அரசு பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ‘என்.எம்.எம்.எஸ்.’ (நேஷனல் மீன்ஸ் கம் மெரிட் ஸ்காலர்ஷிப்) என்ற சிறப்பு திறனாய்வுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பிளஸ் 2 முடிக்கும் வரை கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.500 வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான திறனாய் வுத் தேர்வு கடந்த பிப்ரவரியில் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேர் தேர் வெழுதினர். தேர்வுமுடிவை ஒரு வாரத்தில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அரசு தேர்வுத்துறையினர் தெரிவித்த னர். தேர்வுத்துறை இணையதளத் தில் (www.tndge.in) தேர்வு முடிவை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.
4/30/2014
ஆசிரியர் தகுதித் தேர்வு: 73 ஆயிரம் பேருக்கு புதிய ‘கட் ஆப்’ ஆன்லைனில் புதிய கட் ஆப் மதிப்பெண்
லேபிள்கள்:
TET
தகுதித்தேர்வு மூலமான ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையில் அதிரடி மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அதாவது பிளஸ் 2 மதிப்பெண், டிகிரி மதிப்பெண், பி.எட். மதிப்பெண், தகுதித்தேர்வு மதிப்பெண் ஆகியவற்றில் குறிப்பிட்ட சதவீதத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீதம் வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஒரே மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்துவிட்டு, தேர்வர்கள் பெற்ற மதிப் பெண்ணை குறிப்பிட்ட சதவீதத்துக்கு
மாற்றிக்கொள்ளும் வகையில் தீர்ப்பளித்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால், ஏற்கெனவே சான்றி தழ் சரிபார்ப்பு முடித்த ஏறத்தாழ 48 ஆயிரம் பேர் உள்பட 73 ஆயிரம் பேருக் கும் புதிய கட் ஆப் மதிப்பெண் வரும். உதாரணத்துக்கு பழைய முறையில், தகுதித்தேர்வில் 90 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை மதிப்பெண் பெற்றாலும் அனைவருக்கும் 60 மார்க் வழங்கப்படும். ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி 95 சதவீத மதிப்பெண் பெற்றவர், 90 சதவீத மதிப்பெண்ணைவிட கூடுதல் மார்க் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே முறைதான் பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். இடைநிலை ஆசிரியர் பயிற்சி மதிப்பெண் அனைத்து கணக்கீட்டுக்கும் பொருந்தும் எனவே, அதிக மதிப்பெண் பெற்ற தேர்வர்கள் தங்கள் மதிப்பெண்ணுக்கு தக்கவாறு கூடுதல் மதிப்பெண் பெறுவார்கள். உயர் நீதிமன்றத்தின் புதிய உத்தரவால், ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு புதிதாக சரிபார்ப்பு நடத்தப்படுமா, ஆசிரியர் நியமனம் தாமதம் ஆகுமா என்று கேட்டதற்கு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களின் மதிப்பெண் விவரம் எங்களிடம் உள்ளது. கணினி மூலம் அவர்கள் அனைவருக்கும், புதிய முறையில் மதிப்பெண் கணக்கிட்டுவிடலாம். இதற்கு எவ்வித காலதாமதமும் ஆகாது. அவர்களின் புதிய கட் ஆப் மதிப்பெண் ஆசிரிய தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

இருக்கை முற்றுகைக்கு உள்ளான உதவி தொடக்க கல்வி அலுவலர்
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
மடத்துக்குளம்: மடத்துக்குளம் உதவி தொடக்ககல்வி அலுவலரை, ஆரம்பபள்ளி ஆசிரியர்கள், மூன்று மணிநேரம் இருக்கை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மடத்துக்குளம் ஒன்றித்துக்குட்பட்ட ஆரம்ப பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, நிலுவைத்தொகை, அகவிலைபடி ஆகியவை வழங்குவதில் உதவிதொடக்ககல்வி அலுவலர் மற்றும் உதவியாளர் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வதாகவும், இதை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து, நேற்றுமுன்தினம் மாலை 4.30 மணி முதல் இரவு 7.45 மணி வரை உதவி தொடக்ககல்வி அலுவலர் சிவசுப்பிரமணியத்தை இருக்கை முற்றுகையிட்டனர்.
இதனால் இவர், பணி நேரம் நிறைவடைந்த பின்னும், மூன்று மணி நேரம் தனது இருக்கையிலேயே தற்காலிகமாக சிறைபிடிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கூறியது: இந்த அலுவலகத்தின் கீழ் பணியாற்றும், 250 ஆசிரியர்களில், 150 பேருக்கு மட்டும் நிலுவைதொகை மற்றும் இதர படிகள் உடனடியாக வழங்கப்படுகிறது. மீதி உள்ளவர்களின் கோப்புகளை அனுப்பும்போது, அதில் உள்ள ஆவணங்களை திட்டமிட்டு கிழித்தோ, அகற்றியோ அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் எங்கள் கோப்புகள் மறு தணிக்கைக்கு ஆட்படுத்தப்பட்டு, அதிக கால தாமதம் ஏற்படுகிறது.
இதற்கு அடிப்படை காரணமாக உள்ள அலுவலக உதவியாளரை இடமாற்றம் செய்யவும், எங்களுக்கு உடனடியாக தொகைகள் கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை எங்கள் உயர் அதிகாரிகள் செய்யும் வரை, இந்த முற்றுகை தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
உதவி தொடக்கல்வி அலுவலர் சிவசுப்பிரமணியம் கூறுகையில், "அனைத்து ஆசிரியர்களின் கோப்புகளிலும் கையொப்பமிட்டு, 2013 டிசம்பர் மாத தொடக்கத்திலேயே அனுப்பப்பட்டு விட்டது. இதில் உரிய ஆவணங்கள், சான்று சீட்டுகள் இல்லாத ஆசிரியர்களின் கோப்புகளை மட்டும் மறு தணிக்கைக்காக திருப்பி அனுப்பி உள்ளனர். எனக்கு உடல்நிலை சரியில்லாத சூழ்நிலையிலும், இந்த கோப்புகளை சரிபார்த்து வருகிறேன்" என்றார்.
மூன்று மணிநேரத்துக்கும் மேல், முற்றுகை தொடர்ந்த நிலையில், உடுமலை உதவி தொடக்க கல்வி அலுவலர் மனோகரன் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அரை மணிநேரத்துக்கு பின், இந்த பிரச்னைக்கு காரணமாக கூறப்படும் மயூரிநாதன் என்பவரை இடமாற்றம் செய்ய உறுதி வழங்கியதையடுத்து, ஆசிரியர்கள் கலைந்து சென்றனர்.
சிக்கல்களை கடந்து ஆசிரியர் நியமனம் எப்போது?
லேபிள்கள்:
TET
சென்னை: பல்வேறு வழக்குகள், குழப்பமான உத்தரவுகளால், பள்ளி கல்வித்துறையில் 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்யும் விவகாரம் ஜவ்வாக இழுக்கிறது.
ஜூனில் பள்ளிகள் திறக்கின்றன. ஆனால் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாத இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,895 முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் 12 ஆயிரம் பேரை நியமனம் செய்யும் பணி பல மாதங்களாக ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது.
சிக்கல்
கடந்த ஆண்டு மத்தியில் நடந்த முதுகலை ஆசிரியர் தேர்வும், கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வும் (டி.இ.டி.) இதுவரை நிறைவு பெறவில்லை. முதுகலை ஆசிரியர்களில், தமிழ் ஆசிரியர்கள் மட்டும் நியமனம் செய்யப்பட்டு விட்டனர். இதர பாடங்களுக்கான ஆசிரியர் தேர்வு, இடியாப்ப சிக்கலாக உள்ளது. எந்த தேர்வை எடுத்தாலும் நீதிமன்ற வழக்கில் இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) கூறுகிறது.
இதனால் முதுகலை ஆசிரியர்கள் எப்போது நியமனம் செய்யப்படுவர் என தெரியாத நிலை உள்ளது. டி.இ.டி. தேர்வில் மதிப்பெண் சலுகை அளித்ததன் காரணமாக, இரண்டாவது சுற்று சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது.
கூடுதலாக தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 6 முதல் 12ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
கூடுதலாக தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 6 முதல் 12ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
புதிய ஆசிரியர்கள்
இந்த தேர்வு தொடர்பாகவும், வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறந்ததும், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாத நிலை உள்ளது. குறிப்பாக முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்வதில் ஏற்பட்டுள்ள கால தாமதத்தால், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். அதேபோல் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்யாததால் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.
கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், "வழக்குகள் விரைவில் முடிவுக்கு வந்து விடும். மாணவர்கள் கல்வி பாதிக்காத அளவிற்கு, புதிய ஆசிரியர்களை விரைந்து நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தது.
பிரச்னை காரணமாக ஊதியம் பெறாதோருக்கும் அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
பணியில் இருந்து இடை நீக்கம் உள்பட பல்வேறு காரணங்களால் ஊதியம் பெறாதவர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு 183 சதவீதத்தில் இருந்து 200 சதவீதமாக அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை தமிழக நிதித் துறை (செலவினம்) செயலாளர் த.உதயசந்திரன் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு ஊதியக் குழு அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம், படிகள் உள்ளிட்டவை அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், அகவிலைப்படியும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் புதிய ஊதியம் மற்றும் அகவிலைப்படியைப் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், ஊதியக் குழுவின் பரிந்துரையில் தங்களது சொந்த பிரச்னைகளின் அடிப்படையில் அதை ஏற்காத இயலாதவர்கள், பணியின் போது இடை நீக்கம், ஒழுங்கு நடவடிக்கை போன்ற பல்வேறு காரணங்களால் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதிய ஊதியம் மற்றும் அகவிலைப்படியை பெறமுடியாமல் உள்ளனர். அவர்கள் அனைவரும் 2006-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதியம் மற்றும் அகவிலைப்படியையே பெற்று வருகிறார்கள். அவர்களது அகவிலைப்படி ஏதும் மாற்றி அமைக்கப்படவில்லை.
