (2015-16) அமல்படுத்தப்படுகிறது. இதனால், பிளஸ் 2 வகுப்பிற்கு, 2016-17ம் கல்வி ஆண்டில் தான், புதிய பாடத் திட்டம் அமலுக்கு வரும்.

"பார்' ஆக மாறிய அரசு பள்ளி: குடிப்பவர்களுக்கு கொண்டாட்டம்: படிப்பவர்களுக்கு திண்டாட்டம்

மேட்டுப்பாளையம்:காரமடை தோலம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, "குடி'மகன்களின் "பார்' ஆக மாறியுள்ளது. பள்ளியின் பீரோவை உடைத்து, உள்ளே இருந்த பொருட்கள், சேதப்படுத்தப்பட்டுள்ளன.

காரமடையை அடுத்த தோலம்பாளையத்தில், ஒரே வளாகத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியும், அரசு உயர்நிலைப்பள்ளியும் உள்ளன. துவக்கப்பள்ளியில் 85 குழந்தைகளும், அரசு உயர்நிலைப்பள்ளியில் 160 மாணவர்களும் படிக்கின்றனர். பள்ளிக்கு பெயரளவில் சுற்றுச்சுவர் உள்ளது. பள்ளிக்கு விடுமுறை என்றால், குடிமகன்களுக்கு கொண்டாட்டம்; ஆனால், ஆசிரியர்களின் பாடு திண்டாட்டம். நேற்று முன் தினம் இரவு, குடிமகன்கள், இரு வகுப்பு அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று மது குடித்துள்ளனர். பாட்டில்களை அப்படியே போட்டு விட்டு, பீரோவை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். எந்தப்பொருளும் இல்லாததால், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வகுப்பு அறை பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளனர். முடியாததால், ஜன்னல் வழியாக, பெஞ்ச் மேல் வைத்திருந்த 15 வகையான விளையாட்டு பொருட்களை திருடிச் சென்று விட்டனர்.

பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:மாலை பள்ளி நேரம் முடிந்ததும், சில சமூக விரோதிகள் சுவர் ஏறிக்குதித்து, மதுக்குடித்தும், சீட்டு விளையாடியும் வருகின்றனர். கழிப்பிடத்தை யாரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு அசுத்தம் செய்து வருகின்றனர். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், திறந்தவெளி "பார்' ஆக பயன்படுத்தி வருகின்றனர். சிலர் வாந்தி எடுத்து அசுத்தம் செய்கின்றனர். இன்று (நேற்று) பள்ளிக்கு வந்து பார்த்த போது, பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த "ஏ.பி.எல்., அட்டைகள் அனைத்தும் சிதறிகிடந்தன. ஒரு வகுப்பு அறையில் மதுபாட்டில்கள் கிடந்தன. இதே நிலை தொடர்ந்தால், பள்ளியில் உள்ள கம்யூட்டர்களுக்கும், இதர பொருட்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும்.இவ்வாறு ஆசிரியர்கள் தெரிவித்தனர். துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை அனுசுயா, காரமடை போலீசில் புகார் செய்துள்ளார். 


இரட்டைப்பட்டம் வழக்கு இன்றைய நிலை?

இன்று (23.7.2013) சென்னை உயர்நீதி மன்றத்தில் மாண்புமிகு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு பெஞ்சில் வரலாம் என எதிர்பார்க்கபட்ட இவ்வழக்கு பட்டியலில் இடம் பெறாதது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குரைஞர் அலுவலகத்தில் விசாரித்தபொழுது இன்னும் ஓரிரு நாட்களில் கண்டிப்பாக விசாரணைக்கு வரும் என்று கூறியுள்ளார்கள். இது குறித்து திரு.ஆரோக்கியராஜிடம் கேட்டபொழுது வழக்கை மிக விரைவில் முடிக்கவே நாங்கள் முயற்சித்து வருகிறோம். ஆனால் சில விஷமிகள் தவறான கருத்தை ஆசிரியர்கள் மத்தியில் பரப்பி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இம்மாத இறுதிக்குள் நல்ல தீர்வு ஏற்படும் என நம்புகிறோம்.

மேல்தகவல்கள் உடனுக்குடன் பதிவேற்றப்படும்.
தொடர்ந்து தொடர்பில் இருக்கவும்.

