5/22/2014
M.L.A.களுக்கு புகார் அனுப்ப இ.மெயில் முகவரி
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
பள்ளிகளுக்கு புத்தகம் வழங்க கல்வித்துறை மும்முரம்
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
ஓய்வு பெறும் நாளன்றே ஓய்வூதிய ஆணை. மத்திய அரசில் அறிமுகம்
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
அரசு ஊழியர்களின் விடுமுறையை குறைக்க வழக்கு
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
5/21/2014
அங்கீகாரம் பெறாத 49 பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவு!
லேபிள்கள்:
Educational News
கோவையில் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வந்த 49 மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோவையில் அங்கீகாரம் பெறாமல் 49 மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் இயங்கி வந்தது. இதையடுத்து அந்த பள்ளிகள் அங்கீகாரம் பெற கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அந்த பள்ளிகளின் நிர்வாகம் இதுவரை அனுமதி பெறவில்லை. இதையடுத்து அந்த 49 பள்ளிகளையும் மூட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கும் பணியையும் அந்தந்த பள்ளிகளே மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். கோவை: கோவையில் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வந்த 49 மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோவையில் அங்கீகாரம் பெறாமல் 49 மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் இயங்கி வந்தது. இதையடுத்து அந்த பள்ளிகள் அங்கீகாரம் பெற கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அந்த பள்ளிகளின் நிர்வாகம் இதுவரை அனுமதி பெறவில்லை. இதையடுத்து அந்த 49 பள்ளிகளையும் மூட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்
பெற்றோர், மாணவர்களை கவரும் அரசுப் பள்ளி
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
கூடலூர்: கூடலூர் புளியாம்பாறையில் உள்ள அரசு பள்ளியில், மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி வெளியிட்டுள்ள நோட்டீஸ் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆங்கிலத்தின் மீதுள்ள ஆர்வம்; தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பெரும்பாலான பெற்றோர், தங்கள் பிள்ளைகளை தனியார் ஆங்கில பள்ளிகளில் சேர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், நகர் புறங்களுக்கு அடுத்ததாக, கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளும் மூடப்படும் சூழல் உருவாகி வருகிறது. இதனை தடுக்கும் வகையில், அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வியை படிப்படியாக கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதில், மாவட்டத்தில் தற்போது, 27 அரசு பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசு பள்ளி குறித்து பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. உதாரணமாக, கூடலூர் புளியாம்பாறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவங்க பள்ளி, நிர்வாகம், தனியார் பள்ளிகளுக்கு இனையாக துண்டு பிரசுரங்களை வெளியிட்டுள்ளது.
அதில், ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாணவர்களுக்கு தரமான கல்வி; அரசு சார்பில் கிடைக்கும் அனைத்து இலவச திட்டங்கள்; பள்ளியில் உள்ள ஆங்கில பிரிவு போன்ற தகவல்களை வெளியிட்டுள்ளது. இதனை வரவேற்றுள்ள பல பெற்றோர்கள், அந்த பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க முடிவு செய்துள்ளனர்.
ஆசிரியர் சங்கங்களின் அங்கீகாரம் ரத்தாகுமா? பரபரப்பை ஏற்படுத்திய அரசின் கடிதம்.
லேபிள்கள்:
Educational News
அரசுக்கு எதிராக தேர்தல் சமயத்தில் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஆசிரிய சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளதால், ஆசிரியர் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர்களை உறுப்பினர்களாக கொண்டு பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் செயல்படுகின்றன. கடந்த மார்ச் 6ம் தேதி "இடை நிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைத்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மற்றும் தமிழக ஆசிரியர் கூட்டணி ஆகிய சங்கங்கள் விடுத்த அழைப்பை ஏற்று, பல ஆசிரியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை மாநில தலைவர் ஆரோக்கியதாஸ், மாநில முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:"ஆசிரியர்களை ஸ்டிரைக் நடத்த அழைப்பு விடுத்த தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொது செயலர் மீனாட்சி சுந்தரம், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநிலதலைவர் அண்ணா மலை ஆகியோர் ஓய்வு பெற்ற அரசு ஆசிரியர்களாக உள்ளனர். ஆசிரியர்களுக்கான நன்னடத்தை விதிப்படி, அவர்கள் சங்கங்களின் முக்கிய நிர்வாக பொறுப்புகளில் இருக்க முடியாது; அவர்களை நன்னடத்தை விதிகள் எதுவும் கட்டுப்படுத்தாது. எனவே, அவர்கள் தலைமையில் செயல்படும் சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்; அச்சங்கங்களை மாவட்ட, மாநில அளவிலான எவ்விதபேச்சு வார்த்தைக்கும் அழைக்க கூடாது" என, கூறப்பட்டிருந்தது.
இக்கடிதம் தொடர்பாக அரசு துணை செயலர் செல்வராஜ், தொடக்க கல்வி இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "ஆசிரியர் சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பான புகார் மனு மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மனு மீதான புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரத்தை முதல்வரின் தனிப்பிரிவுக்கு வரும் 15 நாட்களுக்குள் "ஆன்-லைன்" மூலம் தெரிவிக்க வேண்டும்." இவ்வாறு ஆரோக்கியதாஸ் கூறியுள்ளார்.அரசின் இந்நடவடிக்கை, ஆசிரிய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவப் படிப்பு - 25 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் விநியோகம்
லேபிள்கள்:
Educational News
சென்னை: தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 25 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், அகில இந்திய ஒதுக்கீடு, 15 சதவீதம் போக, மீதம், 2,172 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லுாரியில், 85 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், 14ம் தேதி துவங்கியது.
முதல் நாளில், 12,138 மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை ஆர்வமுடன் பெற்றுச் சென்றனர். நேற்று(மே 20ம் தேதி) 1,225 பேர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர். ஆறு நாட்களில், 25 ஆயிரத்து 474 விண்ணப்பங்கள் தரப்பட்டுள்ளன.
இம்மாதம், 30 தேதி வரை விண்ணப்பம் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஜூன் 2ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தோழர் ஆர். உமாநாத் காலமானார்
லேபிள்கள்:
வருந்துகிறோம்
விடுதலைப் போராட்ட வீரர், விடுதலைக்குப் பின் இந்தியாவில் சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்கான தொண்டில் தம்மை ஒப்படைத்துக்கொண்ட போராளி, தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கத்தைக் கட்டி வளர்த்த முன்னோடி, செங்கொடித் தொழிற்சங்கத்தின் மூத்த தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஆர். உமாநாத் காலமானார்.
5/20/2014
திருச்சியில் நடைபெற்ற இரட்டைப்பட்டம் வழக்கின் ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் மாவட்ட தொடர்பாளர்கள் அறிவிப்பு
லேபிள்கள்:
dual degree
திருச்சியில் கடந்த 18.5.2014 அன்று இரட்டைப்பட்டம் ஒருங்கிணைப்பு கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டலின் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தை வருமானவரி துறை ஆய்வாளர் திரு.மீரான் இப்ரான் அலி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். கூட்டத்தில் இதுவரை நீதி மன்றத்தில் நடந்த வழக்கின் தன்மை மற்றும் தற்போதைய உச்ச நீதி மன்றத்தில் வழக்கின் நிலை குறித்து வழக்கை நடத்தி வரும் திரு.கலியமூர்த்தி, திரு.ஆரோக்கிய ராஜ், திரு.கருணாலய பாண்டியன் ஆகியோர் எடுத்துரைத்தனர். புது தில்லியில் உச்ச நீதி மன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தது முதல் இது வரை நடந்த நிகழ்வுகள் எடுத்து வைக்கப்பட்டது. வழக்கில் புதிதாக இணைய விருப்பம் உள்ளவர்களுக்கு வசதியாக மாவட்ட அளவில் தொடர்பாளர்களையும் இக்கூட்டம் அறிவித்தது. இதில் உச்ச நீதி மன்றத்தில் வழக்கில் இணைபவர்களுக்கு மட்டும் 1.1.2012 முன்னுரிமை பெற்றுத் தரப்படும் என்ற வழக்குரைஞரின் உறுதிமொழி தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இரட்டைப்பட்டம் பெற்ற ஆசிரியர் நண்பர்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல விசயங்கள் விரிவாக அலசப்பட்டன. இறுதியில் மாவட்ட தொடர்பாளர்களை இறுதி செய்து அவர்கள் மூலம் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் இருந்து புதிதாக வழக்கில் இணைபவர்களை இறுதி படுத்த முடிவாற்றப்பட்டது.