இந்தச் சூழலில், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படியானது 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதாவது இந்த உயர்வு என்பது ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு அதன்படி ஊதியம் பெறுபவர்களுக்கும் மட்டுமே பொருந்துவதாக இருந்தது.
அகவிலைப்படி உயர்வு: ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் முரண்பாடு உள்ளவர்கள், பணியின் போது இடை நீக்கம் செய்யப்பட்டவர்கள், ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்கள் போன்றோருக்கு அகவிலைப்படி உயர்வு ஏதும் அறிவிக்கப்படாமல் இருந்தது. அவர்களுக்கு ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாத காரணத்தால் அகவிலைப்படியானது 183 சதவீதமாக இருந்தது. அதாவது அகவிலைப்படி 100 சதவீதத்தைத் தாண்டும் போதோ அல்லது ஊதியக் குழு பரிந்துரைகள் அமல்படுத்தும் போதோ அகவிலைப்படியின் 50 சதவீதம் அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படும். ஒழுங்கு நடவடிக்கை, இடை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு அதுபோன்று செய்யப்படாமல் இருந்ததால், அகவிலைப்படியானது 183 சதவீதமாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் அவர்களின் நிலையினையும் கருத்திற்கொண்டு அவர்களின் அகவிலைப்படியானது 183 சதவீதத்தில் இருந்து 200 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு கடந்த ஜனவரி 1-ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று நிதித் துறை (செலவினம்) செயலாளர் த.உதயசந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற அலுவலர்கள், பல்கலைக்கழக மானியக் குழு, அனைத்திந்திய தொழல்நுட்பக் கல்விக் குழு ஊதிய வீதங்களின் கீழ்வரும் அலுவலர்களுக்கும், அரசு மற்றும் மானியம் பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள், சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமையல் உதவியாளர்கள், பஞ்சாயத்து உதவியாளர்கள், எழுத்தர்கள் ஆகியோர்க்கும் பொருந்தும் என தனது உத்தரவில் அவர் கூறியுள்ளார்.
இந்த உயர்வுக்காக, மாநிலக் கணக்குத் துறைத் தலைவரின் அனுமதிக்காகக் காத்திருக்காமல், திருத்தப்பட்ட அகவிலைப்படியை கருவூல அலுவலர்கள் அல்லது சம்பளக் கணக்குகள் அலுவலர்கள் வழங்க வேண்டும் என்றும் உதயசந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு போடுவதில் சிக்கல் : அரசியல் கட்சியினர் கலெக்டரிடம் புகார்
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு இதுவரை தபால் ஓட்டு போடுவதற்கான படிவம் கிடைக்காததால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் கட்சியினர் புலம்பி வருகின்றனர்.
தேர்தலில் ஓட்டு போடுவது என்பது தனிமனித ஜனநாய கடமை. உரிமையும் கூட. அதனையொட்டியே தேர்தல் ஆணையம் கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலை திருத்தப்பணி மேற்கொண்டு வந்தது.
இதற்காக சிறப்பு முகாம்களையும் நடத்தியது. தேர்தல் ஆணையத்தின் தீவிர நடவடிக்கையால், தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் 5 கோடியே 51 லட்சத்து 14 ஆயிரத்து 867 ஆக உயர்ந்தது. இது கடந்த 2011 சட்டசபை தேர்தலைவிட 79 லட்சத்து 97 ஆயிரத்து 568 பேர் கூடுதலாகும்.
வாக்காளர் சேர்க்கையில் தீவிரம் காட்டியது போன்று, ஓட்டு போடுவது அனைவரின் கடமை என்பதை உணர்த்தும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டது. அதேப்போன்று அனைவரும் ஒட்டு போடும் வகையில், ஓட்டுச் சாவடிகளின் எண்ணிக்கையையும், ஓட்டுப்பதிவு நேரத்தையும் அதிகரித்தது.
மேலும், ராணுவத்தில் பணி புரிபவர்களுக்கு "சர்வீஸ்' தபால் ஓட்டு போடும் பொருட்டு, முன் கூட்டியே அவர்கள் பணிபுரியும் இடத்திற்கே ஓட்டுச் சீட்டுகளை தபாலில் அனுப்பி வைக்க உ<த்தரவிட்டது.
மேலும், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது ஓட்டுரிமையை பயன்படுத்தும் வகையில் தபாலில் ஓட்டு போடவோ, அல்லது அதே லோக்சபா தொகுதிக்குள் பணிபுரிபவர்கள் என்றால் அவர்கள் பணிபுரியும் ஒட்டுச் சாவடியிலேயே தங்கள் ஓட்டை பதிவு செய்துக் கொள்ளும் வகையில் "தேர்தல் பணிச்சான்று' பயிற்சி வகுப்பின் போதே வழங்க தொகுதி தேர்தல் அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி, ராணுவத்தில் பணிபுரியும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 477 பேருக்கு தேர்தலுக்கு முன்பாகவே "சர்வீஸ்' ஓட்டு படிவங்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களில் பெரும்பாலானோருக்கு நேற்று முன்தினம் வரை தபால் ஒட்டு சென்றடையவில்லை.
லோக்சபா தேர்தலுக்காக மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 1,557 ஓட்டுச் சாவடிகளில் 8,000 அரசு ஊழியர்கள் பணியாற்றினர். இவர்களில், சொந்த லோக்சபா தொகுதிக்குள் பணி புரிபவர்கள், தாங்கள் பணியாற்றும் ஓட்டுச் சாவடியிலேயே, தங்கள் ஓட்டை பதிவு செய்து கொள்வதற்கு "தேர்தல் பணிச் சான்று' இறுதிக் கட்ட பயிற்சி வகுப்பின் போது பணி நியமன ஆணையுடன் சேர்த்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், இறுதிக் கட்ட பயிற்சி வகுப்பின் போது பணி நியமன ஆணை வழங்கிய அதிகாரிகள், "தேர்தல் பணிச் சான்று' தயாராகவில்லை. அதனால், தபால் ஓட்டு போட வசதி ஏற்படுத்தித் தருவதாகக் கூறி ஊழியர்களை ஓட்டுச் சாவடிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர்களுக்கு இதுவரை தபால் ஓட்டுகள் அனுப்பி வைக்கப்படவில்லை.
இதனால், மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களில் பெரும்பாலானோர் ஓட்டு போட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை அறிந்த அரசியல் கட்சியினர், தங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஓட்டுகள் பறி போய் விட்டதே என புலம்பி வருகின்றனர்.
அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டு கிடைக்காத தகவலை அறிந்த கம்யூ., கட்சியினர் இதுகுறித்து கலெக்டர், கடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி உதவி தேர்தல் அலுவலர்களை சந்தித்து முறையிட்டுள்ளனர்.

ALAGAPPA UNIVERSITY-B.ED PROGRAMME IN DISTANCE EDUCATION
லேபிள்கள்:
விண்ணப்பப்படிவங்கள்
CLICK HERE-B.Ed Programme in Distance Education - Application Form and Prospectus
Important Dates
Important Dates
Application Forms are issued from
|
07 – 04 - 2014
|
Last date for the issue and receipt of filled in Application Forms
|
09 – 05 - 2014
|
Date of Entrance Examination
|
17 – 05 - 2014
|
ஆசிரியர் தகுதித் தேர்வு: வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடும் பழைய முறை ரத்து
லேபிள்கள்:
court news,
TET
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்காக வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடும் பழைய முறையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அடுத்த கல்வி ஆண்டுக்குள் புதிய அறிவியல் பூர்வ முறையை உருவாக்கி வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிட தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சி.பிரியவதனா உள்பட பலர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என இரு பிரிவினருக்கு தனித்தனியாக மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
அதில், இடைநிலை ஆசிரியர்களுக்காக, மேல்நிலைப் படிப்புக்கு 10 சதவீத மதிப்பெண்ணும், டிகிரி படிப்புக்கு 15 சதவீத மதிப்பெண்ணும், ஆசிரியர் பட்டயப்படிப்புக்கு 15 சதவீத மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே போல், பட்டதாரி ஆசிரியர்களுக்காக,மேல்நிலைப் படிப்புக்கு 15 சதவீத மதிப்பெண்ணும், டிகிரி மற்றும் பி.எட். படிப்புக்கு 25 சதவீத மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், 2012-ஆம் ஆண்டு அரசு ஆணையின் படி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்குகிறது.
அதில், இடைநிலை ஆசிரியர்கள் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றால், அதற்கு, 15 வெயிட்டேஜ் மதிப்பெண்கள், 80 முதல் 90 சதவீத மதிப்பெண்களுக்கு 12 வெயிட்டேஜ் மதிப்பெண்கள், 70 முதல் 80 சதவீத மதிப்பெண்களுக்கு, 9 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 60 முதல் 70 சதவீத மதிப்பெண்ணுக்கு 6 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 50 முதல் 60 சதவீத மதிப்பெண் பெற்றால் 3 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.
இதே போன்று பட்டதாரி ஆசிரியர்களுக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
இதன் மூலம், 80 முதல் 90 மதிப்பெண் பெற்றவருக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவதிலும், 90 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவருக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவதிலும் அதிக வேறுபாடு உள்ளது. அவ்வாறு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது தவறு.
அதனால், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் முறையை மாற்ற வேண்டும். அதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
மேலும், ஆசிரியர் தேர்வின் தேர்ச்சி வீதத்தில் வழங்கப்படும் 5 சதவீதத்தை ரத்து செய்ய வேண்டும் என சிலரும், 2012-ஆம் ஆண்டு முதல் தேர்ச்சியில் 5 சதவீதம் தளர்வு வழங்க உத்தரவிட வேண்டும் என சிலரும் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீது நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு விசாரணை நடந்தது. மனுதாரர் பிரியவதனா தரப்பில் வழக்குரைஞர் எஸ்.நமோநாராயணன் ஆஜரானார். அரசுத் தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜரானார்.
விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு வழங்குவது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது.