என்றும் தோழமையுடன்...........
ஆ.முத்துப்பாண்டியன்.
TNPTF  மாவட்டத்தலைவர், 
சிவகங்கை.
E-Mail: tnptfmuthupandian@gmail.com

7/22/2013

அங்கீகாரம் இல்லாத 8 பள்ளிகள் மூடல்

வேலூர்: அங்கீகாரம் இல்லாத, 8 தொடக்க பள்ளிகளுக்கு, வேலூரில், கல்வி அதிகாரிகள், "சீல்&' வைத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில், அரசு அங்கீகாரம் இல்லாமல், பள்ளிகள் செயல்படுவதாக, கல்வித்துறைக்கு புகார்கள் வந்தன. அரசு அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்ட, எட்டு பள்ளிகளுக்கு, தொடக்கக் கல்வி அதிகாரிகள், சீல் வைத்தனர்.
இப்பள்ளிகளில் படித்த, 1,200 மாணவ, மாணவியர், வேறு பள்ளிகளில் சேர்க்க, ஏற்பாடு செய்துள்ளனர்.

புதிய பென்ஷன் திட்டத்தை இரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை வேண்டி தொடரப்பட்ட வழக்கில் 02.08.2013-ல் விசாரணை

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த திரு.பி .பிரெடெரிக் எங்கெல்ஸ் (TNPTF - மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்)அவர்கள் புதிய பென்ஷன் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் (வழக்கு எண் -3802/2012) சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை தலைமை நீதிபதி அவர்கள் ஆகஸ்ட் 2-ல் நிதித்துறைச் செயலாளர் , தொடக்கக்கல்வி இயக்குநர் , திண்டுக்கல் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் உள்ளிட்ட 8 நபரை 02.08.2013 அன்று நேரில் ஆஜராக உத்தரவு. 
 
 

முதுகலை ஆசிரியர் தேர்வு வினாத்தாளில் குளறுபடி

சென்னை: முதுகலை ஆசிரியர் பணி இடங்களுக்கான, போட்டித் தேர்வு, தமிழ் வினாத்தாளில், 44 கேள்விகளில் எழுத்துப் பிழைகள் இருந்ததால், தேர்வர்கள் குழப்பமடைந்தனர்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 2,881 முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டது. இத்தேர்வுக்கான அறிவிப்பை, டி.ஆர்.பி., கடந்த மே, 9ம் தேதி வெளியிட்டது. இத்தேர்வுக்கு, 1.67 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
மாநிலம் முழுவதும், 421 மையங்களில், முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு, நேற்று காலை, 10:00 மணிக்கு துவங்கியது. காலை, 8:00 மணி முதலே, தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவோர் குவிந்தனர்.
தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல் உள்ளிட்ட, 17 பாடங்களுக்கு தேர்வு நடந்தது. 150 மதிப்பெண்களுக்கு, அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 1.59 லட்சம் பேர் தேர்வு எழுதினர்; 8,000 பேர் வரவில்லை.
சென்னை மாவட்டத்தில், 55 மையங்களில் தேர்வு நடந்தது. மொத்தம் 13,927 பேர் போட்டித் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இதில், 12,908 பேர் தேர்வு எழுதினர்; 1,019 பேர் "ஆப்சென்ட்" ஆயினர்.
திருச்சியில் உள்ள புனித சிலுவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் தெப்பக்குளம், பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையங்களை, பள்ளி கல்வித் துறை அமைச்சர், வைகை செல்வன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
சென்னை அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, புரசைவாக்கம், சி.எஸ்.இ.பெய்ன் மேல்நிலைப் பள்ளி, ஈவாட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அண்ணா ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையங்களை, பள்ளி கல்வித் துறை முதன்மை செயலர், சபீதா பார்வையிட்டார்.
தமிழ்ப் பாடத்தில், மொத்தம் உள்ள, 150 கேள்விகளில், 44 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன் அச்சடிக்கப்பட்டு இருந்தன. அதில், ஆங்கிலத்துக்கு என்பது "ஆதுகிலத்துக்கு" என்றும், வங்காள என்பது "வதுகாள" என்றும், வழங்கியவர் என்பது "வழதுகியவர்" என்றும் இருந்தது.
மேலும், பெருங்கடுங்கோ என்பது "பெருதுகடுதுகோ" என்றும், புகழ்தல் என்பது "புகாதல்" என்றும், காங்கிரஸ் என்பது "காதுகிரஸ்" என்றும், ஐங்குறுநூற்றின் என்பது "ஐதுகுறுநூற்றின்" என்றும் அச்சடிக்கப்பட்டிருந்தது.
அச்சுப் பிழையுடன் கூடிய வினாக்களை, புரிந்து கொள்ள முடியாததால், தேர்வு எழுத முடியாமல் தேர்வர்கள் திணறினர். இதுகுறித்து, மைய பொறுப்பாளரிடமும் புகார் தெரிவித்தனர். "வினாத்தாள் குளறுபடிக்கு தங்களால் ஒன்றும் செய்ய முடியாது" என்று அவர்கள் பதிலளித்தனர்.
இதுபோல, வணிகவியல் பாட வினாத்தாளிலும், 47 கேள்விகள் தவறாக அச்சடிக்கப்பட்டுள்ளதாக, தேர்வு எழுதியோர் தெரிவித்தனர்.
இதுகுறித்து, சி.ஐ.டி., நகர் மையத்தில் தேர்வெழுதிய, செந்தில் ராஜா கூறியதாவது: தமிழ்ப் பாட வினாத்தாளை பார்த்தவுடன், எனக்கு பயம் வந்து விட்டது. ஒரு மணி நேரம் கழித்தே, தேர்வு எழுதத் துவங்கினேன்.
வினாத்தாள் தயாரிப்போரின், கவனக் குறை வாலேயே எழுத்துப் பிழையுடன் அச்சாகி உள்ளது. ஆசிரியர் தேர்வாணையத்தின் அலட்சியப் போக்கு அதிர்ச்சி அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
தேர்வுக்கான தேர்வு முடிவுகள், ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என, 55 மையங்களில், முதுகலை ஆசிரியர் தேர்வு நடந்தது. டி.ஆர்.பி., நடத்தும் தேர்வில், தேர்வு மையத்தின், முழு தகவலும் தேர்வர்களுக்கு அனுப்புவதில்லை. இதனால், பலர் தேர்வு மைய விவரங்களை கண்டறிய முடியாமல் பரிதவித்தனர்.
டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளில், தேர்வர்களுக்கு அனுப்பும் மைய முகவரியில், தெரு பெயருடன் தெளிவான முகவரி அனுப்பப்படும். ஆனால், டி.ஆர்.பி., எந்த ஒரு தேர்விலும், இம்முறையை பின்பற்றுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
 


திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை: மாணவ, மாணவியருக்கு அழைப்பு

சேலம்: மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை பெற, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம், என்று தமிழக அரசின் உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழக கல்லூரிக்கல்வி இயக்ககம் விடுத்துள்ள அறிக்கை: "மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால், திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தமிழகத்தில், 2013, மார்ச்சில் வெளியான பிளஸ்2 மேல்நிலைப்பள்ளித் தேர்வு முடிவுகளில், 1200க்கு 955க்கு மேல், 80 சதவீத மதிப்பெண் பெற்ற கல்வி உதவித் தொகை பெற விரும்பும் மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பெற்றோரின் ஆண்டு வருமானம், ஆறு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கு தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகள் வேறு எந்தவித கல்வி உதவித்தொகையையும் பெற்றிருக்க கூடாது. இத்திட்டத்தில், மத்திய அரசால் தமிழகத்துக்கு, 4,883 பேருக்கு கல்வித் தொகை வழங்கப்படுகிறது.
இதில் 50 சதவீதம் பெண்களுக்காகவும், மாநில அரசின் இன சுழற்சி முறை மற்றும் ஒவ்வொரு இனத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கு, மூன்று சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும்.
விண்ணப்பிப்பவர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கு துவங்கி, கணக்கு எண், மாணவ, மாணவியரின் இமெயில் முகவரி, ஆதார் அடையாள அட்டை எண் மற்றும் மொபைல் எண் ஆகிய விபரங்களை வழங்க வேண்டும்.
மாணவ, மாணவியர் ஊனமுற்றவர்களாக இருப்பின் அதற்குரிய மருத்துவ சான்றிதழ் பெற்று, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கல்லூரி முதல்வர்கள் மூலம், ஆகஸ்ட் 30ம் தேதிக்குள், "இயக்குனர், கல்லூரிக்கல்வி இயக்ககம், ஈ.வெ.கி.சம்பத் மாளிகை, 6வது தளம், கல்லூரி சாலை, சென்னை-600006." என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

பள்ளி மாற்றம் அடைந்த குழந்தைகளின் முன்னேற்ற அறிக்கையினை மாற்றுச் சான்றிதழுடன் இணைத்து வழங்க உத்தரவு.

அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டைவிட 90 ஆயிரம் அதிகரிப்பு


அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 90
ஆயிரம் அதிகரித்துள்ளதாக
தொடக்கக் கல்வித்
துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடக்கக் கல்வித் துறையின் கீழ்
உள்ள சுமார் 35 ஆயிரம் பள்ளிகளில்
இந்த ஆண்டு (2013-14) 4
லட்சத்து 8 ஆயிரத்து 871
மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கடந்த
ஆண்டு மொத்தமாக 3 லட்சத்து 18
ஆயிரத்து 995 மாணவர்கள் அரசுப்
பள்ளிகளில் முதல் வகுப்பில்
சேர்ந்தனர்.
ஆங்கில கல்வி மோகம், ஆசிரியர்
காலிப்பணியிடங்கள், அரசுப்
பள்ளிகளில் மோசமான வசதி போன்ற
காரணங்களால் அரசுப் பள்ளிகளில்
மாணவர் சேர்க்கை விகிதம்
தொடர்ந்து சரிவில் இருந்து வந்தது.
2008-09-ஆம் ஆண்டில் 4
லட்சத்து 28 ஆயிரமாக இருந்த
மாணவர் சேர்க்கை 2012-13-ஆம்
ஆண்டு 3 லட்சத்து 18 ஆயிரமாகக்
குறைந்தது. நர்சரி மற்றும்
பிரைமரி பள்ளிகளில் மாணவர்
சேர்க்கை 43 ஆயிரம் அதிகரித்து 2
லட்சத்து 7 ஆயிரமாக இருந்தது.
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்
நியமனம், அடிப்படை வசதிகள்
மேம்பாடு, ஆங்கில வழி வகுப்புகள்
தொடக்கம், இலவசத் திட்டங்கள்
போன்ற பல்வேறு காரணங்களால்
இந்த ஆண்டு மாணவர்
சேர்க்கை மீண்டும் அதிகரிக்கத்
தொடங்கியுள்ளது. ஆங்கில
வழி வகுப்புகள்
காரணமாகவே மாணவர்
சேர்க்கை இந்த ஆண்டு கணிசமாக
உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்
தெரிவித்தனர்.
இந்த ஆண்டு 3 ஆயிரத்து 500
தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில
வழி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
ஒவ்வொரு பள்ளியிலும் சராசரியாக
20 மாணவர்கள் வரை இந்த
வகுப்புகளில் சேர்ந்துள்ளனர்.
மொத்தமாக 80 ஆயிரம் மாணவர்கள்
அரசுப் பள்ளிகளில் ஆங்கில
வழி வகுப்புகளில் சேர்ந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் மிக அதிகம்:
மாநிலத்திலேயே அதிக அளவாக
வேலூர் மாவட்டத்தில் 24
ஆயிரத்து 486 மாணவர்கள் இந்த
ஆண்டு அரசுப் பள்ளிகளில்
சேர்ந்துள்ளனர். இது கடந்த
ஆண்டுடன் ஒப்பிடும்போது 6
ஆயிரம் அதிகம் ஆகும்.
கோவை, கடலூர், காஞ்சிபுரம்,
மதுரை, அரியலூர், சேலம்,
திருச்சி ஆகிய மாவட்டங்களில்
கடந்த ஆண்டுடன்
ஒப்பிடும்போது இந்த ஆண்டு 5
ஆயிரத்துக்கும் அதிகமான
மாணவர்கள் அரசுப் பள்ளிகளில்
ஒன்றாம் வகுப்பில் சேர்ந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் மிக அதிக
அளவாக 8 ஆயிரம் மாணவர்கள்
இந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பில்
சேர்ந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் அரசுப்
பள்ளிகளில் சேர்ந்த மாணவரின்
எண்ணிக்கை இரண்டு மடங்காக
அதிகரித்தாலும் எண்ணிக்கை மிகக்
குறைவாக உள்ளது. இந்த
மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1,201
மாணவர்கள் மட்டுமே அரசுப்
பள்ளிகளில் சேர்ந்தனர். இந்த
ஆண்டு இந்த எண்ணிக்கை 2,896
ஆக அதிகரித்துள்ளது. எனினும்,
இந்த எண்ணிக்கைதான்
மாநிலத்திலேயே மிகக் குறைவான
எண்ணிக்கையாகும்.
சென்னை மாவட்டத்தில் தொடக்கக்
கல்வித் துறையின் கீழ் உள்ள
பள்ளிகளிலும் இந்த
ஆண்டு மாணவர் சேர்க்கை 5
சதவீதம் அதிகரித்துள்ளது.