முதன்மை ஒருங்கிணைப்பாளர்கள்:
1. திரு.கலியமூர்த்தி - 9894718859
2. திரு.ஆரோக்கியராஜ் - 9942575162
நிதி நிர்வாகம்:
1. திரு.கருணாலய பாண்டியன் - 9894192500
2. திரு. கணேஷ் - 9976105153
மாவட்ட தொடர்பாளர்கள்:
1. திருவள்ளூர் :
திரு.ரவிச்சந்திரடு - 9150008128
2. வேலூர் :
திரு. மனோகரன் - 9786267860
3. காஞ்சிபுரம்:
திரு.தனசேகர் - 7639564875,
திரு.ஏழுமலை - 8695172249
4. விழுப்புரம் :
திரு.சம்சுதீன் - 9443520224
5. திருவண்ணாமலை:
திரு.பழனி - 9488659005,
திரு.இராமச்சந்திரன் - 9865310066,
திரு.விஸ்வநாத் -9842942105
6. பெரம்பலூர்:
திரு.தில்லைவாசன் - 8786171750
7. நெய்வேலி:
திரு. ராஜாராமன் - 9443983707
8. திண்டுக்கல்:
திரு.நாகராஜன் - 9659598438
9. கடலூர்:
திரு.விக்டர் ஜோரமைஸ் - 9715662185
10. கிருஷ்ணகிரி, தருமபுரி:
திரு.தமிழரசன் - 7402730720, 9942839031
11. கோவை, ஈரோடு, திருப்பூர் :
திரு. திருமுருகன் - 9788008897
12. நாமக்கல், சேலம், திருச்சி, கரூர்:
திரு.சுரேஷ்குமார் - 9942222257, 9787777788
திரு.ரமேஷ் - 7502109065
13. விருதுநகர்:
திரு.பால்பாண்டி - 8015931279, 9442956782
14. சிவகங்கை:
திரு.கணேஷ் - 9976105153
15. இராமநாதபுரம்:
திரு.வேலுச்சாமி - 9443612656
16. புதுக்கோட்டை:
திரு.சவுரிராஜன் - 9843935646, 7598275646
17. கண்ணியாகுமரி, திருநெல்வேலி:
திரு.மார்டின் - 9788879815
18 தேனி :
திரு.முருகன் - 9698475899
முதன்மை ஒருங்கிணைப்பாளர்கள்:
1. திரு.கலியமூர்த்தி - 9894718859
2. திரு.ஆரோக்கியராஜ் - 9942575162
நிதி நிர்வாகம்:
1. திரு.கருணாலய பாண்டியன் - 9894192500
2. திரு. கணேஷ் - 9976105153
மாவட்ட தொடர்பாளர்கள்:
1. திருவள்ளூர் :
திரு.ரவிச்சந்திரடு - 9150008128
2. வேலூர் :
திரு. மனோகரன் - 9786267860
3. காஞ்சிபுரம்:
திரு.தனசேகர் - 7639564875,
திரு.ஏழுமலை - 8695172249
4. விழுப்புரம் :
திரு.சம்சுதீன் - 9443520224
5. திருவண்ணாமலை:
திரு.பழனி - 9488659005,
திரு.இராமச்சந்திரன் - 9865310066,
திரு.விஸ்வநாத் -9842942105
6. பெரம்பலூர்:
திரு.தில்லைவாசன் - 8786171750
7. நெய்வேலி:
திரு. ராஜாராமன் - 9443983707
8. திண்டுக்கல்:
திரு.நாகராஜன் - 9659598438
9. கடலூர்:
திரு.விக்டர் ஜோரமைஸ் - 9715662185
10. கிருஷ்ணகிரி, தருமபுரி:
திரு.தமிழரசன் - 7402730720, 9942839031
11. கோவை, ஈரோடு, திருப்பூர் :
திரு. திருமுருகன் - 9788008897
12. நாமக்கல், சேலம், திருச்சி, கரூர்:
திரு.சுரேஷ்குமார் - 9942222257, 9787777788
திரு.ரமேஷ் - 7502109065
13. விருதுநகர்:
திரு.பால்பாண்டி - 8015931279, 9442956782
14. சிவகங்கை:
திரு.கணேஷ் - 9976105153
15. இராமநாதபுரம்:
திரு.வேலுச்சாமி - 9443612656
16. புதுக்கோட்டை:
திரு.சவுரிராஜன் - 9843935646, 7598275646
17. கண்ணியாகுமரி, திருநெல்வேலி:
திரு.மார்டின் - 9788879815
18 தேனி :
திரு.முருகன் - 9698475899
5/16/2014
இரட்டைப்பட்டம் நிலை பற்றி வழக்குரைஞரின் கடிதாம
லேபிள்கள்:
dual degree
இரட்டைப்பட்டம் ஒருங்கிணைப்பு கூட்டம். 18.5.2014 அன்று திருச்சியில் நடைபெறுகிறது.
லேபிள்கள்:
dual degree
இரட்டைப்பட்டம் பயின்று முடித்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தவர்களின் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹேட்டலில் வருகிற 18.4.2014 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற இருக்கிறது. இது குறித்து வழக்கை எடுத்து நடத்தும் ஒருங்கிணைப்பாளர்கள் நம்மிடம் கூறியதாவது
இரட்டைப்பட்டம் சார்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தோல்வியடைந்த நிலையில் எங்கள் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளோம். உச்ச நீதி மன்றம் தமிழ்நாடு அரசு மற்றும் யு.ஜி.சி.க்கு நோட்டீஸ் அனுப்பியது. மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது யு.ஜி.சி. 10+2+3+1என்ற அடிப்படையில் பயின்றால் அந்த டிகிரி செல்லுபடியாகும் என பதில் மனு தாக்கல் செய்தது. இந்த நிலையில் வழக்கின் தன்மை குறித்தும் வழக்கில் விருப்பமுள்ளவர்களை புதிதாக இணைப்பதற்கும் ஆலோசணை கூட்டம் திருச்சியில் வருகிற ஞாயிற்று கிழமை நடைபெற உள்ளது. இவ்வழக்கில் இணைய விருப்பம் உள்ளவர்கள் தங்கள் சுய விபர பட்டியலுடன், சான்றிதழ் நகல்களையும் கொண்டு வர வேண்டும். மேலும் உச்ச நீதி மன்ற வக்காலத்தில் கையொப்பம் இடுவதற்கு தயாராக அவர்கள் வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். கூட்டம் காலை 10.00 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டலில் நடைபெறும். உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தவர்களுக்கு 1.1.2012 முதல் முன்னுரிமையின் அடிப்படையில் தீர்ப்பு கிடைப்பது உறுதி என வழக்குரைஞர்கள் எங்களிடம் உறுதியளித்துள்ளனர். இது சம்பந்தமாக வழக்குரைஞர் சங்கரன் ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். மேலும் தகவல்களுக்கு கீழ்கண்ட நபர்களை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.மேல் விபரங்களுக்கு கீழ் கண்ட தொடர்பாளர்களை தொடர்பு கொள்ளலாம்.1. திரு. கலியமூர்த்தி - 9894718859 (விழுப்புரம்) 2. திரு.ஆரோக்கியராஜ் - 9942575162 (சிவகங்கை)3.திரு.கணேஷ் - 9976105153 (சிவகங்கை)4.திரு.கருணாலய பாண்டியன் - 9894192500 (திருவள்ளூர்) 5.திரு.இரவிச்சந்திரடுலு - 8608273362 6.திரு. விஸ்வநாத் - 9842942105
இரட்டைப்பட்டம் சார்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தோல்வியடைந்த நிலையில் எங்கள் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளோம். உச்ச நீதி மன்றம் தமிழ்நாடு அரசு மற்றும் யு.ஜி.சி.க்கு நோட்டீஸ் அனுப்பியது. மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது யு.ஜி.சி. 10+2+3+1என்ற அடிப்படையில் பயின்றால் அந்த டிகிரி செல்லுபடியாகும் என பதில் மனு தாக்கல் செய்தது. இந்த நிலையில் வழக்கின் தன்மை குறித்தும் வழக்கில் விருப்பமுள்ளவர்களை புதிதாக இணைப்பதற்கும் ஆலோசணை கூட்டம் திருச்சியில் வருகிற ஞாயிற்று கிழமை நடைபெற உள்ளது. இவ்வழக்கில் இணைய விருப்பம் உள்ளவர்கள் தங்கள் சுய விபர பட்டியலுடன், சான்றிதழ் நகல்களையும் கொண்டு வர வேண்டும். மேலும் உச்ச நீதி மன்ற வக்காலத்தில் கையொப்பம் இடுவதற்கு தயாராக அவர்கள் வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். கூட்டம் காலை 10.00 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டலில் நடைபெறும். உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தவர்களுக்கு 1.1.2012 முதல் முன்னுரிமையின் அடிப்படையில் தீர்ப்பு கிடைப்பது உறுதி என வழக்குரைஞர்கள் எங்களிடம் உறுதியளித்துள்ளனர். இது சம்பந்தமாக வழக்குரைஞர் சங்கரன் ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். மேலும் தகவல்களுக்கு கீழ்கண்ட நபர்களை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.மேல் விபரங்களுக்கு கீழ் கண்ட தொடர்பாளர்களை தொடர்பு கொள்ளலாம்.1. திரு. கலியமூர்த்தி - 9894718859 (விழுப்புரம்) 2. திரு.ஆரோக்கியராஜ் - 9942575162 (சிவகங்கை)3.திரு.கணேஷ் - 9976105153 (சிவகங்கை)4.திரு.கருணாலய பாண்டியன் - 9894192500 (திருவள்ளூர்) 5.திரு.இரவிச்சந்திரடுலு - 8608273362 6.திரு. விஸ்வநாத் - 9842942105