மேலும், 5 சதவீத தளர்வை முன் தேதியிட்டு வழங்குமாறும் அரசுக்கு உத்தரவிட முடியாது. அவ்வாறு உத்தரவிட்டால் அதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படும். எனவே, தேர்ச்சி சதவீதத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
மேலும், 60 லிருந்து 69 சதவீதம் பெற்றவருக்கு ஒரு வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 70 மதிப்பெண் பெற்றவருக்கு வேறொரு வெயிட்டேஜ் மதிப்பெண்ணும் கணக்கிடப்படுவதை ஏற்க முடியாது. அதில் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பெண்ணுக்கேற்ப வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிட வேண்டும். அதில் அறிவியல் பூர்வ முறையை பின்பற்ற வேண்டும். அது தொடர்பாக நீதிமன்றம் ஒரு முறையை அரசுக்கு பரிந்துரை செய்கிறது.
அதை பின்பற்றினாலும் சரி அல்லது அரசு தரப்பில் வேறு ஒரு அறிவியல் பூர்வ அணுகுமுறையை கொண்டுவந்தாலும் சரி. அது தொடர்பாக புதிய அரசாணை வெளியிட வேண்டும். அரசு இந்த முறையை அடுத்த கல்வி ஆண்டுக்குள் கொண்டு வரும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது.
எனவே, வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் பழைய முறை ரத்து செய்யப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

TET புதிய வெயிடேஜ் முறை அறிமுகம்
லேபிள்கள்:
TET
TNTET மூலம் ஆசிரியர் பணி தேர்விற்கு Paper II க்கு வெயிடேஜ் மதிப்பெண் கண்டுபிடிப்பது எப்படி?
மாதிரி வழிமுறை
12 ஆம் வகுப்பில் 84% எனில் அதற்கு வெயிட்டேஜ் 8.4.
இளநிலைப் பட்டப்படிப்பில் 58% எனில் 58/100 * 15 = 8.7.
பி . எட். இல் 71% எனில் 71/100 * 15 = 10.65
TNTET இல் 90 எனில் 90/150 * 60 = 36.
எனவே மொத்தமாக.. 63.75
Paper I க்கு வெயிடேஜ் மதிப்பெண் கண்டுபிடிப்பது எப்படி ?
மாதிரி வழி முறை
(+2 % mark * 15)/100+(dted % mark *25)/100+(TNTET mark*60)/150= உங்கள் வெயிடேஜ்.

இரட்டைப் பட்டம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுதாரராக ஆஜராக போவதில்லை ஒருங்கிணைப்பாளர்கள் அதிரடியாக அறிவிப்பு
லேபிள்கள்:
court news,
dual degree
உச்ச நீதிமன்றத்தில் மனுதாரராக ஆஜராக போவதில்லை என மூன்று வருட பட்டப்படிப்பு ஒருங்கணைபாளர் தெரிவித்துள்ளனர். மூன்று வருட பட்டப்படிப்பு படித்தவர்கள் போதுமான அளவிற்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் உடனடியாக விலகுகிறோம் என தெரிவித்து உள்ளனர். உச்சநீதிமன்றத்தில் எந்த விதமான தீர்ப்பு வந்தாலும் அதனை இன்முகத்துடன் வரவேற்கின்றோம்.
மேலும் இவ்வழக்கு தொடர்பாக இனி எங்களை தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும் இதுவரை ஒத்துழைப்பு நல்கிய நல் இதயங்களுக்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ்வழக்கு தொடர்பாக இனி எங்களை தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும் இதுவரை ஒத்துழைப்பு நல்கிய நல் இதயங்களுக்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளனர்.
4/29/2014
"பள்ளிகள் நோட்டீஸ் போர்டில் கல்விக் கட்டண விவரத்தை எழுதி வைக்க வேண்டும்"
லேபிள்கள்:
Educational News
அரசின் கல்வி கட்டண விவரப் பட்டியலை, பள்ளிகள் நோட்டீஸ் போர்டில் பொதுமக்கள் பார்வையில் படுமாறு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசினர் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு குறித்த தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நடந்தது. இதில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் பேசியதாவது: "அரசின் கல்வி கட்டண விபரப்பட்டியல் மற்றும் ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு அரசாணையை பள்ளி நிர்வாகங்கள், பொதுமக்கள் பார்வையில் படுமாறு நோட்டீஸ் போர்டில் வைக்க வேண்டும். பிளஸ் 2 ரிஸல்ட்டை மாணவ, மாணவியர் எளிதில் அறியும் வகையில், அந்தந்த பள்ளிகளிலேயே தேவையான வசதியை ஏற்படுத்த வேண்டும்.
மார்க் ஷீட், வேலைவாய்ப்பு பதிவு குறித்து அரசிடம் இருந்து தகவல் ஏதும் வரவில்லை. பிளஸ் 1 ரிசல்ட் மே ஐந்தாம் தேதிக்குள் வெளியிட வேண்டும். கல்வியில் மிக, மிக மோசமாக இருக்கும் மற்றும் பள்ளிக்கு சரிவர வராத மாணவ, மாணவியருக்கு மட்டுமே தோல்வி சான்று அளிக்க வேண்டும். ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது வகுப்பு மாணவ, மாணவியர் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும்.
எஸ்.எஸ்.எல்.ஸி. மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கு என வழிகாட்டி நிகழ்ச்சி நடத்த வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர் மற்றும் அந்தந்த பகுதியில் உள்ள கல்வியாளர்களை கொண்டு நடத்த வேண்டும். கல்வி மாவட்ட அளவிலும், கல்வியாளர்களை கொண்டு வழிகாட்டி நிகழ்ச்சி நடத்த வேண்டும், என்று அவர் பேசினார்.
கடந்த 2013-14ம் கல்வி ஆண்டு முடிந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆறு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி. வகுப்பு, பிளஸ் 2 பாடப் பிரிவுகளுக்கு ஜூன் இரண்டாம் தேதி பள்ளி திறக்கப்படுகிறது. பிளஸ் 1 பாடப் பிரிவுக்கு ஜூன் 16ம் தேதி பள்ளி திறக்கிறது. கடந்தாண்டுகளை விட இந்தாண்டு,அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க வேண்டும். 30 மாணவர்களுக்கு ஒரு வகுப்பு என்ற நிலையை மாற்றி, 23 பேர் இருந்தாலே புதிய வகுப்பை துவக்கலாம் என இந்தாண்டு புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
தமிழ் மட்டுமின்றி ஆங்கில வழி வகுப்புகளிலும் மாணவர்களை சேர்க்க வேண்டும். இடை நிற்றலை தடுக்க பெற்றோர் ஆசிரியர் கழகத்துடன் இணைந்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். தேவை ஏற்பட்டால் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியை துவக்கலாம். பஸ் பாஸ் வழங்குவது, என்.எஸ்.எஸ். வகுப்புகளை துவக்கி நடத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அரசு பள்ளிகளில் உதவியாளர்களுக்கான சம்பள விபர பட்டியலை உடனுக்குடன் அனுப்ப வேண்டும். தணிக்கை உள்ளிட்ட அனைத்து புகார் புத்தகங்கள், ஆவணங்களை சரிவர வைத்து இருக்க வேண்டும், என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
அனுமதியின்றி பாடப்புத்தகங்களை எடுத்துச்சென்ற கல்வித்துறை ஊழியர் இடைநீக்கம்
லேபிள்கள்:
Educational News
அனுமதியின்றி பள்ளி பாடப்புத்தகங்களை எடுத்துசென்ற பழநி மாவட்ட கல்வி அலுவலக ஊழியர் "சஸ்பெண்ட்" செய்யப்பட்டார்.
பழநி மாவட்ட கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்தவர் சிவசண்முகம். இவர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த 2005-06 கல்வியாண்டிற்கான பள்ளி பாடப்புத்தகங்களை அனுமதியின்றி எடுத்துசென்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் கலையரசி விசாரணை நடத்தினார்.
விசாரணையில், கரையானால் அரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களை அவர் வெளியில் எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பாடப்புத்தகங்களை அனுமதியின்றி எடுத்து சென்ற சிவசண்முகத்தை "சஸ்பெண்ட்"&' செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
கோடை வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும்: ஆசிரியர்கள் கோரிக்கை
லேபிள்கள்:
Educational News
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் ரவி, மாவட்ட செயலாளர் பாரதிராஜன், அமைப்பு செயலாளர் சண்முகநாதன், மாவட்ட துணைத்தலைவர் பூமிநாதன், தலைமையிட செலயாளர் ராமச்சந்திரன், கல்வி மாவட்ட தலைவர்கள் செல்வராஜ், ஜெயசங்கர் பங்கேற்றனர்.
2014 மார்ச்சில் பிளஸ் 1 முழு ஆண்டுதேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன், மாணவர்களை வரவழைத்து பிளஸ் 2 பாடங்களை நடத்துவதை தடை செய்ய வேண்டும். கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லுதல், கோடை வகுப்புகளை ரத்து செய்யக்கோரி முதன்மை கல்வி அலுவலகம் முன் மே 1ல் உண்ணாவிரதம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தஞ்சை மாவட்ட செயலாளருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
லேபிள்கள்:
வாழ்த்துக்கள்
வாக்களிக்கும் உரிமை இழந்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
லேபிள்கள்:
TNPTF NEWS
இன்று பாவேந்தர் பிறந்த தினம்
லேபிள்கள்:
வாழ்த்துக்கள்
பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர்.
இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார்.
பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர்.
இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.