அறிவியல் எக்ஸ்பிரஸ் தமிழகம் வருகை

இரட்டைப்பட்டம் - நீதிமன்ற விசாரணை என்ன ஆச்சு?

பொதுவாக சென்னை உயர்நீதி மன்றத்தில் பல நீதியரசர்கள் பணியிடம் காலியாக உள்ளது. தலைமை நீதிபதி மதுரை பலகைக்கு பொறுப்பாக சென்ற வாரம் முழுவதும் மதுரையில் இருந்துவிட்டார்கள். எனவே இந்த வாரம் கட்டாயம் வரும் என நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன். இரகசியம் காக்கப்படும் இந்த விசாரணை நாளை வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த வழக்கை தலமையேற்று நடத்தி வரும் திரு.ஆரோக்கியராஜ், திரு.கலியமூர்த்தி, திரு.கருணாலயபாண்டியன் ஆகியோர் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். வழக்குரைஞர் திரு.ஜி.சங்கரன் மற்றும் மூத்த வழக்குரைஞர்கள் இந்த வழக்கில் வாதாட இருக்கிறார்கள். விறுவிறுப்பாகச் செல்ல இருக்கும் இந்த வழக்கு விசாரணையை நோக்கி பல்லாயிரக்கணக்காண பதவி உயர்வு ஆசிரியர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்கு குறித்து முகநூல் மற்றும் அலைபேசியில் விசாரிக்கும் தோழர்கள் இந்த பதிலை மற்றவர்களுக்கு பகிருமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன். வழக்கு விசாரணை பற்றி மேல்தகவல்கள் உடனுக்குடன் பதிவேற்றப்படும்.
தொடர்ந்து தொடர்பில் இருக்கவும்.

என்றும் தோழமையுடன்...........
ஆ.முத்துப்பாண்டியன்.
TNPTF  மாவட்டத்தலைவர், 
சிவகங்கை.
E-Mail: tnptfmuthupandian@gmail.com

   

CPS - விதிமுறைகள்






முதலமைச்சர் அவர்களின் "சிறந்த செயல்பாடுகளுக்கான விருது-2013"- தகுதியுடையோர் விண்ணப்பங்கள் அனுப்பிடுதல்

வங்கிக் கணக்கில் உதவித்தொகை: அரசு கட்டாய உத்தரவு

     "கல்வி உதவித் தொகையை, மாணவர்களுக்கே நேரடியாகச் செலுத்த, "கோர் பாங்கிங்" உள்ள வங்கிகளில் மட்டுமே, கணக்குத் துவக்க வேண்டும்" என அரசு கட்டாய உத்தரவிட்டு உள்ளது.
          அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட, ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
          கடந்த காலங்கள் வரை, முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு, அரசு மாணவர்களின் பெயர்ப் பட்டியல் படி, கல்வி உதவித்தொகைக்கான, காசோலையை அரசு அனுப்பிவிடும். இவர்கள், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பிரித்து வழங்கி, மாணவர்களிடத்தில் வழங்குவர்.
             மாணவர்களுக்கு வழங்கும் கல்வி உதவித் தொகையில் ஏற்படும் முறைகேடுகளைக் களைய, நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கே, அரசு கல்வி உதவித் தொகையை ஆண்டுதோறும் செலுத்த முடிவு செய்தது.
              அந்த வகையில், "கோர் பாங்கிங்" வசதியுள்ள வங்கிகளில் மட்டுமே, மாணவர்கள் தமது வங்கிக் கணக்குகளைத் துவக்க, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடுமாறு, அரசு கலெக்டர்களுக்கு உத்தரவிட்டு உள்ளது.
             ஆதிதிராவிடர், பிற்பட்டோர் நலத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "2013-14ம் கல்வி ஆண்டு முதல், மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கே, கல்வி உதவித் தொகை செலுத்த வேண்டும் என, அரசு கட்டாய உத்தரவிட்டு உள்ளது.
             இதற்காகவே, "கோர் பாங்கிங்" வசதியுள்ள வங்கிகளில் மட்டுமே, கணக்குத் துவக்க, மாணவர்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம்" என்றார்.