5/14/2014
அண்ணாமலை பல்கலைகழகம் - Hall Ticket May -2014
லேபிள்கள்:
தேர்வு,
Educational News
| Hall Ticket for Directorate of Distance Education - May 2014 Examinations |
மாநில அளவில் போராட தலைமையாசிரியர்கள் முடிவு
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
மதிப்பெண் பட்டியல் தரவிறக்கம் செய்யலாம்
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
5/13/2014
ஆசிரியர் பயிற்சி விண்ணப்பம் விநியோகம்
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
CBSE மாணவர்களுக்கு கல்லூரி அட்மிசனில் சிக்கல்
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
தலைமையாசிரியர் பதவி உயர்வில் சிக்கல்
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
ஆசிரியர்களின் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்கள்; இயக்குநர் பதில்
ஆசிரியர்களின் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்கள் ஜூன் மாதம் 2வது வாரத்திற்கு மேல் பெறப்பட்டு ஜூலை 2வது வாரத்தில் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர்அவர்களும், தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களும் தெரிவித்துள்ளனர்.
பிறந்த தேதி திருத்தம் செய்வது எப்படி?
லேபிள்கள்:
Educational News
பள்ளி /கல்லூரி சான்றிதழ்களில் பிறந்த தேதியோ, வருடமோ, மாதமோ தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்தந்த எல்லைக்குட்பட்டசிவில்முன்சீஃப்) நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு பிறப்புச் சான்றிதழ் இணைக்க வேண்டும். ஒருவேளை பிறப்புச் சான்றிதழ் இல்லாத பட்சத்தில் உள்ளூர் மருத்துவர் ஒருவரிடம் சான்றிதழ் வாங்கிக் கொடுக்க வேண்டும்.நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலை வைத்து பள்ளி/கல்லூரி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றில் மாற்றக் கோரி விண்ணப்பிக்கலாம். எங்கே விண்ணப்பிப்பது? பள்ளி மாற்றுச் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள அந்தந்தப் பள்ளியில் விண்ணப்பிக்க வேண்டும்.கல்லூரி மாற்றுச் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ளஅந்தந்தப் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். பத்தாம் /பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பிறந்த தேதி திருத்தம் செய்ய அரசு தேர்வுத்துறை இயக்குநரகத்துக்கு அனைத்து சான்றுகளையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். முகவரி
Government of Tamil NaduDirectorateof Government ExaminationDPI Complex, College Road, Chennai
Government of Tamil NaduDirectorateof Government ExaminationDPI Complex, College Road, Chennai
இரட்டைப்பட்டம் வழக்கில் புதிய திருப்பம் - இரட்டைப்பட்டம் செல்லும் என் யு.ஜி;சி; அறிவிப்பு
லேபிள்கள்:
court news,
dual degree
இரட்டைப்பட்டடம் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடியானதை தொடர்ந்து அதன் ஒருங்கிணைப்பாளர்கள் புது தில்லி உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இவ்வழக்கு உச்ச நீதி மன்றம் 6வது அமர்வில் நீதியரசர்கள் இரதாகிருஷ்ணன் மற்றும் விக்ராம் சிங்சென் முன்னிலையில் 25வது வழக்காக கடந்த 02.05.2014 அன்று விசாரணைக்கு வந்தது. இதில் அரசு மற்றும் பல்கலைகழக மானியக் குழுவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். வழக்கினை முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியும், இன்றைய மூத்த வழக்குரைஞரான கிரி அவர்கள் பங்கேற்று வாதாடினார். வழக்கை ஏற்றுக்கொண்ட நீதி பதி அவர்கள் 7.5.2014 அன்று உத்தி வைத்தனர். வழக்கானது மீண்டும் 9.05.2014 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் பங்கெடுத்த யு.ஜி.சி. 10+2+3+1 என்ற அடிப்படையில் பயின்றால் அந்த படிப்பு தகுதியானது பதில் அளித்தது. இருந்தாலும் விரிவாக பதிலுரை தாக்கல் செய்ய கால அவகாசம் தேவைப்படுவதாக யு.ஜி.சி. கேட்டுக்கொண்டது. தமிழக அரசும் கால அவகாசம் கேட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே உச்ச நீதி மன்றத்தில் வழக்கை தாக்கல் செய்த அனைவருக்கும் வழக்கு குறித்த விபரம் அனுப்ப நீதி மன்றம் முனைந்துள்ளது. அதன் பின் வழக்குரைஞர்கள் மூலம் உச்ச நீதி மன்றத்தை நாடியுள்ளவர்களின் பட்டியல் இறுதி செய்யப்படும்.
இது குறித்து இதன் ஒருங்கிணைப்பாளர் திரு.கலியமூர்த்தி அவர்கள் நம்மிடம் கூறியதாவது: இரட்டைப்பட்டம் வழக்கை உச்ச நீதி மன்றம் ஏற்றுக்கொண்டது என்பதே எங்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம். ஏனென்றால் வழக்கியல் நியாயம் இல்லாமல் உச்ச நீதி மன்றம் எந்த வழக்கையும் ஏற்றுக்கொள்வதில்லை. இதில் யு.ஜி.சியும் எங்களுக்கு சாதகமாக பதில் அளித்துள்ளது. இதில் யாருடைய பதவி உயர்வையோ அல்லது பணியமர்த்துவதையோ தடுப்பது எங்கள் நோக்கம் அல்ல. ஆனால் அதே நேரத்தில் உச்ச நீதி மன்றத்தை நாடிள்ள அனைவருக்கும் 1.1.2012 முன்னுரிமையை பெறுவது என்பது உறுதியாகி விட்டது. எனவே நாங்கள் இந்த முறை உறுதியாக வெற்றியடைவோம். இது குறித்து இரட்டைப்பட்டம் படித்து பதவி உயர்வை தவறவிட்டவர்கள் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களின் கூட்டம் சென்னை அல்லது திருச்சியில் தேர்தல் முடிவுக்கு பின்பு நடத்துவதற்கு ஆலோசணை செய்து வருகிறோம் என்றார். மேல் விபரங்களுக்கு கீழ் கண்ட தொடர்பாளர்களை தொடர்பு கொள்ளலாம்.