4/28/2014
APRIL 2014 SSLC ALL SUBJECT QUESTION PAPERS AND GOVT ANSWER KEY
லேபிள்கள்:
தேர்வு முடிவுகள்
April-2014 | Tamil I | Download Question Paper | Download Govt answer key |
April-2014 | Tamil II | Download Question Paper | Download Govt answer key |
April-2014 | English I | Download Question Paper | Download Govt answer key |
April-2014 | English II | Download Question Paper | Download Govt answer key |
April-2014 | Mathematics | Download Question Paper | Download Govt answer key |
April-2014 | Science | Download Question Paper | Download Govt answer key |
April-2014 | Social science | Download Question Paper | Download Govt answer key |
மீண்டும் உயிர் பெறுகிறது இரட்டைப்பட்டம் வழக்கு. மே-2ல் உச்சநீதி மன்றத்தில் தாக்கல்
லேபிள்கள்:
court news,
dual degree
இரட்டைப்பட்டம் செல்லாது என சென்னை உயர்நீதி மன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இரட்டைப்பட்டம் பயின்றவர்கள் நாட்டின் கடைசி நீதி மன்றமான உச்ச நீதி மன்றத்தை நாடியுள்ளார்கள். இது சம்பந்தமாக வழக்கினை மே-2ல் தாக்கல் செய்ய உள்ளனர். இதில் சிறப்பு விடுவிப்பு மனுவினை தாக்கல் செய்ய உள்ளனர். தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை தாங்கள் ஓயப் போவதில்லை எனவும் சூளுரைத்தனர். மேலும் நாங்கள் யார் பதவி உயர்வையும் கெடுக்க நினைக்க வில்லை. எங்களுக்கு பறிபோன பதவி உயர்விற்காகவும், நாங்கள் படித்த படிப்பினை மதிப்புள்ளதகவும் மாற்றவே நாங்கள் சட்ட ரீதியான முயற்சியினை மேற்கொண்டுள்ளோம் என அவ்வழக்கின் பெறுப்பாளர்கள் தெரிவித்தனர். தங்களைப்பற்றி அவதூறு செய்திகள் பரப்புவர்களுக்கு உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு சரியான பதிலடியாக இருக்கும் என நம்மிடம் தெரிவித்தனர். தேர்தல் முடிவிற்கு பின்னால் பொது மாறுதல் கலந்தாய்வு நடக்க இருக்கும் சூழலில் இவ்வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
வாய் கொழுப்பெடுத்த வருவாய் ஆய்வாளர். வரிந்து கட்டிய TNPTF
லேபிள்கள்:
SVG TNPTF
தேர்தல் நாளில் வாக்குச்சாவடி சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் சம்பந்தப்பட்ட அறைகளை சுத்தம் செய்து அதற்கான சாவிகளை குறிபிட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் ஒப்படைத்து விட்டனர். எஸ்.புதூர் ஒன்றியத்தில் ஒரு பள்ளியின் தலைமையாசிரியர் வாக்குச்சாவடி அறையின் சாவியை தனியாக எடுத்து சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைத்து விட்டார். மற்றொரு அறையில் பள்ளி பதிவேடுகள் மற்றும் கம்ப்யூட்டர் போன்ற முக்கியமான தளவாடங்களை வைத்து பூட்டி அதன் சாவியை தான் எடுத்து வந்து விட்டார். தேர்தல் முதல் நாள் இரவு அந்த வாக்குச்சாவடி மையத்திற்கு சென்ற வருவாய் ஆய்வாளார் தளவாடங்கள் இருந்த அறை பூட்டப்பட்டுள்ளதை அறிந்து அப்பள்ளியின் தலைமையாசிரியரை தொலைபேசியில் தொடர்புகொண்டு எப்படி அறையை பூட்டுவாய் என்று ஏக வசனத்தில் பேசியுள்ளார். தேர்தல் பணிக்காக மாற்று ஒன்றியத்திற்கு சென்றுள்ள தலைமையாசிரியரின் எவ்வித விளக்கத்தையும் காது கொடுத்து கேளாமல் நான் நினைத்தால் உன் வேலையையே போக்கி விடுவேன். தேர்தல் ஆணையத்தின் பவர் தெரியுமா? உனக்கு என்று வசைமாறி பொழிந்துள்ளார். பள்ளியின் முக்கிய தளவாடங்கள் இருக்கும் அறையை இவரிடம் ஒப்படைக்க சொல்லி யார் உத்தரவிட்டது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் ஆசிரியர்கள் தேசிய பணியாற்றினால் வருவாய் துறையின் அடிமைகளாக வலம் வர வேண்டும் என எழுதப்படாத சட்டமா?. விசயம் அறிந்த நாம் உடனடியாக வட்டார TNPTF நிர்வாகிகளுடன் இணைந்து நடந்த விசயங்களை முழுமையாக எழுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வழி காட்டியுள்ளோம். தேர்தல் சமயத்தில் நடந்த விசயங்கள் மற்றும் சிவகங்கையில் வருவாய் அலுவலரின் வரம்பு மீறிய பேச்சு, காரைக்குடி வருவாய் அலுவலர்களின் மெத்தனப் போக்கால் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் வாக்களிக்க(EDC) இயலாமை, எஸ்.புதூர் ஒன்றியத்தில் பணிபுரியும் வருவாய் ஆய்வாளரின் வாய் கொழுப்பெடுத்த பேச்சு, தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களின் போக்குவரத்து பிரச்சணைகள் குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்ல தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே சில விசயங்கள் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு தொலைபேசி வழியாக நாம் உணர்த்தியுள்ள போதும் TNPTF மாவட்ட நிர்வாகிகள் ஆட்சியரை நேரடியாக சந்திந்து இது குறித்து விரிவாக விவாதிக்க உள்ளனர். ஆசிரியர்கள் பிரச்சணையில் இயக்கம் எப்பொழுதும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள தயங்கியதில்லை. சிவகங்கையில் ரிசர்வில் வைக்கப்பட்ட ஆசிரியர்களை பார்த்து தண்டச்சம்பளம் என கூறிய வருவாய் அலுவலரை கண்டித்து மிகப்பெரிய முற்றுகை போராட்டத்தை நாம் தேர்தல் நாள் அன்று நடத்தினோம். தேர்தல் முதல் நாள் அன்று ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதிக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி மாவட்ட ஆட்சியரை தொலைபேசியில் வலியுறுத்தினோம். EDC விசயமாக வருவாய் அலுவலர்களின் மெத்தனத்தை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று பெரும்பான்மையான ஆசிரியர்களுக்கு EDC கிடைக்க ஏற்பாடு செய்தோம். தற்பொழுது ஆசிரியர்களிடமிருந்து கிடைக்கும் புகார்களின் அடிப்படையில் பிரச்சணைகளை மையப்படுத்தி இயக்க நடவடிக்கைக்கு TNPTF தயாராகி வருகிறது. ஆசிரயர்களுக்கு அடங்காத சமுதாயம் அகிலத்தை ஆள முடியாது என்பது தெரிந்தும் ஆசிரியர்களை அடக்க நினைக்கும் அதிகார வர்க்கத்தினை ஒருங்கினைந்து எதிர்ப்போம். ஒற்றுமையை வளர்ப்பபோம். இது ஒரு சமரசமற்ற இயக்கம் என்பதை உணர்த்துவோம்.
மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவு தாமதத்தை தவிர்க்க கல்வித்துறை புதிய நடவடிக்கை
லேபிள்கள்:
Educational News
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர் தேர்வு முடிவிற்குப் பின் அந்தந்த பள்ளிகளிலேயே தாமதம் இன்றி உடனுக்குடன் "ஆன்-லைனில்" வேலைவாய்ப்பு பதிவு செய்ய கல்வித்துறை புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.
பதிவு மூப்பு
தேர்வு முடிவிற்குப்பின் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய மாணவ, மாணவியர் நீண்ட வரிசையில் காத்திருப்பர். ஒரு நாள் தாமதம் ஆனாலும் பதிவுமூப்பு தள்ளிப்போகும் நிலையும் இருந்தது. இந்நிலையில், தேர்வு முடிவிற்குப்பின் மாணவர்கள் தங்கள் பள்ளியிலேயே "ஆன் - லைன்" மூலம் வேலை வாய்ப்பு அலுவலக பதிவை மேற்கொள்ள இரு ஆண்டுகளுக்கு முன் திட்டம் கொண்டு வரப்பட்டது.
மேலும், அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பதிவு மூப்பு கணக்கை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு வரை தேர்வு முடிவிற்குப்பின் மாணவர்கள் பற்றிய அனைத்து விவரங்களும் ஆன் - லைனில் பதிவேற்றம் செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. பின், பதிவு செய்யப்பட்டதற்கான அட்டைகளும், மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
ஒரே நேரத்தில் ஏராளமான தகவல்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதால் அதிக நேரம் பிடிக்கிறது. இதனால், மாணவர்கள் தவிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த பிரச்னையை இந்த ஆண்டு தீர்க்கும் வகையில் கல்வித்துறை புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மாணவர்கள் குறித்த முழு விவரங்களும் ஏற்கனவே பெறப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மாணவர் பெயர், பெற்றோர் பெயர், பள்ளி, சொந்த ஊர் உள்ளிட்ட பல விவரங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
பயிற்சி
தேர்வு முடிவு வந்ததும் அதில், மதிப்பெண் சான்றிதழ் எண்களை மட்டும் பதிவு செய்ய வேண்டியது மட்டும் தான் வேலை. இதனால், உடனுக்குடன் எளிதில் பதிவு செய்ய முடியும் என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரக அதிகாரிகள் ஏற்கனவே பள்ளி ஆசிரியர், பணியாளர்களுக்கு, "ஆன் - லைன்" வழியில் பதிவு செய்வது குறித்து பயிற்சி அளித்துள்ளனர்.
மேலும், ஒவ்வொரு பள்ளிக்கும் உபயோகிப்பாளர் அடையாளம் (யூசர் ஐ.டி.,) மற்றும் ரகசிய எண் (பாஸ்வேர்டு) ஆகியவற்றையும் வேலை வாய்ப்புத்துறை வழங்கி உள்ளது. இதை பயன்படுத்தி உடனுக்குடன் வேலை வாய்ப்பு பதிவை மேற்கொள்ள ஆசிரியர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி: மே 6ல் துவக்கம்
லேபிள்கள்:
TET
இட ஒதுக்கீடு பிரிவில் 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி திருச்சியில் வரும் ஆறாம் தேதி துவங்குகிறது.
ஆசிரியர் தகுதி தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என்பதில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு ஐந்து சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்கப்படும் எனவும், இந்த சலுகை கடந்தாண்டு ஆகஸ்ட் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும் என, முதல்வர் ஜெயலலிதா கடந்த ஃபிப்ரவரி சட்டசபையில் அறிவித்தார். இதனால் ஆசிரியர் தகுதிதேர்வில் 150க்கு 82 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாகும் வாய்ப்பு உருவானது.