மாணவ, மாணவியருக்கு சுதந்திர தினத்தன்று சீருடை கிடைக்கும்

 சுதந்திர தினத்தன்று, அரசு பள்ளி மற்றும் விடுதி மாணவ, மாணவியர், புத்தாடை உடுப்பதற்கு வசதியாக, அவர்களுக்கு இரண்டாவது, "செட்" சீருடை, அடுத்த வாரம் வழங்கப்பட உள்ளது.
             தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில், மதியம் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு, அரசு சார்பில், இலவச சீருடை வழங்கப்படுகிறது. அதேபோல், அரசு விடுதிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கும், இலவச சீருடை வழங்கப்படுகிறது.
           இவர்கள் அனைவருக்கும், நான்கு, "செட்" சீருடை வழங்க, தமிழக முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, 47 லட்சம் மாணவ, மாணவியருக்கு, நடப்பாண்டு, ஒரு, "செட்" சீருடை வழங்கப்பட்டு உள்ளது.
             இவர்களில், 13 லட்சம் மாணவியருக்கு பாவாடை, 10 லட்சம் மாணவியருக்கு சுடிதார், 25 லட்சம் மாணவர்களுக்கு டவுசர் மற்றும் பேன்ட் வழங்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு சீருடை தைப்பதற்கு, 1.45 கோடி மீட்டர் துணி பயன்படுத்தப்பட்டு உள்ளது.
             முதல்வர் அறிவித்தபடி, நான்கு, "செட்" சீருடைகளை, நான்கு தவணைகளாக வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர். அதன்படி, பள்ளி துவங்கியதும், முதல், "செட்" சீருடை வழங்கப்பட்டது. அடுத்து சுதந்திர தினத்தன்று, மாணவ, மாணவியர் புத்தாடை உடுப்பதற்கு வசதியாக, இரண்டாவது, "செட்" சீருடை, அடுத்த வாரம் வழங்கப்பட உள்ளது.
              மூன்றாவது, "செட்" சீருடை தீபாவளிக்கும், நான்காவது, "செட்" சீருடை, குடியரசு தின விழாவிற்கும் வழங்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை, அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர்.
                  இதுகுறித்து, சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இம்முறை தரமான சீருடை வழங்கப்பட்டு உள்ளது. ஒரு, "செட்" சீருடைக்கு, 300 ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இரண்டாவது, "செட்" சீருடை வினியோகம், அடுத்த வாரம் துவங்க உள்ளது.
               அனைத்து மாணவ, மாணவியருக்கும், உடனடியாக சீருடை கிடைக்க ஏற்பாடு செய்யும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

கம்யூட்டரை பயன்படுத்தி பாடம் நடத்த வேண்டும்

பள்ளிகளில் சத்துணவை தலைமை ஆசிரியர் சாப்பிட்ட 30 நிமிடம் கழித்த பிறகுதான் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பீகார் மற்றும் நெய்வேலி சம்பவத்தை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகளில் சத்துணவை பள்ளி தலைமை ஆசிரியர்கள், சத்துணவு அமைப் பாளர், சமையலர் சாப்பிட்டு அரை மணி நேரத்துக்கு பிறகு மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்கள், கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

பள்ளிகளில் சத்துணவு விநியோகிக்கும் முறையை தீவிரமாக கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அவசரமாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதைத் தொடர் ந்து மாவட்ட கலெக்டர்கள் கல்வித் துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.

அதில், பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் சத்துணவு தயாரிக்கும் பணியை தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும். மேலும், சத்துணவை ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர் ஆகியோர் சாப்பிட வேண்டும். இவர்கள் சாப்பிட்டு அரை மணி நேரத்துக்கு பிறகு தான் மாணவிகளுக்கு வழங்க வேண்டும்.

இந்த விதிமுறையை கடைப்பிடிக்காத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சுற்றிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவை அமைப்பா ளர் சாப்பிட்டு பார்த்த பிறகுதான் வழங்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அந்த விதிமுறையை யாரும் கடைப்பிடிக்கவில்லை. இப்போது நெய்வேலி சம்பவத்துக்குப் பிறகு, இந்த உத்தரவை பள்ளி தலைமை ஆசிரியரும் சோதித்துப் பார்க்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.