1. திரு. கலியமூர்த்தி - 9894718859 (விழுப்புரம்)
2. திரு.ஆரோக்கியராஜ் - 9942575162 (சிவகங்கை)
3.திரு.கணேஷ் - 9976105153 (சிவகங்கை)
4.திரு.கருணாலய பாண்டியன் - 9894192500 (திருவள்ளூர்)
5.திரு.இரவிச்சந்திரடுலு - 8608273362
6.திரு. விஸ்வநாத் - 9842942105
இது குறித்து இதன் ஒருங்கிணைப்பாளர் திரு.கலியமூர்த்தி அவர்கள் நம்மிடம் கூறியதாவது: இரட்டைப்பட்டம் வழக்கை உச்ச நீதி மன்றம் ஏற்றுக்கொண்டது என்பதே எங்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம். ஏனென்றால் வழக்கியல் நியாயம் இல்லாமல் உச்ச நீதி மன்றம் எந்த வழக்கையும் ஏற்றுக்கொள்வதில்லை. இதில் யு.ஜி.சியும் எங்களுக்கு சாதகமாக பதில் அளித்துள்ளது. இதில் யாருடைய பதவி உயர்வையோ அல்லது பணியமர்த்துவதையோ தடுப்பது எங்கள் நோக்கம் அல்ல. ஆனால் அதே நேரத்தில் உச்ச நீதி மன்றத்தை நாடிள்ள அனைவருக்கும் 1.1.2012 முன்னுரிமையை பெறுவது என்பது உறுதியாகி விட்டது. எனவே நாங்கள் இந்த முறை உறுதியாக வெற்றியடைவோம். இது குறித்து இரட்டைப்பட்டம் படித்து பதவி உயர்வை தவறவிட்டவர்கள் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களின் கூட்டம் சென்னை அல்லது திருச்சியில் தேர்தல் முடிவுக்கு பின்பு நடத்துவதற்கு ஆலோசணை செய்து வருகிறோம் என்றார். மேல் விபரங்களுக்கு கீழ் கண்ட தொடர்பாளர்களை தொடர்பு கொள்ளலாம்.
1. திரு. கலியமூர்த்தி - 9894718859 (விழுப்புரம்)
2. திரு.ஆரோக்கியராஜ் - 9942575162 (சிவகங்கை)
3.திரு.கணேஷ் - 9976105153 (சிவகங்கை)
4.திரு.கருணாலய பாண்டியன் - 9894192500 (திருவள்ளூர்)
5.திரு.இரவிச்சந்திரடுலு - 8608273362
6.திரு. விஸ்வநாத் - 9842942105
5/09/2014
இரட்டைப்பட்டம் வழக்கை ஏற்றுக்கொண்டது உச்ச நீதி மன்றம்
லேபிள்கள்:
dual degree
இரட்டைப்பட்டம் வழக்கை ஏற்றுக்கொண்டது உச்ச நீதி மன்றம்
இரட்டை பட்ட வழக்கை உச்ச நீதி மன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இது இவ்வழக்கில் பெரிய விசயமாக கருதப்படுகிறது
இரட்டை பட்ட வழக்கை உச்ச நீதி மன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இது இவ்வழக்கில் பெரிய விசயமாக கருதப்படுகிறது
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
அரசு பள்ளிகளில் LKG & UKG வகுப்புகள்
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
நர்சரி மாணவர் சேர்க்கை தடை நீக்கம்
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
பிளஸ் 2 தேர்வு: பாட வாரியாக சென்டம் பெற்றவர்கள்.
லேபிள்கள்:
தேர்வு முடிவுகள்
நூறுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்கள்: கணிதப் பாடத்தில் - 3,882
இயற்பியல் பாடத்தில் - 2,710
வேதியியல் பாடத்தில் - 1,693
உயிரியல் பாடத்தில் - 652
கணினி அறிவியல் பாடத்தில் - 993
தாவரவியல் பாடத்தில் - 15
வணிகவியல் பாடத்தில் - 2,581
கணக்கு பதிவியல் - 2,403
வணிக கணிதம் - 605
வேதியியல் பாடத்தில் - 1,693
உயிரியல் பாடத்தில் - 652
கணினி அறிவியல் பாடத்தில் - 993
தாவரவியல் பாடத்தில் - 15
வணிகவியல் பாடத்தில் - 2,581
கணக்கு பதிவியல் - 2,403
வணிக கணிதம் - 605
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 2014 - தேர்ச்சி விகிதம்
லேபிள்கள்:
தேர்வு முடிவுகள்
5/08/2014
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அளித்த புகாரை ஏற்று நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டர்
லேபிள்கள்:
SVG TNPTF
தேர்தலில் நடைபெற்ற விரும்பதகாத நிகழ்வுகள் குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட .நிர்வாகிகள் சந்தித்து புகார் தெரிவித்தனர். அதில் குறிப்பாக எஸ்.புதூர் ஒன்றியம் செட்டிக்குறிச்சி தலைமையாசிரியரை தரக்குறைவாக பேசிய வருவாய் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்தும், செட்டிக்குறிச்சி தலைமையாசிரியரும், எஸ்.புதூர் வட்டாரச் செயலாளருமான திரு.சுதர்சன் அவர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட குறிப்பாணை குறித்தும் இயக்கம் தன்னுடைய கடுமையான அதிர்ப்தியை தெரிவித்தது. மேலும் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு வாக்களிக்க உரிமை மறுக்கப்பட்டதையும், சிவகங்கை காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆசிரியர்களை தரக்குறைவாக பேசிய வருவாய் துறை அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் இயக்கம் வலியுறுத்தியது. நமது நியாயமான கோரிக்கையை உணர்ந்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக நம் முன்னே குறிப்பணையை இரத்து செய்ய நடவடிக்கை எடுத்தார். மேலும் மற்ற கோரிக்கை குறித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார். இச்சந்திப்பில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் திரு.குணசேகரன், சிவகங்கை மாவட்டத்தலைவர் முத்துப்பாண்டியன், மாநிலத் துணைத்தலைவர் ஜோசப் ரோஸ், மாவட்ட செயலாளர் தாமஸ் அமலநாதன் மற்றும் வட்டார, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்
உங்கள் ஊதிய விபரத்தினை அறிய வேண்டுமா?
லேபிள்கள்:
Educational News
அகவிலைப்படி
ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா? அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால்,
ஊதியப்பட்டியல் கருவூலத்தில் சமர்ப்பித்துவிட்டோம் என்று
இழுத்தடிக்கிறார்களா?
கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா? எந்த நாளில் சம்பளம் வரவு வைக்கப்படும் போன்ற தகவகல்களை நீங்களே இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
1. www.treasury.tn.gov.in/Public/ ecstokenno.aspxஎன்ற தளத்திற்குச் செல்லவும்.
2. உங்களது மாவட்டத்தினைத் தெரிவு செய்யவும்.
3. Sub treasury ஐத் தெரிவு செய்யவும்.
4. Select branch என்னும் பகுதிக்கு அருகில் உள்ள கட்டத்தில் உங்கள் வங்கியின் MICR code ஐப் பதிவு செய்யவும்.(உங்கள் காசோலைப் புத்தகத்தில் பார்த்தால் தெரியும்)
5. உங்கள் வங்கிக் கணக்கு எண்ணைப் பதிவு செய்யுங்கள்.
அவ்வளவு தான் நண்பர்களே! எந்த தேதியில் உங்கள் அலுவலர் கருவூலத்தில் ஊதியப்பட்டியலைச் சமர்பித்தார், எந்த தேதியில் அது காசாக்கப்படும் என அறியலாம்.
மேலும் கடந்த காலத்தில் நீங்கள் பெற்ற ஊதிய விபரங்களையும் அறிய முடியும்.
கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா? எந்த நாளில் சம்பளம் வரவு வைக்கப்படும் போன்ற தகவகல்களை நீங்களே இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
1. www.treasury.tn.gov.in/Public/ ecstokenno.aspxஎன்ற தளத்திற்குச் செல்லவும்.