ஆசிரியர் தகுதி தேர்வில் 90 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்ற இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பின் 82 முதல் 89 மதிப்பெண் எடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் ஐந்து மையங்களில் கடந்த மார்ச் மாதம் நடந்தது. திருச்சியில் ஜங்ஷன் அருகே வாசவி வித்யாலயா பள்ளியில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வரும் 6ம் தேதி ஐந்து சதவீதம் மதிப்பெண் சலுகை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவங்குகிறது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செல்வக்குமார் கூறியதாவது: ஐந்து சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி மே மாதம் ஆறாம் தேதி துவங்குகிறது. திருச்சியில் வாசவி வித்யாலய பள்ளியில் இந்த பணி நடக்கிறது. இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 1,086 பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட உள்ளது. மே 12ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடையும்.இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, கட்டமைப்பு மேம்பாடு குறித்து ஆய்வு
லேபிள்கள்:
Educational News
மதுரை மாவட்டத்தில் வரும் கல்வியாண்டில் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தலைமையாசிரியர்களுடன் கல்வி அலுவலர்கள் இன்று(ஏப்., 28) ஆய்வு நடத்துகின்றனர்.
இம்மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் உதவி பெறும் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் இதில் பங்கேற்கின்றனர். 2014-15 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை, பள்ளிகளில் கட்டமைப்பு வசதி மேம்பாடு மற்றும் மேற்கொள்ள வேண்டிய திட்டப் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. அரசு பள்ளிகளின் வளர்ச்சியானது தலைமையாசிரியரின் செயல்பாட்டை பொறுத்து அமையும். அந்த வகையில், மாணவர்கள் சேர்க்கை, அரசு நலத் திட்டங்கள் வினியோகம் குறித்து தலைமையாசிரியர்களின் ஆலோசனைகளை பெற்று, கல்வியாண்டு துவங்குவதற்கு முன்கூட்டி பள்ளிக் கல்வி இயக்குனர் பார்வைக்கு அனுப்பப்படும்.
முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி தலைமையில் மதுரை, மேலூர், உசிலம்பட்டி கல்வி மாவட்ட அலுவலர்கள் பங்கேற்கின்றனர். தலைமையாசிரியர் "ஆப்சென்ட்" ஆக கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
தலைமையாசிரியர் ஒருவர் கூறியதாவது: அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மே 6 முதல் மாணவர் சேர்க்கை துவங்க உள்ளன. பள்ளிகளை மேம்படுத்த மாணவர்கள் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பான ஆலோசனைகள் ஆய்வில் வழங்கப்படும். மேலும், முதன் முறையாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், தேர்வுத் துறை மேற்கொண்ட மாற்றங்கள் குறித்தும் கருத்துக்கள் கேட்கப்படும். தேர்வு முடிவு வெளியான பின் மாணவர்களின் சான்றிதழ்களை பள்ளிகளில் இருந்து "ஆன்லைன்" மூலம் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்வது, கோடைகால பயிற்சியாக சதுரங்கம் உள்பட பல்வேறு விளையாட்டுக்களை மாணவர்களுக்கு கற்றுத் தருவது போன்றவை குறித்து விவாதிக்கப்படும், என்றார்.
எட்டாம் வகுப்பு நிறைவுச் சான்று
லேபிள்கள்:
தேர்வு,
பதிவேடுகள்,
விண்ணப்பப்படிவங்கள்
காஷ்மீரில் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் உடல் சென்னை வந்தது
லேபிள்கள்:
வருந்துகிறோம்
காஷ்மீர் மாநிலத்தில் 6 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்குள்ள சோபியான் மாவட்டத்தில், கடந்த வியாழக்கிழமை நடந்த தேர்தலின் போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் தேர்தல் அதிகாரி ஒருவர் உயிர் இழந்ததுடன், 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த மாவட்டம் முழுவதும் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அங்குள்ள கரேவா மலினோ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மாநில போலீசாரும், அசாம் ஆயுதப் படையினரும் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது அவர்கள், அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கு, சரண் அடையுமாறு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் சரண் அடைய மறுத்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதனால் பதிலடி தாக்குதல் நடத்திய பாதுகாப்பு படையினர், அந்த வீட்டை குண்டுவீசி தகர்த்தனர். இதில் 2 தீவிரவாதிகள் உயிர் இழந்தனர். பின்னர் பாதுகாப்பு படையினர் கட்டிட இடிபாடுகளுக்குள் கிடந்த தீவிரவாதிகளின் உடல்களை மீட்க முயன்றனர். அப்போது ஒரு தீவிரவாதி பாதுகாப்பு படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினான்.
இதில் ராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும் ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் (வயது 32) படுகாயம் அடைந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் வீர மரணம் அடைந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் சென்னையைச் சேர்ந்தவர் ஆவார்.
இவரது தந்தை பெயர் வரதராஜன். ஓய்வுபெற்ற வங்கி மேலாளரான வரதராஜன், கிழக்கு தாம்பரம் பேராசிரியர் காலனியில் மனைவி கீதாவுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதியின் ஒரே மகன் முகுந்த். ராணுவ மேஜரான முகுந்திற்கு கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி பெயர் இந்து. இவர்களுக்கு 3 வயதில் அர்ஷிதா என்ற மகள் இருக்கிறாள். பெங்களூரில் உள்ள ராணுவ குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
ஸ்ரீநகரில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட மேஜர் முகுந்தின் உடல், நேற்றிரவு சுமார் 12 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தது.
மூவர்ணக் கொடியால் மூடப்பட்ட சவப்பெட்டியில் வந்து சேர்ந்த முகுந்த் வரதராஜனின் உடலை கண்டதும் அவரது உறவினர்கள் சோகத்தை கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதனர்.
பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ராணுவ உயர் அதிகாரிகளின் அஞ்சலி செலுத்தி வருகின்றனனர். சென்னை பெசண்ட் நகரில் உள்ள மயானத்தில் ராணுவ மரியாதையுடன் முகுந்த் வரதராஜனின் உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது.

4/26/2014
திமுக ஆட்சியில் நடந்த பள்ளி ஆசிரியர் இடமாற்றம் குறித்து திடீர் கணக்கெடுப்பு
லேபிள்கள்:
Educational News
திமுக ஆட்சியின்போது அரசு பள்ளிகளில் நடந்த ஆசிரியர் இடமாற்றங்கள் குறித்து தமிழகம் முழுவதும் கணக்கெடுக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 23,522 அரசு தொடக்கப் பள்ளிகள், 7,651 அரசு நடுநிலைப்பள்ளிகள், 2,844 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 2,488 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த அரசு பள்ளிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான
இடமாறுதல் மே அல்லது ஜூன் மாதம் நடைபெறுவது வழக்கம். இடமாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்களில், பணிமூப்பு உள்ளவர்கள், மாற்றுத் திறனாளிகள், முப்படையினரின் வாழ்க்கை துணை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர், இதய நோயாளிகள், கணவன்-மனைவி இருவரும் பணியாற்றுபவர்கள் போன்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆசிரியர் இடமாறுதல் பொது இடமாறுதலின்போது எந்தெந்த பள்ளிகளில் காலியிடங் கள் உள்ளன என்ற பட்டியல் வெளியிடப்பட்டு ஆசிரியர்கள் தங்களுக்குப் பிடித்தமான இடங்களை தேர்வுசெய்வார்கள். வருடாந்திர பொது இடமாறுதல் நீங்கலாக, நிர்வாக நலன் கருதி அவ்வப்போது இடமாற்றங்கள் செய்யப்படும். சென்னை உள்பட முக்கிய இடங்களில் ஆசிரியர் காலியிடங் கள் மறைக்கப்பட்டு அரசியல், நிர்வாக சிபாரிசு அடிப்படையில் வேண்டியவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படுகிறது என்றும், இதற்கு லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுகிறது என்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகி றார்கள். தென்மாவட்டங்களுக்கு இடம் மாறிச்செல்ல எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுக்க ஒரு சில ஆசிரியர்கள் தயாராக இருப்பதாகவும் கூறப் படுகிறது. ரகசிய கணக்கெடுப்பு இத்தகைய சூழலில், கடந்த திமுக ஆட்சியி்ல் (2006-2011) தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் நடந்த ஆசிரியர், தலைமை ஆசிரியர் இடமாறுதல் குறித்து ரகசிய கணக்கெடுப்பு நடத்த அரசு ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். திமுக ஆட்சிக்காலத் தில் நடந்த ஆசிரியர் இட மாறுதல் குறித்த விவரங்களை கணக்கெடுக்குமாறு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கள் அறிவுறுத்தப்பட்டிருப்பதா வும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திடீர் கணக்கெடுப்பு தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோரிட மிருந்து அதிகாரப்பூர் வமாக உத்தரவு ஏதும் அனுப்பப்பட்டதா? என்பது தெரியவில்லை.
தேர்தல் பணியில் ஈடுபட்டதால் வாக்களிக்கும் உரிமையை இழந்த ஆசிரியர்கள். மௌனம் காத்த தேர்தல் ஆணையம். TNPTF கண்டனம்.