7/21/2013

நடுநிலைப் பள்ளிகளில் வாரத்தில் 5 பாடவேளை கணினியில் பாடம் நடத்த உத்தரவு

தமிழகத்தில் 8,026 நடுநிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் மூலம் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாரத்திற்கு 5 பாடவேளைகளில் கட்டாயமாக கம்ப்யூட்டர் உதவியுடன் வகுப்புகளை நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தொடக்க கல்வித்துறைக்கு உட்பட்ட 8 ஆயிரத்து 26 நடுநிலைப் பள்ளிகளுக்கு நான்கு கட்டங்களாக லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் கல்வி இயக்ககத்தில் இருந்தும் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. 

கற்பித்தல் பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களை பயன்படுத்தும் வகையில் நடுநிலைப்பள்ளிகளில் அந்தந்த பாட ஆசிரியர்கள் பாடங்களை ஒட்டிய விளக்கப் படங்கள், வீடியோக்கள் மூலம் பாடம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வாரத்திற்கு குறைந்தது 5 பாட வேளைகளாவது லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரை பயன்படுத்தி ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க  தொடக்க கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
 

அரசாணை வெளியிடப்பட்ட நாள் (18.01.2013) முதலே பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phill அல்லது M.Ed அல்லது P.Hdக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அளிக்கப்படும் - பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி உத்தரவு

7/19/2013

குழந்தைகள் பலி எதிரொலி: எச்.எம் சாப்பிட்ட பிறகே இனி குழந்தைகளுக்கு மதிய உணவு...: பீகாரில் உத்தரவு

பாட்னா: பீகாரில் அடுத்தடுத்து மதிய உண்வு உண்ட பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப் பட்டதால், இனி மதிய உணவை தலைமை ஆசிரியர் ருசி பார்த்த பின்னரே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என பிகார் அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று முந்தினம் மதிய உணவு உண்டு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ள நிலையில், நேற்று மீண்டும் ஒரு பள்ளியில் கெட்டுப் போன நீரை அருந்தியதால், மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதில், பாதிக்கப்பட்ட குழந்தைகள் 13 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது. தொடரும் இது போன்ற சம்பவங்களால் பீகார் அரசு பள்ளிகளுக்கு ஒரு புதிய உத்தரவினை அனுப்பியுள்ளது. அதில், மதிய உணவு உட்பட குழந்தைகளுக்கு அளிக்கப்படும் அனைத்து உணவுகளையும் தலைமை ஆசிரியர் உண்டு பரிசோதித்த பின்னரே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையில் 400 பேர் கருணை அடிப்படையில் நியமனம்

பள்ளிக் கல்வித் துறையில் 400 பேர் விரைவில் கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கருணை அடிப்படையிலான பணி நியமனம் கோரி 2002-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை விண்ணப்பம் செய்தவர்கள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகங்களில் தங்களுடைய பெயர்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம்எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.பள்ளிக் கல்வித் துறையில் ஏற்கெனவே 1997-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரை கருணை அடிப்படையிலான நியமனத்துக்குத் தகுதி வாய்ந்த 397 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி துறையில் விரைவில் 1,800 பேர் பணி நியமனம்.

புதிய பாடதிட்டத்தில் கற்பித்தல் என்பது இனி கிடையாது!

ஆசிரியர்கள் பணி என்பது முன்பு கற்பிப்பவர்தான். ஆனால் தற்போது வந்துள்ள புதிய கல்விமுறைப்படி மாணவர்களுக்கு ஆசிரியர் கல்வி வழிகாட்டிதான் என்று தூத்துக்குடியில் நடந்த பயிற்சியில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் மூலமாக ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு இதுபோன்ற பயிற்சி தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் அளிக்கப்படுகிறது. புதிய பாட திட்டமான தொடர் மதிப்பீட்டு முறை மூலமாக மாணவர்களுக்கு எந்த வகையில் பாடம் நடத்த வேண்டும். மாணவர்களின் திறனை வளர்த்தல் போன்றவற்றிற்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்கிற விதத்தில் தற்போது பாடமுறைகள் வந்துள்ளது. அதற்கு ஏற்ப, ஆசிரியர்கள் தங்களின் திறனை வளர்த்து அதன்மூலம் மாணவர்களின் திறனை வளர்க்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற பயிற்சி நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