2. உங்களது மாவட்டத்தினைத் தெரிவு செய்யவும்.
3. Sub treasury ஐத் தெரிவு செய்யவும்.
4. Select branch என்னும் பகுதிக்கு அருகில் உள்ள கட்டத்தில் உங்கள் வங்கியின் MICR code ஐப் பதிவு செய்யவும்.(உங்கள் காசோலைப் புத்தகத்தில் பார்த்தால் தெரியும்)
5. உங்கள் வங்கிக் கணக்கு எண்ணைப் பதிவு செய்யுங்கள்.
அவ்வளவு தான் நண்பர்களே! எந்த தேதியில் உங்கள் அலுவலர் கருவூலத்தில் ஊதியப்பட்டியலைச் சமர்பித்தார், எந்த தேதியில் அது காசாக்கப்படும் என அறியலாம்.
மேலும் கடந்த காலத்தில் நீங்கள் பெற்ற ஊதிய விபரங்களையும் அறிய முடியும்.
5/05/2014
உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
லேபிள்கள்:
TNPTF NEWS
நாமக்கல் மாவட்டத்தில் உதவித் தொடக்கக்
கல்வி அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என
நாமக்கல் மாவட்ட ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் மாவட்ட ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள்
கூட்டணியின் செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டத்
தலைவர் பெ.பழனிசாமி தலைமை வகித்தார். வட்டாரச் செயலர் சூ.அமல்ராஜ்
வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் ம,கலைச்செல்வன், மாநில செயற்குழு
உறுப்பினர் வெ.பாலமுரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலாளர் முருக.செல்வராஜன் தீர்மான விளக்கவுரையாற்றினார்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: ஆசிரியர்களுக்கு அஞ்சல் வழிவாக்கு சீட்டுகளை வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக வழங்கிட வேண்டும். வாக்குச் சாவடிகளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஒருமாத கால ஊதியத்தை தேர்தல் கால ஊதியமாக வழங்கிட வேண்டும்.
உதவித் தொடக்கக் கல்வி அலுவலங்களில் தவறிழைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதந்தோறும் ஆசிரியர் குறைதீர் முகாம்களை முறையாக நடத்திட வேண்டும்.
பள்ளிபாளையம், வெண்ணந்தூர் பகுதிகளின் உதவித் தொடக்கக் கல்வி அலுவலக வங்கி கணக்கில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை தணிக்கைக்கு உள்படுத்தப்பட வேண்டும்.
நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம், வெண்ணந்தூர், எருமப்பட்டி பகுதிகளில் தொடக்கக் கல்வி அலுவலக எழுத்தர் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் வட்டாரச் செயலாளர்கள் ஆர்.ஜெகந்நாதன் (வெண்ணந்தூர்), ரா.திருவேங்கடம் (திருச்செங்கோடு), மா.உமாமகேஸ்வரி (எருமப்பட்டி), ஆ.சரவணன் (மோகனூர்), மெ.சங்கர் (கபிலர்மலை) வட்டாரத் தலைவர்கள் கி.விஜயன் (ராசிபுரம்), கே.செளந்தரராஜன் (நாமகிரிப்பேட்டை), பா.சாந்தக்குமார் (திருச்செங்கோடு), வட்டாரப் பொருளாளர்கள் கா.செல்வம் (சேந்தமங்கலம்), கே.தியாகராஜன் (நாமகிரிப்பேட்டை) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டச் செயலாளர் முருக.செல்வராஜன் தீர்மான விளக்கவுரையாற்றினார்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: ஆசிரியர்களுக்கு அஞ்சல் வழிவாக்கு சீட்டுகளை வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக வழங்கிட வேண்டும். வாக்குச் சாவடிகளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஒருமாத கால ஊதியத்தை தேர்தல் கால ஊதியமாக வழங்கிட வேண்டும்.
உதவித் தொடக்கக் கல்வி அலுவலங்களில் தவறிழைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதந்தோறும் ஆசிரியர் குறைதீர் முகாம்களை முறையாக நடத்திட வேண்டும்.
பள்ளிபாளையம், வெண்ணந்தூர் பகுதிகளின் உதவித் தொடக்கக் கல்வி அலுவலக வங்கி கணக்கில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை தணிக்கைக்கு உள்படுத்தப்பட வேண்டும்.
நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம், வெண்ணந்தூர், எருமப்பட்டி பகுதிகளில் தொடக்கக் கல்வி அலுவலக எழுத்தர் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் வட்டாரச் செயலாளர்கள் ஆர்.ஜெகந்நாதன் (வெண்ணந்தூர்), ரா.திருவேங்கடம் (திருச்செங்கோடு), மா.உமாமகேஸ்வரி (எருமப்பட்டி), ஆ.சரவணன் (மோகனூர்), மெ.சங்கர் (கபிலர்மலை) வட்டாரத் தலைவர்கள் கி.விஜயன் (ராசிபுரம்), கே.செளந்தரராஜன் (நாமகிரிப்பேட்டை), பா.சாந்தக்குமார் (திருச்செங்கோடு), வட்டாரப் பொருளாளர்கள் கா.செல்வம் (சேந்தமங்கலம்), கே.தியாகராஜன் (நாமகிரிப்பேட்டை) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் தகுதித்தேர்வு குளறுபடிகள்: கண்டு கொள்ளாத ஊடகங்கள்
லேபிள்கள்:
TRB
சோதனைகள் வரலாம்,ஆனால் சோதனைகள் மட்டுமே வந்து கொண்டிருந்தால் என்ன சொல்வது விதி என்பதா? அல்லது TRB செய்யும் சதி எனபதா?
tet
தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கிராப்பில் சோகம் மட்டுமே மேலே ஏறி ஏறி
இறங்குகிறது.சில நாள் முன்பு வரை தனக்கு வேலை கிடைக்கும் என்ற
நம்பிக்கையில் இருந்தவர்களுக்கு நீதிமன்றம் அறிமுகப் படுத்தியுள்ள புதிய
weighatage முறையில் மதிப்பெண் வெகுவாக குறைந்துள்ளதால் மீண்டும் கலக்கம்
அடைந்துள்ளனர்.
TRB&TN GOVT.
தனியார்
நிறுவனங்கள் முதல் மத்திய(upsc),மாநில (tnpsc) வேலைவாய்ப்பு திட்ட குழு
யாவும் குறிப்பிட்ட பணிக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் முன் இத்தனை காலி
பணியிடங்கள் உள்ளது.இதற்கான தகுதி இது,தேர்வு முறை இப்படி இருக்கும் என
தெளிவாக குறிப்பிடுகிறது.
ஆனால்
TET விஷயத்தில் trb இதுவரை காலிபனியிடங்களின் எண்ணிக்கை,தேர்வு
செய்யப்படும் முறை(weightage method) என எதையும் இதுவரை அதிகாரப் பூர்வமாகா
வெளியிடவில்லை.
மாறாக
மாற்றங்களையும் குழப்பங்களையுமே மட்டுமே ஏற்படுத்தி உள்ளது.கல்வி
துறைக்கென தனியாக அமைச்சகம் அதுவும் 2006 ஆம் ஆண்டு முதல் நிர்வாக
வசதிக்காக தொடக்கக் கல்வி,பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறை என
பிரிக்கப்பட்டு இயங்குகிறது. அதோடு பள்ளி கல்வி துறைக்கென முதன்மைச் செயலர்
(Principal Secretary) ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய
அரசோ,மாநில அரசோ 90% மக்களின் வரி பணத்தில் இயங்க கூடியது.அதாவது நாங்கள்
ஒரு ரூபாய் கொடுத்து ஒரு குண்டு ஊசி வாங்கினால் கூட அதில் 15 பைசா உங்களை
வந்தடைகிறது. நாம் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால் அதில் 19ரூபாய் 20 பைசா
அரசாங்கத்திற்கு செல்கிறது.