லேபிள்கள்:
SVG TNPTF
சிவகங்கையில் 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களாக தேச பணியாற்றினர். இதில் சிவகங்கை மாவட்டத்தைச் சார்நத ஆசிரியர்கள் 80 சதவீதத்திற்கு மேல் பணியாற்றியதால் தொகுதிக்குள் பணியாற்றும் வாக்குச் சாவடியில் வாக்களிக்கும் விதமாக தேர்தல் பணிச் சான்று(EDC) வருவாய் துறையால் வழங்கப்பட்டது. அதற்கான முறையான படிவங்கள் முதல் தேர்தல் வகுப்பிலேயே அனைத்து ஆசிரியர்களும் தாங்கள் சார்ந்த சட்டமன்ற தொகுதியில் அளித்து விட்டனர். ஆசிரியர்களுக்கான EDC தேர்தல் பணிக்கு செல்லும்பொழுது அளிக்கப்படும் என வருவாய் துறை உறுதியளித்தது. தேர்தல் பணிக்கு அனைத்து ஆசிரியர்களும் 23.4.2014 அன்று தயாராக இருந்தபொழுது EDC வாங்க ஆசிரியர்கள் அங்குமிங்கும் அழைக்கழிக்கப்பட்டனர். குறிப்பாக சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கு தங்கள் EDC வாங்க அழைந்தது பரிதாபமாக இருந்தது. இறுதியல் மண்டல அலுவலர்கள் மூலம் தாங்கள் பணியாற்றும் வாக்குச் சாவடிக்கே சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் EDC கொடுத்து விடப்படும் என வருவாய்துறை அலுவலர்களால் உறுதியளிக்கப்பட்டு வாக்குச் சாவடிகளுக்கு ஆசிரியர்கள் அனுப்பப்பட்டனர். கொளுத்தும் வெயிலில் வாக்குச் சாவடி சென்றடைந்த ஆசிரியர்கள் தங்கள் தேசிய பணியினை கடமை உணர்வுடன் ஆற்றினர். தங்கள் ஜனநாயக கடமை ஆற்றுவதற்கு தங்களின் தேர்தல் பணிச் சான்றினை(EDC) மண்டல அலுவலர்களிடம் கேட்டபொழுது அடுத்த முறை வரும்பொழுது கொண்டு வருகிறேன் என்ற பதிலை தவிர மாற்று பதில் இல்லை. நம்மை தொடர்பு கொண்டு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்த பின்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த ஆட்சியர் அதற்கான நடவடிக்கை எடுத்ததன் பேரில் பாதிக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு EDC வழங்கப்பட்டது. ஆனால் காரைக்குடி தொகுதியிலிருந்து தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு வாக்குபதிவு நிறைவடையும் வரையில் EDC வழங்கப்படவில்லை. இது ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணையம் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டிய அவசியத்தை ஊடகங்கள் வழியாக, குறுந்தகவல்கள் வழியாக, சுவரொட்டிகள் வாயிலாக வலியுறுத்தி வந்த நிலையில் ஏன் இந்த அவலம்?. இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு ஆரம்ப - நடுநிலைப்பள்ளிகளிலும் வாக்களிக்கும் விழிப்புணர்வு முகாம் நடத்தி மாணவர்களின் பெற்றோர்களிடம் கையொப்பம் பெற்று தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்த ஆசிரியர்களின், இந்த தேசத்தின் மிகப்பெரிய தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த ஆசிரியர்களின் வாக்களிக்கும் உரிமையை பறித்தது யார் செய்த சதி? இதற்கு தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டாமா?. மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டால் EDC -i பொறுத்தவரை இனிமேல் ஒன்றும் செய்ய இயலாது என்ற பதிலே வருகிறது. தபால் வாக்கும் மாவட்டத்திற்குள் பணியாற்றினால் கொடுக்க இயலாது என்கிறது தேர்தல் ஆணையம். இதற்கு விடிவே கிடையாதா? ஒவ்வொரு தேசிய பணியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளும் ஆசிரியர் இனத்திற்கு இந்த நாட்டின் ஜனநாயக கடமைகளில் பங்கெடுக்க உரிமையில்லையா?. வாக்காளர் படடியலில் பெயர் இருந்தும், வாக்குச்சாவடி அலுவலராக நியமிக்கப்பட்ட ஒரு காரணத்திற்கான வாக்களிக்கும் உரிமையை இழந்து நிற்கும் எம் ஆசிரியர் இனத்தின் உரிமையை மீட்டு தருவது யார்?. இதற்கு காரணமான அதிகாரி தண்டிக்கப்பட வேண்டாமா? தேர்தல் ஆணையம் மௌனம் காப்பது நியாயமா? எப்போது விடியல்? எங்கள் உரிமையை பறித்த அதிகாரிகளை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண தேர்தல் ஆணையத்தை இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
4/25/2014
சிவகங்கையில் வரம்பு மீறிய வருவாய் துறை. வறுத்தெடுத்த ஆசிரியர்கள்
லேபிள்கள்:
TNPTF NEWS
சிவகங்கையில் தேர்தல் பணியில் கிட்டதட்ட 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இதில் 20 சதவீத ஆசிரியர்கள் சமுதாய கூடத்தில் அவசர உதவிக்காகவும், மாற்று பணிக்காகவும் தடுத்து வைக்கப்பட்டனர். இதில் 80 சதவீதம் பெண் ஆசிரியர்கள். இச்சமுதாய கூடத்தில் இயற்கை உபாதை கழிக்க கூட வசதி செய்து தரப்படவில்லை. இருந்தாலும் கூட தேச பணிக்காக அனைத்தையும் பொறுத்து கொண்ட ஆசிரியர்கள் பொறுமை காத்தனர். இதில் வருவாய் துறையை சார்ந்த ஒரு ஊழியர் தன்னை இந்திய தேர்தல் ஆணையர் போல் கற்பனை செய்துகொண்டு மைக்கில் வார்த்தைகளை உபயோகிப்பதும், பெண் ஆசிரியர்களை மிரட்டுவதும் என்ற தோரணையில் நடந்து கொண்டார். ஒரு கட்டத்தில் பெண் ஆசிரியர்களை பார்த்து உங்களுக்கு கொடுக்கும் மதிப்பூதியம் தண்டம் என்றும் வாய் கூசும் வார்த்தைகளை உபயோகப்படுத்தியுள்ளார். தகவலறிந்த நாம் அந்த குறிபிபட்ட நபரை தேடியபொழுது ஜீப்பில் மாயமாகி விட்டார். அதன் பின் வந்த அலுவலர்களிடம் நாம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். அந்த அநாகரிகமான நபரை காப்பற்ற வருவாய் துறை தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தியது. நம்முடைய கோபம் அதிகமானது. அனைத்து ஆசிரியர்களும் உடனடியாக மண்டபத்திற்கு வெளியில் கூடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோம். நம்மைப்பற்றி தரக்குறைவாக பேசிய வருவாய் அலுவலர் உடனடியாக இங்கு வந்து மன்னிப்பு கோர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருந்தோம். நம்மை எள்ளி நகையாடிய அந்த நபர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் போரடிக் கொண்டிருந்த வேளையில் மேல்நிலைப்பள்ளி பெண் ஆசிரியர்கள் இது யாருக்கோ நடந்த சம்பவம் போல் மதிப்பூதியம் பெறுவதில் முனைப்பு காட்டியது அங்கு குழுமியிருந்த ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செய்தி உடனடியாக செய்தி ஊடகங்களில் ஒளிபரப்பானது. நம்முடைய போராட்டம் மிக கடுமையானது. கோஸங்கள் விண்ணை பிளந்தது. நிலைமை கட்டுங்கடங்காமல் போகவே சிவகங்கை தாசில்தார் உடனடியாக விரைந்து வந்தார். தாசில்தாரும் தன்னுடைய சகாவை காப்பாற்றும் விதமாக விசயத்தை மழுங்கடிப்பு செய்ய முயன்றார். கோபமுற்ற நாம் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டோம். பெண் ஆசிரியர் சகோதரிகளும் குறிப்பாக சிங்கம்புணரி பெண் ஆசிரியர்களும் தாசில்தாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் மருதுபாண்டியர் வளாகம் முழுவதும் எதிரொலித்து. இறுதியாக தன்னுடைய துறையின் தவறை உணர்ந்த அதிகாரி இந்த குறிபிட்ட நபர் காரைக்குடி அவசர தேர்தல் பணிக்காக சென்று விட்டதாகவும் அவருக்காக தாம் மன்னிப்பு கோருவதாகவும் கூறினார். அதன் பின் மாவட்ட தேர்தல் பணி அலுவலரும் நம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார். அந்த நபருக்கு உடனடியாக விளக்கம் கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டதாக நம்மிடம் தெரிவித்தார். பின்னர் ஆசிரியர்கள் கலைநது சென்றனர். தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை அடிமை போல் நடத்துவதை வருவாய்துறை வருங்காலத்தில் தவிர்க்க வேண்டும் என்பதே நம் விருப்பம்.
4/22/2014
TNPTF வேண்டுகோளை ஏற்று கொண்ட சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர்
லேபிள்கள்:
தேர்தல்
சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான மதிப்புமிகு. வே.இராஜாராமன் I.A.S. அவர்களுடன் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பணி ஆணையினை இன்று (22.4.2014) அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களில் பெரும்பாலோர் பெண் ஆசிரியர்கள் என்பதால் முன் கூட்டியே பணிபுரியும் இடம் தெரிந்தால் செல்வதற்கு எளிதாக இருக்கும் என எடுத்து கூறப்பட்டது. திருப்புவனத்திற்கு பயிற்சிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து பிரச்சணை பற்றியும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் எடுத்துக் கூறப்பட்டது. நம் கோரிக்கைகளை கவனத்துடன் உள்வாங்கி கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தேர்தல் பணிக்கான ஆணையினை மாநில தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின் படி நாளை(23.4.2014) தேர்தல் பயிற்சி வகுப்பில்தான் அளிக்க இயலும் என்பதை தெளிவாக்கினார். மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீற இயலாது என்பதை நம்மிடம் தெளிவு படுத்தினார்கள். ஆசிரியர்களின் போக்குவரத்து பிரச்சணைகளை கவனத்தில் எடுத்துக்கொண்ட ஆட்சியர் நாளை(23.4.2014) காலை 9.00 மணிக்கு பூவந்தியிலிருந்து திருப்புவனத்திற்கு பேருந்து வசதியினை ஏற்படுத்தி தர உடனடியாக உத்தரவிடுவதாக உறுதியளித்தார். எனவே ஆசிரியர்கள் இந்த பேருந்து வசதியினை பயன்படுத்திகொள்ளுமாறு இயக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இயக்கத்தின் முயற்சிக்கு மதிப்பளித்து பேருந்து வசதியினை ஏற்படுத்தி கொடுத்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இயக்க வேண்டுகோளுக்கிணங்க தேர்தல் பணியில் ஈடுபட இயலாத ஆசிரியர்களுக்கு பணியினை மாற்றம் செய்ய உதவிய கோட்டாட்சியர் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். வாக்களிப்போம்!!! வளமான , வலிமையான ஜனநாயகத்தை கட்டமைப்போம்!!!