பயிற்சியின் போது ஆசிரியர்களுக்கு கருத்தாளர்கள் தெரிவித்த விபரம் வருமாறு: தமிழக அரசு கல்வித்துறையில் புதிய முயற்சியாகவும், மேலை நாடுகளில் பின்பற்றக்கூடிய முறையாகவும் கருதப்படும் தொடர் மதிப்பீடு முறையை முழுமையாக ஆய்வு செய்தும், ஆலோசித்த பிறகும் கடந்த ஆண்டு இந்த முறை தமிழகத்தில் கொண்டு வரப்பெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நூறு சதவீதம் ஆசிரியர்கள் அரசின் புதிய முறைக்கு வரவேற்பு தெரிவித்து பயிற்சியை பெற்று மாணவர்களுக்கு அதனை கற்பித்து வருகின்றனர்.

இந்த முறையில் மாணவர்கள் சுயமாக சிந்தித்து செயல்படும் அளவிற்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இன்றைய சூழ்நிலைக்கு மாணவர்களுக்கு ஏற்ற கல்வி எது என்பது குறித்தும், மாணவர்களுக்கு கிரியேட்டிவ் திங்கிங் (படைப்பாற்றல் திறன்) வளர்த்தலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. புதிய திட்டத்தின் படி ஆசிரியர்களுக்கு இருந்த முக்கியம் போய் மாணவர்களுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திட்டம் உள்ளது.

முன்பு ஆசிரியர்கள் கற்பிப்பவராக இருந்தார். ஆனால் தற்போதைய திட்டத்தில் ஆசிரியர் என்பது மாணவர்களுக்கு கல்வி வழிக்காட்டிதான். மாணவர்களின் திறனை வளர்க்க ஆசிரியர்களுக்கு அரசு திறன் வளர் பயிற்சியை அளிக்கிறது. இந்த பயிற்சியை ஆசிரியர்கள் நல்ல முறையில் பெற்று மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். இவ்வாறு கருத்தாளர்கள் பேசினர்.

7/17/2013

முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு.

2013-14ம் கல்வி ஆண்டில் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு.

2013-14ம் கல்வி ஆண்டில் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.அதன் படி

1. 20.07.2013 சனிக்கிழமை காலை 10மணி மாவட்டத்திற்குள்

2.22.07.2013 திங்கட்கிழமை காலை 10 மணி மாவட்டம் விட்டு மாவட்டம்கலந்தாய்வு நடைபெறும்.

கலந்தாய்வு வழிகாட்டு நெறிமுறைகள் :

1. 2013-14ம் கல்வியாண்டில் மே-2013ல் நடைபெற்ற ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் மாறுதல் ஆணை பெற்றவர்கள் இந்த மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்வதற்கு கண்டிப்பாக அனுமதிக்கப்படக்கூடாது.

2. 2013-14ம் கல்வியாண்டில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு பெண் ஆசிரியர்கள்மட்டுமே நியமிக்கப்படவேண்டும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் ஆண் ஆசிரியர்கள் மட்டுமே நியமனம் செய்யப்படவேண்டும். இருபாலர் பயிலும் பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு பொது மாறுதல் விதிகளின்படி ஆண் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு மாறுதல் அளிக்கலாம் என அரசு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் மட்டும், ஆண்கள் பள்ளிகளில் ஆண் ஆசிரியர்கள் மட்டும் மற்றும் இருபாலர் பள்ளிகளில் இருபால் ஆசிரியர்களுக்கும் மாறுதல் வழங்கலாம்.

3. மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர்கள் வழியாக 19.07.2013 மாலை 5 மணிக்குள் பெற்று அரசாணையில் தெரிவித்துள்ள நெறிமுறைகளின்படி முன்னுரிமையினை நிர்ணயம் செய்ய வேண்டும். புதியதாக தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாவட்ட மாறுதலுக்குப்பின் காலிப்பணியிடம் இருப்பின் மாவட்டம் விட்டுமாவட்டம் கலந்தாய்வை நடத்தலாம். மாவட்டம் விட்டு மாவட்ட கலந்தாய்விற்கான விண்ணப்பங்களை கலந்தாய்வு அன்று தலைமையாசிரியர் ஒப்பத்துடன் ஆசிரியர்கள் அளித்தால் அதனைப் பெற்று முன்னுரிமை நிர்ணயம் செய்துகொள்ள வேண்டும்.

4. இந்த கலந்தாய்வு புதியதாக தரம் உயர்த்தப்பட்ட 100 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு மட்டுமே நடத்தப்பட வேண்டும்.