இது
போன்ற 15 பைசா பெற்றுதான் உங்களின் சம்பளம் முதல் உங்களின் PA சம்பளம் வரை
பட்டுவாடா செய்யப் படுகிறது.இதனால் தான் உங்களை மக்களின் சேவகர்கள் என்று
மக்களாலோ அல்லது தாங்களாகவோ அழைத்து கொள்கிறீர்கள்..
உண்மை
இப்படி இருக்கையில் நேற்றிரவு TET தேர்வில் நடைபெறும் குழப்பத்திற்கும்
கால தாமதத்திற்கும் உண்டான காரணத்தை அறியும் பொருட்டு பள்ளி கல்வி
அமைச்சர்,முதன்மை செயலாளர் ஆகியோரின் கருத்தை அறிய win tv முற்பட்டது.ஆனால்
அவர்களுக்கு அலைபேசியில் கூட பதிலளிக்க விருப்பமில்லை.
ஒருவேளை
TET தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சார்பாக win தொலைகாட்சி கேட்கும்
கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பொறுப்பு இவருக்கு இல்லையென்றால் இது
குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் நபர் வேறெவர் என தெரியவில்லை.
மக்கள் என்ற சொல்லிற்கு பொருள் நாங்கள் அல்ல என்றால் முதலமைச்சரை குறிக்கிறதா என்பதையாவது இவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
இப்படி இருக்கும் போது "செயல்படாதவர்" என மத்தியில் இருப்பவர் ஒருவரை மட்டும் விமர்சிப்பது தவறு.மாநிலத்திலும் ஒரு அமைச்சகமே உள்ளது.
உயர்
நீதி மன்றத்தின் தீர்ப்பால் சிலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது
உண்மைதான்.அவர்கள் அடுத்த கட்டம்(supreme court) குறித்து சிந்திக்க
தொடங்கி விட்டனர்.அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்குள்
தமிழகஅரசு எதேனும் விரைவான நடவடிக்கை எடுத்தால் உண்டு.இல்லையெனில் இன்னொரு
முறை நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.
இன்னும்
ஒரு மாத காலத்திற்கு நீதிமன்றம் விடுமுறையில் இருக்கும்.இந்த விடுமுறை
தினத்திலேயே தமிழக அரசு ஏதாவது விரைந்து நடவடிக்கை எடுத்தால் தான்
உண்டு.இல்லையென்றால் இன்னொரு சிக்கல் ஆரம்பித்துவிடும்.
தமிழகத்தில்
மோடியா, லேடியா அல்லது டாடியா? என மும்முனை போட்டி இருந்தாலும் இந்திய
அளவில் மோடியா,அல்லது இத்தாலிய லேடியா? என்றிருந்த நிலை மாறி மோடியா அல்லது
இந்திய லேடியா என்ற நிலையை இத்தாலிய லேடியே உருவாக்கி இருப்பதாக செய்திகள்
எங்களை வந்தடைந்துள்ளது.இதனால் நாங்கள் அடைவதும் நீங்கள் தமிழகத்தை
சேர்ந்தவர் என்பதால் மகிழ்ச்சியே!
நடைமுறையில்
தனி மனிதனோ குழுவோ வேறொரு அமைப்போ தன்னுடைய சுய வேலைக்கு முக்கியத்துவம்
கொடுப்பது இயல்புதான்.அந்த வகையில் தேர்தலை சந்தித்து இருக்கும் நீங்கள்
தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் அடுத்து move என்ன செய்ய வேண்டும்
என்பதில் உங்களின் கவனம் இருக்கத்தான் செய்யும்.ஆனால் எங்களின் நீண்ட கால
எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதிலும் கொஞ்சம் அக்கறை செலுத்துங்கள்
முதலமைச்சரே!
TET
தேர்வில் வெற்றி எங்களின் எதிர்பார்ப்புகளை காலதாமதமின்றி விரைந்து
முடித்தால் எங்கள் 75000 குடும்பங்களின் பிரார்த்தனை உங்களுக்கு உண்டு.
பொதுவாக பொது மக்களின் கவனத்தை அதிகம் ஈர்க்காத win தொலைக்காட்சி இன்று எங்கள் 75000 ஆயிரம் குடும்பத்ததினரின் கவனம் பெற்றுள்ளது.
ஊடகங்கள்
கல்வி
சம்பந்த பட்ட செய்திகள் குறித்து அதிகம் விவாதம் செய்யும் புதிய
தலைமுறை,மற்ற செய்தி சேனல்கள் இவ்வளவு குளறுபடி TET தேர்வில் நடந்தும்
மவுனம் காப்பது புதிராக உள்ளது.ஒருவேளை தேர்தல் செய்திகளால் நமது வேதனை
அவர்களின் கவனத்தை ஈர்க்காமல் போயிருக்கலாம்.
ஏதேனும்
சிறிய நிகழ்வையே பெரிதாக்கி அதை கொண்டு publicity பெற்றுவிடுகின்றசெய்தி
தொலைகாட்சி நிறுவனங்கள் 75,000 குடும்பங்களில் நெருப்பாய் கனன்று
கொண்டிருக்கும் TET விஷயத்தை கையில் எடுக்கவில்லை.vijay tv,புதிய தலைமுறை
சேனல்களில் ஒருமுறை கூட நம்முடைய துன்பம் இடம்பெறவில்லை.
இந்த
பதிவை நான் நேற்று காலையிலேயே எழுதி விட்டேன்.ஆனால் publish செய்யவில்லை.
சன் நியூஸ் தொலைக்காட்சியிலும் tet தேர்வு குறித்து விவாதம்
நடத்தினார்கள்.ஆனால் அவர்களின் விவாதத்தில் TET குறித்த முக்கிய
அம்சங்களானா weightage முறை,ஓராண்டு காலம் நெருங்கியும்ஏற்பட்டுள்ள கால
தாமதம்,காலி பணியிடங்களின் எண்ணிக்கை வெளிப்படையாக வெளியிடாமை குறித்து
விவாதிக்கவே இல்லை.நீதிமன்றம் 5% தளர்வை செல்லும் என தீர்ப்பு வழங்கியுள்ள
நிலையில் அதை குறித்தே அதிகம் விவாதித்து விவாதத்தை வீனடித்தார்கள்.அதில்
பழனியப்பன் என்பவரின் உரையாடலே NCTE விதி குறித்துபேசி ஆறுதல் அளித்தார்.
எப்படியோ win tv TET குறித்த விவாதத்தை தொடங்கி வைத்திருப்பதால் win tv க்கு நன்றி.
பரபரப்பான தலைப்பு குறித்துதான் விவாதிப்போம் என தொலைகாட்சி நிறுவனங்கள் நினைத்தால் TET தலைப்பு அதற்கு வகையிலும் குறைவில்லை.
தொலைகாட்சி நிறுவனங்களே TRB யின் செயல்கள் குறித்து நிகழ்ச்சி நடத்தி உங்களின் trb தரத்தை உயர்த்தி கொள்ளுங்கள்.
நாங்களும் பயனடைவோம்.
அன்புடன் மணியரசன(maniyarasan1050@gmail. com)
தயார் நிலையில் இலவச பாடப்புத்தகங்கள் மே 15ம் தேதிக்கு பிறகு வினியோகம்
லேபிள்கள்:
Educational News
தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான இலவச புத்தகங்களை பொறுத்தவரை உயர் வகுப்புகளுக்கான
புத்தகங்கள் அச்சிடும் பணி முடிந்து, தற்போது பத்தாம் வகுப்பு மற்றும்
பிளஸ் 2 வகுப்புகளுக்கான புத்தகங்கள் வினியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
திருவான்மியூர்
கிடங்கில் இருந்து அனைத்து வட்டார அலுவலகங்களுக்கும், பாடப்புத்தகங்களை
பிரித்து, லாரிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டு அந்தந்த மாவட்ட குடோன்களில்
இறக்கி வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர அச்சகங்களில் இருந்து நேரடியாக அனுப்பும்
பணியும் தொடங்கியுள்ளது. அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள்
கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு பிளஸ் 2 பாடப்புத்தகங்களை, பிளஸ் 1
ரிசல்ட் வெளியிட்ட பிறகு தலைமை ஆசிரியர்கள் மூலமாக வழங்குவார்கள்.இதைதொடர்ந்து,
22 வட்டார அலுவலகங்கள், சென்னையில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழகம் ஆகிய
இடங்களில் புத்தகங்கள் விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
விற்பனைக்காக கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் சுமார் 16 லட்சம் புத்தகங்கள்
அச்சிடப்பட்டுள்ளன. இலவச பாடநூல் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்குவதற்காக
64 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்நிலையில், 1 முதல் 9ம்
வகுப்பு வரையிலான முப்பருவ முறை புத்தகங்கள் மே 15ம் தேதிக்குள் அனைத்து
மையங்களுக்கும் அனுப்பி வைக்க தமிழ்நாடு பாடநூல் கழகம் திட்டமிட்டுள்ளது.ஒவ்வொரு
பருவத்துக்கும் ஒரு தொகுதி புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது. பத்தாம்
வகுப்புக்கு இந்த ஆண்டு முப்பருவ முறை இல்லை என்பதால் கடந்த ஆண்டு
பயன்பாட்டில் இருந்த அதே புத்தகமே இந்த ஆண்டும் அச்சிட்டு வழங்கப்பட உள்ளன.