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முக்கிய குறிப்புகள்
லேபிள்கள்:
தேர்தல்
4/19/2014
உங்கள் வாக்குச்சாவடியை அறிய வேண்டுமா?
இங்கே சொடுக்கவும்
வாக்குச்சாவடி மற்றும் தெரு பெயர் மூலம் என்பதை டிக் செய்து பின் தாங்கள் பணிபுரியும் மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதியினை தேர்வு செய்து சமர்பிக்கவும்.
வாக்குச்சாவடி மற்றும் தெரு பெயர் மூலம் என்பதை டிக் செய்து பின் தாங்கள் பணிபுரியும் மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதியினை தேர்வு செய்து சமர்பிக்கவும்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்திய தேர்தல் சிறப்பு பயிற்சி வகுப்பு
லேபிள்கள்:
Singai TNPTF NEWS
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிங்கம்புணரி வட்டாரக் கிளையின் சார்பாக தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் கலந்துரையாடல் வகுப்பு 18.4.2014 அன்று சிங்கம்புணரி பள்ளி எண்-4ல் நடைபெற்றது. பயிற்சியினை மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்கள் இராகவன், வைரம் மற்றும் வட்டாரத்தலைவர் ஞான அற்புதராஜ் ஆகியோர் அளித்தனர். இப்பயிற்சியில் ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட அனைத்து வகை சந்தேகங்களும் தீர்த்து வைக்கப்பட்டன. மேலும் வாக்கு பதிவு அன்று நிரப்பப்பட வேண்டிய படிவங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மன நிறைவு தெரிவித்தனர். தேர்தலை எவ்வித பிரச்சனைகளுக்கும் இடம் கொடாமல் நடத்தவும், தேர்தல் பயிற்சியில் கிடைக்காத தெளிவினை தங்களின் உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும் என்ற சமூக நோக்கின் அடிப்படையிலும் இயக்கம் இப்பணியினை மேற்கொண்டது. பயிற்சியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக தேர்தல் அலுவலர்களுக்கான விளக்க குறிப்பு வழங்கப்பட்டது.
4/13/2014
அத்து மீறும் குடிமகன்கள். ஆட்டம் காணும் ஆசிரியர் பாதுகாப்பு.
லேபிள்கள்:
TNPTF NEWS
நேற்று எமது ஒன்றியப் பள்ளி ஆசிரிய சகோதரியிடமிருந்து அவசர தொலைபேசி அழைப்பு. ஒரு குடிமகன்(அதீத போதை) பள்ளி வளாகத்திற்குள் வந்து காது கூசும் வார்த்தைகளுடன் வசைபாடுவதாகவும், தன் நிலை தடுமாறி அடிக்க ஓடி வருவதாகவும் தன் பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலாகவும் உள்ளது என நடுக்கமான குரலுடன் நம்மிடம் பேசினார். உடனடியாக நாம் இயக்க தோழர்களுக்கு தகவல் தெரிவித்து 18கி.மீட்டருக்கு அப்பால் உள்ள அந்த சின்னஞ்சிறிய கிராமத்திற்கு விரைந்தோம். நாம் செல்லும் முன்பே நமது இயக்க பொறுப்பாளர்கள் சுமார் 10ற்கும் மேற்பட்டவர்கள் அப்பள்ளி வளாகத்திற்குள் குழுமி விட்டார்கள். உடனடியாக கிரமத்தின் முக்கியஸதர்கள் வரவழைக்கப்பட்டனர். நமது கடுமையான கோபத்தை கிராமப் பெரியவர்களிடம் பதிவு பண்ணினோம். கோவையிலிருந்து விடுமுறைக்கு வந்த அக்குடிமகன் நம் வருகையை அறிந்து கேவைக்கு தப்பிச் செல்ல பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபொழுது இயக்க தோழர்களால் பிடித்து வரப்பட்டார். நமது பொறுப்பாளர்களின் கடுமையான கோபத்தை அறிந்த அந்த நபர் தன்னை மன்னிக்கும்படியும், தன்னுடைய அதீத போதையால் தாம் நிலை தடுமாறி விட்டதாகவும், தன் செயலுக்கு வெட்கப்படுவதாகவும் நம்மிடம் மன்றாடினார். அந்த நபரின் மனைவியும் தன் குழந்தைகளின் எதிர்காலம் கருதி அவரை மன்னிக்கும்படி வேண்டினார். பின்னர் ஊர் பெரியவர்களின் முன்னிலையில் இந்த மாதிரி செயல் இனிமேல் எங்கள் கிராமத்தில் நடக்காது என்ற உறுதியான உடன்பாடின் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கையை நாம் கைவிட்டோம். பேருந்து வசதியில்லாத கிரமத்தில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான பெண் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது சம்பந்தப்பட்ட கிராமத்தின் முக்கிய கடமையாகும். அதை செய்ய அக்கிராமம் தவறினால் அந்த இடத்தை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கட்டாயம் நிரப்பும். இயக்க உறுப்பினர்களின் பாதுகாப்பை தன் தலையாய கடமையாக இயக்கம் கருதி செயல்படும்.
4/12/2014
இணையத்தில் ஓய்வூதியர்களின் விபரம் அறிய ஏற்பாடு
லேபிள்கள்:
இணையச்செய்திகள்
கேள்வி குறியாகும் ஆசிரியர் உரிமைகள்?
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
தனியார் ஆசிரியர் பள்ளிகளை மூடுவதில் மும்முரம்
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
தோழர் ஜே.ஹென்றிஃப்ராங்க் மறைந்தார்
லேபிள்கள்:
வருந்துகிறோம்
தமிழ்நாடு ஆரம்ப்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் நீலகிரி மாவட்டச்செயலாளர் தோழர்.ஜே.ஹென்றிஃப்ராங்க் 11.4.2014 வெள்ளி காலை 5.00மணியளவில் மறைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்த்த்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.மகத்தான தோழர் ஜே.ஹென்றிஃப்ராங்க் மறைவு தமிழ்நாடு ஆரம்ப்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு ஈடுசெய்யமுடியாத இழப்பு ஆகும். 2.8.1984ல் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நீலகிரி மாவட்டச்செயலாளராக இருந்த தோழர் ஜே.ஹென்றிஃப்ராங்க், சர்வாதிகாரத்தலைமைக்கு எதிரான போராட்ட்த்தில் அன்றிருந்த மொத்தம் 16 மாவட்டச்செயலாளர்களில் 9மாவட்டச்செயலாளர்களோடு இணைந்துநின்று ஜனநாயகத்துக்கான போராட்ட்த்தளபதிகளில் ஒருவரானார். ‘தமிழ்நாடு ஆரம்ப்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணி’யை உருவாக்குவதில் முன்னணித் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.தன்வாழ்நாள் முழுதும் மாஸ்டர் வா.இராமுண்ணியின் இலட்சியப்பாதையில் ஆசிரியர்களின் நலனுக்காகவே வாழ்ந்தார். அவருக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.
மிகவும் அவசரம்! அதிகம் பகிரவும்!!! (12.04.2014)
லேபிள்கள்:
அறிவிப்பு
சிங்கம்புணரி ஒன்றியம் வேங்கைப்பட்டி நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவியின் தாயார் திருமதி.உமாமகேஸ்வரிக்கு பொன்னமராவதி துர்க்கா மருத்துவமனையில் (அழகேசன் மருத்துவமனை) நடைபெற இருக்கும் அறுவை சிகிச்சைக்கு AB+ இரத்தம் தேவைப்படுகிறது. புதுகோட்டை மற்றும் பொன்னமராவதிக்கு அருகில் உள்ள குருதி கொடையாளர்கள் துர்க்கா மருத்துவமனையை தொடர்பு கொள்ளும்படி வேண்டுகிறோம். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, பொன்னமராவதி வட்டாரக் கிளைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குருதி கொடையுள்ளம் கொண்டோர்கள் உதவி செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
4/11/2014
பள்ளியில் பிள்ளைகள்... எத்தனை தொல்லைகள்!
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
கோவை: அரசு துவக்க பள்ளிகளில், அடிப்படை பணியாளர்கள் இல்லாததால், சுகாதாரப்பணிகளில் பிஞ்சு மாணவர்களை ஈடுபடுத்தும் அவலம் தொடர்கிறது.
துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு, மூன்றாம் பருவத்தேர்வு ஒரு வாரத்தில் துவங்கவுள்ளது. தற்போது தேர்வுக்கு தயாராக வேண்டிய நிலையில் சில அரசு பள்ளிகளில், சுகாதார பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். மாநில அளவில் 90 சதவீத துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், அடிப்படை மற்றும் துப்புரவு பணியாளர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோவைப்புதூரிலுள்ள, குளத்துப்பாளையம் துவக்கப் பள்ளியில் 220 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நேற்று முன்தினம், இப்பள்ளியை சுத்தம் செய்யும் பணியில் மாணவர்கள், ஆசிரியர்கள் முன் ஈடுபடுத்தப்பட்டனர். மாணவர்கள் சிலர் மேலாடையின்றி, தண்ணீர் சுமந்து வந்து பள்ளியை கூட்டி சுத்தம் செய்தனர்.
கோவைபுதூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் லட்சுமி கூறுகையில், "பள்ளிக்கு, பிள்ளைகளை படிக்க அனுப்பினால், விளக்குமாறை கையில் கொடுத்து, தரையை, கழிவறையை கூட்டச் சொல்வது என்ன நியாயம்? போதிய பணியாளர் இல்லை என்பதால், இப்படி செய்யச் சொல்வதாக கூறும் கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், தங்களது பிள்ளைகளுக்கு இப்படியொரு கொடுமை நடந்தால் ஏற்றுக்கொள்வார்களா. இந்த பிரச்னையை மனித உரிமை கமிஷனுக்கு எடுத்துச் செல்வோம். ஒட்டுமொத்த கல்வித்துறை அதிகாரிகளும் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்" என்றார்.