அதற்கான புத்தகங்கள் அச்சிடும் பணிகள் நடக்கிறது. 1 முதல் 5ம்
வகுப்புகளுக்கு தலா ஒரு புத்தகம், 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு தலா 2
புத்தகங்கள் என அச்சிடப்பட்டுள்ளன. ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கும் போது
அனைத்து மாணவர்கள் கையிலும் புதிய புத்தகங்கள் இருக்கும்.பத்தாம்
வகுப்பு பாட புத்தகங்களை, 9ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான பிறகு
அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்குவார்கள். பத்தாம்
வகுப்பு பாடப்புத்தகங்கள் சுமார் 75 லட்சம் அச்சிடப்படுகின்றன. பத்தாம்
வகுப்பு புத்தகங்கள் வினியோகம் செய்த பிறகு படிப்படியாக மற்ற வகுப்பு
புத்தகங்கள் மே மாத இறுதிக்குள் வழங்கப்படும். ஆனால் மே 15ம் தேதிக்குள்
அனைத்து வகுப்பு புத்தகங்களும் வழங்கப்படும் என்று பாடநூல் கழக வட்டாரங்கள்
தெரிவித்தன.
முப்பருவ முறை புத்தகங்கள் அச்சிட்டுள்ள விவரம்:
வகுப்பு புத்தக எண்ணிக்கை
1ம் வகுப்பு 13,26,000
2ம் வகுப்பு 12,86,000
3ம் வகுப்பு 12,66,000
4ம் வகுப்பு 12,64,000
5ம் வகுப்பு 12,89,000
6ம் வகுப்பு 29,75,000
7ம் வகுப்பு 29,59,000
8ம் வகுப்பு 29,59,000
கதவுகளை திறந்துவிடுமாகல்வி உரிமைச் சட்டம்?
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
அரசுக் கொள்கைகளால் தேசத்தின் குடிமக்களுக்கு - குறிப்பாக வருங்காலத் தலைமுறையினருக்கு - இழைக்கப்பட்ட மிகப் பெரிய வஞ்சனைகளைப் பட்டியலிட்டால், கல்வி கடைச்சரக்காக மாற்றப்பட்டிருப்பது நிச்சயமாக அந்தப் பட்டியலில் இடம்பெறும். இதை எதிர்த்து நடந்துகொண்டிருக்கும் போராட்டங்களின் பலனாக, கல்வி உரிமைச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டது. ஆனால், அந்தச் சட்டமும் கூட, பள்ளிக் கல்விப் பொறுப்பை முற்றிலுமாக அரசு ஏற்பது என்பதற்கு மாறாக, தனியார் ஆதிக்கம் தொடர்வதற்கு வழிவகுப்பதாகவே இருக்கிறது என்று கல்வி உரிமை இயக்கத்தினர் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.தனியார் பள்ளிகள் ஒவ்வொரு கல்வியாண்டி லும் மாணவர் சேர்க்கையின்போது 25 விழுக்காடுஇடங்களை, பொருளாதாரத்திலும் சமூக ரீதியாகவும் பின்தங்கிய குடும்பங்களின் குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதியை சேர்த்ததன் மூலம், அனைவருக்கும் தரமான கல்வியைஉறுதிப்படுத்திவிட்டது போன்ற தோற்றம்தான் ஏற் படுத்தப்பட்டது.
ஆனால், இந்த விதியைச் செயல்படுத்த பெரும்பாலான நிர்வாகங்கள் தயாராக இல்லை, சில நிர்வாகங்கள் அரை குறையாகப் பெயரளவுக்கு மட்டுமே செயல்படுத்துகின்றன; மிகச் சில பள்ளிகளில்தான் இந்த விதி முழுமையாகப் பின்பற்றப்படுகிறது.தமிழகத்தில் இந்த மாதம் 3ம் தேதியிலிருந்து இந்த இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான விண்ணப்பப்படிவங்கள் வழங்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே ஆணையிட்டிருந்தது. ஆனால் இந்த ஆணை குறித்துபொதுமக்களுக்கு - குறிப்பாக எந்தப் பிரிவுகளைச்சேர்ந்த மக்களுக்குத் தெரிய வேண்டுமோ அவர்களுக்கு - முறையாகச் சொல்லப்படவில்லை. அதற்கான விளம்பரங்கள் எதையும் அரசு செய்யவில்லை, நிர்வாகங்களும் செய்யவில்லை. கல்வி உரிமைச் செயல்பாட்டாளர்கள் மூலம் தகவலறிந்த குடும்பங்கள் தங்கள் பகுதிகளில் இருக்கிற தனியார் பள்ளிகளுக்குச் சென்றபோது, அந்தப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.பல நிர்வாகங்கள் வேண்டுமென்றேதான் இப்படிச் செய்திருக்கின்றன என்பதை, அந்தப் பள்ளிகளில் இந்தப் பிரிவு மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் எதுவும் தயாராக இல்லை என்பதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.
திறந்திருந்த பள்ளிகளிலும் சிலவற்றில் மட்டும்தான் விண்ணப்பங்கள் வைக்கப்பட்டிருந்தன. பின்தங்கிய நிலையில் உள்ள பெற்றோர் பல பள்ளிகளுக்குச் சென்றபோது, “இங்கேயெல்லாம் வராதீர்கள், உங்கள் குழந்தைகளை நாங்கள் எடுத்துக்கொள்ளப்போவதில்லை,” என்று வெளிப்படையாகவே சொல்லப்பட்டிருக்கிறது.கடந்த ஆண்டுகளில் இப்படிப்பட்ட பள்ளிகள்மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதாஎன்பதே யாருக்கும் தெரியாது. அப்படிநடவடிக்கை ஏதேனும் எடுக்கப்பட்டிருக்கு மானால் அதை பள்ளிக்கல்வித் துறையும் அரசும் பகிரங்கமாக வெளியிட வேண்டும்.
அடுத்து, தற்போதைய தேர்தல் காலதடையைக் காரணம் காட்டி, மாணவர்கள் சேர்க்கை விபரங்களை பள்ளிக்கல்வித்துறை வெளி யிடாமல் இருக்கிறது. இதுவும் அந்த நிர்வாகங் களுக்கு சாதகமாகிவிடுகிறது. ஆகவே, பள்ளிக் கல்வித்துறைக்கு இந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற வேண்டு கோளை தேர்தல் ஆணையம் ஏற்று உரிய ஆணைகளைப் பிறப்பிக்க வேண்டும். அடிப்படையில், பொதுப்பள்ளி முறையை வலியுறுத்துவதற்கான இயக்கம் வலுப்பெற வேண்டியதன் தேவையைத்தான் இந்த நிலைமைகள் வலியுறுத்துகின்றன.
உபரி ஆசிரியர்கள் பட்டியல் சமர்ப்பிக்க உத்தரவு
லேபிள்கள்:
Educational News
மாநிலம்
முழுவதும் உள்ள தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும் உபரி
ஆசிரியர்களின் பட்டியல் தயார் செய்ய, தொடக்க கல்வி இயக்குனர்
உத்தரவிட்டுள்ளார்.இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் இடமாறுதல்
கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடக்கும். ஒவ்வொரு,
மாவட்டங்களிலும் பாட வாரியாக காலி பணியிடங்களின் விபரம் சார்ந்த பட்டியல்
தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும்,
உபரியாக உள்ள ஆசிரியர்களின் விபரங்கள், தற்போது தயார் செய்யப்பட்டு
வருகிறது. அதன் படி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், 2013 செப்.,
1 நிலவரப்படி, பள்ளிகளில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கையின் படி உபரியாக உள்ள
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல் தயார்
செய்யப்படுகிறது.ஆசிரியர் மாணவர்களின் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் உபரி
ஆசிரியர்கள் கணக்கிடப்படுவர். இப்பட்டியலை, உதவி தொடக்க கல்வி அலுவலர்கள்
நாளை மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கவேண்டும். மாவட்ட தொடக்க
கல்வி அலுவலர்கள் தலைமை அலுவலகத்தில், வரும் 7ம் தேதி ஒப்படைக்க
உத்தரவிடப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், அனைத்து ஒன்றியங்களிலும் உதவி
தொடக்க கல்வி அலுவலர்களின் பொறுப்பில் உபரி ஆசிரியர்களின் பட்டியல்
தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
27 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ்: பள்ளி திறந்ததும் உடனடியாக வழங்க திட்டம்
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
வரும் கல்வி ஆண்டில் 27 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க
திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பதற்கு முன்பே, இலவச பாஸ்
விண்ணப்பங்களை வழங்கவுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசு
மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி திறக்கப்படவுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் திறந்து பல நாட்களுக்குப் பிறகே மாணவர்களுக்கு
இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இதனால், பள்ளி திறந்ததும் ஒன்றிரண்டு
மாதங்கள் மாணவர்கள் காசு கொடுத்துதான் பஸ்ஸில் செல்ல வேண்டியுள்ளது.
இதைத் தவிர்க்க வரும் கல்வியாண் டில் பள்ளிகள் திறக்கும்போதே மாணவர்
களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. இலவச
பஸ் பாஸ் வழங்குவதற்கான விண்ணப்பங்களை பள்ளிக் கல்வித்துறை மூலம் அந்தந்த
பள்ளிகளுக்கு வழங்குவதற் கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.
இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு
ஆண்டுதோறும் பிளஸ் 2 வரை இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில் பஸ் பாஸ் வழங்க கொஞ்சம் காலதாமதம்
ஏற்பட்டது. மேலும், மாணவர்களின் புள்ளி விவரங்களை சேகரிப்பதும் சிரமமாக
இருந்தது.
இந்த ஆண்டில் அதுபோன்ற பிரச்சினை கள் இருக்காது. எனவே, இந்த ஆண்டு
மாணவர்களுக்கு சிரமமின்றி இலவச பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கான டெண்டர் தற்போது விடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுக்குப் பிறகு,
டெண்டர் இறுதி செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும்.
பள்ளிகள் திறப்பதற்கு முன்பே சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள், தலைமை
ஆசிரியர்கள் அவர்களின் எல்லைக்குட்பட்ட போக்குவரத்து கழகங்கள் மூலம்
விண்ணப் பங்களைப் பெற்றுச் செல்லவும் அறிவுறுத் தப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை வழங்குவது எப்போது என்பது குறித்து அரசு போக்குவரத்து
கழகங்களின் அதிகாரி களும், பள்ளி கல்வி அதிகாரிகளும் கூட்டம் நடத்தி
பின்னர், அதற்கான தேதியை அறிவிக்கவுள்ளனர்.
பள்ளிகள் திறந்ததும் மாணவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால்
விரைவில் பஸ் பாஸ் வழங்கப்படும். கடந்த ஆண்டு 25 லட்சம் பேருக்கு பாஸ்
வழங்கப்பட்டன. இந்த ஆண்டு 27 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு பஸ் பாஸ் வழங்க
இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இது மேலும் அதிகரிக்கவும்
வாய்ப் புள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தேர்தல் பணியின்போது இறந்த ஆசிரியைக்கு ரூ.10 லட்சம்: மேலும் 2 பேருக்கும் நிவாரணம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியை, தலைமை ஆசிரியர், இளைஞர் காவல்படை
வீரர் ஆகியோரது குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்
என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி
பிரவீண்குமார் சனிக்கிழமை பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 12 நாட்களே உள்ளதால் முன்னேற்பாடுகள் நடந்து
வருகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 42 மையங்களில் பலத்த
பாதுகாப்புடன் வைக்கப் பட்டுள்ளன.
மே 16-ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால்
ஓட்டுகள் எண்ணப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான
வாக்குகளை எண்ணும் பணி காலை 8.30-க்கு தொடங்கும். வாக்கு எண்ணும் பணியில்
சுமார் 16 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.
நிவாரணம் 2 மடங்கு
தேர்தல் பணியின்போது உயிரிழந்த அரக்கோணம் ஆசிரியை பூங்கொடி, சேலம்
எடப்பாடி தலைமை ஆசிரியர் தங்கராசு, கிருஷ்ணகிரி மாவட்டம் வீரணகுப்பத்தைச்
சேர்ந்த இளைஞர் காவல்படை வீரர் வினோத்குமார் ஆகிய 3 பேருக்கும் தலா ரூ.10
லட்சம் நிவாரணம் வழங்கப்படும். கடந்த தேர்தலின்போது இந்த நிவாரணத் தொகை
ரூ.5 லட்சமாக இருந்தது.
அனைத்து தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்கு
எண்ணிக்கை முடிந்து 6 மாதங்கள்வரை பத்திரமாக வைக்கப்படும். அதற்குள்
தேர்தல் வெற்றியை எதிர்த்து நீதிமன்ற வழக்கு எதுவும் தாக்கல்
செய்யப்படவில்லையென்றால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள
பதிவுகள் அழிக்கப்பட்டு, வேறு தேர்தலுக்கு அந்த இயந்திரங்கள்
பயன்படுத்தப்படும்.
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதில் இருந்து 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள்
தங்களது தேர்தல் செலவுக் கணக்கை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்ய
வேண்டும். இல்லாவிட்டால், 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத
அளவுக்கு ஏன் உங்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு
நோட்டீஸ் அளிக்கப்படும்.
மாவட்ட ஆட்சித் தலைவரிடம் TNPTF புகார் - தினமலர் செய்தி
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி,
SVG TNPTF
தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஓட்டு போட வழிவகை செய்ய வேண்டும் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி,
SVG TNPTF
தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு
ஓட்டு போட வழிவகை செய்ய வேண்டும்
ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
சிவகங்கை,மே.5-தேர்தல் பணியில் ஈடு பட்ட ஆசிரியர்களுக்கு ஓட்டு போட வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் வலியுறுத்தியுள்ளனர்.வாக்குரிமைதமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத்தலைவர் ஜோசப் ரோஸ், மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி, மாவட்ட செயலாளர் தாமஸ் அமல நாதன் மற்றும் நிர்வாகி கள் சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ.குணசேகரன் தலைமையில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் ராஜா ராமனிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த பாராளு மன்ற தேர்தலின் போது, ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றிய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர் களில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தேர்தல்பணி சான்று வழங்காததால் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய முடியவில்லை. எனவே அவர் களுக்கு தங்களது ஓட்டுக்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தரக்குறைவாகஇதே போல் தேர்தல் பணிக் காக சிவகங்கையில் காத்திருப் போர் பட்டியலில் இருந்த ஆசி ரியர்களை தரக்குறைவாக பேசிய தேர்தல் உதவி கண் காணிப்பாளர் மீதும், எஸ்.புதூர் யூனியன் செட்டிக் குறிச்சியில்தலைமை ஆசிரிய ராக பணிபுரியும் சுதர்சனை தரக்குறைவாக பேசிய வரு வாய் ஆய்வாளர் மீதும் நட வடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






