பின் குறிப்பு: பிள்ளைகளுக்கு சில அடிப்படை பண்புகளை கூட கற்று தர விடாமல் இச்செய்திகளை பெரிதாக வெளியிடும் தினமலர் நாளிதழை வன்மையாக கண்டிக்கிறோம் தன் சுத்தம் பற்றிய விழிப்புணர்வு வேண்டும். பிள்ளைகளை அரசியில் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் அரசியல் கட்சிகளை கேக்க நாதியில்லாத சமூக ஆர்வல்கள் ஊருக்கு இளைத்த பள்ளி ஆசிரியர்களை மிரட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்
தேர்தல் பணி: ஆசிரியைகள் அச்சம்
லேபிள்கள்:
தேர்தல்
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி, மே 12ம் தேதி வரை 9 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 81 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அவர்களில் 10 கோடி பேர் புதிய வாக்காளர்கள். இந்த முறை வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்து வருவதாலும்,
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வாக்குப்பதிவு காலை 7 மணிக்கே தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. தேர்தல் கமிஷனின் நோக்கம் நல்ல நோக்கம்தான்.
ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை வாக்குப்பதிவு நேரத்தை அதிகரித்தால் முறைகேடுகளும் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது. தமிழகத்தில் தேர்தலின் போது பெரும்பாலான வாக்குச்சாவடிகள் மாலை 3 மணிக்கு மேல் வாக்காளர் கூட்டமே இல்லாமல் மந்தமாக காணப்படும். அதே சமயம், வாக்குப்பதிவு முடிந்ததும் சதவீதத்தை பார்த்தால், மாலை 3 மணிக்கு மேல்தான் கிடுகிடுவென உயர்ந்திருக்கும். எனவே, நேரத்தை அதிகரிப்பது என்பது மேலும் முறைகேடுகள் அதிகரிக்கவே வாய்ப்பாக அமையும்.
இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் 3 லட்சம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களில் பெரும்பாலோனோர் ஆசிரியைகள்தான். அவர்களால் இரவு வெகுநேரம் வரை பணியில் இருக்க முடியாது. ஆனால், தொலைதூர வாக்குச்சாவடிகளில் வாகனங்கள் வந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடங்கிய பெட்டிகளை சேகரித்து செல்ல இரவு 9 மணிக்கு மேல் ஆகி விடுகிறது. அதிலும் இந்த தேர்தலில் வாக்குப்பதிவு முடியும் நேரமே மாலை 6 மணி என்பதால், ஆசிரியைகள் இன்னும் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். அவர்களுக்கு ஒரு ஆறுதல் செய்தி.
அவர்கள் வீட்டில் இருந்து 2 மணி நேரத்திற்குள் செல்லக்கூடிய வாக்குச்சாவடிகளில்தான் பணி ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியுள்ளார்.
ஆனாலும், சென்னை போன்ற முக்கிய நகரங்களிலேயே இரவு நேரத்தில் வழிதெரியாத இடத்தில் இருந்து பெண்கள் வீடு திரும்புவது பாதுகாப்பற்றதாக உள்ளது. தேர்தல் பணியாற்றும் பெண் ஊழியர்கள் அனைவருக்கும் வாகன ஏற்பாடும் செய்யப்படுவதில்லை. அதனால், தேர்தல் பணிக்கு ஒப்புக் கொள்ளவே பெண் ஊழியர்கள் அச்சப்படுகின்றனர்.
எனவே, பெண் ஊழியர்களுக்கு அவர்களின் வீட்டுக்கு அருகில் உள்ள வாக்குச்சாவடியில் பணி ஒதுக்கீடு செய்வதையும், மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தால் இரவு 7 மணிக்குள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடங்கிய பெட்டிகள், வாகனங்களில் ஏற்றப்பட வேண்டும் என்பதையும் தேர்தல் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்

ஒதுக்கப்படுகிறதா 25 விழுக்காடு?
லேபிள்கள்:
Educational News
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பல நிலைகளிலும் மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்போது பிளஸ்2 மாணவர் சேர்க்கை, பாடப்பிரிவுகள் ஒதுக்கீடு என பள்ளிகள் மும்முரமாகிவிடும். ஆனால் ஏழைகளுக்காக ஒவ்வொரு பள்ளியும் ஒதுக்க வேண்டிய 25% இடங்கள் பற்றி மாணவர் சேர்க்கையில் எந்த அளவுக்கு உரிய அக்கறை செலுத்தப்படுகிறது என்கிற கேள்வி கல்வித் துறைக்கும் தனியார் பள்ளிகளுக்கும் கசப்பானதாகத்தான் இருக்கும்.
பள்ளிக் கல்வித் துறையின் ஆணைப்படி, ஏழை மாணவர்களுக்கான 25% ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடத்தும் நடைமுறைகள் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தொடங்கப்பட வேண்டும். ஆனால், தற்போது தேர்தல் நடப்பதால் அரசு இயந்திரம் எந்த அளவுக்கு இதை சிறப்பாக செய்து முடிக்கும் என்று தெரியவில்லை. கல்வித் துறை இதற்காக களம் இறங்கினாலும்கூட, எந்த அளவுக்கு தனியார் பள்ளிகள் ஒத்துழைக்கும் என்பதும் தெரியவில்லை. காரணம்- கடந்த இரு ஆண்டுகளாக, விதிகளை மதிக்காத பள்ளிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுதான்.
சென்ற ஆண்டு ஏழை மாணவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் வெறும் 60 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே அந்த 25% ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டனர். அதாவது 23,248 மாணவர்கள் (மொத்த இடங்கள் 58,619) மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையை மேற்கொள்ளத் தவறிய பள்ளிகள் 950. இவை அனைத்தும் நகர்ப்புறங்களைச் சேர்ந்தவை. சேர்க்கப்பட்ட மாணவர்களில் பலர், ஏழைகளாகக் கணக்குக்காட்டி, இந்த ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது வேறுகதை.
இந்த திட்டம் ஏன் இந்த அளவுக்கு புறக்கணிப்பை சந்தித்துள்ளது என்பதற்கு சில காரணங்கள்: ஏழை மாணவர்களை தனித்து பிரித்து வைக்கக்கூடாது என்பதால், தங்கள் பணக்கார நுகர்வோர் (பெற்றோர் என்கிற சொல் இங்கு பொருந்தும் என்று தோன்றவில்லை) தங்கள் குழந்தைகளை இந்தப் பள்ளிக்கு அனுப்பத் தயங்குகிறார்கள் என்பதும், 25% ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு அரசு தர வேண்டிய கல்விக்கட்டண ஈட்டுத்தொகை கடந்த இரு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என்பதும்தான்.
மேலும், தனியார் பள்ளிகளில் 50%க்கும் அதிகமானவை சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகள். இதில் 90% பள்ளிகள் கிறிஸ்துவ நிர்வாகம் சார்ந்தவை. சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு அரசு இத்திட்டத்திலிருந்து விதிவிலக்கு அளித்துள்ளது. மிகவும் சிறப்பாக நடைபெறும் இந்த பள்ளிகளுக்கு விதிவிலக்கு அளிப்பது எந்த வகையிலும் நியாயமே இல்லை என்று தனியார் பள்ளிகளின் சங்கங்களே எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஆனால் வாக்குவங்கியைக் கணக்கில் கொண்டு அரசு விதிவிலக்களிக்கிறது.
தமிழ்நாட்டில் இவ்வாறு விதிவிலக்கு பெறும் பள்ளிகள் எவையெவை? அப்பள்ளிகள் சிறுபான்மையினரால் நடத்தப்பட்டாலும் அங்கு பயிலும் மாணவர்களில் எத்தனை பேர் சிறுபான்மையினர்? இவர்களுக்கு விலக்கு பெறும் உரிமை உண்டா இல்லையா என்பதை வரன்முறைப்படுத்தும் முயற்சியையாகிலும் செய்ய வேண்டும். ஆனால் வாக்கு வங்கி அரசியலில் இது சாத்தியமா?
இத்தகைய சூழலில், பள்ளிகள் தாங்களாகவே 25% ஒதுக்கீட்டை பூர்த்தி செய்ய வேண்டும் என்று சொல்வதால் இந்த திட்டம் உண்மையாக நிறைவேற்றப்படப்போவதில்லை. ஏழை மாணவர்கள் என்ற பெயரில் நடுத்தர வருவாய்ப் பிரிவினரைச் சேர்த்து, அவர்களிடம் அரசுக் கட்டணம் போக, மீதிக் கட்டணத்தை ரகசியமாக வசூலிக்கும் போக்குதான் நடக்கும். இதற்குக் கல்வித் துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
தற்போது உயர்கல்வியில் இருக்கும் கலந்தாய்வு முறைதான் இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு. ஒவ்வொரு நகரத்திலும் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அனைத்துக்குமான கலந்தாய்வை பள்ளிக் கல்வித்துறை அந்தந்த ஊரில் பொது இடத்தில் நடத்த வேண்டும். பெற்றோரின் வருவாய்ச் சான்று, இருப்பிடச் சான்று, குழந்தையின் உடன்பிறப்புகள் படிக்கும் பள்ளி ஆகிய மூன்றின் அடிப்படையில், அந்த குழந்தை எந்தப் பள்ளிகளில் சேர முடியும் என்பதை தரவரிசைப்படுத்தலாம். கலந்தாய்வின்போது எந்தெந்த பள்ளிகளில் இடம் இருக்கிறதோ அதில் தங்கள் குழந்தைகளை பெற்றோர் சேர்த்துவிட முடியும்.
பள்ளிப்படிப்புக்கு கலந்தாய்வா என்று சிலர் புருவம் உயர்த்தலாம். ஆனால் 25% ஒதுக்கீடு உண்மையாக தமிழ்நாட்டில் நடைபெற வேண்டும் என்றால், கலந்தாய்வும், சிறுபான்மையினர் பள்ளிகளையும் இத்திட்டத்திற்கு உட்படுத்துவதும் தவிர்க்கவியலாதவை.
அனைத்துப் பகுதியினருக்கும், பிரிவினருக்கும் பொதுவான சமச்சீர் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதுதான் மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படை நோக்கம். அது கல்வியால் மட்டுமே சாத்தியப்படும். அதனால், குறைந்த வருவாய் பிரிவினருக்கான 25% ஒதுக்கீட்டை உறுதி செய்வது அரசின் கடமை!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)